லாவோ சீ-யின் வார்த்தைகளை மனதில் கொள்ளுங்கள், அதன்படியே வாழுங்கள்! பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்
பாட்டாளி மக்கள் கட்சியின் முதன்மையாக கொள்கைகளில் ஒன்று மக்களை சந்திப்பது; மக்களை மதிப்பது; மக்களுக்காக வாழ்வது ஆகும். அதனால் தான்.....
"மக்களிடம் செல்லுங்கள்,
அவர்களில் ஒருவராக வாழுங்கள்,
அவர்களை நேசியுங்கள்,
அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், அவர்களிடமிருந்து தொடங்குங்கள், அவர்களுடன் சேர்ந்து உழையுங்கள், அவர்களிடம் இருப்பதிலிருந்து கட்டமையுங்கள்"
என்ற சீன தத்துவஞானி -லாவோ -சீ-யின் தத்துவத்தை நமக்கான வழிகாட்டலாக ஏற்றிருக்கிறோம். அதன்படி தமிழ்நாட்டில் எனது கால்படாத கிராமங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து கிராமங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன். மக்களை நேரில் சந்திக்காமல், அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு அவற்றுக்காக நாம் போராடாமல் அவர்களின் ஆதரவை பெற முடியாது.
லாவோ சீ-யின் வார்த்தைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகத் தான், இந்த தத்துவம் எழுதப்பட்ட பதாகையை தைலாபுரம் தோட்டத்தில் அமைத்திருக்கிறோம். இதை நீங்களும் உங்களின் டைரியில் எழுதி வைத்திருப்பீர்கள். இந்த தத்துவத்தை நீங்கள் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். உங்களை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் அதை அப்படியே சொல்ல வேண்டும். அதற்கும் மேலாக அந்த தத்துவதத்திற்கு ஏற்றவாறு நீங்கள் செயல்பட வேண்டும்!
**************
No comments:
Post a Comment