ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பா.ம.க நிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா கலந்தாய்வு
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகளுடன், பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று கலந்தாய்வு நடத்தினார்கள்.
தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி செயலாளர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் ஆய்வு செய்தார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி, தேர்தல் பிரிவு செயலாளர் செல்வகுமார், சேலம் மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment