அக்னிப்புரட்சி இன்றைய (19.09.2022) முக்கிய செய்திகள்.
* சென்னை ஓபனில் 17 வயதேயான செக் குடியரசு வீராங்கனை லிண்டா சாம்பியன்; பரபரப்பான இறுதிப்போட்டியில் போலந்தைச் சேர்ந்த மேக்டாவை வீழ்த்தினார்!
* அமைதியை தேடி 43 ஆண்டுகளில் 53 திருமணங்களை செய்த சவுதி தொழிலதிபர்!
சவுதி தொழிலதிபர்
திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லை எனக் கூறி, அடுத்தடுத்த திருமணங்களில் அந்த நிம்மதி கிடைக்குமா என்ற தேடலுடன் பயணித்த சவுதியை சேர்ந்த விநோத மனிதர் பற்றி பார்க்கலாம்.!
திருமண வாழ்க்கை என்பது பல ஏற்ற, இறக்கங்களை கொண்டது. ஒரு சமயம் மகிழ்ச்சிகரமானதாகவும், மற்றொரு சமயம் வெறுப்பு உடையதாகவும் தோன்றும். அதிலும் திருமண வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக நிம்மதியை இழந்துவிட்டதாக கூறுபவர்களும் உண்டு.
அதிலும் குறிப்பாக பலதார திருமணங்கள் குறித்த பேச்சு, விவாதம் எழுகிறபோது, ஒரு மனைவியை கட்டியதற்கே இங்கு நிம்மதி இல்லாமல் போய்விட்டது என்று ஆண்கள் சலிப்பாக சொல்வது உண்டு. ஆனால், திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லை எனக் கூறி, அடுத்தடுத்த திருமணங்களில் அந்த நிம்மதி கிடைக்குமா என்ற தேடலுடன் பயணித்துள்ளார் சவுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.
இவர் 2, 3 திருமணங்களோடு நிற்கவில்லை. கடந்த 43 ஆண்டுகளில் 53 திருமணங்களை செய்துள்ளார். அமைதி மற்றும் நிரந்தரமான வாழ்க்கையைத் தேடியே இவ்வாறு செய்ததாகக் கூறியுள்ள அவர், தனிப்பட்ட சுகத்திற்காக இதை செய்யவில்லை என்று தெரிவிக்கிறார்.
20 வயதில் முதல் திருமணம்
அபு அப்துல்லா என்ற அந்த நபருக்கு, அவரது 20ஆவது வயதில் முதல் திருமணம் நடைபெற்றது. அந்தப் பெண் அவரை விட 6 வயது மூத்தவர். இதற்கடுத்த 52 திருமணங்களில் ஒருசில திருமணமெல்லாம் ஒருநாள் இரவுடன் முடிந்து போயிருக்கிறது. இந்த நூற்றாண்டின் பலதார மணநாயகன் என்று இவரை ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இதுகுறித்து அப்துல்லா கூறுகையில், “முதல் திருமணம் செய்யும்போது, வேறொரு பெண்ணை திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஆனால், சில ஆண்டுகளில் பிரச்சினைகள் உருவானது. எனக்கு 23 வயது இருக்கையில், இரண்டாவது திருமணம் செய்ய விரும்புவதை என் மனைவியிடம் தெரிவித்தேன்.
விரக்தியே மிச்சம்
வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டும் என்ற தேடலுக்கு தீர்வு தருவதாக இரண்டாம் திருமணம் அமையவில்லை. இரண்டு மனைவிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் விவாகரத்து செய்துவிட்டு 3ஆவது மற்றும் 4ஆவது திருமணங்களை செய்து கொண்டார். ஆனால், இங்கு நிம்மதி இல்லாமல் போக, ஒவ்வொருவராக விவாகரத்து செய்து, அடுத்தடுத்த திருமணங்கள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அவர்.
The Agnipuratchi is now on Telegram!
JOIN US: https://t.me/Agnipuratchi1
வெளிநாட்டு பெண்களுடனும் திருமணம்
அப்துல்லா திருமணம் செய்த பெரும்பாலான பெண்கள் சவுதியைச் சேர்ந்தவர்கள்தான். தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்கையில் ஒரு சில வெளிநாட்டு பெண்களையும் திருமணம் செய்துள்ளார்.
இத்தனை மனைவிகளை திருமணம் செய்திருந்தாலும், தற்போது ஒரேயொரு மனைவியுடன்தான் அப்துல்லா வாழ்ந்து வருகிறாராம். இனி திருமணம் செய்யும் எண்ணமும் இல்லையாம்.
* சக மாணவியர் குளிப்பதை 'வீடியோ' எடுத்தசண்டிகர் பல்கலை மாணவி அதிரடி கைது
மொகாலி-சண்டிகர் பல்கலை விடுதியில் மாணவியர் குளிப்பதை 'வீடியோ' எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சக மாணவி கைது செய்யப்பட்டுஉள்ளார். இந்த விவகாரத்தில், பல்கலை நிர்வாகம் அமைதியாக இருப்பதாக மாணவியர் நேற்று முன் தினம் நள்ளிரவில் இருந்து போராட்டத்தில் குதித்துஉள்ளனர்.பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலை விடுதியில் ஏராளமான மாணவியர் தங்கி படிக்கின்றனர்.
போராட்டம்
அதில் 60 மாணவியர் குளிப்பதை சக மாணவி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த விஷயத்தை அறிந்து மாணவியர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குளியல் அறையில் ரகசியமாக வீடியோ எடுத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்கலை வளாகத்தில் மாணவியர் நேற்று முன் தினம் இரவு போராட்டத்தில் குதித்தனர்.பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இந்த விஷயத்தை மூடி மறைக்க முயற்சிப்பதாக குற்றஞ் சாட்டினர்.
இதனால், மொகாலி மட்டுமின்றி மாநிலம் முழுதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சமரசம் பேசியும் மாணவியர் விடிய விடிய போராட்டம் நடத்தினர். மாணவர்கள் யாராவது இந்த வீடியோ எடுத்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், சக மாணவி ஒருவரே குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தி இந்த வீடியோக்களை எடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
விடுதியில் தங்கி படிக்கும் எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு படிக்கும் அந்த மாணவியை போலீசார் கைது செய்தனர். குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுத்து, ஹிமாச்சல பிரதேசம் சிம்லாவில் உள்ள தன் ஆண் நண்பருக்கு வீடியோக்களை அனுப்பியதை, அந்த மாணவி ஒப்புக் கொண்டார். சிம்லா பல்கலையில் படிக்கும் அந்த இளைஞர் இந்த வீடியோக்களை இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோக்களுக்காக இருவருக்கும் ஏராளமாக பணம் கிடைத்துள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிம்லாவில் உள்ள மாணவரை கைது செய்ய பஞ்சாப் போலீஸ் தனிப்படை விரைந்து உள்ளது.
வருத்தம்
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவியர் எட்டு பேர் தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். ஆனால் இந்த தகவலை பல்கலை நிர்வாகம் மற்றும் போலீசார் மறுத்துள்ளனர். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், “சண்டிகர் பல்கலையில் நடந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து விசாரிக்க உயர் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர்,” என்றார்
* உயர்த்திய மின் கட்டணத்தை செலுத்த...இப்போது முடியாது! விசைத்தறியாளர் கூட்டமைப்பு அறிவிப்பு
கோவை விசைத்தறிகளுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை, அரசு மறுபரிசீலனை செய்யும் வரை மின் கட்டணத்தை செலுத்தப்போவதில்லை' என, தமிழ்நாடு விசைத்தறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளை முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக, ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுக்க ஆறு லட்சம் விசைத்தறிகள் உள்ளன.
நாள் ஒன்றுக்கு ஐந்து கோடி மீட்டர் துணி உற்பத்தியாகிறது. அதன் மதிப்பு 150 கோடி ரூபாய். இதன் வாயிலாக, ஏழு கோடி ரூபாய் அரசுக்கு ஜி.எஸ்.டி.,யாக செலுத்தப்படுகிறது. இதில் மாநில அரசின் பங்கு மட்டும் 3.75 கோடி ரூபாய். விசைத்தறி மற்றும் அதை சார்ந்த தொழிலில், பத்து லட்சம் பேர் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் ஐந்து பேர் என்றால், மொத்தம் ஒரு கோடி பேர் இத்துறையை சார்ந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசு உயர்த்தியுள்ள மின்கட்டணத்தால், இத்துறையினர் ஆடிப்போயுள்ளனர். தொழிலை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து, கூட்டமைப்பு தலைவர் சுரேஷ், செயலாளர் வேலுசாமி ஆகியோர் கூறியதாவது: மின்கட்டணம் 31 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி உயர்த்தப்பட்டால், உற்பத்தி செலவு அதிகரிக்கும்; துணி விலை உயரும். துணி விலை உயர்ந்தால், வெளி மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் துணிரகங்களை அனுப்ப முடியாது.
துணி விலை உயரும் போது, மற்ற பொருட்களின் விலையும் உயரும். மின்சாரம் என்பது அனைத்து தொழிலுக்கும் அடிப்படையானது.
விசைத்தறி தொழிலை பாதுகாக்க, முன்னாள் முதல்வர்கள் சலுகைகளை அறிவித்தனர்.ஆனால் தற்போதைய அரசு, விசைத்தறியை பற்றி சிந்தித்ததாக தெரியவில்லை. அதனால்தான் இத்தொழில் அழியும் அளவுக்கு, மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். விசைத்தறி மற்றும் அதைச்சார்ந்த ஜவுளித்துறை உற்பத்தியை நிறுத்தினால், ஒரு கோடி குடும்பங்கள் தமிழகத்தில் பாதிப்புக்குள்ளாகும்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தமிழக முதல்வரிடம் மின் கட்டண உயர்விலிருந்து விசைத்தறிகளுக்கு விலக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதே சமயம், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்த மாட்டோம் என்றும் அறிவித்துள்ளோம்.அரசின் முடிவுக்கு பிறகு, அடுத்த கட்ட போராட்டம் குறித்து பிற அமைப்புகளுடன் பேசி முடிவெடுப்போம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். எவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட்டது
விசைத்தறிக்கு தமிழ்நாடு மின்வாரியம் 3ஏ2 என்ற வீதப்பட்டியல்(டேரிப்) பயன்படுத்துகிறது. ஒரு யூனிட்டிலிருந்து 750 வரை இலவசம்.751லிருந்து 1,000 வரை 2.30 ரூபாயாக இருந்தது 3:00 ரூபாயாகவும், 1,001லிருந்து 1,500 வரை 3:45 ரூபாயிலிருந்து 4:50 ஆகவும் 1,501லிருந்து எவ்வளவு பயன்படுத்தினாலும் 4.60 லிருந்து 6:00 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மொத்த கணக்கீடு அடிப்படையில் யூனிட் ஒன்றுக்கு, 1:40 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இது, 31 சதவீதமாகும்.
நாளை முதல் உற்பத்தி நிறுத்தம்
மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, விசைத்தறி உற்பத்தியாளர்கள் இன்று மின்துறை அமைச்சரை நேரடியாக சந்திக்கின்றனர், நாளை முதல் விசைத்தறிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து, ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சக்திவேல் கூறியதாவது: சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வகையில், 31 சதவீத மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
அதை வலியுறுத்தும் வகையில் நாளை( இன்று) சென்னையில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து, கோரிக்கை வைக்க இருக்கிறோம். செப்.,20(நாளை) முதல் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கிலித்தொடரில் உள்ள சைசிங், சுல்ஜர், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், சொந்த ஜவுளி உற்பத்தி விசைத்தறியாளர்கள், உற்பத்தி நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
* கள்ளக்குறிச்சி: கனியாமூர் கலவரத்தில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளி 91 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியது.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மறுசீரமைப்பு பணிகள் துவக்கம்.
* ஆட்டோ ஓட்டுநருக்கு அடித்த ஜாக்பாட் - ஒரே இரவில் கோடீஸ்வரரானார்.
கேரளாவில் ஓணம் பண்டிகை லாட்டரி சீட்டு மூலம் ரூ.25 கோடியை தட்டி சென்றுள்ளார்.
* பிரதமர் மோடி பிறந்தநாள்: ஒரு லட்சம் பேர் ரத்ததானம் செய்து உலக சாதனை
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்றைய தினம் (செப்டம்பர் 18) இந்தியா முழுவதும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்னதாக 2014ம் ஆண்டு, ஒரே நாளில் 87000 பேர் ரத்த தானம் செய்து உலக சாதனை படைத்திருந்தனர். அந்த சாதனை முறியடிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
* தமிழ்நாட்டில் இன்ஃப்ளுவன்சா வைரஸ் அதிகரித்து வருகிறது: அண்ணாமலை
"தமிழ்நாட்டில் H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சலுடன் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பள்ளிகளில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்” என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
* அமெரிக்காவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததாக அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கொரோனா தொற்றானது அமெரிக்காவில் முடிவுக்கு வந்துள்ளது. கொரோனாவால் சில பிரச்சினை உள்ளது. அதனை ஒழிக்க தொடர்ந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆனால், தொற்றுநோய் முடிந்துவிட்டது. நீங்கள் கவனித்து பார்த்தால், இங்கு யாரும் மாஸ்க் அணியவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
* இரயில்களில் சக பயணிகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை: புதிய உத்தரவு
இந்திய இரயில்வே நிர்வாகமானது இரவு நேர ரயில் பயணத்தின் போது புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இரவு 10 மணிக்குமேல் செல்போனில் சத்தமாக பேசவோ, அதிக ஒலியுடன் பாடல்களை கேட்கவோ கூடாது. இரவு விளக்கு தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும். இவற்றை மீறி சக பயணிகளின் தூக்கம் கெடுவதுபோல் செயல்பட்டால் புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
* தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால்: சீனாவுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை
சீனாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்க அரசியல்வாதிகள் தைவானுக்கு சென்று வருவது 2 நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, தைவானுக்கு ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் ’தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால், தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும்’ என்று அதிபர் ஜோ பைடன் கூறிய காணொளி வெளியாகியுள்ளது.
* 48 மாடி கட்டடத்தில் ஏறிய பிரெஞ்சு ஸ்பைடர் மேன்: 60 வயதில் சாதனை
பிரான்ஸை சேர்ந்த ஆலியன் ராபர்ட் தனது 60வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, பாரிஸில் உள்ள 48 மாடிகளை கொண்ட கட்டடத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி ஏறி ஆச்சரியப்படுத்தியுள்ளார். குறிப்பாக 60 நிமிடத்தில் கட்டடத்தின் உச்சியை அடைந்து புதிய சாதனையை படைத்தார். இருப்பினும் காவல்துறை அனுமதியின்றி இதை செய்ததால் கட்டடத்தின் உச்சியை அடைந்ததும் அவரை காவல்துறை கைது செய்ததாம்.
* மொபைல் பேங்கிங் மூலம் புது வைரஸ் பணத்தை திருடும் அபாயம்
'சோவா' எனும் புதிய வைரஸ் மூலமாக இந்திய வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் திருடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 'சோவா' வைரஸ், மொபைல் பேங்கிங், பணம் செலுத்தும் செயலிகள், கிரிப்டோகரன்சி செயலிகள் என 200க்கு மேற்பட்ட செயலிகளை குறிவைத்து செயல்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆபத்தான செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
* ‘மேக் இன் இந்தியா’ புதிய அம்சங்களுடன் லேப்டாப்கள்: அசுஸ் இந்தியா திட்டவட்டம்
அசுஸ் நிறுவனம் இந்தியாவில் லேப்டாப் உற்பத்தி செய்ய இருப்பதாகவும், மேக் இன் இந்தியாவில் ஒரு அங்கமாகச் செயல்படப் போவதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அதிக பெர்ஃபார்மன்ஸ் கொண்ட லேப்டாப்களுடன், கேமிங் அம்சமும் சேர்ந்து உருவாக்குகிறது. அதிநவீன டெக்னாலஜி, பிரீமியம் சேவைகள் இரட்டை ஸ்கிரீன், உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் லேப்டாப்கள் அறிமுகமாக உள்ளது.
* உலக மல்யுத்த போட்டி; பஜ்ரங் புனியாவுக்கு வெண்கலப் பதக்கம்
பெல்கிரேடில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில், 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, செபாஸ்டியன் ரிவேராவை எதிர்கொண்டார். இப்போட்டியில் 11-9 என்ற புள்ளிக்கணக்கில் பஜ்ரங் புனியா வெற்றிபெற்றார். இதன்மூலம் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். இது உலக மல்யுத்த போட்டியில் அவர் வெல்லும் 4வது பதக்கமாகும்.
* 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட திரையரங்குகள்
ஜம்மு காஷ்மிரில் 1990களில் இருந்த சாதகமற்ற நிலை காரணமாக அங்கு திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் அங்குள்ள புல்வாமா, ஷோபியான் பகுதியில் சுமார் 33 ஆண்டுகளாக திரையரங்குகள் கிடையாது. இந்நிலையில், ஜம்மு காஷ்மிருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டபிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் அப்பகுதிகளில் திரையரங்கங்கள் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவால் திறக்கப்பட்டுள்ளது.
* அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு குறித்த செய்தியில், இந்தியாவின் அருணாச்சல் பிரதேசத்தை சீனாவுடனும், லடாக்கை பாகிஸ்தானுடனும் இணைத்து வரைபடம் வெளியிட்டுள்ளது சீன அரசின் செய்தி நிறுவனமான CGTN
* ராகிங்கில் ஈடுபட மாட்டேன்' என www.antiragging.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்
மாணவர்களும், பெற்றோர்களும் இணையத்தில் பதிவு செய்ததை உறுதி செய்ய வேண்டும்
நடப்பு கல்வியாண்டுக்கான ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து பல்கலைக்கழகங்கள், மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு
ராகிங்கைத் தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்
விடுதிகள், உணவகங்கள், கழிப்பறைகளில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான போஸ்டர்களை ஒட்ட வேண்டும் - யுஜிசி
பள்ளிக்குழந்தைகள் உடல்நலனில் விளையாட வேண்டாம், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவியுங்கள்.
மாணவர்களின் உடல்நலனைக் காக்க வேண்டியது அவசியம், அலட்சியம் காட்டாமல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
காய்ச்சல் பாதிப்பு காரணமாக தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தல்.
* இராணிப்பேட்டை அருகே செல்போன் வெடித்து மாணவன் படுகாயம்.
4 மாதத்திற்கு முன்பு ஆன்லைனில் வாங்கிய செல்போன் வெடித்ததால் பரபரப்பு.
இருசக்கர வாகனத்தில் சென்ற போது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்தது.
* அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு -சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
2021 இறுதியில் நடைபெற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து கே.சி.பழனிசாமி வழக்கு.
கே.சி.பழனிசாமியின் வழக்கை நிராகரிக்க கோரிய ஈபிஎஸ்-ன் மனுவை ஏற்றது உயர் நீதிமன்றம்.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் உட்கட்சி விவகாரம் குறித்து வழக்கு தொடர முடியாது - ஈ.பி.எஸ்.
* சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்-குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு.
செப்டம்பர் 22 முதல் தலைமை நீதிபதி பொறுப்பை நீதிபதி ராஜா கவனிப்பார் என உத்தரவு.
* பயணிகளின் கனிவான கவனத்திற்கு...
ரயில்களில் சக பயணிகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை...
விவரம்: https://youtu.be/OMLKgosdRQQ
இரவு பயணம் - ரயில்வே நிர்வாகம் புதிய உத்தரவு...
* இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்கு முன்னதாக லண்டனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு - இங்கிலாந்து அரசர் சார்லஸ் சந்திப்பு.
இன்று நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக் குழுவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியை கே.எஸ். அழகிரி முன்மொழிவார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* ஈபிஎஸ், ஓபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து.
புகழேந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
கட்சியில் இருந்து நீக்கியது எப்படி அவதூறாகும்? - புகழேந்திக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி.
* தமிழ்நாட்டில் மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டடங்களை இடித்து புதிய கட்டடம் அமைக்க கோரிய வழக்கை முடித்துவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து முடித்துவைப்பு.
* தமிழ்நாட்டில் தினசரி 200 புதிய தொற்று பாதிப்பு பதிவாவதால், சிறப்பு கவனம் தேவை.
உடனடியாக அவசர மருத்துவக் குழுவை தமிழ்நாடுக்கு அனுப்ப வேண்டும்-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகப் பிரபல வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ருபல் ஹுசைன் அறிவித்துள்ளார்.
* SMS க்கு கட்டணம் இல்லை!
SBI வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் APP மூலம் செய்யும் பரிவர்தனைகளுக்கான SMS க்கு வசூலிக்கப்பட்ட கட்டணம் இனி ரத்து செய்யப்படுவதாக SBI அறிவிப்பு
* அரசின் அலட்சியத்தால்தான் தீண்டாமை அதிகரித்துள்ளது - ஓபிஎஸ்
தமிழ்நாட்டில் அரசின் அலட்சியத்தால்தான் தீண்டாமை அதிகரித்துள்ளது என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர், “பாஞ்சாகுளத்தில் நடைபெற்ற தீண்டாமை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்” என்றார்.
* ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் சிறை தண்டனை
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரூ.10 நாணயங்கள் செல்லாது எனப் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. இந்நிலையில், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகை 10 ரூபாய் நாணயங்களுமே செல்லும். அவற்றைச் செல்லாது என கூறுவதோ அதைப் பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ வாங்கவோ மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாங்க மறுப்பவர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
* அந்நிய நேரடி முதலீடுகளை ஈட்டிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் இடம் என்ன?
2022-2023 முதல் காலாண்டில் ரூ.196 கோடி அந்நிய நேரடி முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. 2022 ஏப்ரல் முதல் ஜூன் வரையில் மொத்தம் ரூ.5836 கோடி அந்நிய நேரடி முதலீடுகளை தமிழ்நாடு பெற்றுள்ளது. மகாராஷ்டிரா 28%, கர்நாடகா 24% மற்றும் குஜராத் 19% பெற்று முன்னிலையில் உள்ளன. தமிழ்நாடு 4% அந்நிய முதலீட்டை ஈர்த்து 5வது இடத்தில் உள்ளது.
* மீண்டும் மகாராஜாவாக மாற திட்டமிடும் ஏர் இந்தியா!
இந்திய வானத்தின் மகாராஜாவாக ஏர் இந்தியா மீண்டும் மாற திட்டமிட்டுள்ளது. அதன்படி, தனது உள்நாட்டு சந்தைப் பங்கை மூன்று மடங்காக உயர்த்துவதற்கான ஐந்தாண்டு திட்டத்தை ஏர் இந்தியா நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஏர் இந்தியா தனது உள்நாட்டு சந்தைப் பங்கை தற்போதைய 8.4%ல் இருந்து 30%ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. தற்போது இண்டிகோ உள்நாட்டு சந்தையில் மிகப்பெரிய விமான நிறுவனமாக உள்ளது.
* தைவான் நிலநடுக்கத்தில் ஒருவர் பலி, 146 பேர் காயம்
தைவானின் தென்கிழக்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள டைடுங் நகரில் கடந்த 17ம் தேதி இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளிகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தில் ஒருவர் பலியானதாகவும், 146 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நிலநடுக்க காட்சிகள்: https://youtu.be/J6-L-DQsi0E
* சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 4 முதல்வர்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த முதல்வர்
வெறும் 4 முதல்வர்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே-முதலமைச்சர் ஸ்டாலின்.
செங்கல்பட்டு, மறைமலைநகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாகளின் 4வது மாநில மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை.
* ராகிங் நடைபெற்றால் எங்கு புகாரளிக்கலாம்?
உங்களுக்கு ராகிங் நடைபெற்றால் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம். இது தமிழ்நாடு ராகிங் தடுப்புச் சட்டம் 1997 பிரிவு 4-ன் படி கிரிமினல் குற்றமாகப் பதிவு செய்யப்படும். மேலும் பிரிவு 6-ன் படி குற்றம் சாட்டப்பட்டவர் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். இது மட்டுமல்லாமல் ராகிங் தொடர்பான புகார்களை 1800-180-5522 அல்லது 9818044577 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு அளிக்கலாம்.
* தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை
'மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை பெய்யும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
* பாசனத்திற்கு கீழணை திறப்பு:
சம்பா சாகுபடிக்காக அணைக்கரை கீழணையிலிருந்து நீர் திறப்பு.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.
இதன் மூலம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 93 ஏக்கர் நிலங்கள் சம்பா சாகுபடி செய்ய பயன்படும்.
வீராணம் ஏரி மற்றும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுகளில் நீர் தேக்கப்பட்டு சுமார் 120 கிராமங்கள் நிலத்தடி நீர் உயரவும் வழி வகை செய்யும்.
https://youtu.be/cSMyKBHs_Zk
* கடலூர்: லஞ்சம் வாங்கிய குள்ளஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் ஷியாம் சுந்தர் கைது.
காவல் நிலைய ஜாமினில் விடுவிக்க ஸ்ரீகாந்த் என்பவரிடம் ஐந்தாயிரம் லஞ்சம் கேட்டு பெற்றபோது பிடிபட்டார்.
கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் அதிரடி.
https://youtu.be/cSMyKBHs_Zk
* இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலம்...
முழு வீடியோ: https://youtu.be/yp6WeJoISis
இராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட காட்சிகள்...
* இந்த உலகை மாற்றுவதற்கு உன்னால் பயன்படுத்தக்கூடிய, மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம், கல்வி மட்டுமே!
மனிதர்களை தவிர, மற்ற உயிரினங்கள் எதுவும், துரோகம் செய்யாது, காரணம் அவைகளுக்கு பணம் தேவைப்படாது!!
கடலில் கல் எறிவதால் கடலுக்கு வலிப்பதில்லை, கல் தான் காணாமல் போகிறது; உன் மீது எறியப்படும் விமர்சனங்கள் கல்லாக இருக்கட்டும், நீ கடலாக இரு!!!
🙏இனிய இரவு வணக்கம்
No comments:
Post a Comment