அக்னிப்புரட்சி இன்றைய (12.09.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (12.09.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (12.09.2022) முக்கிய செய்திகள்.

* சென்னை ஓபன் டென்னிஸ்.
செஸ் ஒலிம்பியாட்க்கு அடுத்தபடியாக சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடங்குகிறது.

இதற்காக சர்வதேச தரத்தில் 5 ஆடுகளங்கள் தயார் நிலையில் உள்ளன.

* பொங்கல் பண்டிகைக்கான ரயில் சேவை முன்பதிவு இன்று தொடக்கம்.

ஜனவரி 10ம் தேதிக்கான டிக்கெட்டுகளை இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் - தெற்கு ரயில்வே நிர்வாகம்.

* அரசுப்பள்ளி மாணவர்களின் 17,972 பேர் நீட் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதினர்.

12,840 பேரில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி (35%).

சென்னையில் நீட் தேர்வு எழுதிய 172 பேரில் 104 பேர் தேர்ச்சி.

விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர்,மதுரை, விழுப்புரம் மாவட்டங்களில் 100%பேர் தேர்ச்சி.

கடந்த 2021ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 8,061 அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் 1,957 பேர் தேர்ச்சி-நீட் தேர்வு: அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்த விவரங்ளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.

* முகச்சீரமைப்பு சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி டானியா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அமைச்சர் நாசர், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பூங்கொத்து அளித்து சிறுமியை வாழ்த்தினர்.

* தமிழ்நாடு கால்நடை மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் வரும் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.

* 15 மனைவிகள், 107 பிள்ளைகள்... குட்டி கிராமத்தையே உருவாக்கிய கென்யாவின் கல்யாண மன்னன்

நைரோபி:கென்யாவை சேர்ந்த ஒரு நபர் 15 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் சாகாயோ கலுஹானா. 61 வயது நிரம்பிய இவர் இதுவரை 15 பெண்களை திருமணம் செய்துள்ளார். இந்த மனைவிகள்மூலம் அவருக்கு மகன், மகள் என மொத்தம் 107 பிள்ளைகள் உள்ளனர்.

இதனால் அவரது குடும்பமே குட்டி கிராமம் போன்று உள்ளது. இதையெல்லாம் விட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அனைத்து மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசிக்கிறார் கலுஹானா. இது உண்மையில் மிகப்பெரும் சாதனை என அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. யூடியூபில் இவரைப்பற்றி ஆவணப்படமும் வெளியாகி உள்ளது.

அதிக பெண்களை மணந்தது பற்றி டேவிட் சாகாயோ கலலுயானா கூறுகையில், ‛‛எனது இந்த முடிவின் பின்னணியில் அரசர் சாலமோன் தான் உள்ளார். அவருக்கு மொத்தம் 1000 மனைவிகள் இருந்தனர். நானும் அரசர் சாலமோன் போன்றவன். பல பெண்களின் கண்களில் நான் புத்திசாலித்தனமாக தெரிகிறேன். இதனால் தான் பல பெண்களை திருமணம் செய்து மனைவியாக்கி உள்ளேன். அவர்களை சமாளிக்கும் வித்தைகள் எனக்கு நன்றாக தெரியும்'' என்றார். இதுபற்றி அவரது மனைவியில் ஒருவரான ஜெசிகா கூறுகையில், ‛‛என் கணவர் புதிதாக திருமணம் செய்வதை பார்த்து நான் ஒருபோதும் பொறாமை கொண்டது இல்லை. அவர் ஒரு பொறுப்பான மனிதர். அவர் ஒரு செயலை செய்யும் முன்பு பல முறை யோசிப்பார். அவரது முடிவுகள் எப்போதும் சரியானதாகவே இருக்கும்'' என்றார்.

இன்னொரு மனைவி ரோஸ் கூறுகையில், ‛‛நாங்கள் ஒருவரையொருவர் நேசித்து நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். எனக்கும் டேவிட்டுக்கும் 15 குழந்தைகள் உள்ளன. நாங்கள் டேவிட்டுடன் இணைந்து வாழ பழகிவிட்டோம்'' என்றார். இந்த மெகா குடும்பத்தைப் பற்றிய ஆவணப்படம் வெளியான இரண்டு நாட்களுக்குள் 2.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. ஏராளமானோர் ஆச்சரியத்துடன் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். சிலர் கடும் விமர்சனமும் செய்துள்ளனர். 'அனைவரும் நன்றாக இருப்பதாக மனைவிகள் கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் சொல்வதை என்னால் உணர முடியவில்லை.. அவர்கள் கண்களில் சோகத்தை மட்டுமே நான் காண்கிறேன்

* புதுடில்லி: ஈ.வெ.ரா சிலைக்கு கீழ் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க கோரிய மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழத்தின் பெரும்பாலான இடங்களில் ஈ.வெ.ராமசாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ், அவர் கூறிய கடவுள் மறுப்பு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பெரியார் சிலையின் கீழுள்ள வாசகங்கள், பெரும்பாலான மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், இந்தியாவின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று (செப்.,12) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 'ஈ.வெ.ரா.,வின் கடவுள் மறுப்பு வாசகங்கள், கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் உணர்வை புண்படுத்துகிறது. கடவுள் மறுப்பு வாசகங்கள் அடங்கிய சிலையை பராமரிக்க அரசு பணம் செலவு செய்ய முடியுமா?' எனத் தெரிவித்தார். இதனையடுத்து இந்த மனு மீது தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றியமைக்க கோரி ராம்குமார் ஆதித்தன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இம் மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியை தருகிறது.

பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில் மதுவிற்பனைக்கு தடை விதிக்க நேரிடும். நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது என தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை மேலும் 2 வாரத்துக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

* திருச்சி பராமரிப்பு பணிக்காக காவேரி பாலம் மூடப்பட்ட நிலையில் மாற்று பாதையில் இயக்கப்படும் பேருந்துகள் அரசு தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் என புகார் முன்னறிவிப்பு இன்றி கட்டண உயர்வு என குற்றச்சாட்டு

* மூன்று மாதங்களில் மூன்றாவது முறையாக நேரு உள்ள விளையாட்டு அரங்கத்துக்கு வந்துள்ளேன் விளையாட்டுத்துறை வேகமாக செயல்பட்டு வருகிறது செஸ் ஒலிம்பியார் போட்டி முடிந்த நிலையில் டென்னிஸ் போட்டி தொடங்க உள்ளது சென்னை பெரிய மேட்டில் விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேச்சு

* உத்தரப்பிரதேசம் நொய்டாவில் சர்வதேச பால்வள கூட்டமைப்பின் உலக பால்வள உச்சி மாநாடு 2022 தொடக்கம் இந்தியா எக்ஸ்போ மையத்தால் நடத்தப்படும் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

* தமிழ்நாட்டில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

மனு குறித்து பதில் அளிக்க தமிழக அரசு, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

* எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம் 63 ஆண்டுகளுக்கு திறக்க முடியாதது ஏன்?

மறைந்த ராணி எலிசபெத் தனது கைப்பட ஆஸ்திரேலியாவிற்கு ரகசிய கடிதம் ஒன்றை நவம்பர் 1986இல் எழுதி உள்ளார் அதை உடனே திறந்து பார்க்க முடியாது காரணம் அந்த கடிதத்தின் மேல் சிட்னி நகர மேயரை குறிப்பிட்டு வருகிறது வருகிற 2025 ஆம் ஆண்டு சிட்னி நகர மக்களுக்காக நீங்கள் தேர்வு செய்யக்கூடிய ஒரு நல்ல நாளில் இதனை திறக்கவும் திறக்கவும் என அவர் கடிதத்தில் எழுதி உள்ளார்.

* சைவ உணவகத்தில் வாங்கிய சாப்பாட்டில் எலி தலை

திருவண்ணாமலை ஆரணியில் பாலாஜி பவன் என்ற சைவ உணவகத்தில் சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு இருந்தது உணவகத்தில் இருந்து அனுப்பப்பட்ட சாப்பாட்டில் பீட்ரூட் பொரியல் எலி தலை இருப்பது தெரியவந்தது. இதைகுறித்து உணவகத்தின் முறையிடப்பட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அடுத்து அந்த உணவை உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்து பரிசோதனை செய்ய கேட்டுக் கொண்டனர்.

* தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை மழைக்கு வாய்ப்பு திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் அறிவிப்பு

* சீனா நுழைவை தடுக்க ஆஸ்திரேலியா எடுத்த முடிவு

உலகின் பெரும்பாலான நாடுகளில் முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால விசா அல்லது குடியுரிமை வழங்கும் திட்டங்கள் உள்ளன ஆனால் ஆஸ்திரேலியாவில் 5 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர்கள் முதலீடு செய்பவருக்கு தான் விசா வழங்கும் திட்டத்தை மறு ஆய்வு செய்ய ஆஸ்திரேலிய அரசு முனைப்பு காட்டுகிறது சீன மக்கள் நுழைவதை தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

* இந்த ஆண்டு சைமா விருது பெற்ற தமிழ் பிரபலங்கள் யார்? யார்?

சைமா விருது நிகழ்ச்சியில் சிம்புவும் (மாநாடு) சிவகார்த்திகேயனும் (டாக்டர்) சிறந்த நடிகர் விருது பெற்றனர், சிறந்த படம் சார்பட்டா, பரம்பரை லோகேஷ் கனகராஜ் (விக்ரம்) சிறந்த இயக்குனர் சிறந்த இயக்குனர் சிறந்த நடிப்புக்காக யோகி பாபு விருது பெற்றார், அரவிந்தசாமி (தலைவி) துணை நடிகருக்கான விருது பெற்றார் சிறந்த இசை அமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* முதுநிலை ஆசிரியர் பணித்தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியீடு

அரசு பள்ளிகளில் உள்ள 3,236 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது கணினி வழி தேர்வு நடத்தியது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தியது இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 341 தற்காலிக பட்டதாரிகளின் விவரம் http//trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

* பாகிஸ்தானை விட்டு வெளியேறிய சீன அதிகாரிகள்

கொரோனாவுக்கு பிறகு இலங்கையை அடுத்து பாகிஸ்தானும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது, இதை அடுத்து அரபு நாடுகள் சீனா ஆப்கானிஸ்தான் உள்பட பல நாடுகளிலும் ஐஎம்எஃப் இடமும் பாகிஸ்தான் உதவியை நாடியிருந்தது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நீலம் - ஜீலம் ஹைட்ரோபவர் ஆலையை பாகிஸ்தான் அரசு தற்காலிகமாக முடக்கியது. இதனால் அங்கு வேலை பார்த்த சீன அதிகாரிகள் வெளியேறிவிட்டனர்

* மழைநீர் வழியாததும் வடியாத மக்களின் கண்ணீர்
பெங்களூரில் பெய்த கனமழையால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியனர் பைக், கார் ஆகியவை மழைநீர் முழுகி சேதம் அடைந்துள்ளன, ஒவ்வொரு வாகனத்தையும் சரி செய்ய குறைந்தபட்சம் 3,000 முதல் 5,000 வரை செலவாகிறது. இதனால் மழை நின்று மக்கள் கண்ணீர் நிற்காத நிலை ஏற்பட்டுள்ளது, தண்ணீரில் தேங்கிய வாகனத்தை ஸ்டார்ட் செய்யாமல் மெக்கானிக்கிடம் கொண்டு செல்ல வேண்டும்.

* அதிமுக அலுவலக சாவி வழக்கு: ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி கலவரம் நடந்ததை அடுத்து, அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் அகற்றப்பட்டு, பழனிசாமி வசம் அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், இபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது நீதிபதிகள், " மனுதாரரான ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அலுவலகத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்கும்படி அவர் எப்படி உரிமை கோர முடியும்? மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன்மூலம் சட்ட நிவாரணம் பெறலாமே?” என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது ஓபிஎஸ் தரப்பில், “இன்னும் நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்தான் உரிமை கோருகிறேன்" என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

* உ.பி ஞானவாபி மசூதிக்குள் சென்று வழிபட  இந்து பெண்கள் மனுவை விசாரணைக்கு கேட்கலாம் என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

* தேசிய கல்விக் கொள்கையை அரசியலாக்க வேண்டாம்

அகில இந்திய தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களை தயார் செய்வது அவசியம் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு

* உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு ரோகித் சர்மா, (கே) கே.எஸ் ராகுல், (து.கே) விராட் கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹீடா,  தினேஷ் கார்த்திக், ஹர்ரி திக் பாண்டியா, ஆர்.அஸ்வின், ஒய். சாஹல் அக்சர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, பி.குமார், ஆர்.தி.படேல், அர்ஷ்தீப் சிங்.

* தமிழகத்தில் 11 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வரும் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலும் தனித் தேர்வு மாணவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் தேர்வு துறை அறிவிப்பு

* மின் கட்டணம் உயர்வை கண்டித்து கண்டித்ததும் உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் வருகிற 16-ஆம் தேதி அனைத்து மாவட்டத்திலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் - அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை

* நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் சிறந்து விளங்கும் திமுகவின் முப்பெரும்.

விழாவில் பங்கேற்க வேண்டும் விருதுநகரில் 15ஆம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.

வெற்றி சரித்திரம் எழுத விருதை அழைக்கிறது என குறிப்பிட்டு திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

* எச்சரிக்கை - 10 இலக்க மொபைல் எண்ணிலிருந்து ஜியோ உங்களுக்கு எந்த எஸ்எம்எஸ்களையும் அனுப்பாது. OTP, NetBanking கடவுச்சொல், கிரெடிட்/டெபிட் கார்டு எண்., CVV போன்ற எந்த ஒரு தனிப்பட்ட தகவலையும் அழைப்பில் தெரியாத நபர்களுடன் பகிர வேண்டாம். - JIO

* சென்னை: ரூ.111.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 840 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜவகர் நகரில் பல்வேறு திட்டப்பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

* சென்னை: பாலத்தை சேதப்படுத்தியதாக ரூ.18 லட்சம் இழப்பீடு கோரி பாமகவிற்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2013ல் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் கரசனூரில் உள்ள பாலத்தை சேதப்படுத்தியதாக இழப்பீடு கோரி பாமகவுக்கு நோட்டீஸை எதிர்த்து ஜி.கே.மணி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாமக இழப்பீடு செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என கூறி நீதிமன்றம் நோட்டீஸ்ஸை ரத்து செய்தது.

* நீதிமன்றங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு தலைமை நீதிபதி நன்றி என பிரிவு உபசார விழாவில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்தார்.

இந்தியாவிலேயே சிறந்த வழக்கறிஞர்கள் சமூகத்தில் சென்னை வழக்கறிஞர்கள் சமூகமும் ஒன்று என தலைமை நீதிபதி பாராட்டு தெரிவித்தார். சக நீதிபதிகள் தனக்கு மிகப்பெரிய பலமாகவும்,நிர்வாகம் தொடர்பாக முக்கிய முடிவுகளை உதவியாகவும் இருந்தனர். அதிக வழக்குகளை முடித்ததில் சென்னை உயர் நீதிமன்றம் முதலிடத்தில் இருப்பது மிகுந்த திருப்தியை தருகிறது எனவும் கூறினார்.

* கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு புதிய மன்னராக சார்லஸை ஏற்றுள்ளன

பெர்முடா மற்றும் ஆண்டிக்குவா நாடுகள் சார்லஸை மன்னராக ஏற்கலாமா.? அல்லது குடியரசு நாடாக அறிவிக்கலாமா.? என வாக்கெடுப்பு நடத்த திட்டம்

* கோவை: வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள, வால்பாறையில், பருவமழைக்கு பின் வன வளம் பசுமையாக இருப்பதால், மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை, பன்னிமேடு வழியாக வரும் யானைகள், பல்வேறு எஸ்டேட்களில் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.

இவ்வாறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட யானைகள், பகல் நேரத்தில் தண்ணீர் மற்றும் உணவு தேடி சாலைகளை கடப்பதும், சில நேரங்களில் தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பல நாட்கள் முகாமிடுவது அதிகரித்துள்ளது.

சமீபத்தில், வால்பாறை பகுதிகளில் அதிகரித்துள்ள யானை நடமாட்டம் குறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள், வால்பாறையில் பருவமழைக்கு பின், யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

பகல் நேரத்திலேயே யானைகள் சாலைகளை கடந்து செல்வதால், வாகன ஓட்டுனர்கள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும். குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனங்களை ஓட்டுபவர்கள், வாகன முகப்பு விளக்குகள் சரிபார்த்து விட்டு பயணத்தை தொடங்க வேண்டும்.

யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில், எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர்களை தேயிலை பறிக்க அனுமதிக்க கூடாது. யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், இரவு நேரத்தில் மக்கள் தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் யானைகள் வந்தால், வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்

குறிப்பாக, யானைகள் முகாமிட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் செல்ஃபி எடுக்க செல்வது, யானைகள் மீது கற்கள் எரிவது, சத்தம் எழுப்புவது போன்ற சீண்டல்களில் ஈடுபட்டு வன உயிர்களைபொதுமக்கள் துன்புறுத்தக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages