பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தொடங்கிய மரம் நடும் அறமே, மாபெரும் அறம் இயக்கத்தில் 251 நாட்களில் 17,768 மரங்களை நட்ட பாட்டாளிகள்! - Agnipuratchi

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தொடங்கிய மரம் நடும் அறமே, மாபெரும் அறம் இயக்கத்தில் 251 நாட்களில் 17,768 மரங்களை நட்ட பாட்டாளிகள்!

Share This

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தொடங்கிய மரம் நடும் அறமே, மாபெரும் அறம் இயக்கத்தில்
251 நாட்களில் 17,768 மரங்களை நட்ட பாட்டாளிகள்!

தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனும்,  தமிழ்நாட்டில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன்,  மரம் நடும் அறமே மாபெரும் அறம் இயக்கத்தை  பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கினார்.

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் இணை, சார்பு அமைப்புகளைச்  சேர்ந்தவர்கள்  அவர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் மரம் நட வேண்டும். அவ்வாறு மரம் நட்டவர்கள் அதன் புகைப்படத்தை   மருத்துவர் அய்யா அவர்களுக்கு   அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்புபவர்களை மருத்துவர் அய்யா அவர்கள்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு  வாழ்த்து தெரிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 2021 நவம்பர் 30-ஆம் தேதி முதல் அக்டோபர் 8  வரையிலான  காலத்தில்  மொத்தம் 251 நாட்களில் 2304 பேர் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். அவர்கள் மொத்தம் 17768  மரக்கன்றுகளை நட்டுள்ளனர். பல பாட்டாளிகள் ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்கின்றனர்.  சிங்கப்பூர், மலேஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் கொரியா,  துபாய் உள்ளிட்ட நாடுகளிலும் பலர் மரக்கன்றுகளை நட்டு, அதற்காக மருத்துவர் அய்யா அவர்களிடம் வாழ்த்து பெற்றிருக்கின்றனர்.

கடுமையான பல்வலி காரணமாக  12 நாட்களும்,  கொரோனா மற்றும் அதற்கு பிந்தைய  பாதிப்புகள் காரணமாக 53  நாட்களும்  பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட நிகழ்வுகளையொட்டி மரக்கன்று நட்ட பாட்டாளி சொந்தங்களுக்கு மருத்துவர் அய்யா  அவர்களால் வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை.  அதன்பின் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் வழக்கம் போல, மரக்கன்று நடும் பாட்டாளி சொந்தங்களுக்கு  மருத்துவர் அய்யா அவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்துக் கூறி வருகிறார்.

மருத்துவர் அய்யா அவர்கள் தொடங்கிய மரம் நடும் அறமே மாபெரும் அறம் இயக்கம் வரும் நவம்பர் 30-ஆம் தேதி ஓராண்டை நிறைவு செய்கிறது. அதற்குள்ளாக இந்த இயக்கத்தின்படி பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட நிகழ்வுகளையொட்டி பாட்டாளி  சொந்தங்களால்  நடப்பட்ட மரக்கன்றுகளின்  எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தைலாபுரம், 09.10.2022

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages