அக்னிப்புரட்சி இன்றைய (09.10.2022) முக்கிய செய்திகள்.
* உக்ரைனில் ரஷ்யா சரமாரி குண்டுவீச்சு: கிரிமீயாவை இணைக்கும் முக்கிய பாலம் தகர்ப்பு
உக்ரைனின் கார்கீவ் நகரில் ரஷ்ய படைகள் நேற்று சரமாரியாக குண்டுவீசி தாக்கின. கிரிமீயாவை இணைக்கும் முக்கிய பாலம் சேதமானது. உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர், 8வது மாதமாக நீடிக்கிறது. இந்நாட்டில் கைப்பற்றிய 4 பகுதிகளை சமீபத்தில் தனது நாட்டுடன் ரஷ்ய அதிபர் புடின் இணைத்தார். இந்நிலையில், உக்ரைனின் முக்கிய நகரான கார்கீவ்வில் நேற்று பல்வேறு இடங்களில் ரஷ்ய படைகள் திடீரென சரமாரியாக குண்டுகள் வீசி தாக்கின. இதில், நகரின் முக்கிய மருத்துவ நிறுவனம், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களில் தீப்பிடித்து எரிகின்றன. இதனால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
இதற்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவுடன் கிரிமீயாவை இணைக்கும் பிரதான மேம்பாலத்தில் உக்ரைன் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. பாலத்தின் மீது சென்ற வெடிகுண்டுகள் நிரப்பிய லாரி வெடிக்க செய்யப்பட்டது. இதில், மூன்று பேர் பலியானார்கள். மேலும், பாலத்தின் ஒரு பகுதி சேதமானது. இந்த குண்டு வெடிப்பின்போது பாலத்தின் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஆண், பெண் என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூன்றாவது நபர் குறித்த விவரங்கள் தெரியவில்லை. ரயில்வே தண்டவாளத்தில் சென்ற சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன.
புதிய தளபதி
உக்ரைனில் சமீப காலமாக ரஷ்ய படைகளுக்கு பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. இதனால், சிரியாவில் ரஷ்ய படைக்கு தலைமை தாங்கி வெற்றியை பெற்று தந்த ஜெனரல் ஜெர்ஜி சுரோவிகினை, உக்ரைன் போரல் ரஷ்ய படையின் புதிய தளபதியாக ரஷ்ய அதிபர் புடின் நியமித்துள்ளார்.
* சென்னை மயிலாப்பூர் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
Watch: https://twitter.com/IndiaNewsDigest/status/1578926899904262144?t=pmB0w4DlTlc5L1buO8IGQg&s=19
* ஷிண்டே, உத்தவுக்கு கிடையாது; சிவசேனா சின்னம் வில் அம்பு முடக்கம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
புதுடெல்லி: சிவசேனாவின் வில் அம்பு சின்னத்துக்கு ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே உரிமை கோரி வரும் நிலையில், இந்த சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அதிரடியாக முடக்கியது.
மகாராஷ்டிராவில் சிவசேனா உடைக்கப்பட்டு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும், உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகின்றன. தங்கள் அணிதான் உண்மையான சிவசேனா என்று அறிவிக்கும்படி, தேர்தல் ஆணையத்தில் இருதரப்பும் மனு கொடுத்துள்ளன. அதேபோல், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதில், யார் உண்மையான சிவசேனா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்வதில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறி விட்டது. இந்நிலையில், கட்சியின் பெரும்பான்மை எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் தனது பக்கம் இருப்பதால், சிவசேனாவின் வில், அம்பு சின்னத்தை தனது அணிக்கு ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் ஷிண்டே கோரியுள்ளார். இதற்கான கடிதத்தை அதனிடம் அளித்தார். அதில், ‘அந்தேரி கிழக்கு சட்டபேரவை தொகுதிக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. எனவே, வில் அம்பு சின்னம் குறித்து விரைவாக முடிவு எடுத்து, அதை தங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும்,’ என்று கோரினார்.
இந்த கடிதத்துக்கு சனிக்கிழமை 2 மணிக்குள் பதில் அளிக்கும்படி உத்தவ் தாக்கரேவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினமே தனது பதிலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினார். அதில், ‘ஏக்நாத் ஷிண்டே அணியினர் தாங்களாகவே சிவசேனா கட்சியில் இருந்து விலகிச் சென்று விட்டனர். இதனால், கட்சியின் வில் அம்பு சின்னத்துக்கு அவர்கள் உரிமை கோர முடியாது,’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், வில் அம்பு சின்னத்தை இருதரப்புக்கும் வழங்காமல், தேர்தல் ஆணையம் நேற்றிரவு முடக்கியது. இதனால், இனி வரும் தேர்தல்களில் ஷிண்டே, உத்தவ் தாக்கரே இந்த சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது...
* துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை.
கோவை மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே ஆடுகள் மேய்ப்பதில் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த மோதலில் நாட்டு துப்பாக்கியால் ரஞ்சித் என்பவர் சுட்டார்.
இதில் சின்னத்தம்பி, 63 என்பவர் இறந்தார்.
ரஞ்சித் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
* உதகை: மஞ்சனக்கொரையில் உள்ள தனியார் பள்ளியில் தடுப்பு்சசுவர் கட்டுமான பணியின்போது விபத்து.
மண்சரிவு ஏற்பட்டு சேலம் மாவட்டத்தை சேர்ந்த சேட், வேலு ஆகிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு.
* அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. மைத்ரேயன் நீக்கப்படுவதாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.
ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு அளித்த கட்சியில் இருந்து நீக்கம்.
* இந்திய பயனர்களின் தரவுகளைத் திருடும் 'ஜிபி வாட்ஸ்ஆப்'.
இஎஸ்இடி ஆண்டி வைரஸ் நிறுவனம் இந்த இந்தியர்களின் சாட்களை (Chats) ஜிபி வாட்ஸ்ஆப் திருடுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலி உலகம் முழுக்க கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ளது.
அதேபோன்றே தோற்ற அமைப்புடனும் கூடுதல் அம்சங்களுடனும் ஜிபி வாட்ஸ்ஆப் என்ற செயலியும் உள்ளது. இதற்கான பயனர்களும் உலகம் முழுக்க உள்ளனர்.
ஜிபி வாட்ஸ்ஆப் செயலி கூகுள் நிறுவனத்தின் பிளேஸ்டோரில் கிடைப்பதில்லை. ஆனால் மற்ற தேடுபொறிகளின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
இந்நிலையில், ஜிபி வாட்ஸ்ஆப் செயலி இந்திய பயனர்களின் தரவுகளைத் திருடும் அபாயம் உள்ளதாக இஎஸ்இடி ஆண்டி வைரஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பயனர்களின் மெசேஜ்களை டேம்பரிங் செய்யவும் ஜிபி வாட்ஸ்ஆப் அனுமதிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ஜிபி வாட்ஸ்ஆப்-பில் கூடுதல் சிறப்பம்சங்கள் இருப்பதால், ஒருசில இந்திய பயனர்கள் ஜிபிவாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
JOIN US: https://t.me/Agnipuratchi1
அந்த கூடுதல் அம்சங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆப்களுக்கு தடையாக இல்லாததால், அவை பயனர்களிடையேயும் பயன்பாட்டில் உள்ளது.
எனினும் அங்கீகரிக்கப்படாத குளோனிங் செயலிகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் தடை செய்து வருகிறது.
அத்தகைய செயலிகளைப் பயன்படுத்தும் பயனர்களின் கணக்குகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டு வருகின்றன.
அது தொடர்ந்தால் நிரந்தரமாக முடக்கப்படும் எனவும் வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.
* கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்க இரு கூடுதல் டி.எஸ்.பிக்கள், 3 டி.எஸ்.பிகள் அடங்கிய தனிப்படை அமைத்து சிபிசிஐடி கூடுதல் டிஜிபி உத்தரவு.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
* புதுடில்லி: மதமாற்ற சர்ச்சையில் சிக்கிய டில்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் பதவி விலகினார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஹிந்து மதத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேர் புத்த மதத்திற்கு மாறினர். அப்போது, ஹிந்து மதத்தை பின்பற்ற மாட்டோம். ஹிந்து கடவுள்களுக்கு பூஜை செய்ய மாட்டோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அவர்களுடன் டில்லி அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமும் கலந்து கொண்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தின. முதல்வர் கெஜ்ரிவால், பிரசாரத்திற்கு குஜராத் சென்ற போது, எதிர்ப்பு கிளம்பியது.
அக்கட்சி பேனர்கள் கிழிக்கப்பட்டன.இச்சூழ்நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திர பால் கவுதம் ராஜினாமா செய்துள்ளார்.
* YouTube வாடிக்கையாளர்களே...
இந்தியாவில் YouTube Premium விலை முதல் மூன்று மாதங்களுக்கு 10 ரூபாயாக நிர்ணயம்;
அதன் பிறகு மாதம் ஒன்றுக்கு 129 ரூபாய் வசூலிக்கப்படும் என அறிவிப்பு!
* வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
உதவித்தொகை
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
10-ம் வகுப்பு (தோல்வி), 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த நிலையில் 5 ஆண்டுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.
விண்ணப்பங்கள் வரவேற்பு
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.9.2022 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.
உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெற வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
கடைசி நாள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, டிசம்பர் மாதம் 10-ந்தேதிக்குள் அனைத்து அலுவலக வேலைநாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், அனைத்து அசல் கல்விசான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
* இந்தியா - நியூசிலாந்து இடையேயான உறவில் புத்துணர்ச்சி தேவைப்படுகிறது - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
வெலிங்டன்,
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் வெலிங்டனில் புதிதாக கட்டப்பட்ட இந்திய உயர் ஆணையரகத்தை இன்று திறந்து வைத்தார். வெளியுறவுத் துறை மந்திரியாக பொறுப்பேற்ற பின் ஜெய்சங்கர் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்வது இதுவே முதல் முறையாகும்.
அப்போது அவர் பேசியதாவது, "ஒருவருக்கொருவர் பலத்துடன் விளையாடுவது, இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான உறவை வளர்ப்பதற்கான மிகவும் விவேகமான வழியாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு "புதுப்பிக்க" தயாராக உள்ளது. புத்துணர்ச்சி பெறவும் உள்ளது.
இரு நாடுகளின் நமது பிரதமர்கள் நரேந்திரமோடி மற்றும் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆகியோரின் தொலைநோக்கு மற்றும் அர்ப்பணிப்பு பார்வை, இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான உறவை பலப்படுத்துகிறது. அதிக தொழில்கள் செய்வதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். எந்தவொரு உறவுக்கும் வணிகம் நல்லது.
வணிகம், டிஜிட்டல், விவசாயம், கல்வி, திறன்கள், பாரம்பரிய மருத்துவம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு துறைகளில் வாய்ப்புகள் நிறைய உள்ளன.விவசாய-வணிகத் துறையில் கூட்டாண்மைக்கு வரும்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நிறைய வாய்ப்புகள் உள்ளன.
வலுவான ஒத்துழைப்பு அமைதி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்யும். கிரிக்கெட்டில் உள்ள ஒத்துழைப்பு சிறந்த உதாரணமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
* 2 ஆண்டுகளில் 181 பேர் உயிரிழப்பு; வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்: மீறினால் ரூ.1,000 அபராதம், ஓட்டுநர் உரிமம் ரத்து
புதுச்சேரி: புதுவையில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மற்றும் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். தவறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதுடன் 3 மாதத்துக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முறையற்ற வகையில் மோட்டார் வாகனம் இயக்குவதால் தினமும் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. 2019 முதல் 2021 வரை புதுவையில் 3,410 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் புதுச்சேரியில் நான்கு பேரும் மற்றும் காரைக்காலில் ஒரு சிறுவனும் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்லும் பொழுது சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இரு சக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி உள்ளது. இவ்வாறு பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் எனப்படும் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்தல் அவசியம். தலைக்கவசம் அணிந்து பயணம் செய்வது வாகன விபத்தில் தலைக்கு காயம் ஏற்படுவதை 80 சதவீதம் தடுக்கிறது. கடந்த 2021 மற்றும் 2022 செப்டம்பர் வரையில் மட்டும் தலைக்கவசம் அணியாததன் காரணமாக 181 பேர் இறந்துள்ளனர்.
இருசக்கர வாகனம் ஓட்டுவோர் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து அலுவலகங்களுக்கு இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் பொழுது, அத்துடன் தரமான தலைக்கவசத்தினையும் விற்பனை செய்யும் முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது கைபேசி உபயோகிப்பது நமது புலன்களின் திறனை 50 சதவீதம் குறைக்கும் என்பதால், எந்த வாகனம் ஓட்டும் பொழுதும் கைபேசி பேசுவதை தவிர்க்க வேண்டும்.வாகனம் ஓட்டும்போது கைபேசியில் பேசுவோருக்கும், தலைக்கவசம் அணியாது இரு சக்கர வாகனம் ஒட்டுவோர் மற்றும் பயணிப்போருக்கும் முதல் முறை ரூ.1,000 அபராதம் மட்டுமன்றி 3 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கைபேசியில் பேசாமல் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவோர் வாகன விபத்தினை தவிர்க்கலாம். சாலை விதிகளை கடைபிடித்து விபத்தினை தவிர்ப்போம்.
JOIN US: https://t.me/Agnipuratchi1
எனவே, பொதுமக்கள் அனைவரும் தகுதியான தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஒட்டுவது, அதிவேகமாக ஓட்டுவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது, அலைபேசியில் (மொபைல்) பேசிக்கொண்டு ஓட்டுவது, தவறான திசையில் ஓட்டுவது, இரண்டு நபர்களுக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் செல்லாமல் சாலை விபத்துகளை தவிர்க்குமாறு போக்குவரத்துத்துறை அறிவுறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர்: மத்திய அமைச்சர்
இந்தியா-நியூசிலாந்து இடையேயான இருதரப்பு கிரிக்கெட் உறவுகளை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டினார். இதையடுத்து அவர், "இந்தியர்களுக்கு நன்கு தெரிந்த நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் என்று நான் கூறுவேன். அவர் எங்களுக்கு எதிராக விளையாடுவதைத் தவிர பெரும்பாலான நேரங்களில் அவரை நாங்கள் விரும்புகிறோம். எனக்கு பிடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர்" என்றார்.
* மக்களே எச்சரிக்கை: 5ஜி சிம் மாற்றி தருவதாக கூறி நூதன கொள்ளை
இந்தியாவில் தற்போது 5ஜி சேவை தொடங்கியுள்ளது. இந்நிலையில் சிம் கார்டை 5ஜி ஆக மாற்றித் தருவதாகக் கூறி நூதன பணக்கொள்ளையில் கும்பல் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. லிங்க்கை க்ளிக் செய்யுங்கள் என்று மெசேஜ் ஏதாவது வந்தால், அதை தவிர்க்க வேண்டும் என்று சைபர் க்ரைம் காவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
* இரட்டை குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா
நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பல புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் ட்விட்டரில், "நயனும், நானும் அம்மா அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது" என குழந்தைகளுடன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
* 2 வது ஒருநாள் கிரிக்கெட் - தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
279 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா 45. 5 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டியது
3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது இந்தியா.
JOIN US: https://t.me/Agnipuratchi1
No comments:
Post a Comment