உடல் நலம் தேறி வருகிறார்...
நடை பயிற்சி மேற்கொண்டு வருகிறார் - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா
தனது முகநூல் பக்கத்தில் மருத்துவர் இராமதாசு அய்யாவின் பதிவு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்றுடன் 7 நாட்கள் ஆகின்றன. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்து வருவதால் எனது உடல் நலம் நன்றாக தேறி வருகிறது. நான் இப்போது நலமாக இருக்கிறேன்.
இன்று காலை உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றி 15 நிமிடங்களுக்கு நடைபயிற்சி மேற்கொண்டேன். அதனால் சற்று புத்துணர்ச்சி கிடைத்தது. பாட்டாளி சொந்தங்களை அடுத்த சில வாரங்களில் சந்திக்கும் போது இன்னும் கூடுதல் புத்துணர்ச்சி கிடைக்கும்.
பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்களா? என்பதை அறிய விரும்புகிறேன்!
No comments:
Post a Comment