அக்னிப்புரட்சி இன்றைய (01.09.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (01.09.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (01.09.2022) முக்கிய செய்திகள்.

* பழியுணர்வு மட்டுமே, வாழ்க்கை எனக் கொண்டவர்கள், பகைவர்களின் முயற்சியில்லாமலேயே, தனக்கு தாமே, குழி வெட்டிக் கொள்வார்கள்!

அடிமையாக இருப்பவன், தனக்குக் கீழே, ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால், உரிமைகளை பற்றி பேச, அவனுக்கு உரிமையே கிடயாது!!

வாழ்க்கையை வெறுக்க, ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், வாழ்வதற்கு ஒரே காரணம், நாளை எல்லாம் சரியாகிவிடும், என்ற நம்பிக்கை மட்டுமே !!!
இனிய இரவு வணக்கம்🙏

* ஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா தகுதி.

ஆசிய கோப்பை டி20 தொடரில் தனது 2வது ஆட்டத்தில் ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குரூப் 4 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள்.

* விருதுநகர்: ராஜபாளையம் அருகே சொக்கநாதர் புத்தூர் பகுதியில் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு. 3 பேர் படுகாயம்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து விபத்து.

* ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, இனி அரிசி மூட்டைகளில் QR Code அச்சிட தமிழ்நாடு அரசு முடிவு.

குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு செல்லும் அரிசி மூட்டைகளில் இனி QR கோடு அச்சிட தமிழ்நாடு அரசு முடிவு.

* 65வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்றபின், சபாநாயகர் அப்பாவு தமிழகம் திரும்பினார்.

சீனாவில் தயாரித்த தேசிய கொடியை கையில் ஏந்தி சென்றது வேதனையானது.

தேசிய கொடியை கூட சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்வது வேதனைக்குரியது.

சீனாவில் இருந்து தேசிய கொடி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது- சபாநாயகர் அப்பாவு.

* மாவீரன் பூலித்தேவருக்கு, அவரது பிறந்தநாளில் மரியாதை செலுத்துகிறேன்.- பிரதமர் மோடி

பூலித்தேவரின் வீரமும், உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது.

முன்னணியில் நின்று, அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர் பூலித்தேவர் - பிரதமர் மோடி.

* தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் 1 முதல் 30 வரை கொண்டாடப்படுகிறது.

* இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் (SII) & பயோடெக்னாலஜி துறை (DBT) கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிராக இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட குவாட்ரிவலன்ட் மனித பாப்பிலோமா வைரஸ் (qHPV) தடுப்பூசியை அறிமுகப்படுத்த உள்ளது.

* ஜோ பிடன் (30-ஆகஸ்ட்-2022) இஸ்ரேலிய பிரதமர் யார் லாபிடுடன் பேசினார், மேலும் ஈரானை அணு ஆயுதம் வாங்க அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று உறுதியளித்தார்: WH செய்திக்குறிப்பு

* 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்படாத கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.

தேசிய அளவில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பை இன்னும் உயர்த்தவில்லை - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.37,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.4,710க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து ரூ.58-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

* தமிழகத்தில் 28 சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் 15 % வரை கட்டணம் உயர்வு.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சில சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று (01-09-2022) முதல் மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், நள்ளிரவு முதல் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி-திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை, கொடை ரோடு-திண்டுக்கல்-புறவழிச்சாலை-சமயநல்லூர், மனவாசி- திருச்சி- கரூர், மேட்டுப்பட்டி-சேலம்-உளுந்தூர்பேட்டை, மொரட்டாண்டி-புதுச்சேரி-திண்டிவனம், நத்தக்கரை-சேலம்-உளுந்தூர்பேட்டை, ஓமலூர்-நாமக்கல், தர்மபுரி-கிருஷ்ணகிரி-தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி-திருச்சி-திண்டுக்கல், புதூர்பாண்டியபுரம்-மதுரை-தூத்துக்குடி, சமயபுரம்-பாடலூர்-திருச்சி, செங்குறிச்சி-உளுந்தூர்பேட்டை-பாடலூர் உள்பட 28 சுங்கச்சாவடிகள் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தபட்டுள்ளது.

* 6 ஆண்டுக்குப்பிறகு பவுலிங் போட்ட கோலி…

ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீசி அசத்தினார். அவர் இந்த ஆட்டத்தில் 17வது ஓவரை வீசியதன் மூலம், சர்வதேச டி-20கிரிக்கெட்டில், கிட்டத்தட்ட ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு, இந்திய அணிக்காக பந்துவீசியுள்ளார். கோலி வீசிய ஒரு ஓவரில் வெறும் ஆறு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார்.

இதுவரை 101 டி-20 போட்டிகளில், விளையாடியுள்ள கோலி 49.5 சராசரியில் நான்கு விக்கெட்டுகளை எடுத்துள்ளார் மற்றும் அவரது 8.1 எக்கனாமி வீதத்தைக் கொண்டுள்ளார். அவர் கடைசியாக 2016 ஆம் ஆண்டு நடந்த டி20 போட்டியில் பந்துவீசினார்.

* தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

செப்டம்பர் 5ம் தேதி வரை கனமழை தொடரும்-இந்திய வானிலை ஆய்வு மையம்.

* முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவித்தபடி நாளை துவங்கும் - ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்.

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு:
மக்கள் என்னிடம் மனு கொடுத்துவிட்டு  நன்றி என்று சொல்கின்றனர்.

மனு மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே  அவர்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுத்துள்ளோம்.
இது தான் திராவிட மாடல் ஆட்சி.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் பல பிரச்னைகள் இருக்கிறது. அதை இப்போது சொல்ல மாட்டேன், சட்டமன்றத்தில் வைத்து இப்பிரச்னைகள் குறித்து விவாதித்து நிறைவேற்றுவோம்.

ஜெயலலிதா மரணத்தில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

நிதிநிலை சீரடைந்த பிறகு பெண்களுக்கான உரிமை தொகை
ரூ.1000 வழங்கப்படும்.

உறுதி மொழிகள் எதையும் நிறைவேற்ற வில்லை என இபிஎஸ் சொல்கின்றார்.

பெண்களுக்கு இலவச பேருந்து, பால் விலை, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டுள்ளது.

* மகாராஷ்டிராவில் 22,207 தற்கொலை வழக்குகளுக்குப் பிறகு தமிழகத்தில் 18,925 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. பெருநகரங்களில், டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னையில் 2,699 தற்கொலைகளில் (2,760 வழக்குகள்) சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது.

* பாசனத்திற்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பது ஒத்திவைப்பு.

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்வதாலும், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு இருப்பதாலும் ஒத்திவைப்பு.

* டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 62 பேரில் 58 எம்.எல்.ஏ.க்கள் குரல் வாக்கெடுப்பில் பங்கேற்பு.

பாஜக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இல்லாததால், நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை.

* 🌧️சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, சைதாப்பேட்டை, திருவான்மியூர், புரசைவாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

* தமிழ்நாட்டை போலவே, டெல்லியிலும் மதுபான கடைகளை அரசே நடத்துகிறது

புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ விசாரணை நடைபெறும் நிலையில், இன்று முதல் மாநில அரசே மது விற்பனை

* ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி!
மாடர்னா, பைசர் நிறுவனங்கள் தடுப்பூசியை தயாரித்துள்ளன

* கேரள சட்டப்பேரவையில் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.

துணை வேந்தர்கள் நியமன நடைமுறையில் ஆளுநரின் அதிகாரங்களை மாற்றம் செய்யும் வகையில் மசோதா முன்மொழிகிறது.

தமிழ்நாடு, மேற்கு வங்கத்தை தொடர்ந்து துணை வேந்தர்கள் நியமன மசோதா கேரளாவிலும் நிறைவேற்றம்.

* தற்கொலைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை.

மருந்து கடைகளில்  தனி நபர்களுக்கு சாணி பவுடர் மற்றும் எலி பேஸ்ட் விற்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

சுகாதாரத்துறையில் நவம்பர் 15ம் தேதிக்குள் புதிதாக 4,038 பணியிடங்கள் நிரப்பப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

* ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் உள்ள திரிச்சூரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மலர் அலங்காரம், காண்போரை கவரும் வண்ணம் உள்ளது.

* ஒன்றிய அரசால் தான் போதை பொருள் அதிகரித்து வருகிறது, குஜராத்தில் தான் போதைப்பொருள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது.

மத்திய அரசு இதுவரை போதைப் பொருள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால்தான் தமிழகத்தில் போதை பொருள் அதிக அளவு பரவி உள்ளது-அமைச்சர் பொன்முடி.

முத்ரா, விஜயவாடா துறைமுகங்களில் போதை பொருள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல் போன்றவை அதிகளவில் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு இதனை தடுக்க முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்- அமைச்சர் பொன்முடி.

* கோவையிலிருந்து போத்தனூர், பழநி, திண்டுக்கல் வழியாக மதுரை செல்லும் தினசரி பேசஞ்சர் ரயில் இன்று முதல் இயக்கம்.

கோவையில் மதியம் 2.05 மணிக்கு புறப்படும் ரயில் போத்தனூரில் மதியம் 2.17க்கு கிளம்பி இரவு 7.35க்கு மதுரை சென்றடைகிறது.

மதுரையில் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் போத்தனூரில் மதியம் 12.19க்கு வந்தடைந்து மதியம் 12.45க்கு கோவை ரயில்நிலையம் செல்லும்
நீண்ட வருடங்களுக்கு பிறகு  இந்த சேவை துவங்கியுள்ளது.

* பேக்கரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 கோடி ‘ஐஸ்’ போதை பொருள் பறிமுதல்

இம்பால்: பேக்கரி மற்றும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிரந்த ரூ.50 கோடி மதிப்பிலான  ‘ஐஸ்’ போதை பொருளை மணிப்பூர் போலீசார் அதிரடியாக மீட்டு, சம்பந்தப்பட்டவரை கைது செய்தனர். மியான்மர் எல்லையில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மணிப்பூர் ரைபிள்ஸ் (எம்ஆர்) படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து மியான்மர் எல்லையில் உள்ள மோரே நகரில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து மணிப்பூர் ரைபிள்ஸ் படையினர் சோதனை நடத்தினர். அப்போது இம்பாலை சேர்ந்த பிஷ்னு பானிக் (32) என்பவனிடம் இருந்து ரூ.50 கோடி மதிப்பிலான ‘ஐஸ்’ போதை பொருள் (ஐஸ் கட்டியில் வைத்து தயாரித்து சப்ளை செய்யப்படும் போதை மாத்திரை) எனப்படும் 5 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் போதை மாத்திரைகளை கைப்பற்றியது.

பேக்கரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பிஷ்னு பானிக்கை போலீசார் கைது செய்னர். பின்னர் அவர் பணியாற்றிய பேக்கரிரை போலீசார் சோதனை நடத்திய போது, அங்கும் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இம்பால் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தனது கூட்டாளி மூலம் ஐஸ் போதைப்பொருள் வாங்கியதாகவும், அதனை வெளி மாநிலத்திற்கு கடத்திக் கொண்டு போக வைத்து இருந்ததாக பிஷ்ணு பானிக் போலீசில் தெரிவித்தான். முன்னதாக அசாம் ரைபிள்ஸின் மோரே பட்டாலியன் மற்றும் மணிப்பூர் காவல்துறையினருடன் இணைந்து நேற்று முன்தினம் ரூ. 1.03 கோடி மற்றும் ரூ.1.17 ரொக்க மதிப்புள்ள 20,600 வேர்ல்ட் இஸ் யுவர்ஸ் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்ததாக துணை ராணுவப் படை தெரிவித்துள்ளது....

* உள்ளாட்சிகள் ரூ.1800 கோடி நிலுவை; மின் இணைப்புகளை அகற்ற உத்தரவு

சென்னை : உள்ளாட்சி அமைப்புகள் நிலுவை வைத்துள்ள, 1,800 கோடி ரூபாயை விரைந்து வசூலிக்குமாறும், பயன்படுத்தாமல் உள்ள மின் இணைப்புகளை, போர்க்கால அடிப்படையில் அகற்றுமாறும், மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மின் வாரிய ஊழியர்கள், வீடுகளில் மின் பயன்பாடு கணக்கெடுத்த 20 தினங்களுக்குள், மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்; இல்லையேல் மின் வினியோகம் துண்டிக்கப்படும். பின், அபராத தொகையுடன் மின் கட்டணம் செலுத்தியதும், மீண்டும் மின் வினியோகம் வழங்கப்படும்.

தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் போன்றவற்றிற்கு, மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்படுகிறது. ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்களுக்கு தெரு விளக்கு, குடிநீர் வினியோகம் போன்ற சேவை பணிகளில் ஈடுபடுகின்றன.

