அக்னிப்புரட்சி இன்றைய (09.08.2022) முக்கிய செய்திகள்.
* நாடு முழுவதும் மொகரம் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது
பள்ளிவாசல்களில் இஸ்லாமிய பெருமக்கள் சிறப்பு தொழுகைகளை நடத்தினர்
மொகரம் பண்டிகையையொட்டி தமிழகம், புதுச்சேரியில் இன்று அரசு விடுமுறை
* ஆக.15ம் தேதி கிராம சபை கூட்டம்:
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும்
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் சுற்றறிக்கை
* ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், அஸ்வினுக்கு இடம்
* மகாராஷ்டிரா: ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக 18 பேர் பதவியேற்றனர்.
பாஜக மற்றும் சிவசேனா சார்பில் தலா 9 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
* வாட்சப் க்ரூப்களில் இருந்து மற்றவர்களுக்கு தெரியாமல் வெளியேறும் வசதி.
ஆன்லைன் இருப்பை சிலருக்கு மட்டும் தெரியப்படுத்தும் வசதி.
‘ஒரு முறை மட்டும் காணும்' மெஸேஜ்களை Screenshot எடுக்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு-உள்பட பல புதிய அம்சம்கள் வாட்சப்பில் வர உள்ளதாக மார்க் தகவல்.
* நீர்வீழ்ச்சியில் மாயமானவர் சடலமாக மீட்பு
திண்டுக்கல், புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் ஒரு வாரத்திற்கு பின் சடலமாக மீட்பு
கடந்த 3ம் தேதி நீர்வீழ்ச்சியில் போட்டோ எடுக்கும்போது தவறி விழுந்து மாயமானார்.
(நீர் வீழ்ச்சியில் விழுந்த வீடியோ: https://youtu.be/fXNrCf6h8WU )
* இந்தியாவில் இத்தனை யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளதா?
நாட்டில் கடந்த 2018 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 29 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக வனம் மற்றும் சுற்றுச்சூழல் இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
இதேபோல் 2019-2021 வரை யானை தந்தங்கள் கடத்தியதாக 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
2018-2021 வரை தமிழ்நாட்டில் 3 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகை, பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
ஒடிசாவை ஒட்டிய வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக எச்சரிக்கை.
* பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா
பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் கட்சி முறித்துக்கொண்ட நிலையில், அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஆளுநர் பகு செளஹானை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
அவருடன் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் உடன் இருந்தார். ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர், புதிய அரசு பதவியேற்கும்வரை காபந்து முதலமைச்சராக நீடிக்கும்படிக் கேட்டுக்கொண்டார்.
பீகாரில் ஜேடியூ-ஆர்ஜேடி-காங்கிரஸ் இணைந்து புதிய கூட்டணி அரசு அமைகிறது.
* மதுரை:வைகை ஆற்றில் மூழ்கி இருவர் பலி
மதுரை கரடிக்கல் அருகேயுள்ள அனுப்பபட்டி கிராமத்தை சேர்ந்த வினோத் குமார், அன்பரசன் ஆகிய இருவர் உயிரிழப்பு.
ஆற்றில் இறங்கி குளித்த 6 பேர் சுழலில் சிக்கிய நிலையில் மீதமுள்ள நால்வரை தேடும் பணி தீவிரம்.
* அதிமுகவின் முதல் தேர்தல் வேட்பாளர் கருப்பு மாயத்தேவர் (88) காலமானார்.
வழக்கறிஞரான மாயத்தேவர் 1973ல் நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் முதன்முறையாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர்.
மாயத்தேவர் ( 88)
1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திமுக விலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பிறகு முதன்முறையாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலை சந்திக்க நேர்ந்தது. மாயத்தேவர் அதிமுகவின் வேட்பாளர் .
அப்போது திமுக ஆட்சி..
1973-ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
ஆளுங்கட்சியான திமுக சார்பில் பொன் முத்துராமலிங்கம் வேட்பாளர். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் மாயத்தேவர்.
மே 21ஆம் வாக்குகள் எண்ணப்பட்ட போது பயங்கரமான அரசியல் களமே ஒட்டுமொத்தமாக அதிர்ந்து போனது.
ஆளுங்கட்சியான திமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் சீமைச்சாமி டெபாசிட்டே இழந்து போனார்.
காமராஜரின் பழைய காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட என்எஸ்வி சித்தன் இரண்டாம் இடத்திற்கு வந்தார். அப்போது பழ.நெடுமாறன் திண்டுக்கல், தேனி என அடங்கிய ஒன்று பட்ட மாவட்டத்தின் ஸ்தாபன கங்கிரஸ் மாவட்ட தலைவர் மற்றும் இந்த தேர்தல் பொறுப்பாளார்.
2,60,824 வாக்குகள் பெற்று அதிமுகவின் வேட்பாளர் மாயத்தேவர் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றார். ஆளும் கட்சியான திமுக 93 ஆயிரம் வாக்குகள் பெற்றது.
* பீகாரில் ஜே.டி.யு., ஆர்.ஜே.டி., காங்கிரஸ் உள்பட 7 கட்சிகளின் கூட்டணி ஆட்சி நாளை மாலை 4 மணிக்கு பதவியேற்கிறது
முதலமைச்சராக நிதிஷ் குமார், துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்க உள்ளனர்
* 44வது செஸ் ஒலிம்பியாட்: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற நிறைவு விழா.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தோனி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்.
அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது
அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
செஸ் போட்டியில் வென்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக உள்ளேன்
மிக குறுகிய காலத்தில் 4 மாதத்தில் செஸ் ஒலிம்பியாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
வெளிநாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் ஏற்பாடுகள் குறித்து பாராட்டி வருகின்றனர்.
விளையாட்டில் முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு திராவிட மாடல் தமிழக அரசு திட்டங்களை தீட்டி வருகிறது.
ஒலிம்பிக் பதங்களை வெல்லும் வகையில் வீரர்களை உருவாக்கும் பொருட்டு ரூ.25 கோடி மதிப்பில் “ஒலிம்பிக் தங்க வேட்டை” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர், ஆசிய பீச் வாலிபால் தொடர் ஆகியவற்றை சென்னையில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
சிலம்பத்திற்கு தேசிய அங்கீகாரம் பெற்று தர முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
விளையாட்டுத்துறை முன்னிலும் அதிக பாய்ச்சலுடன் செயல்படும், எதிலும் வெற்றி தோல்வி முக்கியமல்ல, பங்கேற்பே முக்கியம்
அன்புள்ள வெளிநாட்டு வீரர்களே சென்னையை மறந்துவிட வேண்டாம்; உங்களுக்காக ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
No comments:
Post a Comment