அக்னிப்புரட்சி இன்றைய (02.09.2022) முக்கிய செய்திகள்.
* 9 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளதால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக, உருவாகியுள்ள வளி மண்டல் சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் நேற்று 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக திருக்குவளை பகுதியில் 130 மிமீ மழை பெய்துள்ளது. கீழச் செருவை, கோவில்பட்டி 110 மிமீ, அகரம் சீகூர், லப்பைகுடிக்காடு 90மிமீ, பெலாந்துறை, சொலையாறு 80மிமீ, தேவக்கோட்டை, ஏற்காடு 70மிமீ மழை பெய்துள்ளது. மாமல்லபுரம் 30 மிமீ, ஊத்துக்கோட்டை, பூண்டி,கேளம்பாக்கம் 20மிமீ மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று காலை 10 மணிக்கு பிறகு மிதமான மழை மாலை வரை பெய்தது. அதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். இதே நிலை 4ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 கிமீ வேகத்திலும் இடையிடையே 60கிமீ வேகத்திலும் 4ம் தேதி வரை வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* திருப்பதியில் செப்டம்பர் மாதம் நடக்கும் விழாக்கள் விபரங்களை வெளியிட்டது தேவஸ்தானம்
திருப்பதி கோவிலில் செப்டம்பர் மாதம் நடக்கும் விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் நடக்கும் விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1-ந்தேதி ரிஷி பஞ்சமி, 6 மற்றும் 21-ந்தேதி சர்வ ஏகாதசி, 7-ந்தேதி வாமன ஜெயந்தி, 9-ந்தேதி அனந்த பத்மநாப விரதம்,
11-ந்தேதி மகாளய பக்ஷம் ஆரம்பம், 13-ந்தேதி பிருஹத்யும விரதம் (உண்ட்ரால தத்தே),
20-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 25-ந்தேதி மஹாளய அமாவாசை,
26-ந்தேதி பிரம்மோற்சவ விழா அங்குரார்ப்பணம், 27-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
* பிரபல பாடகர் பம்பா பாக்யா (49) மாரடைப்பால் காலமானார்;
சமீபத்தில் 'பொன்னி நதி' பாடலை பாடியவர் இவர் எந்திரன் திரைப்படத்தில் புள்ளினங்காள், சர்கார் படத்தில் சிம்ட்டங்காரன், பிகில் படத்தில் காலமே காலமே, பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னி நதி போன்ற பல ஹிட் பாடல்களை பாடியவர் பம்பா பாக்யா.
* லிங்காயத் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு கைது
10-ம் வகுப்பு மாணவிகள் இருவருக்கு பாலியல் தொந்தரவு
லிங்காயத் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சித்ர துர்கா மாவட்டத்தில் உள்ள மடத்திற்கு சொந்தமான பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிகள் இருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் லிங்காயத் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு கைது செய்யப்பட்டார்.
மேலும் லிங்காயத் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுருவை14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
* அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.
உணவு ஒவ்வாமை பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதி என தகவல்.
* அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவு
அதிமுக பொதுக்குழு தொடர்பாக இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு:
ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும்- சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
தனி நீதிபதி உத்தரவு ரத்தானதால் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லும்.
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பு.
* திமுக முப்பெரும் விழா-விருதுகள் அறிவிப்பு
பெரியார் விருது- சம்பூர்ணம் சாமிநாதன்
அண்ணா விருது- கோவை ரா.மோகன்
கலைஞர் விருது- திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு
பாவேந்தர் விருது- புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு
பேராசிரியர் விருது-குன்னூர் சீனிவாசன்
* அரசுக் கல்லூரிகளில் 20% வரை இடங்கள் அதிகரிப்பு:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் 20% மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.
அரசு உதவி பெறும் கல்லூரிகள் 15% கூடுதல் மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம்.
தனியார் கல்லூரிகள் 10% மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.
* நீதிமன்ற தீர்ப்பு வெளியான சில நொடிகளில் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் என மாற்றிக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி
* அனைத்து ரேஷன் கடைகளிலும் படிப்படியாக Google pay, Paytm போன்ற UPI பண பரிமாற்ற வசதி மேற்கொள்ளப்பட உள்ளது கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்
* கடலூர் மத்திய சிறையில் சிறைச்சாலையில் உதவி செயலர் மணிகண்டன் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது சம்பந்தமாக உடனடியாக இருத்தாக கடலூர் மத்திய சிறை வார்டன் செந்தில்குமார் சென்னை வழக்கறிஞர் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்
* ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் ஏற்றி சென்ற லாரியில் திடீரென தீப்பிடித்ததால் 300 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்து உளவுபாடு நோக்கி எல்.பி.ஜி சிலிண்டர் ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி பிரகாசம் மாவட்டம் பெத்தவாலா என்ற இடத்தில் வந்த போது லாரியின் இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது, இதனை அறிந்த லாரி டிரைவர் வாகனத்தில் இருந்து குதித்து உயிர்த்தினார், ஆனால் சில நிமிடங்களில் லாரி முழுவதும் தீ பரவியது இதில் லாரியிலிருந்து நூறு கணக்கான எல்.பி.ஜி. சிலிண்டர்கள் பலத்த சத்தத்துடன் அடுத்தடுத்து ஒன்றாக வெடித்து சிதறின, லாரியில் 300-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர் லாரியில் தீப்பிடித்து கேஸ் சிலிண்டர்கள் பிடித்து சிதறியதால் அந்த இடத்தில் நடந்தது என்ன என்று புரியாமல் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர், சாலையில் லாரி தீ பிடித்து எரிந்த நிலையில் சிலிண்டர்கள் வெடித்து சிறியதால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போலீசார் போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர். தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி மின்சார வயர்களில் மோதியதில் விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
* கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ்-க்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக மூடி மறைக்கப்பட்ட பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் தெரியவந்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
பொதுக்குழு தீர்ப்பு வெளியான அடுத்த 3 மணி நேரத்தில் இந்த அதிர்ச்சி செய்தி வெளியானதால், மகிழ்ச்சியில் இருந்த இபிஎஸ் தரப்பு கலக்கமடைந்துள்ளது.
* நடிகர் பிரசாந்த் மீது சுவிச்சர்லாந்து விமான நிலைய பெண் ஊழியர் பண மோசடி புகார்
நடிகர் பிரசாந்த் ₨10 லட்சம் பண மோசடி செய்திருப்பதாக கூறி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த குமுதினி என்ற பெண் புகார்
வெளிநாட்டு விமான நிலைய பெண் ஊழியர் பொய் புகார் அளித்திருப்பதாக நடிகர் பிரசாந்த் தரப்பு காவல் நிலையத்தில் புகார்
* இந்திய அரசியல் சட்ட முகவுரையில் இடம் பெற்றுள்ள மதசார்பின்மை, சோசலிசம் ஆகிய சொற்களை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2 வார்த்தைகளை நீக்கக் கோரி ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் சேர்த்து சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு வரும் 23-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
* சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேசிய மொழியாக அறிவிக்க நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற முடியும் எனக்கூறி உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
* காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அலோக் ஷர்மாவின் அரவிந்த் கெஜ்ரிவாலின் மிமிக்ரி வீடியோ வைரலானது.
* ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஒற்றை வார்த்தை!
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களுக்கு விருப்பமான ஒற்றை வார்த்தையை பதிவிட்டு வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் - திராவிடம்
பாமக நிறுவனர் இராமதாசு - சமூகநீதி
பாஜக அண்ணாமலை - தமிழன்
சீமான் - தமிழ் தேசியம்
https://t.me/agnipuratchi1
* சாலைக்காக கொன்று குவிக்கப்பட்ட பறவைகள்...'- வைரல் வீடியோவால் ஜேசிபி டிரைவர் கைது!..
கேரள மாநிலம் மலப்புரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மலப்புரம் மாவட்டம் தலப்பாறை, வி.கே.பாடியில் உள்ள மரம் ஒன்றில் பறவைகள் அதிகமாக வசித்து வந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு மரத்தை அகற்றும்பணி நடைபெற்றது. அப்பொழுது 'சடார்' என்று மரம் கீழே விழ, மரத்தில் தங்கி இருந்த பறவைகள் 'பட பட' வென பறந்து சென்றன. இருப்பினும் பல பறவைகள் பறக்க முடியாமல் மரத்துடன் கீழே விழுந்து துடிதுடித்து இறந்தன. சாலையிலேயே பறவைகள் குவியல் குவியலாக இறந்து கிடக்கும் புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில் அந்த மரத்தினை வெட்டிய ஒப்பந்ததாரர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மரத்தை வெட்டி அகற்றிய ஜேசிபி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஜேசிபி வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வீடியோ: https://twitter.com/IndiaNewsDigest/status/1565696442731483137?t=8UkCaqnbul3TJEtZUYwssg&s=19
* INS விக்ராந்த் போர்க்கப்பல் இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் போர் விமான கப்பல். - முழுமையான தகவல்கள்!
கேரளா மாநிலம் கொச்சியில் இந்தியாவில் உள்நாட்டுத் தயாரிப்பான முதல் போர் விமானம் தாங்கி செல்லும் கப்பலைப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். கப்பல் படை மரியாதையை ஏற்றுப் பிரதமர் மோடி INS விக்ராந்த் போர்க்கப்பலைத் துவக்கிவைத்தார். மேலும் இந்தியக் கப்பல் படைக்கு புது கொடியையும் அறிமுகம் செய்துவைத்தார். இந்த INS விக்ராந்த் போர் விமான கப்பல் 262 மீட்டர் நீளமும் 62 மீட்டர் அகலமும் கொண்டது. இது 30 போர் விமானங்களைத் தூக்கிச் செல்லும் திறன் படைத்தது. மேலும் இதில் 1600க்கும் மேற்பட்ட வீரர்கள் பயணிக்கலாம்.
அதிநவீன அம்சங்களுடன் 45,000-டன் எடையுள்ள பிரமாண்ட INS விக்ராந்த் உருவாக்க 20000 ரூபாய் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதனை இந்திய கடற்படைக்குச் சொந்தமான வார்ஷிப் டிசைன் பீரோ என்ற நிறுவனம் வடிவமைத்தது. கொச்சி கப்பல் கட்டும் தளம் நிறுவனம் இதனை தயாரித்துள்ளனர். இந்த கப்பல் மணிக்கு 52 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இதில் 14 தளத்தில் 2300 பிரிவுகள் உள்ளது. மேலும் பிரயோகமாகப் பெண்களுக்கு என்று வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்த போர்க்கப்பலில் MiG -29K போர் விமானங்கள், Kamov-31 ஹெலிகாப்டர்கள், MH-60R ரக ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை இயக்கும் வசதியுள்ளது. போர் விமானம் நிறுத்தும் பகுதியின் அளவு இரண்டு கால்பந்து திடல் அளவு இருக்கும். மேலும் இதில் நவீன மருத்துவ வசதி அமைக்கப்பட்டுள்ளது.
வீடியோ: https://youtu.be/SSGbj0WJNOo
INS விக்ராந்த் போர்க்கப்பலுக்கு இந்த பெயர், 1971 இந்திய-பாகிஸ்தான் போரில் கடற்படையில் முக்கிய பங்கு வகித்த முக்கிய முன்னோடியின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இந்திய உற்பத்தியாளர்களால் 40000க்கும் மேற்பட்டவர்கள் உழைப்பில் முழுக்க முழுக்க உருவாக்கப்பட்டது.
இந்த போர்க்கப்பலில் MiG -29K போர் விமானங்கள், Kamov-31 ஹெலிகாப்டர்கள், MH-60R ரக ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை இயக்கும் வசதியுள்ளது. போர் விமானம் நிறுத்தும் பகுதியின் அளவு இரண்டு கால்பந்து திடல் அளவு இருக்கும். மேலும் இதில் நவீன மருத்துவ வசதி அமைக்கப்பட்டுள்ளது.
INS விக்ராந்த் போர்க்கப்பலுக்கு இந்த பெயர், 1971 இந்திய-பாகிஸ்தான் போரில் கடற்படையில் முக்கிய பங்கு வகித்த முக்கிய முன்னோடியின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இந்திய உற்பத்தியாளர்களால் 40000க்கும் மேற்பட்டவர்கள் உழைப்பில் முழுக்க முழுக்க உருவாக்கப்பட்டது.
இந்த போர்க்கப்பல் அறிமுகத்தின் மூலம் உலகில் உள்நாட்டில் வடிவமைத்துப் போர்க்கப்பல் உருவாக்கிய நாடுகளின் வரிசையில் இந்திய இணைத்துள்ளது. INS விக்ராந்த் போர்க்கப்பல் இந்தியாவின் 'ப்ளூ வாட்டர் ஆர்மி' என்று அழைக்கப்படுகிறது.
* அடிமைத்தனத்தின் அடையாளத்தை அகற்றி கடற்படைக்கு புதிய கொடி!
நமது நாட்டின் கடற்படை கொடியில் அடிமைத்தனம் அகற்றப்பட்டுள்ளது; புதிய கடற்படை கொடியானது சத்ரபதி சிவாஜிக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கொடியின் வரலாறு: https://youtu.be/1v6LVgbB0uo
சத்ரபதி சிவாஜி கப்பற்படை
எதிரிகளை மிரட்டும் வகையில் சத்ரபதி வீர் சிவாஜி மகராஜ் கப்பற்படையை கட்டமைத்திருந்தார். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியா வந்த போது நம்நாட்டின் கப்பல்கள் மற்றும் அதன் மூலம் நடைபெறும் வர்த்தகம் போன்றவைகள் மூலம் அச்சுறுத்தப்பட்டன. இதன் விளைவாக நமது கடல்சார் வலிமையை வலுவிழக்க செய்ய முடிவு செய்தனர். அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் சட்டம் இயற்றி, இந்திய கப்பல்கள் மற்றும் வணிகர்கள் மீது மிகக்கடுமையான தடைகளை விதிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. வரலாற்றில் இன்று செப்டம்பர் 02, 2022 ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். அடிமைத்தனத்தின் அடிச்சுவட்டை இந்தியா அகற்றுவதை நன்கு உணர்கிறோம். இந்திய கப்பற்படைக்கு இன்று புதிய கொடி கிடைத்துள்ளது. இந்திய கடற்படையின் கொடியில் இதுவரை அடிமைத்தனத்தின் அடையாளம் இருந்தது. ஆனால் இன்று முதல் சத்ரபதி சிவாஜியின் உத்வேகத்தால் புதிய கடற்படைக் கொடி கடலிலும், வானிலும் பறக்கும்." - இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்
* தமிழ்நாடு அரசின் விருதுகள்: சிறந்த இயக்குநர்கள்!
2009 - வசந்தபாலன் (அங்காடித் தெரு)
2010 - பிரபு சாலமன் (மைனா)
2011 - ஏ.எல்.விஜய் (தெய்வத்திருமகள்)
2012 - பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
2013 - ராம் (தங்கமீன்கள்)
2014 - ராகவன் (மஞ்சப்பை)
தமிழ்நாடு அரசு விருதுகள்: சிறந்த படங்கள் (2010)
முதல் பரிசு - மைனா
2ம் பரிசு - களவாணி
3ம் பரிசு - புத்ரன்
* தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டிற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்திருந்தார்.
கேரளா மற்றும் தமிழகம் தொடர்பான பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்.
அமைச்சர் மனோ தங்கராஜ், கேரளாவின் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியை பாராட்டினார்.
டிஜிட்டல் பல்கலைக்கழகம் மற்றும் கல்வித்துறையின் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு கேரளாவுக்கு அனுப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.
* 2008 ம் ஆண்டு 210 மில்லியன் டாலரில் எம்பரர் ஏர்கிராப்ட் வாங்கியதில் 5.6 மில்லியன் டாலர்களை லஞ்சம் வாங்கியதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கெளதம் கைதான் கைது. இவர் அகஸ்டஸ் வெஸ்ட்லேன்ட் ஊழலிலும் சம்பந்தப்பட்டவர்
No comments:
Post a Comment