இதனால், அவற்றுக்கு மட்டும் மின் பயன்பாடு கணக்கெடுத்ததில் இருந்து கட்டணம் செலுத்த, 60 நாட்கள் அவகாசம் தரப்படுகிறது. அப்படி இருந்தும் அவை ஒழுங்காக செலுத்துவதில்லை. ஏற்கனவே, மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இந்த சூழலில், உள்ளாட்சி அமைப்புகள் ஜூலை நிலவரப்படி மின் கட்டணம் செலுத்தாமல், 1,800 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன.

இதனால், மின் வாரியத்திற்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளிடம் பேசி, மின் கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தர விட்டுள்ளது.உள்ளாட்சி அமைப்புகளில், குறிப்பாக ஊராட்சிகளில் பல மின் இணைப்புகள் பயன்படுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கான பட்டியல், மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.எனவே, ஊராட்சி தலைவர்களின் அனுமதியுடன், பயன்படுத்தாமல் உள்ள மின் இணைப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றி, கணக்குகளை முடிக்குமாறும் மின் வாரியம் தெரிவித்துள்ளது.

* மேலை நாடுகளில் கடும் வறட்சி ஆசிய நாடுகளில் கடும் வெள்ளம்

பாகிஸ்தானில் 100 கி.மீ., நீளத்திற்கு உருவான உள்நாட்டு ஏரி! – நாசா புகைப்படம் வெளியீடு!..

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால், ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. வெள்ள பாதிப்புகளை அமெரிக்காவின் நாசா செயற்கைக்கோள் புகைப்படங்களாக எடுத்துள்ளது. கனமழைக்கு முன், விளைநிலங்களாக இருந்த பகுதி தற்போது மிகப் பெரிய ஏரியாக மாறியுள்ளது. ஏறக்குறைய 100 கிமீ தொலைவிற்கு இந்த ஏரி நீண்டு காணப்படுகிறது. அதிர்ச்சி தரும் வகையில் இந்த உருமாற்றம் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

* ஒணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 8ம் தேதி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை 

விடுமுறையை ஈடுசெய்ய செப்.17ம் நாள் சனிக்கிழமை முழு வேலை நாளாக செயல்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

* அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது!

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு நாளை தீர்ப்பு!

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது!

* தொடர்ந்து விண்வெளி அதிசயங்களைக் படம்பிடித்து அனுப்பிவருகிறது ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி. அண்மையில், ஜேம்ஸ் வெப்பின் பார்வையில் பட்டது ஒரு அதிசயம்.

ஆம், நம் சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள ஒரு வெளிக் கிரகத்தின் வளி மண்டலத்தில், கார்பன்டையாக்சைடு இருப்பதை ஜேம்ஸ் வெப் படம்பிடித்திருக்கிறது. அந்த கிரகத்திற்கு வாஸ்ப்-39பி என்று பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூலையில் வாஸ்ப்-96பியில் தண்ணீர் இருப்பதற்கான தடயத்தை ஜேம்ஸ் வெப்பின் ஸ்பெக்ட்ராஸ்கோபி கருவிகள் கண்டறிந்தன. தற்போது அது அனுப்பியுள்ள டிஜிட்டல் தரவுகளை வைத்துப் பார்க்கையில், அதே கிரகத்தின் வளி மண்டலத்தில் கார்பன்டையாக்சைடு இருப்பதற்கான தடயத்தையும் ஜேம்ஸ் வெப் படம்பிடித்துள்ளது.

வெளி கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா என்றும், மனிதன் குடியேறுவதற்கேற்ற வளி மண்டலம் மற்றும் நீர் உள்ளனவா என்றும் ஆராய்வு தான் ஜேம்ஸ் வெப்பின் நோக்கம். அதை முதல் முறையாக நிறைவேற்றியுள்ளது அந்த தொலைநோக்கி.

* கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின்

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தமிழ்த் திரைத்துறை ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இவருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. இதையடுத்து, ‘இனி இதுபோன்று பேசமாட்டேன்’ எனப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

* அரசு பள்ளியில் படித்து IIT, IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

6-12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

* சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணிகள் காரணமாக
நாளை (2ம் தேதி) சென்னையின் பல இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

தாம்பரம், சிட்லப்பாக்கம் - ஜெயா நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, டிவி நகர், டிஎன்எச்பி காலனி, ராயல் கார்டன், மடிப்பாக்கம், செல்லியம்மன் கோயில் தெரு, சரஸ்வதி தெரு ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages