அக்னிப்புரட்சி இன்றைய (27.09.2022) முக்கிய செய்திகள்.
* பகுதி நேர ஆசிரியர் ஓய்வு பெறும் வயது 60 ஆக நீட்டிப்பு.
அரசு ஊழியர்களின் ஓய்வு வரம்பு உயர்த்தப்பட்ட நிலையில், பகுதி நேர ஆசிரியர்களின் வயது வரம்பு உயர்வு. நடப்பு செப்டம்பர் முதல் அமல்- பள்ளிக்கல்வித்துறை.
* ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார் பிரதமர் மோடி.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் நினைவு நிகழ்வில் பங்கேற்கிறார்.
* நாசாவின் டார்ட் விண்கல சோதனை வெற்றி.
விண்கல் ஒன்றை துல்லியமாக மோதி டார்ட் விண்கலம் வெற்றிபெற்றது.
பூமியில் இருந்து 11 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள விண்கலத்தை மோதியது டார்ட்.
* புதுச்சேரியில் தமிழக அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு.
புதுச்சேரி வில்லியனூரில் அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்கியதில் 2 தமிழ்நாடு அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் சேதம்.
ஆ.ராசாவை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில் தமிழ்நாடு அரசு பேருந்துகள் மீது தாக்குதல்.
* சி.பா.ஆதித்தனாரின் 118 வது பிறந்தநாள் - சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலை, உருவப்படத்திற்கு அரசு மரியாதை.
அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோதங்கராஜ், எம்எல்ஏ பரந்தாமன் மரியாதை.
* அக்.2ம் தேதி நடைபெறவுள்ள ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதை திரும்ப பெறக்கோரி திருமாவளவன் மனு-அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு.
மனு எண் நடைமுறை முடிந்த பின்னர் வழக்கு விசாரிக்கப்படும்- சென்னை உயர்நீதிமன்றம்.
* பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமித்தார் ஓ.பன்னீர்செல்வம்
* அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம் - ஈ.பி.எஸ் அறிவிப்பு:
கட்டுப்பாடுகளை மீறி கட்சிப் பெயருக்கு களங்கம் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாக குற்றச்சாட்டு.
அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பி.எஸ் நியமித்து இருந்த நிலையில் ஈபிஎஸ் அதிரடி.
* சென்னையில் ஆம்னி பேருந்து கட்டணம் தொடர்பாக பேருந்து உரிமையாளர்களுடன், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சுவார்த்தை.
* சென்னை, தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனுமதி.
பரிசோதனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு டெங்கு காய்ச்சல் உறுதி.
* மழையால் ஏற்படும் பயிர்சேதத்தை ஆய்வு செய்து கணக்கெடுக்க 5000 அலுவலர்கள் நியமனம்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: வேளாண்துறையில் பணியாற்றும் 5000 அலுவலர்கள் மழையால் ஏற்படும் பயிர்சேதத்தை ஆய்வு செய்து கணக்கெடுக்க நியமனம்- வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
தமிழக முதல்வர் இந்த ஆண்டு பயிர் காப்பீடுக்கு ரூ 2300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
நடப்பாண்டில் 40 லட்சம் ஏக்கர் சம்பா பயிரை காப்பீடு செய்ய திட்டமிட்டுள்ளதால் விவசாயிகள் காப்பீடு செய்ய முன்வரவேண்டும் என்று - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
* பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது - மத்திய அரசு
நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பு என சினிமாவில் பல துறைகளில் சிறந்து விளங்கியவர் ஆஷா பரேக்.
1960களில் வணிகரீதியாக வெற்றிபெற்ற பல படங்களில் நடித்தவர் ஆஷா பரேக். 1992ல் ஆஷா பரேக் பத்மஸ்ரீ விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
* திமுக எம்பி சர்ச்சை பேச்சு வீடியோ:
https://twitter.com/IndiaNewsDigest/status/1574673335019245568?t=hYsAomcqDTQEvRv-sL2R1g&s=19
எந்த மாவட்டத்திலும் எந்த மாவட்ட செயலலாளரும் கட்சிக்காரர்களை கூப்பிட்டு மணல் அள்ளுங்கள் என்று சொல்வதே கிடையாது. நான் ஒருவன் தான் இப்படி கட்சிகாரர்களையே அள்ள சொல்கிறேன், மற்ற அனைவரும் கம்பெனிகாரர்களிடம் கொடுத்து பணம் வாங்கிகிட்டு போய் விட்டார்கள்" என்று நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை
உறுப்பினருமான ராஜேஷ் குமார் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
* அரசு பேருந்து கட்டணத்துடன், ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம் - போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்.
அரசுப்பேருந்துகள் மக்களின் சேவைக்காக இயங்குவது. ஆம்னி பேருந்துகள் அப்படி அல்ல. அது தனியார் ஒப்பந்த வாகனங்களாக இந்தியா முழுமைக்குமான கட்டண விகிதத்துடன் இயங்குவது.
ஏழை எளியவர்கள், நடுத்தர மக்களுக்கான சேவையை நாங்கள் வழங்கி கொண்டிருக்கிறோம். கூடுதல் சேவையை எதிர்பார்ப்பவர்கள் தான் ஆம்னி பேருந்தை நாடுகின்றனர்.
அரசுப்பேருந்து மற்றும் தனியார் பேருந்துக்கு கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆம்னி வகை பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் கிடையாது. இந்தியா முழுமைக்கும் இதுதான் நிலை.
அதனால்தான் தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இரண்டொரு நாளில் கட்டணம் குறித்த முடிவை அரசிடம் தெரிவிப்பதாக சொல்லியுள்ளனர் - எஸ்.எஸ்.சிவசங்கர்
நான் மக்கள் தரப்பிலிருந்து தான் பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறேன்.
தமிழக அரசு சார்பில் 21ஆயிரம் பேருந்துகள் மக்களுக்காக இயங்கி கொண்டிருக்கிறது. ஆனால், தனியார் ஆம்னி பேருந்தில் அதன் கட்டண தெரிந்தும், அதில் பயணிப்பவர்கள் அதிகம் - எஸ்.எஸ்.சிவசங்கர்.
* Free Fire விளையாட்டில் ரத்தம் தெறிப்பது போன்ற காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுவதாக அமைந்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் வந்து கொண்டே தான் இருக்கிறது-உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
இதனை முழுவதுமாக தடை செய்வது இயலாத காரியமாகவே உள்ளது.
பெற்றோர்கள் குழந்தைகள் அனைவரும் மொபைலில் மூழ்கி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே இல்லை -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
* கோவை ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டப்பட்ட கட்டடங்களுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது- சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.
சுற்றுச்சூழல் அனுமதி வேண்டும் என சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா?
ஈஷா அறக்கட்டளையின் கட்டடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன?- மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு - விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை, மரபணு சோதனைக்கு மாதிரிகளை தர மறுக்கிறார்கள் என சிபிசிஐடி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் புகார்.
மாணவி பயன்படுத்திய மொபைல்போனை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
* வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி - பொதுவெளியில் தோன்றினார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் பெய்ஜிங்கில் நடந்து வரும் கண்காட்சியில் பங்கேற்பு.
சீன அதிபர் ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக வெளியான தகவல்.
ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவல்.
செப். 16-க்கு பிறகு முதன் முறையாக பொதுவெளியில் தோன்றிய ஜி ஜின்பிங்.
* மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு இரயில் தனது முதல் சேவையை 24.10.2022 முதல் துவங்க உள்ளது.
உப்பு சப்பற்ற அறிக்கை
விடுவதை நிறுத்திவிட்டு மக்களுக்கான பணியை கவனியுங்கள் முதல்வரே!
திமுக அரசின் செயல்பாடுகளை
திமுக கம்பெனி ஏடுகளும் குடும்ப ஊடகங்களும் தான் போற்றுகின்றனர்
எந்த பொதுஜனமும் இல்லை என்பதை
முதல்வர் புரிந்து கொள்ளவேண்டும்.
பிஜேபி மாநிலப் பொருளாளர் SR. சேகர்
மக்கள் ஆதரித்தால் தான் அது நல்லாட்சிக்கான அடையாளம்
மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யாத இந்த அரசு மக்களை இக்கட்டான நிலைக்கு இட்டுச்செல்லும் விலைவாசி உயர்வு, மத துவேஷம், தேசவிரோதம், தொடர் ஊழல். என.. இவைகளை ஏன் கட்டுப்படுத்த முயலவில்லை..
ஏதோ திமுகவினர் உத்தமபுத்திரர்கள் போல முதல்வர் பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கையாக உள்ளது.
1949 முதல் நச்சு பேச்சுக்களை, ஆபாச வார்த்தைகளை பொதுவெளியில் பேசி வருவது திமுக தான்.
திகவை பற்றி கேட்கவே வேண்டாம். அநாகரீகத்தின் உச்சகட்ட பேச்சு.
தட்டிக்கேடடால் நச்சு சக்தி என விமர்சிப்பதே வாடிக்கை.
தங்களின் அனாகரீக பேச்சுக்களால் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்த திமுக, பாஜக வெட்டி ஒட்டி மோசடி செயகிறது என பேசுவது திமுகவின் ஒப்பாரி குரல்.
மக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் திகவும், திமுகவும் தான் நச்சு சக்திகள். ஓட்டு அரசியலுக்காக சிறுபான்மையினரை தாஜா செய்வதை விட்டுவிட்டு வளர்ச்சி அரசியலை முன்னெடுங்கள். முதல்வரே!
நல்லாட்சி கொடுக்க முடியவில்லை, விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை, ஊழலற்ற நிர்வாகத்தை தர முடியாத உங்களின் "விடியா அரசு" தான் "வெற்று அகப்பை"
தேர்தலுக்கு முன் திமுகவில் 90% இந்துக்கள் உள்ளனர் என்றீர்கள், வென்றவுடன் இந்துக்களை விபச்சாரியின் பிள்ளைகள் என சொல்கிறீர்கள் இது தான் உங்களின் நேர்மையா?
மக்களுக்கான திட்ட்ங்களை மூடுவிழா செய்துவிட்டு, அள்ளிவீசிய வாக்குறுதிகளை முதலில் சாக்குபோக்கு சொல்லாமல் விரைந்து நிறைவேற்ற வழியை பாருங்கள்.
பாஜக வளர்கிறது என்ற உண்மையை இந்த வயிற்றெரிச்சல் அறிக்கை மூலம் வெளிப்படுத்தியமைக்கு நன்றி முதல்வரே!
பிஜேபி மாநிலப் பொருளாளர் SR. சேகர்
* காலாண்டுத் தேர்வு விடுமுறை நீட்டிப்பு
6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 9 வரை விடுமுறை நீட்டிப்பு
1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 12 வரை விடுமுறை நீட்டிப்பு
* புதுடில்லி : பழம்பெரும் ஹிந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு இந்திய சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகையாக மட்டுமல்லாது இயக்குனராக, தயாரிப்பாளராகவும் இவர் முத்திரை பதித்துள்ளார்.
மும்பையில் பிறந்த ஆஷா பரேக் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார். பிறகு 1959ல் ‛தில் தேக்கே தேகோ' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து கன்காட், ஜப் பியார் கிசி சே ஹோதா ஹே, சய்யா, மெரி சூரத் தெறி ஆங்கன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஹிட் பட நாயகியாகவும், 1960-70 காலக்கட்டத்தில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் வலம் வந்தார். ஹிந்தி மட்டுமல்லாது பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் சினிமாவில் வலம் வந்த இவர் இந்திய திரைப்பட துறையின் தணிக்கை குழுவில் முதல் பெண் தலைவராக பதவி வகித்துள்ளார். இப்படி சினிமாவில் பல துறைகளில் சாதித்த ஆஷா பரேக்கிற்கு கடந்த 1992ல் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. இப்போது மற்றுமொரு கௌரவமாக தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
* செப்டம்பர் 23ம் தேதி கேரளாவில் நடைபெற்ற பந்த்-ன் போது 71 அரசு பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்தன மற்றும் 11 ஊழியர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்வத்திற்கு PFI அமைப்பிடமிருந்து ரூ.5.06 கோடி இழப்பீடு கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் மனு.
* வருமான வரித்துறை பெயரில் மோசடி... எச்சரிக்கை
சமீபகாலமாக இமெயில், கடிதங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் வருமான வரித்துறை பெயரில் மோசடி நடைபெறுவதாக வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே உங்களின் கணக்கில் இருந்து ஏதாவது தொகையோ அல்லது வரியோ, வேறு ஏதாவது வகையில் பணம் செலுத்துவது குறித்து இமெயில் அல்லது தொலைபேசி அழைப்புகள் வந்தால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
JOIN US: https://t.me/Agnipuratchi1
* திருப்பம் தரும் திருப்பதி பிரம்மோற்சவம்!
9 நாள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வீடியோ: https://youtu.be/a4rJ9tPYhYw
வரும் 5ஆம் தேதி வரை, உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி காலை மற்றும் மாலையில் விதவிதமான வாகனங்களில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
No comments:
Post a Comment