திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழக போராளி மருத்துவர் அய்யா கட்டளைப்படி திருத்தணி தொகுதிக்குட்பட்ட கரும்பேடு,குமாரமங்கலம், பள்ளிப்பட்டு,சி.ஆர்.பட்டறை, குமாரராஜபேட்டை,கோரகுப்பம், சஞ்சீபுரம்,வெலண்கண்டிகை 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஆகிய பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் கலந்து கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினார்
செய்தியாளர்களிடம் பேசுகையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருத்தணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொடியேற்று விழாவின் நோக்கம் சென்னையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதி எந்த ஒரு அடிப்படையும் இல்லாத விவசாயம்,நெசவு இந்த ரெண்டு தொழில் தான் முக்கியமான தொழில். அதிக நெசவாளர்கள் உள்ள பகுதி நீண்ட காலமாக இந்த பள்ளிப்பட்டு பகுதியில் நெசவு பூங்கா வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். நெசவுத்தொழில் அழிந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட ஊதியம் இல்லை. ஒரு ஆண்டிற்கு 72 ஆயிரம் மட்டுமே வரும். இது போதுமானதாக இல்லை. விலைவாசி ஏறிவிட்டதால் நெசவாளர்களுக்கு போதுமான ஊதியத்தை தமிழக அரசு அளிக்க வேண்டும். நெசவுத் தொழிலுக்கு என்னென்ன தேவையோ அனைத்தும் அரசு செய்து தர வேண்டும் எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பள்ளிப்பட்டு பகுதியில் நெசவு பூங்கா ஏற்படுத்தி தர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஏற்படுத்தி தர வேண்டும். அது மட்டுமல்ல விவசாயம் நெல் போன்றவற்றை பதப்படுத்துகின்ற இப்பகுதியில் தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று இங்கு மருத்துவ வசதி இல்லை. ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் திருவள்ளூர் சென்னைக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் அரசு சிறப்புக் கவனம் கொண்டு நல்ல திட்டங்களை முன்வைக்க வேண்டும். பி.எம்.கே.2.O என்ற திட்டத்தின் அடிப்படையில் தான் மக்களை சந்திக்கின்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.வரும் காலங்களில் அரசியல் யுக்திகளை வகுக்கின்றன.சென்ற இடமெல்லாம் மக்கள் இயக்கத்தில் தான் உள்ளனர். இளைஞர்களிடையே நீட் தேர்வு மருத்துவத்தில் நிலை எந்த ஒரு நிலை கிடை இல்லை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் உறுதி அளித்தனர் தற்பொழுது நேற்று முன்தினம் ஓசூரில் தனுஷ் என்னும் மாணவன் இறந்துள்ளார் என்றும், அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை உள்ளது, அதன் அதனைப் பற்றி கருத்து கூற இயலாது அதிமுக என்பது தமிழகத்தில் வலுவான கட்சியாகும் அதனால் அவர்களின் உக்கட்சி பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும், இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் சாலை வசதி, பாலம் அமைப்பது, மயானங்கள் வேண்டும் போன்ற வசதிகள் இன்னும் கிடைக்கவில்லை. எந்த அளவிற்கு தமிழ்நாடு முன்னேறி உள்ளது என கேள்வி எழுப்பினார் .மேலும் 75 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சி பொறுப்பில் இருந்துள்ளன.அதனால் தான் இப்பொழுது நாம் கிராமங்களில் உள்ளோம் என்றும். எனவே கிராமத்திற்கு வந்து மக்களை சந்திக்கின்ற ஒரு திட்டம் ஒரு பக்கம். மக்களின் பிரச்சினைகளை சேகரித்து இதற்கு என்ன தீர்வு என்று இதற்கான ஆவணங்களை வெளியிட உள்ளோம்.ஆவணங்களை ஆட்சியாளர்களிடம் கொடுத்து அதற்கு தீர்வு காண வித்தியாசமான வழிமுறையை பின்பற்றி உள்ளோம். பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக பொறுப்பேற்றவுடன் தமிழக முதல்வர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமீபத்தில் என் இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக சந்தித்தார் இந்த சந்திப்பு அவசியமான ஒன்று என்றும் சமுதாயத்தில் எங்கு பிரச்சனை நடந்தாலும் சுமூகமாக தீர்வு காண வேண்டும். இதில் இளைஞர்கள் தான் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் அந்த வகையில் என்னை சந்தித்தார் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி அச்சூர் பகுதி 30 விளைகின்ற பகுதி அதனை அகற்றுவது மிகவும் தவறு காலநிலை பிரச்சினை காரணமாக அப்பகுதியில் அதிகமான பாதிப்புகள் உள்ளன நீர்நிலைகள் பாதிக்கப்படுகின்றன மழைக்காலங்களில் அதனை பாதுகாக்க வேண்டும் விவசாயத்தை அழித்து எந்த முன்னேற்றமும் தேவையில்லை என்றும் கூறினார். அது உண்மையான முன்னேற்றம் இல்லை விவசாயி விவசாயத்தை பாதுகாத்து சாலைகள் கொண்டு வர வேண்டும் தேசிய நெடுஞ்சாலைகள் அவசியமாக்க வேண்டும் மாநிலம் முன்னேற வேண்டும் என்றால் நெடுஞ்சாலைகளை அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்க வேண்டும் என்று கூறினார் மொழி விவசாயம் கல்வி சமூக நீதி வேலைவாய்ப்பு என்ற பொதுவான கொள்கை உள்ள கட்சியுடன் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.இதில் மாநில துணைத் தலைவர் வைத்தியலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் பாலயோகி, மாவட்ட செயலாளர் தினேஷ் குமார், மாவட்ட தலைவர் விஜயன் மாநில அமைப்பு செயலாளர் வெங்கடேசன் மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment