அக்னிப்புரட்சி இன்றைய (02.08.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (02.08.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (02.08.2022) முக்கிய செய்திகள்.

* வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது 'டி-20' போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் 1-1 என சமன் செய்தது. இன்று (ஆக.,2) 3வது டி20 போட்டி நடைபெறுகிறது.

* அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்க டிரோன் தாக்குதலில் கொலை.

காபூலில் நடத்திய டிரோன் தாக்குதலில் அல் கொய்தா தலைவர் கொலை.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பின் அமெரிக்கா நடத்திய பெரிய டிரோன் தாக்குதல் இது.

* சென்னை, நுங்கம்பாக்கம் மற்றும் மதுரையில் உள்ள திரைப்பட பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை.

ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

* ஜிஎஸ்டி பெயரில் ஏமாற்றும் திமுக - நிர்மலா சீதாராமன் பதிலடி"

Watch: https://youtu.be/5GDiQXMHjX8

நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பளீர் பதிலடி

* பிரபல சினிமா தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தொடர்புடைய இடங்களில் வருவான வரித்துறையினர் சோதனை.

சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என மொத்தம் 40க்கும் மேற்பட்டோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

* புத்தொழில் நிறுவனங்கள் கருத்தரங்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 14ம் இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான புத்தொழில் காப்பகங்கள் இயங்கி வருகின்றன.

தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் முன்னோக்கிய பாய்ச்சலில் போய்க் கொண்டிருக்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* ஆவின் பால் பாக்கெட்டுகளில் அளவு குறைபாடு இருந்தால் மாற்று பால் பாக்கெட்டுகள் வழங்க நடவடிக்கை - ஆவின் நிறுவனம்.

நுகர்வோர் தங்களின் குறைகளை 1800-425-3300 அல்லது aavincomplaints@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் - ஆவின் நிறுவனம்.

* மதுரையில் பழங்காநத்தம் மேலத்தெரு கோவிலில் கூழ் காய்ச்சிய போது போதை ஆசாமி தவறி விழுந்து சாவு

* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக.5 முதல் கலந்தாய்வு நடைபெறும்.

தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி. உள்பட படிப்புகளில் இருக்கும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (ஜூன்) 22ம் தேதி முதல் தொடங்கியது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பப்பதிவு செய்ய கடந்த மாதம் 27ம் தேதி கடைசி நாளாக இருந்தது. மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 விண்ணப்பங்கள் பதிவானது.

இதில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 765 விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 விண்ணப்பங்களுக்கு கட்டணங்கள் செலுத்தியிருப்பதாகவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக.5 முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.   163 கல்லூரிகளில் ஆக.5 முதல் ஆன்லைனிலேயே கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் நாளை வெளியிட உள்ளதாக கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

* கனமழை: நீலகிரி மாவட்டத்தில்  நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஆக.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவிப்பு.

*:தமிழகத்திலும் ரெட் அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுப்பு.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்  பெய்யும் என வானிலை அறிக்கை தகவல்.

* கனமழை காரணமாக கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் குளிக்க தடை.

* வரும் 11ஆம் தேதி முதல் மாஸ்க், கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்களை விற்க மருத்துவ உரிமம் பெற்றியிருப்பது கட்டாயம் என தமிழக அரசு அறிவிப்பு

மருத்துவ உரிமம் பெறாமல் மாஸ்க் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை விற்பது சட்டப்படி குற்றம் என்றும் எச்சரிக்கை

* சென்னையை சேர்ந்த சுரானா நிறுவனத்திற்கு சொந்தமான 75 அசையா சொத்துக்கள் முடக்கம். 67 காற்றாலை உட்பட ரூ.113.32 கோடி மதிப்புடைய சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை.

