அக்னிப்புரட்சி இன்றைய (28.08.2022) முக்கிய செய்திகள்.
* ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்வரத்து உயர்வு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.45 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
* உதவி ஜெயிலர் வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு.
கடலூர்: மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டனை குடும்பத்துடன் தீ வைத்துக் கொளுத்த முயற்சி.
சிறையில் கைதி எண்ணூர் தனசேகரிடம் செல்போன் பறிமுதல் செய்ததால், ஆத்திரத்தில் கூலிப்படை மூலம் கொலை செய்ய முயற்சி என காவல்துறை தரப்பில் தகவல்.
உதவி ஜெயிலர் குடும்பத்தினர் வேறு அறையில் உறங்கியதால் உயிர் தப்பினர்.
கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
* கேரளாவில் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள்: உயர்நீதிமன்றம் அதிருப்தி
கேரளாவில் பள்ளிச் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் பாலியல் துஷ்பிரயோகங்களை அதிகரித்து வருவதாகவும், இதனைத் தடுக்க அரசும், கல்வி வாரியமும் உடனடி நடவடிக்கை எடுத்து, நிபுணர் குழுவை உருவாக்க வேண்டும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. வன்கொடுமையை தடுக்கும் வகையில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
* சொந்த செலவில் திருமணம் செய்துகொள்ளும் இன்றைய இளைஞர்கள்
இன்றைய தலைமுறையினர் திருமணத்தைச் சொந்த செலவில் செய்யும் முறை மாறி வருவதாகத் தெரியவந்துள்ளது. மேலும் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதிலும் அதே நேரத்தில் பணத்தை சிக்கனப்படுத்துவதிலும் இன்றைய இளைஞர்கள் திறமையாக இருக்கிறார்கள் என்று சர்வே தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது திருமணத்தை நடத்தி வைக்கும் திருமண ஏற்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
* காவிரியில் வெள்ளப்பெருக்கு
உதவி எண்களை அறிவித்தது நாமக்கல் மாவட்ட ஆட்சியரகம்
மாவட்ட பேரிடர் கால நடவடிக்கை மையம் - 1077
வட்டம் வாரியாக உதவி எண்கள்
குமாரபாளையம் - 9786984577
திருச்செங்கோடு - 9445000545
பரமத்திவேலூர் - 9445000546
மோகனூர் - 9952412755
* இரயில்வே அறிவிப்பு
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி முதல் ஜனவரி 26-ந்தேதி வரை இயக்கப்படும்
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் (06030) இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி முதல் ஜனவரி 26-ந்தேதி வரை இயக்கப்படும். இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி(06029) இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற செப்டம்பர் 2-ந்தேதி முதல் ஜனவரி 27-ந்தேதி வரை இயக்கப்படும். இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வெலி சென்றடையும்.
திருநெல்வேலி-தாம்பரம்(06004) இடையே இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் திருநெல்வேலி-விருதுநகர் இடையே செல்லும் நேரம் வருகிற ஆகஸ்டு 28-ந்தேதி முதல் மாற்றப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் நேரம் 7.20 மணிக்கு மாற்றம்செய்யப்படுகிறது. இதேபோல் விருதுநகர் வரை ரெயில் செல்லும் நேரங்களில் மாற்றம் செய்யப்படுகிறது.
* தகைசால் தந்தையே, நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன்; உங்கள் சொற்படியே நடக்கிறேன், அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன்; மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள்- திமுக தலைவராக 5ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
* கோதுமை மாவு, மைதா, ரவை ஆகிய பொருட்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஆகஸ்ட் 25-ம் தேதி நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோதுமை மாவு,ரவை,மைதா ஆகிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
* "நான் இன்டர்நேஷனல் டெரரிஸ்ட்" - சீமான் சர்ச்சை பேச்சு!
வீடியோ: https://youtu.be/P12aGJaNDy8
விஞ்ஞானிகளுக்கு தோன்றாத யோசனை "அய்யா எ.வ.வேலு"-க்கு தோன்றியிருக்கிறது - சீமான் விமர்சனம்!
*:போதுமான நிதியே இல்லை என்ற நிலையில் மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது அவசியமா?-எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்.
பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் ரூ.80 கோடியில் தமிழக மக்கள் அனைவருக்கும் பேனா வாங்கி விடலாம்.
திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களாகிறது, என்ன செய்தீர்கள்? என்று மக்கள் கேட்கின்றனர்.
மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய எந்த திட்டத்தையும் கொண்டுவரவும் இல்லை, நிறைவேற்றவும் இல்லை- எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்.
* மாற்று இடங்கள் வழங்கிய பின்னரே, நீர்நிலை ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற வேண்டும்.
பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து ஆக்கிரமிப்பை விட்டு வெளியேற வேண்டும்.
வரும் காலங்களில் நீர்நிலைகளில் வீடு கட்ட அரசு அனுமதிக்க கூடாது- தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்.
* 9 ஆண்டுகளாகக் கட்டப்படட இரட்டை கட்டிடம் 9 நொடியில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தைக் கட்டியது.
சுமார் 7,000 பேர் தங்கும் வசதி கொண்ட இந்த குடியிருப்பில் இதுவரை யாரும் குடியேறவில்லை.
இதில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் 32 தளங்களும், மற்றொன்றில் 29 தளங்களும் உள்ளன.
இந்த கட்டுமானமானது சுற்றுச்சூழல் விதிகளுக்குப் புறம்பானது எனப் புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் இந்த அடுக்குமாடி கட்டிடமானது கட்டுமான விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து கடந்தாண்டு கட்டிடங்களை வெடி வைத்துத் தகர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை வெடிவைத்துத் தகர்க்கும் பணி எடிபைஸ் இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி இன்று மதியம் 2.30 மணிக்கு இரட்டை கோபுர கட்டடம் இடிக்கப்பட்டது.
இதற்குமுன்னதாக இரட்டை கோபுர கட்டடத்தின் அருகே உள்ள 5000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
மேலும் அப்பகுதியிலிருந்த சுமார் 1,500 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
இரட்டை கோபுர தகர்ப்பையொட்டி இன்று நொய்டாவில் குறிப்பிட்ட பகுதியில் ‘டிரோன்கள்’ பறக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தகர்ப்பு வேளையில் 1 நாட்டிகல் மைல் தூரத்துக்கு வான்வெளியில் விமானம் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புப் பணியில் சுமார் 560 போலீசார், 100 ரிசர்வ் படைகள், 4 என்டிஆர்எஃப் குழு ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வீடியோ: https://twitter.com/IndiaNewsDigest/status/1563817411794456576?t=wB5cciU0VwtByEk9bw3pEg&s=19
கட்டிடத்தை இடிப்பதற்காக சுமார் 37,000 கிலோ வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டது.
இரட்டை கோபுரத்த இடித்தபின் கழிவுகளை எடுத்துச் செல்ல 1200 டிப்பர் லாரிகள் தயார் நிலையில் உள்ளன.
9 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இரட்டை கட்டிடம் 9 நொடியில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது இதனால் அப்பகுதி புகை சூழ்ந்து காணப்படுகிறது.
* இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெறும் என தகவல்.
அக்டோபர் 19ம் தேதி தேர்தல் முடிவுகளை வெளியிட திட்டம்.
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியுள்ள நிலையில் தகவல்.
* 17 வயது நிறைவடைந்தவா்கள் வாக்காளா் அட்டைக்காக முன்கூட்டியே ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொண்டால், அவா்களின் 18-ஆவது பிறந்த நாளில் வாக்காளா் அடையாள அட்டை பரிசாக வீட்டுக்கு அனுப்பப்படும் என்று இந்திய தோ்தல் ஆணையா் அனுப் சந்திரா பாண்டே தெரிவித்தாா்.
தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் தோ்தல் ஆணையம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ், பரிசுத் தொகை வழங்கும் விழா சென்னை ரிப்பன் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இந்திய தோ்தல் ஆணையா் அனுப் சந்திரா பாண்டே பங்கேற்று, வெற்றி பெற்ற 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:-
இளைஞா்களின் பங்களிப்பு நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகவும் முக்கியமாகும். இந்தியாவில் மக்கள் 16 சதவீதம் மட்டுமே கல்வி அறிவு பெற்றவா்களாக இருந்த காலத்தில் வாக்காளா்களுக்கு சின்னம் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தி ஜனநாயகம் வளா்க்கப்பட்டது.
தற்போது, உலகளவில் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக வளா்ந்துள்ளது. ஒரு வாக்காளா் கூட விடுபட்டுவிடக் கூடாது என்பதுதான் தோ்தல் ஆணையத்தின் இலக்கு.
ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபா் என 4 காலாண்டு அளவில் வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜனவரியில் 18 வயதை நிறைவு செய்பவா்கள் ஏப்ரலில் வெளிவரும் பட்டியலில் சோ்ந்து கொள்ள முடியும்.
அதேபோல, ஏப்ரல், ஜூலை, அக்டோபா் ஆகிய மாதங்களில்- இடைப்பட்ட காலத்தில் 18 வயதை நிறைவு செய்தால் அடுத்து அடுத்து வரும் வாக்காளா் பட்டியலில் பெயா் இணைக்கப்படும்.
17 வயது நிறைவடைந்தவா்கள் வாக்காளா் அட்டைக்காக முன்கூட்டியே ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்து கொள்ள முடியும். அவா்களின் 18-ஆவது பிறந்த நாள் பரிசாக வாக்காளா் அடையாள அட்டை வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும்.
17 வயது நிறைவடைந்தவா்கள் வழிமுறைகளை பின்பற்றி வாக்காளா் அட்டைக்கான முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றாா்.
* மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 3 முதல் 13 வரை நடைபெறுவதாக இருந்த புத்தகத் திருவிழா, நிர்வாக காரணங்களால் ஒத்திவைப்பு - மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவிப்பு
* துவங்கியது கிரிக்கெட் போர்!
ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு.
* 🏏 கெத்து காட்டிய ஹர்திக்: இந்திய பவுலர்கள் புது சாதனை; பாக் 147 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!
துபாய்: ஆசிய கோப்பை தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக அனைத்து 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர். புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
* சென்னை விமான நிலையத்தில் மழை காரணமாக 2வது நாளாக விமான சேவை பாதிப்பு
பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் தாமதமாக தரையிறக்கம்
178 பயணிகளுடன் வந்த சிங்கப்பூர் விமானம் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
No comments:
Post a Comment