தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்! மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்
இந்தியாவிலுள்ள அனைத்து தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களிலும் அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% அல்லது உள்ளூர் அளவிலான இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு:
To
The Honourable minister for Law and Justice
New Delhi
Dear Mr. Kiren Rijiju ji,
Subject: requesting action to implement 27% reservation or reservation as per local Laws for Other Backward Classes - in National Law Universities - regarding
I am writing this letter to draw your attention regarding continuous denial of reservation to Other Backward Classes (OBCs) in admissions to National Law Colleges under All India Quota. Applications are received for admissions to the twenty three National Law Colleges from the 8th of August 2022. Hence I request early action.
In the 23 National Law Colleges in various States including Tamil Nadu, certain percentage of seats are given to All India Quota. The remaining seats are given to the respective States’ students. Most of these National Law Universities do not implement the reservation for OBCs. I am presenting the following facts for your kind perusal.
Of the 23 National Law Universities only 6 Universities are implementing OBC reservation. The Tamil Nadu National Law University at Trichy provides 50% reservation to OBCs for admissions under All India Quota.
The following three Law Universities provide 27% reservation to OBCs within All India Quota.
1. Gujarat National Law University, Gandhi Nagar, Gujarat
2. National University of Study and Research in Law, Ranchi, Jharkhand
3. Dr. B. R. Ambedkar National Law University, Sonepat, Haryana
Following Universities provide less than 27% reservation to OBCs in All India Quota:
1. Hidayatullah National Law University, Raipur, Chhattisgarh
2. National Law University, Bhopal, Madhya Pradesh
3. National Law School of India University, Bengaluru, Karnataka
4. National Academy of Legal Studies and Research University, Hyderabad, Telangana
5. National Law University, Delhi
It is disheartening to note that the remaining 14 National Law Universities do not provide any reservation to OBCs in the All India Quota.
As far as admissions to Medical Courses are concerned, 15% of Undergraduate seats and 50% of Postgraduate seats are given to All India Quota. But when it comes to Law universities, each University gives more than 50% of seats to All India Quota. Since the majority of seats are given to All India Quota, non-implementation of reservation to OBCs is an injustice to OBC students.
National Law Universities are opened by enacting State Laws. Hence universities claim that the executive committees of the respective universities have the power to decide the policy and quantum of reservation. They further argue that they cannot be compelled to provide reservation to OBCs in All India Quota. This is unacceptable. The Ministry of Law and Justice should not permit the National Law Universities to undermine social justice.
The representation of OBCs in the Department of Law and Justice is very low. It is extremely difficult for OBCs to enter National Law Universities. The only way to change this situation is to ensure proper implementation of reservation to OBCs in admissions to National Law Universities.
The Universities Grant Commission and the National Backward Classes Commission have time and again asked the National Universities to implement OBC reservation. But the National Law Universities continue to refuse to implement OBC reservation.
Hence I request that the Honourable Minister uses his good offices and ensure implementation of 27% or more reservation to OBCs from this academic year in admissions to National Law Universities under All India Quota and ensure social justice.
கடிதத்தின் தமிழாக்கம்:
அன்புள்ள மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு அவர்களுக்கு
வணக்கம்!
பொருள்: இந்தியாவின் அனைத்து தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களிலும் அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% அல்லது உள்ளூர் அளவிலான இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோருதல்& தொடர்பாக.
இந்தியா முழுவதும் உள்ள 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 08.08.2022 முதல் பெறப்பட்டு வரும் நிலையில், அந்த பல்கலைக்கழகங்களின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை தங்களுக்கு நான் எழுதுகிறேன்.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 23 தேசிய சட்டப்பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களில் குறிப்பிட்ட விழுக்காடு இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப் படுகின்றன; மீதமுள்ள இடங்கள் மாநில ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டு, சொந்த மாநில மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பான்மையான தேசிய சட்டப்பல்கலைக்கழகங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. ஓபிசி இடஒதுக்கீடு குறித்த விவரங்களை பரிசீலனைக்காக உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் 9 பல்கலைக்கழகங்களில் மட்டும் தான், 27 விழுக்காட்டை விட கூடுதலாகவோ, குறைவாகவோ ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் தான், அகில இந்திய தொகுப்பில் 50 விழுக்காடு இடங்கள் ஓபிசிக்கு ஒதுக்கப்படுகின்றன.
1. குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகம், காந்தி நகர்,
2. தேசிய சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம், ராஞ்சி, ஜார்க்கண்ட்,
3. டாக்டர். அம்பேத்கர் தேசிய சட்டப் பல்கலைக்கழகம், சோனிப்பேட், ஹரியானா
ஆகிய 3 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் அகில இந்திய தொகுப்பில் 27% ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
1. ஹிதாயத்துல்லா தேசிய சட்டப் பல்கலைக்கழகம், ராய்ப்பூர், சத்தீஸ்கர் - 12.90%
2. தேசிய சட்டப் பல்கலைக்கழகம், போபால், மத்தியப் பிரதேசம் - 14%
3. இந்திய தேசிய சட்டப் பல்கலைக்கழகம், பெங்களூர், கர்நாடகம் - 16.20%
4. தேசிய சட்டக் கல்வி & ஆராய்ச்சிக் கழகம், ஹைதராபாத், தெலுங்கானா - 18%
5. தேசிய சட்டப் பல்கலைக்கழகம், தில்லி - 22%
ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்களிலும் அகில இந்திய தொகுப்பில் 27 விழுக்காட்டுக்கும் குறைவாக ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவை தவிர மீதமுள்ள 14 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களிலும் அகில இந்திய தொகுப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்பது வருத்தமளிக்கிறது.
மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை இளநிலைப் படிப்புகளில் 15% இடங்களும், முதுநிலை படிப்புகளில் 50% இடங்களும் தான் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படுகின்றன. ஆனால், தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்த வரை ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் 50%க்கும் கூடுதலான இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான அந்த இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதால், அந்தப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த சமூக அநீதி போக்கப்பட வேண்டும்.
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் மாநிலச் சட்டங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன. அதனால், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதும், இட ஒதுக்கீட்டின் அளவைத் தீர்மானிப்பதும் சம்பந்தப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்தின் செயற்குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், இட ஒதுக்கீட்டை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகங்கள் கூறுகின்றன. அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கும்படி தங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் கூறுகின்றன. இது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் ஆகும். தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் சமூகநீதியை சூறையாடுவதை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அனுமதிக்கக் கூடாது.
சட்டம் மற்றும் நீதித்துறையில் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக உள்ளது. அதிலும் குறிப்பாக தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நுழைவதே அரிதாகவும், அதிசயமாகவும் மாறி வருகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றால், தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை மத்திய சட்ட அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும்.
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஓபிசி இட ஒதுக்கீட்டை செயல்படுத்தும்படி பல்கலைக்கழக மானியக் குழுவும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் பலமுறை அறிவுறுத்தியுள்ளன. ஆனால், அதை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்படுத்தவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு, அனைத்து தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களிலும் அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% அல்லது அதற்கும் கூடுதலான இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment