திருத்தணியில் உள்ள தணிகை மீட்ட தளபதி கே.விநாயகம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் அவரது துணைவியாரும் கே.விநாயகம் அவர்களின் பெயர்த்தியுமான திருமதி முனைவர் சௌமியா அன்புமணியும் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் - Agnipuratchi

திருத்தணியில் உள்ள தணிகை மீட்ட தளபதி கே.விநாயகம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் அவரது துணைவியாரும் கே.விநாயகம் அவர்களின் பெயர்த்தியுமான திருமதி முனைவர் சௌமியா அன்புமணியும் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Share This

திருத்தணியில் உள்ள தணிகை மீட்ட தளபதி கே.விநாயகம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் அவரது துணைவியாரும் கே.விநாயகம் அவர்களின் பெயர்த்தியுமான திருமதி முனைவர் சௌமியா அன்புமணியும் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

அப்போது மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசியதாவது தணிகை மீட்ட தளபதி கே.விநாயகம் அவர்கள் இன்றைய இளைய தலைமுறை அறியாத பல சாதனைகளுக்கும், பெருமைகளுக்கும் சொந்தக்காரர்.  இழந்ததை மீட்ட பெருமையும், கவுரவமும் இந்திய வரலாற்றில் ஒரு சிலருக்கு மட்டும் தான் உண்டு. அத்தகைய ஒரு சிலரில் விநாயகம் மிகவும் முக்கியமானவர். 1956-ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, சென்னை மாகாணத்தின் அங்கமாக இருந்த திருத்தணி மற்றும் அதையொட்டிய பகுதிகள் ஆந்திரத்துடன் இணைக்கப்பட்டன.  ஆனால், அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்ட  1953-ஆம் ஆண்டிலிருந்தே  ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட தலைவர்களை இணைத்துக் கொண்டு அதற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டார். தளபதி விநாயகம் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களைக் கண்டு அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவே வியந்தார்.

தளபதி விநாயகம் மக்கள் மன்றத்தில் மட்டுமின்றி சட்டமன்றத்திலும் திருத்தணியை மீட்க போராடினார். அவரது போராட்டங்களின் பயனாக 1956-ஆம் ஆண்டில் ஆந்திராவுக்கு தாரை வார்க்கப்பட்ட திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள  365 கிராமங்கள் 1960-ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. தளபதி விநாயகம் அவர்கள் மட்டும் இல்லை என்றால் திருத்தணி நமக்கு சொந்தமாக இருந்திருக்காது; 365 கிராமங்களில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியாது. இதற்கெல்லாம் காரணமான தணிகை மீட்ட தளபதி கே.விநாயகம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு  மாலை அணிவித்ததில் நான் பெருமிதம் அடைகிறேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages