பென்னாகரம் தொகுதி நல்லாம்பட்டி அருகில் காரும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகி சந்தானம் மற்றும் ரத்தினவேல் ஆகிய இருவர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையையும் அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். - பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி MLA
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி நல்லாம்பட்டி அருகில் காரும் இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயம் அடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த பருவதன அள்ளியை சேர்ந்த ரத்தினவேல் மற்றும் மஞ்சநாயக்கன அள்ளியைச் சேர்ந்த சந்தானம் ஆகிய இருவரும் உயிரிழந்தது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களது குடும்பத்தினர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுடைய குடும்பத்தாரிடம் கைப்பேசியில் பேசி அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.
No comments:
Post a Comment