அக்னிப்புரட்சி இன்றைய (03.08.2022) முக்கிய செய்திகள்.
* 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.40 லட்சம் கன அடியாக அதிகரிப்பு.
கடலூர், அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் பொதுபணித்துறை அறிவிப்பு.
* கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைக்காக இன்று நடை மாலை நடை திறப்பு;
மழை காரணமாக பக்தர்கள் பாம்பை ஆறு, நீலி மலை வழி பாதையை பயன்படுத்த தடை;
பம்பை ஆற்றில் வெள்ள பெருக்கு மற்றும் மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
* ஏற்கனவே கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள மாணவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறும் பட்சத்தில், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்-நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு, யூஜிசி உத்தரவு.
சேர்க்கையை ரத்து செய்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது.
பொதுநுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் பலர், முன்னெச்சரிக்கையாக வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள நிலையில், அவர்களின் நலன் கருதி யூஜிசி உத்தரவு.
* வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை
* திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பாளர்கள் தாணு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது
* சென்னை நகர், புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்கிறது
* கன மழை எதிரொலியொட்டி, நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாட்டம்.
நீர் நிலைகளில் வழிபடுவதற்காக குவிந்து வருகின்றனர் மக்கள்.
தருமபுரியில் உள்ளூர் விடுமுறை, திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
* நாமக்கல் மாவட்டத்தில் வல்வில் ஓரி திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை
* குஜராத்தில் முன்னணி தொழில் நிறுவனத்தில் வருமான வரி சோதனை: ரூ.1,000 கோடி கருப்பு பணம் கண்டுபிடிப்பு
குஜராத்தில் முன்னணி தொழில் குழுமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தை தளமாக கொண்டு முன்னணி தொழில் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த தொழில் குழுமம் ஆபரணங்கள், ஜவுளி, ரசாயனம், பேக்கேஜிங், ரியல் எஸ்டேட், கல்வி என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறை சந்தேகித்தது.
இதையடுத்து சமீபத்தில் இந்த தொழில் குழுமத்துக்கு சொந்தமாக கெடா, ஆமதாபாத், மும்பை, ஐதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள 38 இடங்களில் அதிரடி சோதனைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தினர்.
இந்த சோதனைகளில் கணக்கில் வராத கருப்பு பணம் ரூ.1,000 கோடி கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவல், சி.பி.டி.டீ. என்று அழைக்கப்படுகிற மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
இந்த சோதனைகளில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.24 கோடி, ரூ.20 கோடி மதிப்பிலான நகைகள், தங்க கட்டிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைகளின்போது, கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் தரவுகள், அங்கு பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதற்கு ஆதாரங்களாக சிக்கி உள்ளன எனவும் தெரிய வந்துள்ளது. வருமான வரிசோதனையின்போது சிக்கிய தரவுகள், தொழில் குழும நிறுவனங்களின் நிறுவனர்களின் சொந்த பயன்பாட்டுக்காக, கற்பனையான நிறுவனங்கள் மூலம் நிதியை மோசடி செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
* 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளது - திமுக எம்.பி. ஆ.ராசா புகார்.
ரூ.5 லட்சம் கோடிக்கு சென்றிருக்க வேண்டிய ஏலம் ரூ.1.5 லட்சம் கோடிக்குத்தான் சென்றிருக்கிறது.
மீதமுள்ள பணம் எங்கே சென்றது என மத்திய அரசு விளக்க வேண்டும் - ஆ.ராசா.
* பழனிசாமி மீதான சிபிஐ விசாரணை: ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
2018ல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்
4800 கோடி ரூபாய் அளவிற்கு நெடுஞ்சாலை துறை டெண்டரில் முறைகேடு நடந்தாக புகார் வைக்கப்பட்டது
நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு எதிரான எடப்பாடி பழனிசாமி மனு.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்கவும் உத்தரவு.
* தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வேலூர், திருச்சி, மதுரை தோப்பூர் மற்றும் உச்சபட்டியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு.
சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.
* ஆவின் நிறுவனம் மூலம் குடிநீர் பாட்டில் தயாரிக்க திட்டம்.
ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்களிலும் வாட்டர் பிளாண்ட் உள்ளதால், விரைவில் குடிநீர் பாட்டில் தயாரிக்க நடவடிக்கை.
பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவது குறித்தும் பரிசீலனை- அமைச்சர் நாசர்.
* திருவண்ணாமலை, கலசப்பாக்கம் தாசில்தாரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிய உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவு.
இது ஆரம்பம்தான் எனவும் தலைமை நீதிபதி அமர்வு எச்சரிக்கை.
* தமிழகத்தில் தண்டோரா போடுவதற்கு தடை.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம்.
* நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள, 'யங் இந்தியா' நிறுவனம் விலைக்கு வாங்கியது.
இதில் மோசடி நடந்து உள்ளதாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார்.
இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை கடந்தாண்டு இறுதியில் வழக்குப் பதிவு செய்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம், ஏற்கனவே விசாரணை நடந்தது.
காங்., தலைவர் சோனியா மற்றும் அவரது மகனும் காங்., - எம்.பி.,யுமான ராகுல் ஆகியோரையும் அமலாக்கத் துறை விசாரித்துள்ளது.
இதை எதிர்த்து நாடு முழுதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. நேற்று (ஆக.,2) டில்லியில் உள்ள ஐ.டி.ஓ.,வில் அமைந்திருக்கும் நேஷனல் ஹெரால்டு அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய 12 இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இன்று டில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.
தங்களின் அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
* ஒரே சீன கொள்கை'யில் ஐரோப்பிய ஒன்றியம் தெளிவாக உள்ளது.
சீன மக்கள் குடியரசின் அரசாங்கத்தை சீனாவின் ஒரே சட்டப்பூர்வ அரசாங்கமாக அங்கீகரிக்கிறது.
தைவான் பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க வேண்டும். - ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர்
* 27 சீன ராணுவ விமானங்கள் தைவானைச் சுற்றியுள்ள பகுதிக்குள் நுழைந்ததாக, தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
* நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை(ஆக;4) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.
உத்தரவை மீறி இயங்கும் பள்ளி - கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்.
* காமன்வெல்த் : இந்திய மகளிர் ஹாக்கி அணி அபாரம்
"ஏ" பிரிவில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது.
* சபரிமலை ஐயப்பன் கோவிலில் "நிறை புத்தரிசி" பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை காலை 5.40 மணிக்கு "நிறபுத்தரி பூஜா" என்று மழையாளத்தில் அழைக்கப்படும் நிறை புத்தரிசி பூஜை நடைபெறவுள்ளது.இதற்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரங்களில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம்.
திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான செட்டிகுளங்கரை வயல்களில் விளைந்த நெற்பயிரை கதிருடன் சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்திற்கு தலையில் சுமந்து வந்து,கோவில் கருவறைக்குள் வைத்து பூஜை செய்வதே நிறை புத்தரிசி பூஜை என்று அழைக்கப்படுகிறது.
சன்னிதானத்தில் கருவறைக்குள் வைத்து பூஜை செய்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தப் பிரசாதத்தை ஆர்வமுடன் வாங்கிச் செல்வார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நாளை காலை 5.40 மணிக்கு நடைபெற உள்ளது. அதற்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்த காலகட்டத்தில் நடை திறக்கப்படும் நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் மறுநாள் காலை முதல் அனுமதிக்கப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த மூன்று மாதங்களாக நடை திறக்கப்படும் போதே பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. அதன் காரணமாக இன்று நடை திறக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்காக ஆன்லைன் மற்றும் நேரடி புக்கிங் செய்த அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது கேரளாவில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பம்பை ஆற்றில் இறங்கவோ,குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பெருவழிப்பாதை என அழைக்கப்படும் நீதிமலை வழியாக நடந்து செல்வதற்கும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பூஜைகள் நிறைந்த பின்னர் நாளை மாலை கோவில் நடை அடைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
* காமன்வெல்த் : இந்தியாவுக்கு வெண்கலம்
ஆடவர் பளுதூக்குதல் 109 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் 355 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
No comments:
Post a Comment