அக்னிப்புரட்சி இன்றைய (29.08.2022) முக்கிய செய்திகள்.
* ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி:
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான அணி 19.5 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்தது.
148 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு ஆடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.
ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
* கனமழை காரணமாக ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
* தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலை நிலவரப்படி 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி நீர்வரத்து.
தொடர்ந்து கனமழை பெய்வதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு. பரிசல் இயக்கவும் குளிக்கவும் தடை.
* இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 பேரை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம்.
மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை.
* CUET PG தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள், ஹால் டிக்கெட்டை cuet.nta.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
* வெற்றி வீரனுக்கு தலை வணங்கிய தினேஷ்கார்த்திக்...
வைரலாகும் படங்கள்!
நேற்றைய போட்டியில் இந்தியா பேட்டிங்கின் போது ஆட்டத்தின் 20 ஓவரை பாகிஸ்தான் வீரர் நவாஸ் வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன் அடித்தார். மூன்றாவது பந்தை ஹர்திக் பாண்ட்யா ரன் எதுவும் எடுக்கவில்லை.
இதனால் இந்திய வெற்றிக்கு 3 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பாண்ட்யா தினேஷ் கார்த்திக்கை பார்த்து நான் பார்த்து கொள்கிறேன் என்பது போல் ஒரு சைகையை காட்டினார்.
அதற்கு அடுத்த பந்தில் ஹர்திக் பாண்ட்யா அசத்தலாக சிக்சர் விளாசி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
ஹர்திக்கை பார்த்து தினேஷ் கார்த்திக் தலை வணங்கினார். இந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த போட்டியில் வரும் 31 ம் தேதி ஹாங்காங் அணியை எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
* இந்தியாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் இரட்டைவேடம்: ரஷ்ய தூதர்
இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் நேற்று (ஆகஸ்ட் 28) கூறியதாவது: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வருகின்றன. இது அந்நாடுகளின் இரட்டை வேடத்தை, இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. அமெரிக்காவுக்கு ஏற்ப ஆடும் மேற்கத்திய நாடுகளின் செயலால்தான் உலகளவில் எரிசக்தி விலை உயர்ந்திருக்கிறது.
* 100 மென்ஸ் தொடர்; படுதோல்வியடைந்தா மொயின் அலி அணி
பிர்மிங்காம் ஃபியோனிக்ஸ் - மேன்செஸ்டர் ஒரிஜினல்ஸ் இடையேயான 100 மென்ஸ் தொடரின் 28வது போட்டி பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய மேன்செஸ்டர், 154 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய பிர்மிங்காம் ஃபியோனிக்ஸ், 75 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மேன்செஸ்டர் வீரர் டாம் ஹார்ட்லி, ஆட்டநாயகன் விருது பெற்றார்.
* தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக அரசுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி மனு.
தற்போது இடைக்கால தடை விதிக்க முடியாது எனவும் இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் ஆணை.
இந்த வழக்கு செப்டம்பர் மாதத்திற்கு வழக்கு ஒத்திவைப்பு.
* கேரளாவில் நிலச்சரிவு: 3 பேர் உயிரிழப்பு!
கேரளா: இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே காஞ்சாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு.
நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரம்
* சிதம்பரம் நடராஜர் கோயிலில் 5வது நாளாக நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வுப்பணி நடைபெற்று வருகிறது.
அறநிலையத்துறை கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை முதல்கட்டமாக ஆய்வுப்பணி நடந்தது.
* இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.104.77 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் திறப்பு.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
18 கோயில்களில் கட்டப்பட்டுள்ள 25 புதிய கட்டடங்கள் பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறப்பு.
* கனடாவின் மார்க்கம் பகுதியில் உள்ள தெருவிற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
"இசையமைக்கும் பணியில் இருந்து ஓய்வுபெறாமல்,பொறுப்புடன் உழைக்க இது எனக்கு ஊக்கமாக இருக்கும்; அனைவருக்கும் நன்றி"
- ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சி
* ஆந்திராவின் குண்டூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சென்னையில், ஒரு கிலோ மிளகாய் வற்றல் விலை ரூ.320க்கு விற்பனை
* 🌧 நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- வானிலை ஆய்வு மையம்.
* கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வயலூர் கிராமத்தில் திறந்தவெளியில் இருந்த நெல் கொள்முதல் நிலையத்தில், மழையில் நனைந்து முளைத்த நெல் மணிகள்.
* டெல்லி சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்த அரவிந்த் கெஜ்ரிவால்.
சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் அமளி - வெளியேற்றம்
பாஜகவின் ஆப்ரேஷன் லோட்டஸ் தோல்வி என்பதை நிரூபிக்கவே தீர்மானம் - கெஜ்ரிவால்
* சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு விசாரணையை 4 மாதத்திற்குள் முடிக்க கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு;
6 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதல் அவகாசம்
* தமிழ்நாட்டில் 45 இடங்களில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1162 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் கேந்திரிய பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
மத்தியப் பிரதேசத்தில் 1066 ஆசிரியர்கள் பணியிடங்களும் கர்நாடகத்தில் 1006 பணியிடங்களும் நிரப்படாமல் உள்ளன.
* நீட் முதுநிலை படிப்புக்கான கவுன்சிலிக்குத் தடையில்லை - உச்சநீதிமன்றம்.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது.
இதற்கான முடிவுகள் கடந்த ஜூன் 1 ஆம் தேதி வெளியானது.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்கவுள்ளது.
முதுநிலை நீட் தேர்வுக்கான விடைத்தாள், வினாத்தாளை வெளியிடாத மருத்துவ தேசிய தேர்வு வாரியத்தின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை பட்டியலிட மனுதாரர் கோரினர்.
இந்த வழக்கை இன்று(ஆக.,29) விசாரித்த போது, நீட் முதுநிலை கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க வேண்டாம்.
நீட் முதுநிலை கவுன்சிலிங் திட்டமிட்டபடி நடக்கட்டும்.
இனி அதை நிறுத்த வேண்டாம் என உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அமர்வு உத்தரவிட்டது.
* இந்த ஆண்டு தீபாவளிக்குள் டெல்லி, சென்னை, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் ஜியோ 5G சேவை தொடங்கப்படும்.
2023 டிசம்பருக்குள் இந்தியாவின் அனைத்து நகரம், தாலுகாக்களில் ஜியோ 5G இருக்கும்.
உலகின் அதிவேக இணையசேவையை ஜியோ தயாரித்துள்ளது- ரிலையன்ஸ் மாநாட்டில் முகேஷ் அம்பானி.
தீபாவளிக்கு தொடங்கப்பட உள்ள ஜியோ 5G சேவையில் ₹2 லட்சம் கோடி முதலீடு - ரிலையன்ஸ் தலைவர் ஆகாஷ் அம்பானி.
* கள்ளக்குறிச்சி கலவரத்தில் மாடு திருடியதாகவும் போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்ததாகவும் கைதான 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.
கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட பூவரசன், பரமேஸ்வரன், வசந்தன், சஞ்சீவி ஆகிய 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் உத்தரவு.
* அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்யும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியின் மனுவை ஏற்ற நீதிபதிகள், பிற மனுக்களுடன் சேர்த்து விசாரிப்பதாக அறிவிப்பு.
மனு விசாரனைக்கு வரும் வரை வேறு சாதியை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்படுவதை இடைக்காலமாக நிறுத்தி வைக்க வேண்டும் என சுப்பிரமணிய சாமி கோரிக்கை வைக்க, அதனை ஏற்க நீதிபதிகள் மறுப்பு.
* மாணவி ஶ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் விரைந்து விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்- சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
கலவரம் குறித்து 202 பேர் கைது என சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை.
மாணவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் வழங்க புதிய திட்டம் - அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு.
ஶ்ரீமதி தந்தை தொடர்ந்த வழக்கு விசாரணையை செப்.27க்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
* லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கினால் மாணவர் எப்படி செல்வார்? CUTE நுழைவுத் தேர்வு குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி.
மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையமா? என CUTE முதுகலை நுழைவுத் தேர்வு குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய பல்கலைக்கழங்களில் சேருவதற்கான CUTE நுழைவுத் தேர்வு செப்டம்பர்-1ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
மதுரையை சேர்ந்த மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கினால் மாணவர் எப்படி செல்வார்? எனவும் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.
* மதுரை - மேலூர் மாணவர் லோகேஷ்வருக்கு நீதி கிடைத்தது, தேர்வு மையம் லட்சத்தீவிலிருந்து மதுரைக்கு மாற்ற உத்தரவு.
தேசிய தேர்வு முகமையின் ஒருங்கிணைப்பாளருக்கும், திருவாரூர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் எனது நன்றி,மாணவருக்கு வாழ்த்துகள்- எம்.பி சு.வெங்கடேசன் ட்வீட்.
* கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு - பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு நிபந்தனை ஜாமின்:
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் மதுரையிலும், 2 ஆசிரியைகள் சேலத்திலும் தங்கியிருக்க வேண்டும்.
5 பேருக்கும் ஜாமீன் வழங்கிய தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை அறிவித்தது.
மாணவ-மாணவிகளை படிக்க அறிவுறுத்துவது ஆசிரியர் பணியின் ஒரு அங்கம்.
மாணவியை படிக்க அறிவுறுத்தியதற்காக ஆசிரியர்கள் சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது.
படிப்பில் சிக்கல்களை சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது - நீதிமன்றம்.
ஆசிரியர்கள் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை - நீதிமன்றம்.
* முதுகலைப்பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் செப்டம்பர் 2 முதல் 4ம் தேதி வரை நடைபெறும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தாலே வேலை உண்டு என்ற உறுதி கிடையாது - TRB
* உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா கொடியேற்றம்:
உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்ச கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
* முதலமைச்சர் தலைமையிலான தமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவு.
ஆன்லைன் ரம்மி தொடர்பாக இயற்றப்படும் அவசர சட்டம் நீதிமன்றம் சென்று தடை பெறமுடியாத அளவுக்கு இருக்கும் வகையில் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.
🔴 உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய கொடியேற்றம்...
வீடியோ: https://youtu.be/L1zrfhUycDM
லட்சக்கணக்கானோர் வழிபாடு - சிறப்பு திருப்பலி: முழுமையாக காணலாம்...
* கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு பாலியல் வன்கொடுமையோ அல்லது கொலையோ காரணம் இல்லை என உறுதியாகிறது - சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழக அரசு மருத்துவ குழுக்களின் இரு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின் படி, கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என உறுதியாகிறது- சென்னை உயர் நீதிமன்றம்.
* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின்படி...
சசிகலா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சிவகுமார், இராம மோகன்ராவ் ஆகியோர் மீது விசாரணைக்கு உத்தரவிட சட்டவல்லுநர்களின் ஆலோசணையின்படி நடவடிக்கை எடுக்க தமிழக அமைச்சரவை முடிவு.
* ரூ.2 கோடி வரை பெறலாம்!
வேளாண்மை உட்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி வரை கடன் பெறலாம்.
விவசாயிகள் ஒன்றிணைந்து உருவாக்கும் வேளாண் கட்டமைப்புகளுக்கும் வங்கிகளில் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கடன் வாங்கலாம். - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
* முகசீரமைப்பு சிகிச்சை முடிவடைந்து மருத்துவமனையில் உள்ள சிறுமி டானியாவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு.
சிகிச்சைக்குப் பின்னர் ஐசியூவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்.
* நிலவுக்கு ஆர்ட்டிமிஸ் விண்கலம் அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது நாசா.
நிலவுக்கு ஆர்ட்டிமிஸ் விண்கலம் அனுப்புவதை நிறுத்தியது நாசா - எரிபொருள் நிரப்பும் போது கசிவு கண்டறியப்பட்டுள்ளது.
மிகவும் சக்தி வாய்ந்த பிரமாண்ட இந்த ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட இருந்தது.
6 ஆண்டு விசாரணைக்கு பின்...
* வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி 2009ம் ஆண்டு 'மறைந்த மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி' தொடர்ந்த வழக்கு.
6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
* விதி என்பது,
நீ எத்தனை முறை துரோகத்தால், வீழ்ந்தாய் என்பதன் மூலம் அல்ல, எத்தனை முறை, அதிலிருந்து எழுந்தாய், என்பதன் மூலமே தீர்மானிக்கப்படுகிறது!
உன்னை குற்றம் சொல்பவனுக்கு, விளக்கம் சொல்லி, நேரத்தை விரையம் ஆக்காமல், அவனவன் மனம் போல் எண்ணிக் கொள்ளட்டும், என்று எண்ணி, நகர்ந்து விடுவது நல்லது!!
வில்லில் பின் வாங்கும் அம்பு, முன்னே வரும் போது, இலக்கை அடையும், செயலில் உறுதியுடனும், சொல்லில் உண்மையோடும், முயற்சி எடுத்தவன் தோற்றாலும், பயிற்சி எடுத்தவனே, அவன் வெற்றி ஓர் நாள் நிச்சயம்!!!
இனிய இரவு வணக்கம்🙏
No comments:
Post a Comment