அக்னிப்புரட்சி இன்றைய (14.08.2022) முக்கிய செய்திகள்.
* இந்திய எதிர்ப்புக்கு இடையே சின உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி
கொழும்பு: சர்ச்சையை ஏற்படுத்திய சீன உளவுக் கப்பலான யுவான் வாங்க்-5 வருகைக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. இலங்கையில் வந்து தங்கும் இந்த உளவுக் கப்பல், இந்தியாவின் ராணுவத் தளங்களை உளவு பார்க்க முடியும் என்று இந்தியா கவலை தெரிவித்திருந்த நிலையில், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
சீன ராணுவத்தின் யுவான் வாங்க்-5 என்ற நவீன உளவு போர்க் கப்பல் இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு ஆக.11-ம் தேதி வர இருந்ததாகவும், அந்தக் கப்பல் 17-ம் தேதி வரை இலங்கையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு இந்திய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து இலங்கை அரசு வட்டாரங்கள் கூறுகையில், இந்திய அரசாங்கம் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் சீனக் கப்பலின் வருகை குறித்து கவலை தெரிவித்திருந்த நிலையில், ஏன் அந்தக் கப்பலை இலங்கையில் தங்க அனுமதிக்கக் கூடாது என்பதற்கு தகுந்த காரணங்களைக் கூறவில்லை.
இதற்கிடையில், ஆக.12-ம் தேதி இலங்கைக்கு சீன வெளியுறவுத் துறை அனுப்பிய குறிப்பில், தங்களது யுவான் வாங்க்-5 கப்பல் ஆக.16-ம் தேதி இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுதத்திற்கு வர திட்டமிட்டிருப்பதாகவும், எரிபொருள் நிரப்புவதற்காக அனுமதி கோரப்படுவதாகவும் தெரிவித்திருந்தது.
இந்த அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்டு, சீனக் கப்பல் ஆக.16 முதல் 22 வரை இலங்கை துறைமுகத்தில் தங்க அனுமதிக்கப்படுவதாக சீன அரசிடம் இலங்கை சனிக்கிழமை தெரிவித்துள்ளதாக இலங்கை தூரக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்திய கடல் பகுதி அருகே சீன உளவு கப்பல் வருவது பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என்று இந்தியா, இலங்கை அரசிடம் தனது எதிர்ப்பை தெரிவித்தது. செயற்கைகோள் கண்காணிப்புபடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் கொண்ட சீன கப்பலில் இருந்து 750 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு உள்ள பகுதிகளில் உளவு பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
அதன்படி, தமிழகத்தின் கல்பாக்கம், கூடங்குளம் உள்பட அணுமின் சக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆய்வு மையங்களை உளவு பார்க்க முடியும். அதேபோல் கேரளா, ஆந்திரா கடலோர பகுதிகளையும், தென் மாநிலங்களில் உள்ள 6 முக்கிய துறைமுகங்களையும் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
* பாஜகவில் இருந்து விலகினார் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன்.
நடந்த சம்பவத்திற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை பார்த்து மன்னிப்பு கேட்டார்.
பாஜகவின் மத வெறுப்பு அரசியல் பிடிக்காததால் இங்கு தொடர விரும்பவில்லை.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து என் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டி மன்னிப்பு கேட்டுவிட்டேன்.
இனி என்னால் உறுதியாக பாஜகவில் இருக்க முடியாது.காலையில் ராஜினாமா கடிதம் கொடுக்க போகிறேன்.- டாக்டர் சரவணன்
* தமிழகத்தில் ஒரேநாளில் மூன்று காவலர்கள் தற்கொலை !
ஆகஸ்ட் 13 தென்காசி மாவட்டம் SSI பார்த்திபன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தலைமை காவலர் யுவராஜ் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை.
திருப்பத்தூர் மாவட்டம் ஆயுதப்படை காவலர் பிரபு தூக்கிட்டு தற்கொலை.
* தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி டெல்லி பயணம்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொண்டதற்கு பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார்.
*:கடன் வாங்கியவர்களை அவமானப்படுத்தக் கூடாது - வங்கி முகவர்களுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தல்
மும்பை: வாடிக்கையாளர்களுக்கு அளித்த கடனை வசூலிக்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் வசூல் முகவர்களை நியமனம் செய்கின்றன. இவர்கள், கடன் பெற்றவர்களை மனரீதியாக துன்புறுத்துவதாக ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து, கடன் வசூல் முகவர்களுக்கு தற்போது புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
கடன் பெற்ற வாடிக்கையாளரை பொதுவெளியில் அவமானம் அல்லது இழிவுபடுத்தும் உரிமை கடன் வசூல் முகவர்களுக்கு இல்லை. மேலும், கடன் வசூல் தொடர்பாக வாடிக்கையாளரை காலை 8 மணிக்கு முன்போ அல்லது இரவு 7 மணிக்கு பின்போ அழைத்து பேசக்கூடாது. மேலும், கடனாளரின் குடும்பத்தார், நண்பர்களிடம் அத்துமீறி அவமானப்படுத்தும் நடவடிக்கைகளில் முகவர்கள் ஈடுபடக்கூடாது. இவ்வாறு ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
* க்யூட் தேர்வு ஒத்திவைப்பு
புதுடில்லி-மத்திய பல்கலைகளில் சேருவதற்கான, 'க்யூட்' நுழைவுத் தேர்வின் நான்காவது கட்டத்தில், தங்களுடைய தேர்வு மையத்தை மாற்றுவதற்காக, 11 ஆயிரம் மாணவர்களுக்கான தேர்வு, வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
மத்திய பல்கலைகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக க்யூட் நுழைவுத் தேர்வு இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், பல தனியார் பல்கலைகளும், மாநில பல்கலைகளும் இணைந்து உள்ளன.இந்தத் தேர்வுகளை, ஆக. 20ம் தேதிக்குள் முடிக்க, தேர்வுகளை நடத்தும் என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை திட்டமிட்டிருந்தது.
ஆனால், சில தொழில்நுட்பக் காரணங்களால் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.இந்நிலையில், நான்காம் கட்டத் தேர்வு, ஆக., 17 - 20ம் தேதி வரை நடக்கிறது. இதில், 3.72 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். கடந்த இரண்டு மற்றும் மூன்றாம் கட்டத் தேர்வின்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த நான்காம் கட்டத் தேர்வு எழுதும் மாணவர்கள், வேறு இடங்களை தேர்வு செய்வதற்கு அனுமதி கேட்டனர்.
அதன்படி, இந்த இடங்களைச் சேர்ந்த, 11 ஆயிரம் மாணவர்கள், வேறு தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்க வசதியாக, அவர்களுக்கான தேர்வு மட்டும், வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* ராகுல் காந்தி மீண்டும் தலைவராக விருப்பம்: செப். 5ல் காங்கிரஸ் உட்கட்சி தேர்தல்? விரைவில் காரிய கமிட்டி கூடுகிறது
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல் வரும் செப்டம்பர் 5ம் தேதி நடத்துவதற்கான முன்மொழிவு தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை எதிர்கொண்டதால், அப்போதைய தலைவராக இருந்த ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பின் இன்று வரை காங்கிரஸ் கட்சியின் முழுநேரத் தலைவர் நியமனம் செய்யப்படவில்லை. இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். ஆனாலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை ராகுல்காந்தி வெளியிட்டு வருகிறார்.
அதேநேரம் ஜி-23 தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு முழுநேரத் தலைவர் நியமனம் செய்ய வேண்டும், கட்சியை வலுப்படுத்த வியூகங்களை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கிடையே ஜி-23 தலைவர்களில் ஒருவரான மூத்த தலைவர் கபில் சிபல், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். கடந்த சில மாதங்களுக்கு முன் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தற்போது உட்கட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அறிவிப்புகள் வெளியாக உள்ளன. ஏற்கனவே காங்கிரஸ் தலைவரின் ஐந்தாண்டு பதவிக்காலம் செப்டம்பர் 20ம் தேதிக்குள் முடிவடைவதால், அதற்குள் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று காங்கிரஸ் கூறியது. அதனால் தலைவர் பதவிக்கான தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில், கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பதும், கட்சியை யார் வழிநடத்துவது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைமை வட்டாரங்கள் கூறுகையில், ‘கட்சியின் தலைமையை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று குரல்கள் தொடர்ந்து ஒலித்து வருகின்றன. ஆனால் சில தலைவர்கள் ராகுல் காந்தி மீண்டும் கட்சித் தலைவராக வருவதை எதிர்க்கின்றனர். விரைவில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூட்டப்படும். அப்போது காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். வரும் 20ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யவும், செப்டம்பர் 3ம் தேதிக்குள் வேட்புமனுவை திரும்பப் பெறவும், செப்டம்பர் 5ம் தேதி தேர்தலை நடத்தவும் முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான விபரங்கள் செயற்குழு முன் வைக்கப்படும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன....
* இந்திய நாட்டின் 75 வது சுதந்திர ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் வழிந்தோடிகளில் வழியும் நீரானது இந்திய தேசிய மூவர்ணக் கொடியின் வண்ணத்தில் ஒளிரும் வகையில் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
* தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு சிறந்த பொதுச்சேவைக்கான முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிப்பு.
காவல்துறை அதிகாரிகள் 10 பேருக்கு புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்கள் அறிவிப்பு.
விருதுகள் பெறுவோர்களுக்கு 8 கிராம் தங்கப்பதக்கமும், ரூ.25,000 பரிசும் வழங்கப்படும்.
* மதுரை நகர், மாவட்ட பா.ஜ.க. தலைவர் பதவியிலிருந்து சரவணனை நிரந்தரமாக நீக்குவதாக மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவிப்பு.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து வருத்தம் தெரிவித்திருந்தார் சரவணன்
கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் சரவணன் நிரந்தர நீக்கம் -அண்ணாமலை.
* தமிழக காவல் அதிகாரிகளுக்கு விருது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாடு காவல்துறையின் நிர்வாக பிரிவு ஏடிஜிபி சங்கர், நுண்ணறிவு பிரிவு ஐஜி ஈஸ்வரமூர்த்தி, சேலம் வடக்கு துணை காவல் ஆணையர் மாடசாமி ஆகியோருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு.
* வங்கிக்கொள்ளை - துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம்:
அரும்பாக்கம் வங்கி கொள்ளை பற்றி துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம்.
கொள்ளையர்களை பிடிக்கும் காவலர்களுக்கும் ரூ.1 லட்சம் சன்மானம் - டிஜிபி சைலேந்திர பாபு அறிவிப்பு.
* வீசப்பட்ட செருப்பு பத்திரமாக இருக்கிறது:
நேற்று நடந்த சம்பவத்தைப் பற்றி நான் பிறகு கூறுகிறேன்.
பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் தன்னுடைய கட்சி உறுப்பினர்களுடன் எப்படி அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டார்?
அந்த செருப்பை திரும்பப்பெற விரும்பினால் பெற்றுக்கொள்ளலாம்.
என்னுடைய ஊழியர்கள் அதை பத்திரமாக வைத்திருக்கின்றனர் - பி.டி.ஆர் ட்வீட்.
* சென்னை அருகே தனியார் வங்கி கொள்ளை சம்பவத்தில், உண்மையான கொள்ளையர்களை காவல்துறை கண்டுபிடிக்கும் என்ற நம்பிக்கை அற்றுப்போய்விட்டது.
தங்களின் ஏவல்துறையாகவே திமுக அரசு காவல்துறையை பயன்படுத்தி வருகிறது. காவல்துறையை சுதந்திரமாக சட்டப்படி செயல்பட அனுமதிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டும்- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
* அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - விஐபி தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 21ஆம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து
* தமிழக திறந்த நிலை பல்கலைக்கழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் மீது புகார்;
இது தொடர்பாக ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மாவட்ட தலைவர் பாஸ்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்
* இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு, இப்போது அதன் நிலையை மாற்றிக் கொண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதித்திருக்கிறது. இது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்”
- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா ட்வீட்
* தருமபுரி: பாப்பாரப்பட்டியில் கடந்த 11ம் தேதி பாரதமாதா நினைவாலையத்தின் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்த பாஜக நிர்வாகிகள் 4 பேர் கைது!
மேலும் ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் உட்பட 50 பேர் மீது வழக்கு பதிவு!
* ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், உயர்சாதியினருக்கு என வைக்கப்பட்ட பானையில் தண்ணீர் அருந்தியதாக கூறி ஒன்பது வயது பட்டியலின சிறுவன் ஆசிரியர் ஒருவரால் கொடூரமாக தாக்கியதில் உயிரிழப்பு !
* பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரும், தொழிலதிபருமான ராக்கேஷ் ஜுன்ஜுன்வாலா(62) உடல் நலக்குறைவால் மும்பையில் இன்று காலமானார்!
* தாயகம் காக்க தன்னலம் துறந்த சுதந்திர போராட்ட வீரர்களையும், எல்லைகளைக் காக்கும் முப்படை வீரர்களையும் நன்றியோடு நினைவுகூர்வோம்” - 'பெருமைமிகு இந்தியன்’ கமல்ஹாசன் சுதந்திர தின வாழ்த்து செய்தி
* காலணி வீச்சு - முதலமைச்சர் கண்டனம்.
இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என நினைப்பவர்கள், தாங்கள்தான் ‘தேசபக்திக்கு’ ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, வரம்புமீறுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவண்ணக் கொடியையும், விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம்.
தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தேசியக் கொடி பொருத்தப்பட்ட மாண்புமிகு அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி, விடுதலைநாளின் பவள விழா மகத்துவத்தையே மலினப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த இழிசெயல்களில் ஈடுபட்டவர்களுடன் இணைந்திருந்த ஒருவரே, மாண்புமிகு அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, தனது செயலுக்கு மன்னிப்பு கோரியிருப்பதுடன், “இனி இவர்களின் சங்காத்தமே வேண்டாம்” எனத் தலைமுழுகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரை:
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை
75ம் ஆண்டு சுதந்திர தினத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் வீர வணக்கம் செலுத்துவோம் - குடியரசுத் தலைவர்
இந்தியா சுதந்திரம் பெற்றது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி; அனைத்து விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்திக் கொள்கிறேன்
சுதந்திர போராட்ட வீரர்கள்தான் நமக்கு எடுத்துக்காட்டான முன்னோடிகள்.
சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு போற்றுதலுக்குரியது.
நவம்பர் 15ம் தேதி பழங்குடியினர் தினமாக கொண்டாடப்படும் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது- குடியரசுத் தலைவர்.
கொரோனாவால் உலக நாடுகள் பலவும் பொருளாதார பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் இந்தியாக அதில் இருந்து வேகமாக மீட்டுள்ளது.
மீண்டும் வரும் நமது பொருளாதாரம் அனைத்து மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.
கல்வி, பொருளாதாரம் சுகாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான் நல்ல ஆட்சிக்கான சான்றாக உள்ளது - ஜனாதிபதி.
* மத்திய அரசு அழைப்பு
ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ண கொடியேற்றி பாரத தாய்க்கு 75வது சுதந்திர தினத்தில் வணக்கங்கள் தெரிவிப்பதோடு கீழ்காணும் இணையதளத்தில் தங்கள் புகைப்படத்துடன் பதிவும் செய்யவும்.
https://harghartiranga.com/
வந்தே மாதரம்! வாழ்க பாரத நாடு!
* சென்னை, அரும்பாக்கம் தனியார் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 18 கிலோ தங்கம் மீட்பு.
நேற்று 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் 18 கிலோ தங்கம் மீட்பு.
பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகிய 3 பேர் கைது.
No comments:
Post a Comment