இந்திய நாட்டின் மிக அதிக அதிகாரம் உள்ள 15வது குடியரசு தலைவராக பழங்குடியின பெண் மேதகு திரவுபதி முர்மு பதவியேற்று இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்- பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி. - Agnipuratchi

இந்திய நாட்டின் மிக அதிக அதிகாரம் உள்ள 15வது குடியரசு தலைவராக பழங்குடியின பெண் மேதகு திரவுபதி முர்மு பதவியேற்று இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்- பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி.

Share This

இந்திய நாட்டின் மிக அதிக அதிகாரம் உள்ள 15வது குடியரசு தலைவராக பழங்குடியின பெண் மேதகு திரவுபதி முர்மு பதவியேற்று இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்- பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி.
        
இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பின் பிறந்தவர் பழங்குடியினர் பெண் அதிகாரம் உள்ள பதவி நாட்டின் முதல் குடிமகளாக மேதகு திரௌவுபதி முர்மு நாட்டின் 15 வது குடியரசு தலைவராக நேற்று பதவி ஏற்றதற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். குடியரசு தலைவர் அதிகாரங்கள் இந்தியாவின் குடியரசுத் தலைவர் தான் நாட்டின் முதல் குடிமகன் மற்றும் நாட்டின் தலைவர். இந்திய அரசியலமைப்பின்படி, மிக உயர்ந்த அதிகாரங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதால், நாட்டின் நிர்வாகத்தில் அவருக்கு முக்கியப் பங்குண்டு.
    
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதே குடியரசுத் தலைவரின் அடிப்படைக் கடமை. இந்திய அரசியலமைப்பின் மூலம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள சில மட்டும்.
        குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராக இருப்பதால், அவருக்கு இந்திய அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்ட விரிவான நிர்வாக அதிகாரங்கள் உள்ளன. அரசின் அனைத்து முடிவுகளும் குடியரசுத் தலைவரின் பெயரில் எடுக்கப்படுகின்றன.
         
குடியரசுத் தலைவர் இந்திய பிரதமரையும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் மத்திய அமைச்சர்களையும் நியமிக்கிறார். மாநிலங்களின் ஆளுநர்கள், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள், இந்திய தலைமை கணக்காயர், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர், தலைமை தேர்தல் ஆணையர் போன்ற அதிகாரிகளும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.
        
இந்தியாவுடைய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகவும் அவர் இருக்கிறார். அதோடு, போரை அறிவிக்கவும் ஒப்பந்தத்தின் மூலம் முடித்து வைக்கவும் அவருக்கு உரிமையுண்டு. ராணுவ தலைமைத் தளபதி, கடற்படை தலைமைத் தளபதி, விமானப்படையின் தலைமைத் தளபதி ஆகியோரை குடியரசுத் தலைவரே நியமிக்கிறார். இருப்பினும், பாதுகாப்புத் துறையின் அதிகாரங்களை முறைப்படுத்துவதும் கட்டுப்படுத்துவதும் நாடாளுமன்றம் தான்.
         
குடியரசுத் தலைவர் இரண்டு அவைகளையுமோ அல்லது நாடாளுமன்ற அவைகளில் ஒன்றையோ ஒத்தி வைக்க முடியும். தேவைப்பட்டால், நாடாளுமன்றத்தின் மக்களவையைக் கலைக்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றலாம். அதோடு, தேவைகள் ஏற்பட்டால், ஒரு அவைக்கோ அல்லது இரண்டு அவைகளுக்குமோ குடியரசுத் தலைவர், உரையாற்றுவதைத் தவிர செய்திகளை அனுப்பலாம். இரண்டு அவைகளிலும் குறிப்பிட்ட அளவு உறுப்பினர்களை குடியரசு தலைவர் நியமிக்கிறார்.
          
நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்படும் எந்தவொரு மசோதாவும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். புதிய மாநிலத்தை அங்கீகரிப்பது, மாநில எல்லைகளை மாற்றுவது தொடர்பான மசோதா அவரது பரிந்துரைக்குப் பிறகுதான் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்படும். வர்த்தகம் மற்றும் வர்த்தக சுதந்திரத்தின் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் மாநில மசோதாக்களுக்கு அவருடைய பரிந்துரை தேவைப்படுகிறது.

ஆனால், ஒரு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்தால், நாடாளுமன்ற அவை, இரண்டாவது முறையாக அதைத் திருத்தத்துடனோ அல்லது திருத்தம் இல்லாமலோ மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பித்தால், குடியரசு தலைவர் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 111-இன் கீழ் ஒப்புதல் அளிக்காமல் தவிர்க்க முடியாது. அப்போது அவர் தனது ஒப்புதலை வழங்குவது அவருடைய கடமையாகிறது.
          
இவற்றோடு, குடியரசு தலைவருக்கும் சில நிதிசார்ந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிதி மசோதா அவருடைய முன் பரிந்துரையுடன் தான் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதோடு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நிதி ஆணையத்தை அமைக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages