குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களுடன் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சந்திப்பு
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றி இன்றுடன் ஓய்வு பெறும் வெங்கையா நாயுடு அவர்களை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
குடியரசுத் துணைத் தலைவராக மிகச்சிறந்த முறையில் பணியாற்றி, உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காக இந்த சந்திப்பின் போது வெங்கையா நாயுடு அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment