அக்னிப்புரட்சி இன்றைய (15.08.2022) முக்கிய செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (15.08.2022) முக்கிய செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (15.08.2022) முக்கிய செய்திகள்

* டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி

9ஆவது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி

🔴LIVE சுதந்திர தின சிறப்பு நேரலை!

Watch: https://youtu.be/p_XOSqrgClI

* சுதந்திர தினம் - பிரதமர் மோடி உரை.
மக்கள் அனைவருக்கும் இதயபூர்வமான சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாபாசாகேப் அம்பேத்கர், வீர் சாவர்க்கர் ஆகியோருக்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

சுதந்திரத்திற்காக போராடியவர்களை மட்டுமல்ல, சுதந்திர இந்தியாவின் சிற்பிகளான ஜவஹர்லால் நேரு, ராம் மனோகர் லோஹியா மற்றும் சர்தார் வல்லபாய் படேல் போன்றவர்களுக்கும் நாம் தலை வணங்குகிறோம்.

நம் நாடு தான் ஜனநாயகத்தின் தாயகம்; இந்தியாவின் பன்முக தன்மையே அதன் வலிமை.

பல்வேறு தடைகள் இருந்தும் அதனை தகர்த்து இந்தியா முன்னேறி வருகிறது.

நேரலையில் பார்க்க: https://youtu.be/p_XOSqrgClI

* அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்” - சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 31%ல் இருந்து 34% ஆக உயர்வு!

"சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான சிறப்பு ஓய்வூதியம் ₹20,000-ஆக அதிகரிப்பு; தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் ₹10,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்;

“வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டிய சகோதரர்களின் வழித் தோன்றல்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ₹10,000 ஆக உயர்வு!”

“இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டுகால தொடர் பங்களிப்பை இளைஞர்கள் அறியும் வகையில், சென்னையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும்!”

“விடுதலை போராட்ட வீரர் மலையாள வெங்கிடுபதி எத்தலப்பருக்கு ₹2.6 கோடி மதிப்பில் திருப்பூரில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்!”
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* தகைசால் விருது பெற்ற நல்லகண்ணு தான் பெற்ற ரூ.10லட்சம் விருது தொகை உடன் ரூ.5,000 சேர்ந்து முதல்வர் சிறப்பு நிவராண நிதிக்கு நிதியாக திரும்பி அளித்தார்.

* பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு - இந்து முன்னணியை சேர்ந்தவரும், சினிமா சண்டைப் பயிற்சியாளருமான கனல் கண்ணன் கைது.

* திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள மருத்துவர் அய்யா அவர்களின் இல்லம் மற்றும் பாமக பயலரங்கத்தில் இன்று (15.08.2022) 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் நமது தேசியக் கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார்.

உடன் பசுமை தாயக மாநில தலைவர் முனைவர் செளமியா அன்புமணி மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாமக மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் டாக்டர் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்

* பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணி தான் வெற்றி பெற்ற பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில், தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (15.8.2022) தேசியகொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்...

* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து இந்தியா விலகல்? - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அதிரடி பேச்சு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து இந்தியா விரைவில் விலகும் சூழ்நிலை ஏற்படலாம் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் பல்கலைக்கழத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில்,

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்த்து கிடைக்காதது குறித்து மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்,

ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராவது மிகப்பெரிய விஷயம். அது மிகவும் சுலபமாக நடந்து விடாது. எனென்றால் உலகம் தாராளமான இடமல்ல. நாடுகள் தமக்கு கிடைப்பதற்கு போராட வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தற்போதைய கட்டமைப்பு 1945-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் முடிவை பிரதிபலிக்கும் வகையில் அந்த கட்டமைப்பு உள்ளது. 77 ஆண்டுகள் கடந்த நிலையில் உலகம் பெருமளவு மாறிவிட்டது.

மிக விரைவில் உலகின் மிகவும் பிரபலமான நாடும், உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார பலம் கொண்ட நாடும் (இந்தியா) ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இல்லாத சூழ்நிலை ஏற்படும்.

அப்போது, பாதுகாப்பு கவுன்சில் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை கொண்டது என்பது குறித்து உங்களிடம் நான் கேட்பேன்' என்றார்.

* தமிழக அரசின் அகவிலைப்படி உயர்வை வரவேற்க இயலவில்லை: தேசிய ஆசிரியர் சங்கம் அறிக்கை

* சுதந்திர தினத்தை ஒட்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.

சபாநாயகர் அப்பாவு,அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்பு.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் மற்றும் விசிக கட்சியின் எம்.எல்.ஏ.க்களும் தேநீர் விருந்தில் பங்கேற்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages