அக்னிப்புரட்சி இன்றைய (25.07.2022) முக்கிய செய்திகள்.
* இரண்டாவது ஒருநாள் போட்டியில், அக்சர் படேலின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை வென்றது.
* உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு 57,50,22,974
உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் 64,02,965
உலக நாடுகளில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் 54,47,14,118
ஜப்பானில் அதி உச்சம்- ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,96,297
* தேசியக் கொடி விதிகளில் மத்திய அரசு செய்த முக்கிய திருத்தங்கள்! என்ன அவை?
பகலில் மட்டுமல்லாது இரவிலும் தேசியக் கொடியை பறக்க விடலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மூவர்ண தேசியக் கொடியை சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறைவதற்கு முன்பாக இறக்கி விட வேண்டும் என்பது சட்ட நடைமுறையாக இருந்தது. தற்போது இந்திய தேசியக் கொடி சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வீடுகளில் பொதுமக்கள் தேசியக் கொடியை பகலில் மட்டுமல்லாது இரவிலும் பறக்க விடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தேசியக் கொடிகள் கைத்தறியால் நெய்யப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதியும் அமலில் இருந்தது. ஆனால் தற்போது அந்த விதியிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கைத்தறி மட்டுமல்லாது தேசியக் கொடியானது இயந்திரத்தால் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்றும், பாலிஸ்டரில் செய்யப்பட்டதாகவும் இருக்கலாம் எனவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் 75ஆவது சுதந்திர ஆண்டை முன்னிட்டு ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விடுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தது நினைவுகூறத்தக்கது.
* கடனை கட்ட வழியில்லாமல் பாகிஸ்தான் அரசு எடுத்த பரிதாப முடிவு!
பாகிஸ்தான் அரசின் சில சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தடையின்றி விற்பதற்கு வழி செய்யும் அவசர சட்டத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான் அரசு தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில் வெளிநாட்டு கடன் சுமையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரசின் சில சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று நிதி நிலையை சீர் செய்யும் அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட சொத்துக்களை விற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசின் சொத்து விற்பனை திட்டத்திற்கு எதிரான வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்பது போன்ற அம்சங்களும் அவசர சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
* டெல்லி: குடியரசுத் தலைவராக இன்று பதவியேற்பதற்கு முன்பு மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் திரெளபதி முர்மு.
* பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா தனது 84 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (25.07.2022) திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டம் தனது இல்லத்தில் தனது தந்தை- சஞ்சீவிராயக் கவுண்டர் - தாய் நவநீத அம்மாள் அவர்கள் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மருத்துவர் அய்யா அவர்கள் உடன் தனது துணைவியாரும் குடும்பத்தினர் இருந்தனர்.
* இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரெளபதி முர்மு; நாட்டின் 2வது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் முர்மு
அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
இந்தியா திருநாட்டின் 15 வது குடியரசு தலைவராக இன்று பதவியேற்றார் திரெளபதி முர்மு! புதிய குடியரசு தலைவருக்கு திரெளபதி முர்முருக்கு அக்னிப்புரட்சி இதழின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின், நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையை ஆற்றி வருகிறார் திரெளபதி முர்மு.
நான் குடியரசுத் தலைவர் பதவியை எட்டியது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனை- குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.
கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் காட்டிய ஒத்துழைப்பு, துணிச்சல் மற்றும் வலிமையின் அடையாளம்.
ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியா 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்தது.
இந்தியாவின் புகழ்பெற்ற வீராங்கனைகள் பட்டியலில் வேலு நாச்சியாரை குறிப்பிட்டு திரெளபதி முர்மு பேச்சு.
வேலு நாச்சியார், ராணி லக்ஷ்மி பாய் ஆகியோர் தேச பாதுகாப்பில் புதிய உயரங்களை அளித்துள்ளனர்.
* திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கீழச்சேரியில் தனியார் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி விடுதியில் தற்கொலை
மாணவி தற்கொலை குறித்து பள்ளி நிர்வாகம் முறையாக தெரிவிக்கவில்லை என புகார்
பொதட்டூர்பேட்டை- திருத்தணி சாலையில் உறவினர்கள் போராட்டம்
* தமிழக அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் ஆர்.பி. உதயகுமார், திருவண்ணாமலையில் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
* இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்
+1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம்: சென்னை, நுங்கம்பாக்கத்தில் துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அரசு பள்ளியில் உயர்கல்வி படிக்கும் 6.35 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க ஏற்பாடு.
* குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவியேற்பு மற்றும் முதல் உரை...
Watch: https://youtu.be/94AjdSn6bfk
முழுமையான வீடியோ - சிலிர்க்க வைக்கும் அணிவகுப்பு மரியாமையுடன் கூடிய பதவியேற்பு விழா
* ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய கல்வித்துறை அதிரடி திட்டம்.
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் நடைமுறைக்கு வரும் திட்டம்.
காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் என தகவல்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என கல்வித்துறை வட்டாரம் தகவல்.
* மாநிலங்களவை நியமன உறுப்பினராக தமிழில் பதவியேற்றுக்கொண்டார் இசைஞானி இளையராஜா.
* கீழச்சேரி பள்ளி மாணவி தற்கொலை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு
மாணவி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
மாணவியின் பிரேத பரிசோதனை வீடியோவாக பதிவு செய்யப்படும் - டிஐஜி சத்யபிரியா
* பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அய்யா அவர்களின் 84 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (25.07.22) மருத்துவர் அய்யாவின் கொள்ளு பேரன் பேத்திகள் மிளிர் மற்றும் அகிரா, கொள்ளுதாத்தாவுக்காக மரக்கன்று நட்டு கொண்டாடினர். உடன் தாத்தா பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பாட்டி பசுமை தாயகம் தலைவர் முனைவர் திருமதி சௌமியா அன்புமணி
* அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் வைத்திலிங்கத்தை நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு.
ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத் உள்ளிட்ட 10 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு.
* சுருண்டு விழுந்த கபடி வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு - உஷார விளையாடுங்க!
Watch: https://youtu.be/zNR_kdn3_xo
கடலூர்: பண்ருட்டி புறங்கணி கிராமத்தில் உள்ளூர் கபடி போட்டி நேற்று இரவு நடை பெற்றது.
இந்த போட்டியில் விமல்ராஜ்(22) என்பவர் கபடி விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென சுருண்டு விழுந்தார்.
சுருண்டு விழுந்த விமல்ராஜை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விமல்ராஜ் சேலத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
* விலைவாசி உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மக்களவை சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய காங்கிரஸ் எம்.பி.க்கள் நால்வர் இடைநீக்கம்
அவையின் மையப்பகுதியில் கூடி முழக்கங்கள் எழுப்பிய ஜோதிமணி, மாணிக் தாகூர், ரம்யா ஹாரீஸ், டி.என்.பிரதாபன் ஆகிய 4 காங்கிரஸ் எம்.பி.க்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு
* மாணவி உயிரிழப்பை தொடர்ந்து கலவரத்தில் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடக்கும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
9,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தயார் செய்து அடுத்த வாரம் முதல் வகுப்பு தொடங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
பள்ளியில் சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதில் புதிய சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை.
பெற்றோர்கள் விரும்பினால் தமிழகத்தில் உள்ள எந்த பள்ளியில் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.
தீயில் எரிந்துள்ள ஆசிரியர்களின் சான்றிதழ்களை வழங்கவும் நடவடிக்கை-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
* எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.
டெண்டர்களை தனது உறவினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கியதில் சுமார் ₹4000 கோடி ஊழல் என வழக்கு தொடரப்பட்டது.
4 ஆண்டாக நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணை நாளை பட்டியலிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி முறையிட, விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment