அக்னிப்புரட்சி இன்றைய (18.07.2022) முக்கிய செய்திகள்.
* மெட்ராஸ் மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று.
’தமிழ்நாடு நாள்’ விழா இன்று கொண்டாடப்பட்டது.
பல்துறை ஆளுமைகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.
* சென்னையில் இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு
பள்ளிகள் இயக்கம் குறித்து ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பள்ளிகள் தனித்தனியாக அறிவிப்பு வெளியீடு
எந்த தகவலும் முறையாக கிடைக்கப்பெறாத பெற்றோர்கள் குழப்பம்
* அமெரிக்கா : இந்தியானாவில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.
துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் சுட்டு கொன்றனர்.
* கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்த கலவரம் தொடர்பாக இதுவரை 329 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளககுறிச்சி விவகாரம் - மேலும் 2 ஆசிரியர்கள் கைது. +2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில் வேதியியல் மற்றும் கணித ஆசிரியர்களான ஹரிப்பிரியா மற்றும் கிருத்திகா என்ற 2 ஆசிரியர்களை கைது செய்தது சின்ன சேலம் காவல்.
* நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? - நீதிபதி.
கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? மாணவியின் இறப்புக்கு என்ன காரணம்?
வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது
வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது.
வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை சிறப்புப் படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும்.
வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும்.
திடீர் கோபத்தில் வெடித்த வன்முறையல்ல இது. திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது. நீதிபதி
* தகுதியில்லாத மருத்துவர்கள் என எப்படி சொல்லலாம்? நீங்கள் நிபுணரா - நீதிபதி கேள்வி.
தகுதியில்லாத மருத்துவர்களால் பிரேத பரிசோதனை நடத்தப்படும்: மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் - மனுதாரர்.
மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு. பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவு.
பிரேத பரிசோதனைக்கு பின் மனுதாரர், வேறு எந்த பிரச்சினையும் செய்யாமல் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் பள்ளி வளாகத்தில் மாணவி உயிரிழந்தால் அந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் - நீதிபதி உத்தரவு.
* கள்ளக்குறிச்சி பள்ளியின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம் - முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி.
பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிந்துள்ளன.
பள்ளி கட்டிடம் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது - கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அதிகாரி.
* கள்ளக்குறிச்சி கலவரத்தால் கிடைத்த நீதி என்ன? - கரூர் குற்றவியல் நீதிபதி கேள்வி.
உண்மை என்ன என தெரியாமல் எதற்காக போராட்டம் ?
போராட்டத்திற்கு ஆதரவாக வாட்சப் மூலம் அழைப்பு விடுத்ததாக கைதான 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இளைய சமுதாயம் எதை நோக்கி செல்கிறது? - நீதிபதி கேள்வி.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் எதை வேண்டுமானாலும் பதிவிடலாமா? - கரூர் குற்றவியல் நீதிபதி .
* கள்ளக்குறிச்சி சம்பவங்கள் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு மாணவர்களையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக நினைத்து பயிற்றுவிக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கிறேன் - முதல்வர்.
இந்த சோகமான சூழலை பயன்படுத்தி சிலர் சேர்ந்து சட்டவிரோதமாக நடந்து கொண்டுள்ளனர். வன்முறை என்பது வளர்ச்சிக்கு எதிரானது - முதல்வர் ஸ்டாலின்.
* கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சின்னசேலம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு விவரங்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
பிரிவு 147 - சட்ட விரோதமாக கூடுதல், பிரிவு 148 - ஆயுதங்களுடன் கூடுதல், பிரிவு - 294 (b)ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்கு.
* கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நீதிமன்றத்தின் கருத்துக்கள் திமுக அரசுக்கு தலைகுனிவு.
கள்ளக்குறிச்சி சம்பவம் நடைபெற்று 3 தினங்களாக அரசு மெத்தன போக்குடன் இருந்துள்ளது - குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களித்த பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி.
* வதந்தி பரப்பி கிளர்ச்சியை உருவாக்கும் நோக்கில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" - காவல்துறை.
சேலத்தில் மடிக்கணினி திருட முயன்றது தொடர்பான சிசிடிவி காட்சியை, கனியாமூர் பள்ளியில் நள்ளிரவில் மர்ம நபர் நடந்து சென்றதாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் - கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.
* மாணவி மர்ம மரணம் - முதலமைச்சர் உறுதி:
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி செல்லும்போது கள்ளக்குறிச்சி வன்முறை வேதனை தருகிறது.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர்.
சோகமான சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டு சிலர் சட்டவிரோத செயலில் ஈடுபடுவது வளர்ச்சிக்கு எதிரானது.
பள்ளிகள், ஒவ்வொரு மாணவர்களையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக கருதி பாதுகாக்க வேண்டும்.
வன்முறையில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!- முதலமைச்சர் ஸ்டாலின்.
* கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் - மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு.
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மேல்முறையீடு செய்ய உச்சநீதிமன்றத்தை தான் அணுக முடியும் - நீதிபதிகள்.
தமிழகத்தில் இன்று 91% தனியார் பள்ளிகள் இயங்கியுள்ளதாக மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் அறிக்கை.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 89%, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 95%, சி.பி.எஸ்.இ பள்ளிகள் 86% இயங்கியுள்ளதாக தகவல்.
மாவட்டம் வாரியாக இன்று இயங்கிய தனியார் பள்ளிகள் விபரம்
* அனைத்து தனியார் பள்ளிகளும் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும்.
பள்ளிக் கல்வித்துறை உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு.
* கள்ளக்குறிச்சி விவகாரம், நீதிபதி முன்பு மாணவியின் தந்தை முறையீடு.
தங்கள் தரப்பில் குறிப்பிடக்கூடிய மருத்துவ நிபுணரை நியமிக்கும் வரை மறு பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும்.
தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் மாணவியின் தந்தை ராமலிங்கம் சார்பில் முறையீடு.
ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது. வேண்டுமானால் சிபிசிஐடிக்கும், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கும் மனு அளியுங்கள் - நீதிபதி.
* சமூக வலைதளத்தின் மூலம் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக, தவறான தகவலால்
ஒன்று கூடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது - அமைச்சர் எ.வ.வேலு
கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் ஆய்வு செய்த பின் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் பேட்டி.
போராட்டத்தை காவல்துறை சிறப்பாக கையாண்டு உள்ளது. பள்ளிக்குள் இருந்த மாணவர்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி வன்முறையில் 37 பேருந்துகள் உட்பட 67 வாகனங்கள் தீக்கிரையானது.
சுமார் 3,500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட் டுள்ளது.
பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டிய அவசியமில்லை.
இவ்வளவு பேர் திரள்வார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை
கள்ளக்குறிச்சி வன்முறை - இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது.
தவறு யார் செய்தாலும், இந்த அரசு அதை அனுமதிக்காது -அமைச்சர் எ.வ.வேலு.
* தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன - அமைச்சர் செந்தில்பாலாஜி
மாதம் 301 - 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 உயர்த்தி பரிசீலனை.
கேஸ் இணைப்புகளை போல், 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது.
ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது
42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது - அமைச்சர் செந்தில் பாலாஜி
* தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது.
தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன - அமைச்சர் செந்தில்பாலாஜி.
100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும். 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம் மாற்றம்.
மாதம் 301 - 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 உயர்த்த பரிசீலனை.
500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் மின் கட்டணம்.
கேஸ் இணைப்பை போல, 100 யூனிட் இலவச மின்சாரத்தை நுகர்வோர் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் புதிய திட்டம் அறிமுகம்.
ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு என கொண்டு வர திட்டம்.
குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் - அமைச்சர் செந்தில்பாலாஜி.
* கள்ளக்குறிச்சி கலவரம் - 128 பேர் ரிமாண்ட்
* உலகில் முதலில் பிறந்த குரங்கு, தமிழ் குரங்குதான்: மு.க.ஸ்டாலின்
Watch: https://t.co/rTMRfFN0Vs
தமிழ்நாடு நாள் விழாவில் முதலமைச்சர் பேச்சு...
* நீட் நுழைவு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது சிபிஐ.
டெல்லி, அரியானா மாநிலங்களை சேர்ந்த 8 பேர் சிக்கினர்.
ஆள்மாறாட்ட மோசடிக்கு மூளையாக செயல்பட்டவரும் கைது என தகவல்.
No comments:
Post a Comment