அக்னிப்புரட்சி இன்றைய (17.07.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (17.07.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (17.07.2022) முக்கிய செய்திகள்.

* இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் 18 நகரங்களில் நடைபெறும் தேர்வை ஒன்றரை லட்சம் பேர் எழுத உள்ளனர்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது.

* நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்- டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை முதல் ஆக.12 வரை நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை.

* பிரச்சாரம் செய்கிறார் ஆளுநர்:
ஆர்எஸ்எஸ் கொள்கைகளை முழுநேர பிரச்சாரமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பரப்பிக் கொண்டிருக்கிறார்-விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு.

* கடும் கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு

நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அந்த வகையில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான ‘நீட்' தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை நாடு முழுவதும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் எழுத இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர்.

வழக்கம் போல, இந்த ஆண்டும் ‘நீட்' தேர்வு கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற உள்ளது. எனவே தேர்வர்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் தவறாது பின்பற்ற வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி இருக்கிறது.

* கள்ளக்குறிச்சி மாணவர் அமைப்புகள் மீது போலீசார் தடியடி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம்.

நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியல் செய்து போராட்டம்.
பள்ளி வளாகத்துக்குள் புகுந்த மாணவர் அமைப்புகள் முயற்சித்ததால் போலீசார் தடியடி.

போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசியதால் பதற்றம். போலீசார் மற்றும் மாணவ அமைப்பினர் பலர் காயம். கள்ளக்குறிச்சி அருகே உள்ள சின்னசேலதில் கட்டுக்கடங்காத கலவரம்:

மாணவி இறந்த பள்ளிக்குள் போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்ததால் பெரும் கலவரம்.

காவல் துறை மீது கல்வீச்சு காவல்துறையினர் தடியடி.
20க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயம். காவல்துறை வாகனங்கள் சேதம்.

காவல்துறை பற்றாக்குறை காரணமாக பெரும் கலவரம் வெடித்துள்ளது. கல்வீச்சில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டினும் படுகாயம்.

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிக்கு அருகே போலீஸ் பேருந்து தீ வைத்து எரிப்பு. போலீசார் துப்பாக்கிச்சூடு.

கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு.
கலவரம் தீவிரமடையும் நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து காவல்துறையினர் வரவழைப்பு.

சம்பவம் நடைபெற்ற பள்ளி வளாகத்தில் இருந்த 10 க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டது.

* காவேரி மருத்துவமனையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் என தகவல்

* கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை -  டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

போராட்டக்காரர்களை வீடியோ காட்சிகளை வைத்து பின்னர் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும் பள்ளி மீது எந்த தவறும் இல்லை - டிஜிபி சைலேந்திரபாபு

* சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி சிந்து!

இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை ஜி-யீ-வாங்கியை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி.

* நாளை மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் - மருத்துவமனை அறிக்கை

மாணவி தரப்புடன் ஏற்கனவே பேசியுள்ளோம், இறப்பு தொடர்பாக விசாரணை நடக்கிறது
- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சி:பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தீவிரமடையும் போராட்டம் - உச்சகட்ட பதற்றம்

ஐஜி ஈஸ்வரமூர்த்தி, உளவுத்துறை ஐஜி ஆசியம்மாள் ஆகியோருடன் டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை

பேச்சுவார்த்தை நடத்தினோம், ஆனால் பலனளிக்கவில்லை - கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஸ்ரீதர்

* தீயணைப்புத் துறை வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளனர் - மாவட்ட தீயணைப்புத் துறை

தீயை அணைப்பதற்கு தேவையான உபகரணங்கள் கைவசம் உள்ளன - மாவட்ட தீயணைப்புத் துறை

உள்ளே செல்ல முடியவில்லை, 3 வாகனங்களுடன் காத்திருக்கிறோம் - மாவட்ட தீயணைப்புத் துறை

போலீசார் பாதுகாப்பு அளித்தால் தான் உள்ளே சென்று தீயை அணைக்க முடியும் - தீயணைப்புத் துறை

* உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம்

பள்ளியில் நடந்தது என்ன? என்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கள்ளக்குறிச்சி CEO-வுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

* எங்களுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி - மாணவியின் தாய் செல்வி

அமைதியான முறையிலேயே நீதியை பெற விரும்புகிறோம் வன்முறையை கைவிட்டு அமைதியாக போராட வேண்டும் - மாணவியின் தாய் செல்வி

* பொதுமக்கள் அமைதி காக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்:

கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன்

அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* கள்ளக்குறிச்சி தாலுகா, சின்னசேலம், நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு

மாணவி இறப்பு தொடர்பாக உறவினர்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

* கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு எதிர்ப்பு தனியார் பள்ளிகள் நாளை முதல் இயங்காது என அறிவிப்பு.

கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிக் பள்ளியின் மீது  தாக்குதல் நடைபெற்ற நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக.

நாளை முதல் மெட்ரிக், CBSE பள்ளிகள் இயங்காது என்று தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவிப்பு.

* விதிகளை மீறி விடுமுறை விட்டால் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை.

நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக எந்த முன் அனுமதியும் பெறவில்லை - மெட்ரிகுலேஷன் இயக்குநரகம்.

* கள்ளகுறிச்சி மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி சைலேந்திர பாபு.

பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் - டிஜிபி சைலேந்திரபாபு

* தனியார் பள்ளிகள் நாளை இயங்காது- தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி டி.சி.இளங்கோவன்.

வன்முறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து மனு அளிக்க உள்ளோம் - தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு.

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் மாவட்டத்தில் நாளை அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவிப்பு

* கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக நாளை போராட்டம் நடத்த வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்ட காவலர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி அலுவலகம் அறிவுறுத்தல்.

* சென்னை, தலைமை செயலகத்தில் தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை பேச்சுவார்த்தை  

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை

* கடைசி போட்டியில் இந்தியா வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

இங்கிலாந்து அணியை 5 விக்கெட்
வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி

ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யாவின்
அபார ஆட்டத்தால் 260 ரன்கள் இலக்கை 42.1 ஓவர்களில் எட்டியது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages