சென்னை மாநகரின் புழுதி மாசுபாட்டினை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அவர்களிடம் பசுமைத் தாயகம் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
‘சென்னை காற்று மாசுவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் வேண்டும்!’ என செப்டம்பர் 7: நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாளை (International Day of Clean Air for blue skies) முன்னிட்டு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை விடுத்தார்.
அதைத் தொடர்ந்து பசுமைத் தாயகம் அமைப்பினர் இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
கோரிக்கைகளை கவனமாகக் கேட்டுக்கொண்ட ஆணையர், சென்னை மாநகரின் புழுதி மாசுபாட்டைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
பசுமைத் தாயகம் அமைப்பின் மாநிலச் செயலாளர் இர.அருள், இணைச் செயலாளர்கள் ச.க.சங்கர், வி.இராதாகிருஷ்ணன், மற்றும் வழக்கறிஞர் விநோபாபூபதி உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment