அக்னிப்புரட்சி இன்றைய (08.07.2022) முக்கிய செய்திகள்.
* இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்தியா:
முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
அரைசதம் மற்றும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு.
* தமிழகத்தில் உள்ள 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
சென்னை கிண்டி ,குரோம்பேட்டை பொறியல் கல்லூரிகள் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக் கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியீடு.
பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை பார்த்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
* ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு.
நாரா நகரில் ஷின்சோ அபே மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்.
JUST IN: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து மோதியதில், 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
* ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு - பரபரப்பு வீடியோ காட்சிகள்
வீடியோ: https://t.co/unrcpI48zg
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு.
நாரா நகரில் ஷின்சோ அபே மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்.
* பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு- உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு வெளிவந்த பிறகு 5 நாள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நேற்று அவகாசம் முடிந்த நிலையில் அவகாசம் நீட்டிப்பு.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை.
* கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் - அமைச்சர் பொன்முடி.
* சென்னை மைலாப்பூரில் ஆடிட்டர் ஒருவரின் அலுவலகத்தில் வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு.
முன்னாள் அமைச்சர் காமராஜுக்கும் இவரே ஆடிட்டர் என்பதால் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்று அதிரடி சோதனை.
ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் ஆடிட்டர் சென்னை மயிலாப்பூரில் ஜிபிஏ கன்சல்டன்சி என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த 2 நாட்களாக அவரின் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
* திருவண்ணாமலை கீழ்பெண்ணத்தூர் பகுதியில், மனவளர்ச்சி குன்றிய சிவானந்தம் என்ற சிறுவனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.
சிறுவன் சிவானந்தத்தின் வீட்டிற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடல்.
சிறுவனுக்கு தேவையான உபகரணங்களையும் முதலமைச்சர் வழங்கினார்.
* மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி
* ஜப்பானில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது கடற்படை வீரர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலத்த காயம் அடைந்ததில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
* அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரிய ஓபிஎஸ் மனு மீது மீண்டும் விசாரணையை தொடங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
இரு தரப்பும் அனல் பறக்கும் வாதங்களை முன் வைத்து வருகின்றன.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார்- எடப்பாடி பழனிசாமி தரப்பு.
ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை-ஈபிஎஸ் தரப்பு.
ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன என எடப்பாடி பழனிசாமி தரப்பு சொல்லி வந்த நிலையில், தற்போது அதனை மாற்றி காலாவதியாகவில்லை என நீதிமன்றத்தில் விளக்கம்.
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய கூடுதல் மனுக்களை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
எனவே ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கு தடை கோரிய இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும்- இபிஎஸ் தரப்பு.
2 கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பி.எஸ், ஒட்டுமொத்த கட்சியும் தனக்கு எதிராக உள்ளதாக கருதி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்- இபிஎஸ் தரப்பு.
* ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணத்திற்கு, நாளை ஒருநாள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.
அன்பு நண்பர் ஷின்சோவின் மறைவு சொல்ல முடியாத துயரத்தை கொடுக்கிறது; சர்வதேச அரசியல்வாதி, சிறந்த தலைவர், நல்ல நிர்வாகியாக திகழ்ந்தார் ஷின்சோ - பிரதமர் மோடி
* அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் மனு மீது வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தீர்ப்பு.
ஜூலை 11ம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக பொதுக்குழு என அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 9 மணிக்கு தீர்ப்பு.
* இன்று தைலாபுரம் தோட்டத்தில் 46 மாவட்ட செயலாளர்களுடன்
மருத்துவர் இராமதாசு அய்யா கலந்தாய்வு
பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு ரீதியிலான 46 மாவட்டச் செயலாளர்களுடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று கலந்தாய்வு செய்தார்கள். தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 32 மாவட்டங்களின் பா.ம.க. தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா, தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
* நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு என்பது உண்மையில்லை: மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு
நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு என வெளியான தகவலில் உண்மையில்லை என தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. நடிகர் விக்ரம் முழு உடல் நலத்துடன் உள்ளார்; விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் தெரிவித்தது.
* சேர்களை தூக்கிவீசி தாக்குதல்!
https://twitter.com/IndiaNewsDigest/status/1545408397968674817?t=9u2g-f6fb9P3ssQ_pP9nPQ&s=08
* அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை:
திருவாரூர் : மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.
தமிழ்நாடு முழுவதும் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் சோதனை.
காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டது
வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.44 கோடி சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.
காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு.
முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதறையில் 963 சவரன் நகை, 23 கிலோ வெள்ளி, 41 லட்சம் பணம் மற்றும் வங்கி கணக்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது - லஞ்ச ஒழிப்புத்துறை.
* முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதும் அவரது நண்பர்கள்,உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது
- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவை நேரடியாக எதிர்கொள்ள முடியாததால் முன்னாள் அமைச்சர் மீது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தப்படுகிறது.
அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் - ஈபிஎஸ்.
No comments:
Post a Comment