* 1.59 மில்லி விநாடிகள்... ஜூலை 29-ல் 24 மணி நேரத்திற்கு முன்னரே சுழற்சியை நிறைவு செய்த பூமி

கடந்த 29 ஆம் தேதியன்று (ஜூலை 29) பூமி 24 மணி நேரத்திற்கு முன்னரே தன்னைத் தானே சுற்றும் ஒருநாள் சுழற்சியை முடித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நமது பால்வளி அண்டத்தைப் பொறுத்தவரை பூமி உள்ளிட்ட கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றி வருவதே ஒரு வருடமாக நாம் கணக்கில் எடுத்து கொள்கிறோம். சூரியனை சுற்றி வருவதுபோல பூமி தன்னைத் தானே சுற்றி வருகிறது. பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்ற 24 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இதுவே பூமியில் இரவு, பகல் தோன்ற காரணமாக உள்ளது.

இவ்வாறான சூழலில் கடந்த ஜூலை 29 ஆம் தேதியன்று பூமியானது வழக்கத்திற்கு மாறாக 1.59 மில்லி விநாடிகள் முன்னதாகவே தன்னைத் தானே சுற்றும் சுழற்சியை நிறைவு செய்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மிகக் குறுகிய பகல் பொழுது அமைந்து சாதனை நிகழ்ந்துள்ளது.

இதற்கு முன்னர் இவ்வாறான சாதனை 50 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. 1960 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி 1.47 மில்லி மில்லி விநாடிகள் முன்னதாகவே தனது சுழற்சியை பூமி நிறைவு செய்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதேவேளையில், 50 ஆண்டுகளாகவே பூமி வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பூமியின் சுழற்சியில் இவ்வாறான மாறுபட்ட வேகத்திற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

* சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க பார்லி. சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றடைந்தார்.

கடந்த 1949ல் நடந்த உள்நாட்டு போரைத் தொடர்ந்து, சீனாவும், தைவானும் பிரிந்தன.

இரு நாடுகளுக்கும் அதிகாரப்பூர்வ உறவு இல்லையெனினும், சீனா தைவான் நாட்டை சொந்தம் கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு செல்ல திட்டமிட்டுள்ளது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சீன அதிபர் ஜிங்பிங், நான்சி பெலோசி தைவான் வருகையை அனுமதிக்க முடியாது. நெருப்புடன் விளையாடுவோர், சாம்பலாகிப் போவது உறுதி. என, அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நான்சி பெலோசி தனது ஆசிய சுற்றுப்பயணத்தை துவக்கி முதற்கட்டமாக சிங்கப்பூர் பிரதமரை சந்தித்து பேசினார்.   இந்நிலையில் இந்திய நேரப்படி இன்று இரவு 8.15 மணிக்கு நான்சி பெலோசி, தைவான் வந்திறங்கினார்.

தைவானின் தைப்பி வந்தடைந்த பெலோசிக்கு தைவான் ராணுவ பாதுகாப்பு அளித்து வருகிறது.

தலைநகர் தைப்பி நகரின் கிராண்ட் ஹைத் என்ற இடத்தில் அங்கு தங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  சீனாவின் கடும் எச்சரிக்கையை மீறி நான்சி பெலோசி தைவான் சென்றடைந்ததால், சீனா - தைவான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் சர்வேசத அளவில் பரபரப்பான செய்தியாகியுள்ளது.   இதற்கிடையே நான்சி பெலோசியின் பாதுகாப்பிற்காக 13 அமெரிக்க போர்விமானங்கள் ஜப்பானிலிருந்து தைவானின் தைப்பி நகர் வந்தடைந்தன.

* ஆன்லைன் தபால் மூலம் தேசியக் கொடி விற்பனை - மத்திய அரசு ஏற்பாடு

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அரசு வீடுதோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதற்காக, தபால் நிலையங்கள் மூலம் ‘ePostoffice’ இணையதளம் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளது.

ஒரு மூவண்ணக் கொடி ரூ.25 என்ற விலையில், ஜிஎஸ்டி வரிகள் இன்றி விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages