அக்னிப்புரட்சி இன்றைய (14.09.2022) முக்கிய செய்திகள்.
* அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்குகிறார்.
அண்ணா பிறந்த தினத்தையொட்டி, மதுரையில் சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர்.
1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக காலை சிற்றுண்டி திட்டம் அறிமுகம்.
காலை சிற்றுண்டி திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மற்ற பள்ளிகளில், செப்.16 முதல் திட்டம் அமலாகிறது.
* திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு முகாம்.
சென்னையில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தோட்டனுத்தில் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில், 321 தனித்தனி வீடுகளுடன் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்.
நூலகம், குடிநீர் மேல்நிலைத் தொட்டி, பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் மறுவாழ்வு முகாம்.
* கடலூர்: என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் விபத்து.
வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் 13 ஒப்பந்த தொழிலாளர்கள் காயம்.
4 பேர் படுகாயம் அடைந்த நிலையில், பாண்டிச்சேரி மருத்துவமனையில் அனுமதி
* குலசை தசரா விழாவில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும்.
பக்திப்பாடல்கள் அல்லாத சினிமா பாடல்கள் பாட தடை.
குலசை தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆட தடை விதிக்கக் கோரி வழக்கு.
கோவில் விழாவில் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
* பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு 'சிற்பி' எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது.
சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காண்பது, அவர்களுக்கு வழிகாட்டுவதே திட்டத்தின் நோக்கம்.
சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு திட்டம் செயல்படும்.
8-ம் வகுப்பு முதல், மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தனி சீருடை வழங்க ஏற்பாடு.
முதலமைச்சர் முன்னிலையில் சிற்பி திட்டத்திற்கான உறுதி மொழி ஏற்றனர் மாணவர்கள்.
தமிழகத்தில் குற்றமே நடக்காமல் இருக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.
மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக சிற்பி திட்டத்தை தமிழக காவல்துறை முன்னெடுத்துள்ளது.
சிறார்கள் குற்றம் அதிகரிக்க குடும்ப வறுமை, பொருளாதார நிலையே காரணமாக உள்ளது.
சுய ஆளுமை திறன், பெற்றோர் பேச்சை மதித்து நடப்பது உள்ளிட்ட பண்புகளை உருவாக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.
* கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு; சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஸ்ரீமதியின் தாய் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை ஜாமினை ரத்து செய்ய கோரி மாணவியின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
* கோவா காங்கிரஸ் கூண்டோடு காலி; காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 8 பேர் பாஜகவுக்கு தாவல்.
40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டசபை தேர்தலில் பாஜக 20 இடங்களிலும் காங்கிரஸ் 11 இடங்களிலும் வென்றது.
சுயேட்சைகளின் ஆதரவுடன் கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.
கோவாவில் கடந்த காலங்களைப் போல சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறிவிடக் கூடாது என்பதற்காக அவர்களிடம் சத்தியம் வாங்கியது காங்கிரஸ் மேலிடம்.
இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் அக்கட்சி மேலிடம் இருந்து வந்தது.
காங்கிரஸின் மொத்தம் உள்ள 11 எம்.எல்.ஏக்கள் 8 பேர் இம்முறை பாஜகவுக்கு தாவினர்.
இன்று காலை 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் மற்றும் முதல்வர் பிரமோத் சாவத்தை சந்தித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான திகம்பர் காமத் தலைமையில் இந்த 8 எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இணைந்தனர்.
* ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் முர்மு.
வரும் 17 முதல் 19 ம் தேதி வரை 3 நாள் பயணமாக லண்டன் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
வரும் 19ம் தேதி நடைபெறும் மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
* அரசு இல்லத்தை காலி செய்ய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.
எம்.பி. பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும், பாதுகாப்பு அச்சுறுத்தலால் மேலும் 6 மாதங்கள் தங்க அனுமதி கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
பதவியில் உள்ள எம்.பி.க்கள், அமைச்சர்களுக்கு அரசு இல்லம் தேவைப்படுகிறது என மத்திய அரசு பதிலளித்த நிலையில், 6 வாரத்திற்குள் வீட்டை காலி செய்ய சுப்பிரமணிய சாமிக்கு நீதிமன்றம் உத்தரவு.
* நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டிருந்த சமூகத்தினரையும் சேர்க்க ஒப்புதல்.
பழங்குடியினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் இனி இப்பிரிவினருக்கும் கிடைக்கும் - மத்திய அமைச்சரவை.
* எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார்.
விஜிலென்ஸ் கமிஷனர் மேல் நடவடிக்கை எடுக்க கூடாது என்ற ஈபிஎஸ் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
* லஞ்ச ஒழிப்பு சோதனை: 3 லட்சம் பறிமுதல்.
கடலூர்: விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை.
லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதுவரை கணக்கில் வராத மூன்று லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்த சோதனை நடைபெற்று வருகின்றது.
* பிசிசிஐ பதவியில் தொடரும் கங்குலி, ஜெய்ஷா.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கங்குலி, செயலாளராக ஜெய்ஷா ஆகியோர் 2வது முறையாக அப்பதவியில் மேலும் 3 ஆண்டுகளுக்கு தொடர்கின்றனர்.
இருவரும் தங்களது பதவியில் மேலும் 3 ஆண்டுகள் தொடர்வதற்காக பிசிசிஐ கொண்டுவந்த மாற்றங்களை உச்சநீதிமன்றம் ஏற்றது.
No comments:
Post a Comment