அக்னிப்புரட்சி இன்றைய (25.09.2022) முக்கிய செய்திகள்.
* மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்பனம் கொடுத்து புனித நீராடினர்.
* ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை முதல்வராக்குவது தொடர்பாக இன்று ஆலோசனை செய்ய வாய்ப்பு.
முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார்.
இதனால் அசோக் கெலாட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பு; இன்று நடக்கும் கூட்டத்தில் முக்கிய முடிவு.
* மதுரை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.! தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்
மதுரை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள பி.எஃப்.ஐ அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி, அவரைக் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம்மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனர். அதே போல ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி என்ற துணிக்கடைமீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும், இரண்டு அரசுப் பேருந்துகள்மீது கல் வீசி சேதப்படுத்தப்பட்டன. இதனிடையே, பெட்ரோல் குண்டு வீச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அடுத்து பொள்ளாச்சி பா.ஜ.க பிரமுகர் சிவக்குமார் என்பவர் வீட்டில், மர்ம நபர்கள் பிளாஸ்டிக் கவரில் டீசல் நிரப்பி வீசியிருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து பாஜக அலுவலகம் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனையடுத்து கோவையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஈரோட்டிலும் பாஜக பிரமுகர் வீடு அருகே குண்டு வீசப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மதுரையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. (வீடியோ: https://twitter.com/IndiaNewsDigest/status/1573708737029677057?t=nMMSDnpIbbq27h_Va7d4LA&s=19 )
மதுரை மேல இருப்பானேடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் அனுமந்தையர் மகன் கிருஷ்ணன் (வயது 55) மனைவி. கிருஷ்ணன் கம்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு தொழில் செய்து வருகிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அனுப்பானடி மண்டல் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு இரவு 7.40 மணியளவில் 2 பேர் கொண்ட கும்பல் டூ வீலரில் வந்து 3 பெட்ரோல் குண்டுகளை கார் ஷெட்டில் வீசியதில் சரக்கு வாகத்தின் மேல் விழுந்து ஒன்றும், மற்றொன்று வெளியே விழுந்தும் வெடித்தது. இதில் வெடிக்காத மற்றொரு பெட்ரோல் குண்டு ஒன்று கார்ஷெட்டின் உள்ளே விழுந்தது
சம்ப இடத்திற்கு வந்த காவல்துறை துணை ஆணையர் சீனிவாச பெருமாள் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு, அருகில் இருந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். பரபரப்பான மதுரை மாநகர் மேலா அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
* அகவிலைப்படி' - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டுமென சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் நல சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அகவிலைப்படி உயர்வு வழங்கியது குறித்து நவ.25-ல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க 2015-ல் ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ள நிலையில், 4 முறை அகவிலைப்படி உயர்த்தியபோதும், ஓய்வூதியதாரர், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தரவில்லை என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அகவிலைப்படி வழங்க மறுத்ததால் 86,000 ஓய்வூதியதாரர் - 20,000 குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பணியில் உள்ளவர்களுக்கு அகவிலைப்படி வழங்கும் நிலையில் தங்களுக்கு வழங்க மறுப்பது பாரபட்சமானது எனவும் மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது.
நிதி நெருக்கடியால் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை எனவும், போக்குவரத்து துறையில் அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் உள்ளதால் அகவிலைப்படி தர ரூ.81 கோடி செலவாகும் எனவும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
JOIN US: https://t.me/Agnipuratchi1
நிதி நெருக்கடியை காரணமாக் கூறும் அரசு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வை அறிவிப்பது எப்படி என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அகவிலைப்படி உயர்வு வழங்கியது குறித்து நவம்பர் 25-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
* பீகாரில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் 2 சிறுநீரகங்களையும் திருடிய டாக்டர்
பீகாரில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் 2 சிறுநீரகங்களையும் திருடிய ஆஸ்பத்திரியின் உரிமையாளரும், டாக்டரும் தலைமறைவாகிவிட்டனர்.
பாட்னா,
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுனிதா தேவி, 3 குழந்தைகளின் தாய். இவர் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு தொடர்ந்து வயிற்றுவலி இருந்து வந்ததால், மற்றொரு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்.
அந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள், சுனிதா தேவியின் 2 சிறுநீரகங்களும் நீக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். அதையடுத்து, பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அந்தப் பெண் சேர்க்கப்பட்டார். தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ள அவருக்கு தொடர்ந்து 'டயாலிசிஸ்' செய்யப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சற்று மேம்பட்டபிறகு மாற்று சிறுநீரக அறுவைசிகிச்சை செய்யப்பட வேண்டும். அதேநேரம், மேலும் சில சோதனைகளுக்குப் பின்பே அந்தப் பெண்ணின் சிறுநீரகங்கள் இரண்டும் திருடப்பட்டுள்ளனவா என்று உறுதியாக சொல்ல முடியும் என்று அந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் பெண்ணின் சிறுநீரகங்களை திருடியதாக கூறப்படும் ஆஸ்பத்திரியின் உரிமையாளரும், டாக்டரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். அந்த டாக்டர் போலி டாக்டராக இருக்கக்கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அந்தப் பெண்ணின் சிகிச்சைக்கு ஆகும் செலவு முழுவதையும் ஏற்பதாக அவரது குடும்பத்தினருக்கு மாநில அரசு உறுதி அளித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
JOIN US: https://t.me/Agnipuratchi1
* வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டாரா சீன அதிபர் ஜின்பிங்? அரசை ராணுவம் கைப்பற்றியதா..?
சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீன அரசை ராணுவம் கைப்பற்றியதாக பரவும் காட்சிகள் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், சமர்கண்ட்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பிறகு அங்குள்ள அரசியல் சூழல் முற்றிலும் மாறியிருப்பதாக கூறப்படுகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சீன ராணுவ தலைவர் பதவியில் இருந்து ஜி ஜின்பிங் நீக்கப்பட்டுவிட்டதாகவும், செப்டம்பர் 16 ஆம் தேதி உஸ்பெகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய அவரை விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவம் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.
சீன அரசை ராணுவம் கைப்பற்றி விட்டதாகவும், பெய்ஜிங் நகரம் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் சிலர் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். (வீடியோ: https://youtu.be/FoOudFx5V50 ) தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சீன மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஜெங், சீன ராணுவம் பெய்ஜிங்கை நோக்கி நகர்வதாக கூறி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்தும் ஒருபுறம் கேள்வி எழுப்பப்படுகிறது.
* இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபாரம்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி த்ரில் வெற்றி
ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்த இந்தியா
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி ஓய்வு
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்
நாட்டின் உயரிய அர்ஜூனா விருதையும் சிறந்த வீராங்கனைக்கான ஐசிசி விருதையும் வென்றவர் 20 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடி 355 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்
* டெல்லியில் அக். 1ம் தேதி 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
முதற்கட்டமாக சென்னை, டெல்லி, மும்பை நகரங்களில் 5ஜி சேவை.
* கன்னியாகுமரி கருமன்கூடல் பகுதியில் பாஜக பிரமுகர் கல்யாணசுந்தரம் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
* தமிழகம் முழுவதும் இன்று 38வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைப்பெற்று வருகிறது
* திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே பாஜக பிரமுகர் பாலு வீட்டின் முன் பெட்ரோல் குண்டுவீச்சு
* கன்னியாகுமரியில் பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை
* தமிழ்நாட்டில் தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழ்நாட்டை வெடிகுண்டு கலாச்சாரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.சட்டம்-ஒழுங்கையும் அமைதியையும் பாதுகாக்க வேண்டும்-மநீம தலைவர் கமல்ஹாசன்.
* CUET - PG தேர்வு முடிவுகள் நாளை மாலை 4 மணிக்கு cuet.nta.nic.in இணையதளத்தில் வெளியீடு- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
* பெட்ரோல் குண்டு வீச்சு: டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை:
தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்.
பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டறிந்து கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை- டிஜிபி சைலேந்திர பாபு.
* அக்.2 காந்தி ஜெயந்தி அன்று காலை 11 மணிக்கு சுழற்சி முறையை பின்பற்றி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும்- அனைத்து ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு.
இக்கூட்டத்தை மதசார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக் கூடாது.
கூட்டம் தொடர்பான அறிக்கையை அக்.12 ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்-தமிழ்நாடு அரசு.
* அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறையில் ரூ.15,000 கோடி ஊழல் நடந்ததாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டினார்.
இதை நிரூபித்தால் நான் அரசியல் விட்டு விலக தயார். நிரூபிக்கவில்லை எனில் அவர் விலக தயாரா?- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
பகிரங்கமாக சவால் விடுகிறேன் ஊழல் நடந்திருந்தால் நிரூபிக்கட்டும்.
தகுதி இல்லாதவரை திமுக அரசு நிதி அமைச்சராக நியமனம் செய்துள்ளது -மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி.
* தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர பெட்ரோல் குண்டு சம்பவத்திற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு வன்முறை நடைபெறுவது கவலையளிக்கிறது- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.
* கனடாவில் 3வது பன்னாட்டு மனிதநேய சமூகநீதி மாநாட்டில் காணொலி மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை:
மனிதன் சக மனிதனை மனிதனாக நடத்துவதே மனிதநேயம். அனைத்து மனிதருக்கு நீதி வழங்குவதே சமூக நீதி.
தமிழர்கள் அதிகளவில் வாழும் நாடுகளில் ஒன்றாக கனடா திகழ்கிறது.
இந்தியாவின் பிற மாநிலங்களை ஆளும் அரசுகள், தமிழகத்தின் திராவிட மாடல் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அறிவதில் ஆர்வமாக இருக்கின்றன.
தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்துவதிலும் துடிப்புடன் இருக்கின்றன.
இத்தகைய சூழலில் திராவிட மாடல் தத்துவமானது உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்காகவே, கனடாவில் இம்மாநாடு நடத்தப்படுவதாகவே நான் நினைக்கிறேன்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்-சீமான்.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டுவீச்சு உள்ளிட்ட அமைதியை கெடுக்கும் நடவடிக்கைகளை ஒடுக்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ், பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வரும் செய்திகள் கடந்த காலத்தை நினைவூட்டுகின்றன-நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
* புதுச்சேரியில் 2 குழந்தைகள் உட்பட புதிதாக 8 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு.
* பெட்ரோல் குண்டு வீச்சு ஏற்புடையதல்ல. அதில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
எனக்கு சந்தேகம் உள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் இருக்க வாய்ப்பு -விசிக தலைவர் திருமாவளவன்.
* பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவ குற்றவாளிகளில் பெரும்பாலானோர் இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவர் - தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உறுதி.
உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளும் அளவு மோசமான சூழல் இல்லை.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையிலான போலீசார் சிறப்பாக செயல்படுகின்றனர் - டிஜிபி சைலேந்திர பாபு.
* தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது.
பெட்ரோல் குண்டு தாக்குதல் தொடர்ந்து நீடித்தால், தொண்டர்களின் கோபத்துக்கு மாநில அரசு ஆளாக நேரிடும்.
கோவையில் நாளை பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும்-பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
* குண்டு வீச்சில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்- தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்.
* பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை:
தமிழகத்தில் முழுவதும் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோலை பாட்டில்களில் வழங்க தடை
தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை.
காவல்துறையின் அறிவுறுத்தலை ஏற்று பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவிப்பு.
* கோவை பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஜேசுராஜ் மற்றும் இலியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளாக இருக்கின்றனர்-கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்.
சிசிடிவி மற்றும் நுண்ணறிவு பிரிவு விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடு அல்லாத பொருட்கள் மீது தீவைத்து தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு- கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்.
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம்.
பல்வேறு மத அமைப்பினரும் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்- கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்.
* சேலத்தில் பாட்டில் வீச்சு - 7 பேர் கைது:
சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ராஜன் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீசப்பட்ட வழக்கில் 7 பேர் கைது.
எஸ்டிபிஐ அமைப்பின் சேலம் மாவட்ட தலைவர் சையது அலி, கிளைத்தலைவர் காதர் உசேன் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேர் கைது.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு.
1-1 என்ற கணக்கில் டி20 தொடர் சமனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
* வங்கதேசம்: ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்த விபத்தில் 23 பேர் உயிரிழப்பு.
வங்கதேசம் அருகே ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.
23 பேர் பலியாகிய நிலையில் மீதமுள்ளோரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
* காந்தி பிறந்த நாளன்று ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்துகின்றனர்;
இந்த பேரணியானது மத அடிப்படையில் மக்களை பிளவுப்படுத்தும் சதியாகதான் உள்ளது.
முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் - திருமாவளவன் எம்பி
* இன்ஸ்டா ஸ்டோரீஸில் இனி 1 நிமிட வீடியோ பதிவேற்றலாம்.
இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் இனி தடையின்றி ஒரு நிமிடம் வரை ஓடக்கூடிய வீடியோவை அப்லோடு செய்யும் வசதியை, பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பதாக மெட்டா அறிவித்துள்ளது.
கடந்தாண்டு குறிப்பிட்ட பயனர்களுக்கு சோதனை முறையில அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது அனைத்து பயனர்களுக்கும் உலகம் முழுவதும் வசதியை வழங்கி உள்ளது.
மெட்டா செய்தி தொடர்பாளர் கூறுகையில், "ஸ்டோரீஸ் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான வழிகளில், தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
இப்போது, தானாக 15 வினாடி வீடியோ துண்டுகளாக வெட்டப்படுவதற்குப் பதிலாக, நீங்கள் 60 வினாடிகள் வரை தொடர்ந்து ஸ்டோரீஸில் வீடியோவை அப்லோடு செய்யலாம் அல்லது உருவாக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
* டி20 கிரிக்கெட் - தொடரை வென்றது இந்தியா:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில், தொடரை வென்றது இந்திய அணி.
கடைசி மற்றும் 3வது டி20 போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.
3 போட்டிகள் கொண்ட தொடரில், 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி.
No comments:
Post a Comment