அக்னிப்புரட்சி இன்றைய (05.08.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (05.08.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (05.08.2022) முக்கிய செய்திகள்.

* நீலகிரியில் தொடரும் கனமழை காரணமாக 3வது நாளாக இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அம்ரித்.

* அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரிப்பால் சுகாதார அவசர நிலை பிரகடனம்.

நியூயார்க், இல்லினாய்ஸ், கலிபோர்னியா உட்பட பல மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு.

நோய் பரவலைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும் அவசரநிலை பிரகடனம்.

* தொடர் கனமழை காரணமாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை.

திருச்சூர், ஆலப்புழா, பாலக்காடு, கோட்டயம், பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை.

* அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.

தகுதியுள்ள அரசு அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும் - தலைமைச் செயலாளர் இறையன்பு.

செயற்கை காலிப் பணியிடங்களை ஏற்படுத்துதல், தற்காலிக பதவி உயர்வு வழங்குதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு.

* தொடர் மழை காரணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்.

* சென்னை உட்பட நாடு முழுவதும்  47 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.

சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை.

முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையின் முழு கொள்ளளவான 71 அடியில், 70 அடியை நீர்மட்டம் எட்டியுள்ளது

வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம். மதுரை ஆட்சியர்

* நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடு தோறும் தேசிய கொடி பறக்க செய்ய வேண்டும் என பொதுமக்களுக்கு இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தேசிய கொடி மரியாதைக்குரியது, அதை ஏற்றும் போது நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தற்போது இந்த காணொளியில் காண்போம்!

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாவதை முன்னிட்டு நடைபெறும் அமுதப்பெருவிழாவின் ஒரு பகுதியாக மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 3693 இடங்களை பார்வையிட ஆகஸ்ட் 5 ந் தேதியிலிருந்து 15ந் தேதி வரை கட்டணம் ஏதும் கிடையாது என்று அறிவிப்பு.

* திருச்சி மாவட்ட மக்களுக்கு...
திருச்சி மாநகரை இணைக்கும் காவேரி பாலம் இன்று இரவு 12.00 (05.08.2022 ) முதல் மூடப்படுகிறது...

டூவீலர் அனுமதி உண்டு...

மாற்று பாதை பற்றிய குறிப்புகள் உள்ளன படித்து கொள்ளவும்.

* வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.5% உயர்வு!

குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 4.9%-இல் இருந்து 5.4%ஆக அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

உலக அளவில் பணவீக்க விகிதம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் வட்டி விகிதம் உயர்வு என ஆர்.பி.ஐ விளக்கம்

ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும்.!

இந்தியாவில் ஜனநாயகம் இல்லை, சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது.

சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் -காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேட்டி.

* முல்லைப் பெரியாறு அணை 137 அடியை கடந்த நிலையில், படிப்படியாக நீரை திறக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்.

தண்ணீரை திறக்கும் 24 மணி நேரத்திற்கு முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும்-பினராயி விஜயன்.

* பி.இ. கலந்தாய்வில் புதிய நடைமுறை: அண்ணா பல்கலை. தகவல்.

பொறியியல் படிப்புகளில் ஏற்படும் காலியிடங்களைத் தவிா்ப்பதற்கு புதிய கலந்தாய்வு நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை. தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைகழகத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளின் முதல்வா்கள் , தமிழகத்தில் உள்ள 110 பொறியியல் சோ்க்கை சேவை மைய பணியாளா்கள் உள்ளிட்டோருக்கான பயிற்சிகளை தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை செயலாளா் புருஷோத்தமன் பல்கலை.

வளாகத்தில் வியாழக்கிழமை வழங்கினாா். அப்போது வழக்கமான பயிற்சிகளுடன் கலந்தாய்வுக்கான புதிய நடைமுறைகள் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

நிகழ் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் காலியிடங்களைத் தவிா்ப்பதற்கு புதிய கலந்தாய்வு நடைமுறைகளைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு மாணவா் கல்லூரியை தோ்வு செய்துவிட்டு 7 நாள்களில் அவா் கல்லூரியில் சோ்ந்துவிட்டாரா என கண்காணிக்கவும், அவா் கல்லூரியில் சேரவில்லை என்றால் மீண்டும் 2-ஆம் கட்ட கலந்தாய்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் அந்த காலியிடம் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் ரூ.5,000 பதிவுக் கட்டணம் செலுத்தாமல் நேரடியாக கல்லூரிக்கு சென்று அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி அவா்களுக்கான இடத்தை உறுதி செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுகலை ஆசிரியா் காலி பணியிடங்களுடன் கூடுதலாக 1,030 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மொத்தம் 3,237 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1, கணினி பயிற்றுநா் நிலை-1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்தாண்டு செப்டம்பா் 9-ஆம் தேதி ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) வெளியிட்டது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான கணினி வழித்தோ்வு கடந்த பிப்ரவரி 12 முதல் 20-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

தொடா்ந்து தோ்வு முடிவை ஜூலை 4-ஆம் தேதி டிஆா்பி வெளியிட்டது.

இந்த பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்பட்டு விரைவில் தகுதியான பட்டதாரிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இதற்கிடையே கடந்தாண்டு ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணையில், முதுநிலை ஆசிரியா் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 2,207 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது அத்துடன் கூடுதலாக 1,030 இடங்களை அதிகரித்து மொத்தம் 3,237 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஆா்பி அறிவித்துள்ளது.

இது தோ்ச்சி பெற்றுள்ள பட்டதாரிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* மீன்வளம், மீனவர் நலத்துறைக்கு புதிய கட்டடங்களை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.43.50 கோடியில் மீன் இறங்குதளம், மீன் வளர்ப்பு தொட்டிகள், மீன் உலர் தளம் உள்ளிட்டவை திறப்பு.

* கச்சநத்தம் கொலைவழக்கு - 27 பேருக்கு ஆயுள் தண்டனை.

சிவகங்கை மாவட்டம் : கச்சநத்தம் கொலை வழக்கில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு.

2018ல் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலையடுத்து ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் கொல்லப்பட்டனர்.

குற்றம்சாட்டப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்த நிலையில், தண்டனை அறிவிப்பு.

விலைவாசி உயர்வைக் கண்டித்து சோனியா காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கருப்பு உடை அணிந்து போராட்டம்

* மது படுத்தும் பாடு!
கழிவுநீர் கால்வாய்க்குள் போதையில் தள்ளாடி விழுந்த மதுப்பிரியர்

வீடியோ: https://youtu.be/-ywJ6QsNwZE

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் நேற்றுமாலை கனமழை கொட்டியது. இதனால் பல இடங்களில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மதுபோதையில் கழிவுநீர் கால்வாய்க்குள் முதியவர் ஒருவர் விழுந்த சம்பவம் அப்பகுதியில் வீடியோ மூலம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் ஓசூரில் உள்ள பாகலூர் சர்க்கில் பகுதியில் நேற்று 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அந்த வாகனத்தில் பின்னால் இருந்த முதியவர் ஒருவர் இறங்கி மதுபோதையில் சாலையில் தள்ளாடினார்.

எங்கு செல்வது என்று தெரியாமல் திகைத்த அவர் மெதுவாக அருகில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் இடறி கழிவுநீர் கால்வாய்க்குள் எதிர்பாராதவிதமாக தலைகுப்புற விழுந்தார்.

இதில் மழைவெள்ளம் அவரை கால்வாய்க்குள் அடித்து சென்றது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே ஓடி வந்து அவரை பிடித்து இழுக்க முயன்றனர். ஆனால் தண்ணீர் அடித்து செல்லப்பட்டது. இதனால் கால்வாய் மறுபுறம் வழியாக அவரை துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.

மதுபோதையில் இருந்த அவர் மயக்கம் அடைந்தார். உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனால் அவருக்கு போதை சற்று தெளிந்தது. கழிவுநீர் கால்வாயிக்குள் விழுந்த அவருக்கு தலை, முகம், கால் உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டது.

* விலைவாசி உயர்வை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கைது.

* ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தனியார் மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து.

தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளதை தனி நீதிபதி புறக்கணித்திருக்க கூடாது - உயர் நீதிமன்றம்.

* அதிமுக பொதுக்குழு வழக்கு - நீதிபதியை மாற்றக்கோரிய விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கோரியது

நீதிபதி மீது எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை என நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு விளக்கம்

வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரிய மனுவை வாபஸ் பெற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவுறுத்தல்

கடிதத்தை திரும்ப பெறுவது குறித்து, கருத்தை அறிந்து தெரிவிப்பதாக பன்னீர்செல்வம் வழக்கறிஞர் தகவல்

* போதை பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க ஒத்துழைப்பு தேவை- அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு அரசு உறுதி எடுத்துள்ளது.

அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* என்.எல்.சி. விவகாரத்தில் நேரடியாக தலையிடுமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.

என்.எல்.சி.க்கு நிலம் வழங்கியவர்களின் வாரிசுகளுக்கு பொறியாளர் பணியிடங்களில் முன்னுரிமை தருக.

என்.எல்.சி திட்டங்களுக்கு நிலம் வழங்கியவர்கள் குடும்பங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் தேர்வில் முன்னுரிமை வழங்குவதை உறுதி செய்யவேண்டும்- முதலமைச்சர் ஸ்டாலின்.

* ஓ.பி.எஸ்., வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு.

அதிமுக பொதுக்குழு வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்ப தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரை.

வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதா, இல்லையா என்பதை தலைமை நீதிபதி முடிவெடுப்பார் - தனிநீதிபதி.

* 5% ஜிஎஸ்டி விவகாரம் - தமிழக அரசு என்ன சொன்னது?

Watch: https://youtu.be/1EMV8WbNPDE

நிர்மலா சீதாராமனுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில்

* சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெற்றி

இந்தியா பி அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா, கியூபா வீரர் ரெய்னால்டோ உடன் விளையாடி 41ஆவது நகர்த்தலில் வெற்றி

* கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக யாரேனும் புலன் விசாரணை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை - சிபிசிஐடி

சிபிசிஐடி புலன் விசாரணையை பாதிக்கும் வகையில் காணொலி காட்சிகளை பதிவிட கூடாது

மீறினால் சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்படும் எனவும் சிபிசிஐடி எச்சரிக்கை

* அதிமுக வழக்கு - புதிய நீதிபதி நியமனம்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமனம்

தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரையை ஏற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உத்தரவு

* பெண்களுக்கான இலவச நகர பேருந்துக்கள் பிங்க் நிறமாக மாற்றம்.

முதற்கட்டமாக 60 பேருந்துகளை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்

* சென்னை தையூர் கேளம்பாக்கத்தில் இலங்கையைச் சேர்ந்த முகமது பைசல் என்பவரது வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை.

பாகிஸ்தானில் இருந்து இந்தியா மற்றும் இலங்கைக்கு போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தியது தொடர்பான வழக்கில் சோதனை.

சோதனையின்போது டிஜிட்டல் கருவிகள், பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

* சென்னை பேரிடர் மேலாண்மை மையத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு.

மழை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை விரைவுபடுத்த உத்தரவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages