அக்னிப்புரட்சி இன்றைய (30.10.2022) முக்கிய செய்திகள்.
* வாழ்க்கை, நேர்மையாக உள்ளவர்களை, அழ வைக்கிறது, நேரத்திற்கு ஏற்ப, மாற்றி பேசுபவனை, வாழ வைக்கிறது!
எந்த நேரத்தில், என்னென்ன திருப்பங்கள், நடக்கும் என்று, யூகிக்க முடியாத, உலகின் மிகப்பெரிய மர்ம நாவல், மனிதர்களின் மனம்!!
உயர்வான எண்ணம், விரிவான சிந்தனை, நேர்மையான செயல்பாடு, உன்னிடம் இருந்தால், உன்னை யாராலும், வீழ்த்த முடியாது, வெற்றி நிச்சயம்!!!
இனிய இரவு வணக்கம்🙏
TELEGRAM: t.me/Agnipuratchi1
* "எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தை சார்ந்துதான் இருக்க முடியும், அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நம்முடைய பண்பாடு, கலாசாரம் போன்றவற்றை அழித்துவிட்டார்கள். அதை மீட்டெடுக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் உள்ளோம் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
* தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா - போலீசார் குவிப்பு
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்
* தென்கொரியாவின் சியோல் நகரில் சனிக்கிழமை இரவு ஹாலோவீன் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
விழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
* நவம்பா் 1-ந்தேதியில் இருந்து 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் வழங்க ஏற்பாடு - திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்
நவம்பர் 1-ந்தேதியில் இருந்து டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது:-
டைம் ஸ்லாட் டோக்கன்கள்
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் 12-ந்தேதி திருப்பதியில் இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்கும் முறையை நிறுத்தியது. எனினும், பக்தர்களின் வசதிக்காக கடந்த அறங்காவலர் குழு கூட்டத்தின்போது, பக்தர்களுக்கு மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்க முடிவு செய்தது. அதன்படி நவம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.
அந்த டோக்கன்கள் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள சீனிவாசம் தங்கும் விடுதி, திருப்பதி ரெயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜசாமி சத்திரம்-2 ஆகிய இடங்களில் வழங்கப்பட உள்ளன. அதற்காக, அனைத்து வசதிகளுடன் கூடிய கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாரத்தில் சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும். செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 15 ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும்.
மேற்கண்ட நாட்களில் பக்தர்களின் வருகையை பொருத்து டைம் ஸ்லாட் டோக்கன்கள் வினியோகிக்கும் எண்ணிக்கையை அதிகரித்தும், குறைத்தும் வழங்கப்படும். டைம் ஸ்லாட் டோக்கன்களின் அன்றைய ஒதுக்கீடு தீர்ந்து விட்டால், பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வளாகம் 2-க்கு சென்று சாமி தரிசனத்துக்காக காத்திருக்கலாம்.
வி.ஐ.பி. தரிசன நேரம் மாற்றம்
மேலும் சாதாரணப் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் காத்திருப்பதைத் தவிர்க்க வி.ஐ.பி. தரிசன நேரத்தை டிசம்பர் 1-ந்தேதியில் இருந்து காலை 8 மணியாக மாற்றப்பட உள்ளது. ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் ஸ்ரீவாணி டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு திருப்பதியில் உள்ள மாதவம் தங்கும் விடுதியில் அறைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* தென்கொரியா: ஹாலோவீன் கொண்டாட்டத்தின் கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வு
தென்கொரியாவில் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தின் கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.
தென் கொரியாவின் சியோலின் இதாவோன் பகுதியில் சுமார் 1 லட்சம் பேர் ஹாலோவீன் திருவிழா கொண்டாடத்திற்காக கூடினர். அங்கு பெரிய அளவிலான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, முதல் முறையாக முகக் கவசம் அணிவது கட்டாயம் அல்லாத வெளிப்புறத்தில் அனுமதிக்கப்பட்ட ஹாலோவீன் கூட்டம் இது என்பதால் மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர்.
பண்டிகையின் போது ஒரு குறுகிய தெருவில் முன்னோக்கி தள்ளப்பட்ட ஒரு பெரிய கூட்டத்தால் நசுக்கப்பட்டதில் சிக்கிய மக்களில் சுமார் 120 பேர் உயிரிழந்துள்ளதாக தென் கொரிய நாட்டை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தின் கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், மாரடைப்புக்கு ஆளான சுமார் 50 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் 400 பேர் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், 140 வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோக்களில், மயங்கிய நிலையில் உள்ள பலருக்கு தெருவோரத்தில் அவசரகால சேவைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதையும், ஏராளமான கூட்டம் அந்த இடத்தில் சூழ்ந்திருப்பதையும் பார்க்க முடிந்தது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* கோடநாடு கொலையில் தடயங்கள் அழிப்பு: சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் அம்பலம்...
ஊட்டி-கொலை, கொள்ளை நடந்த கோடநாடு எஸ்டேட்டில், முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டிருப்பது, சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தோழி சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.
ஒப்படைப்பு
ஜெ., மறைவுக்கு பின், 2017 ஏப்., 24ல், எஸ்டேட்டில் நுழைந்த கொள்ளையர், காவலாளி ஓம்பகதுாரை கொலை செய்து, கொள்ளையில் ஈடுபட்டனர்.
காவலாளி ஓம்பகதுார் உடல் அங்குள்ள மரத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. இந்த கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
கடந்த, 30ம் தேதி இவ்வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றியதை அடுத்து, இவ்வழக்கின், 1,500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நகல், ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி., குழுவில், டி.ஜி.பி., முகமது ஷகில் அக்தர்,ஐ.ஜி., தேன்மொழி, கூடுதல் எஸ்.பி., முருகவேல், டி.எஸ்.பி.,க்கள் அண்ணாதுரை, சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் தனலட்சுமி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டவர்கள் இடம் பெற்று உள்ளனர்.
இக்குழுவினர் கடந்த 26ம் தேதி கோடநாடு எஸ்டேட்டில், இரண்டு மணி நேரம் ஆய்வு நடத்தினர்.
காவலாளி ஓம்பகதுாரை கொன்று உடலை கட்டி வைத்திருந்த மரம், வெட்டி அகற்றப்பட்டுள்ளது, சி.பி.சி.ஐ.டி., ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் சில பகுதிகளிலும், தடயங்களை அழிக்க முயற்சி நடந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.
நேபாளத்தில் விசாரணை
கொள்ளையர்களின் தாக்குதலில் காயமடைந்து, தற்போது நேபாளத்தில் வசித்து வரும் இன்னொரு காவலாளி கிருஷ்ணதாபாவிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்காக போலீசார்நேபாளம் செல்ல உள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டு ஜாமினில் உள்ள, 12 பேரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டிருப்பதால், கோடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.
'மரம் வெட்டியது குறித்து விசாரணை'
ஊட்டியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், ''சி.பி.சி.ஐ.டி., போலீசார் கோடநாடு எஸ்டேட் சென்று, அங்கு கொலை, கொள்ளை நடந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ''காவலாளி ஓம்பகதுார் உடலை தலைகீழாக கட்டிவைத்திருந்த மரத்தை வெட்டி, அகற்றி இருப்பது தெரியவந்துள்ளது. அதற்கு பதிலாக புதிதாக மரக்கன்று ஒன்றை எஸ்டேட் நிர்வாகம் நடவு செய்துள்ளது. மரம் வெட்டி அகற்றப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் மரியாதை
அமைச்சர்கள் அன்பில் மகேஷ், ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மரியாதை
* கந்தசஷ்டி திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் இன்று மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
* இங்கிலாந்தின் புதிய பிரதமர் ரிஷி சுனக் தன் புதிய, சிறிய வீட்டினுள் முதன்முறை செல்லுமுன் சந்தனப் பொட்டு, குங்குமம் வைத்து, விளக்கேற்றுகிறார். இக்காணொளி வைரலாகி வருகிறது. இதை கண்டு உலக நாடுகள் பிரமிப்படைந்துள்ளன.
இந்துமதம் ஒருநாள் உலகை ஆளும் என அன்று விவேகானந்தர் பேசியது இன்று நிகழ்ந்து வருவதாக உலகெங்குமுள்ள இந்து மக்கள் நெகிழ்ச்சி.
* பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தாய்நாட்டின் விடுதலைக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தன்னை முழுமையாக அர்பணித்து, ஆன்மீகத்தையும், நாட்டையும் இருகண்களாய் போற்றிய பசும்பொன் ஐயா முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் குருபூஜை விழாவான இன்று அன்னாரை போற்றி வணங்குகிறேன்!
- ஓ.பன்னீர் செல்வம்...
* பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா
மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை
ஈபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை
மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை.
* தமிழக ஆளுநர் ரவி பதவி விலகிவிட்டு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசட்டும்
- திமுக கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிக்கை
* டி20 உலகக் கோப்பை சூப்பர்12 சுற்று: ஜிம்பாப்வேவை 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வென்றது.
பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசம் த்ரில் வெற்றி.
* தன்னைக் கருணை கொலை செய்ய அனுமதி அளிக்குமாறு கர்நாடகாவை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துள்ளார்
ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் பணிகளை முடித்து 2 வருடங்கள் ஆகியும் தனக்கு தனக்கு தரவேண்டிய தொகையினை வழங்க 40% சதவீதம் லஞ்சம் கேட்பதாக புகார்
* கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்
'தென்னகத்து போஸ்' பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
* பிரதமர் மோடிக்கு பெண்கள் ஆணைய தலைவர் கடிதம்; பலாத்கார குற்றவாளிகளுக்கு விடுதலை, பரோல் கூடாது: வலுவான சட்டங்கள், கொள்கைகளை மாற்றியமைக்க வலியுறுத்தல்
புதுடெல்லி: பலாத்கார குற்றவாளிகள் விடுதலை, பரோலை தடுப்பதற்கு சட்டங்கள், கொள்கைகளை வலுவாக மாற்றி அமைக்கும்படி பிரதமர் மோடிக்கு பெண்கள் ஆணைய தலைவி கடிதம் எழுதியுள்ளார். குஜாரத்தில் 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்ற 21 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, அவருடைய 3 வயது மகள் உட்பட 7 குடும்ப உறுப்பினர்களை ஒரு கும்பல் கொடூரமாக கொன்றது. இந்த வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல், பாலியல் பலாத்காரம், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமை அரியானா அரசு சமீபத்தில் பரோலில் விடுவித்தது.
இந்நிலையில், டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘நாட்டில் தற்போதுள்ள பரோல், விடுதலை சட்டங்கள் மிகவும் பலவீனமாக உள்ளன.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பலாத்காரம், கொலை, கடத்தல், ஆசிட் வீச்சு போன்ற கொடூரமான குற்றங்களில் குற்றவாளிகளின் தண்டனையை குறைக்க அனுமதிக்கக் கூடாது. அதற்கு ஏற்ற வகையில் வலுவான சட்டங்கள், கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும். அரிதான வழக்குகளில் கடுமையான நிபந்தனைகளுடன் சில நாட்களுக்கு மட்டுமே பரோல் வழங்கப்பட வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.
* தெலங்கானாவில் ஆளும் கட்சி எம்எல்ஏ.க்களை ரூ400 கோடி பேரம் பேசிய பாஜ ஆதரவாளர்கள் கைது: ஐதராபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
திருமலை: தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ.க்களை ரூ400 கோடிக்கு பாஜ சார்பில் பேரம் பேசிய விவகாரத்தில் சிக்கிய 3 பேர், உயர் நீதிமன்ற உத்தரவால் கைது செய்யப்பட்டனர்.
தெலங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.க்களான பைலட் ரோஹித்ரெட்டி, ரேகா காந்தாராவ், குவ்வாலா பாலராஜூ, பீரம் ஹர்ஷவர்தன் ஆகியோர் ஐதராபாத் மொய்னாபாத்தில் உள்ள அஜிஸ்நகரில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த வாரம் சந்தித்தனர். இந்த பண்ணை வீட்டில் ஆளும் கட்சியின் 4 எம்எல்ஏக்களுக்கும் தலா ரூ100 கோடி வீதம் ரூ400 கோடி வழங்குவதற்காக டெல்லியை சேர்ந்த ராமச்சந்திர பாரதி, ஐதராபாத்தை சேர்ந்த நந்த கிஷோர், திருப்பதியை சேர்ந்த சிம்மயாஜிலு ஆகியோர் பாஜ சார்பில் பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் ராமச்சந்திர பாரதி, சிம்மயாஜிலு ஆகியோர் சாமியார்கள். நந்தகிஷோர் இடைத்தரகர். இதில் பேரம் பேச வந்தவர்களிடம் இருந்து ரூ15 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், பண்ணை வீட்டில் எம்எல்ஏக்களுடன் நடந்த சந்திப்புக்கு ஒரு வாரம் முன்பாக, பண்ணை வீட்டின் உரிமையாளரான எம்எல்ஏ பைலட் ரோஹித்ரெட்டி, சுவாமி ராமச்சந்திர பாரதி ஆகியோரை இடைத்தரகர் நந்தகுமார் கான்பரன்ஸ் மூலம் போனில் இணைத்து உரையாடிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிைலயில், இந்த ஆடியோ வெளியான விவகாரம் குறித்து பாஜ எம்எல்ஏ ரகுநந்த ன்ராவ் அமலாக்கத்துறையிடம் நேற்று முன்தினம் இரவு புகார் செய்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘பொதுமக்கள் மத்தியில் பாஜ அரசின் மீது அவப்பெயர் ஏற்படுத்தவே ஆளும் டிஆர்எஸ் கட்சி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. ரூ400 கோடிக்கு பேரம் பேசியதாகவும், ரூ15 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த பணம் எங்கே?, உரையாடல் பதிவு செய்யப்பட்ட செல்போன் எங்கே? அவற்றை ஏன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை. ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ2 லட்சம் எடுத்தாலே உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்போதும் ரூ15 கோடி எப்படி பரிமாற்றம் நடந்தது? பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பேரம் பேசியவர்களிடம் கொடுத்தது யார்? அந்த பணம் கருப்பு பணமா? அல்லது வெள்ளை பணமா? என்பது குறித்து அமலாக்கத்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகார் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
இதற்கிடையே, சைபராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்ட அரசியல் இடைத்தரகர் நந்தகுமார், டெல்லியை சேர்ந்த ராமச்சந்திரபாரதி, திருப்பதியை சேர்ந்த சிம்மயாஜிலு ஆகியோர் ஐதராபாத் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால், பேரம் பேசியதற்கான ஆதாரங்கள் மற்றும் பணம் கையகப்படுத்தாததால் 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து தெலங்கானா போலீசார் நேற்று முன்தினம், ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தனர். இதை ஏற்ற நீதிமன்றம் நேற்று வழக்கை விசாரணைக்கு ஏற்றது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
இதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பேரம் பேசியதை, ஆடியோ ஆதாரங்களுடன் போலீசார் தெரிவித்தனர். மேலும், இவ்வழக்கில் 3 பேரையும் வெளியே விட்டால் சாட்சி, ஆதாரங்களை கலைக்க கூடும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி பணம் பறிமுதல் செய்யவில்லை என்றாலும், பேரம் பேசியது உண்மை என்பதால் அவர்கள் 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று 3 பேரையும் சைபராபாத் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாஜ தலைவர் கோயிலில் சத்தியம்
ரூ400 கோடி விவகாரம் தொடர்பாக பாஜ தெலங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய் நேற்று முன்தினம் யாதகிரிகுட்டா லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சென்று தனது தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு, ‘பேரம் பேசியதற்கும், பாஜவுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ எனக்கூறி சத்தியம் செய்தார். மேலும், சுவாமி முன்பு நின்றபடியும் சத்தியம் செய்தார். அதேபோல் ‘முதல்வர் சந்திரசேகர ராவ் கோயிலுக்கு வந்து பேரம் பேசியது குறித்து சத்தியம் செய்ய வேண்டும்’ என்றார். இந்நிலையில், இதற்கு டிஆர்எஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ‘எம்எல்ஏக்களை இழுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதே பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தான். எனவே, பண்டிசஞ்சய்க்கு பதிலாக மோடியும், அமித்ஷாவும் கோயிலில் வந்து சத்தியம் செய்யட்டும்’ என தெரிவித்துள்ளனர்.
பாஜவால் எம்எல்ஏ உயிருக்கு ஆபத்து
ஐதராபாத் பண்ணை வீட்டில் எம்எல்ஏக்களுடன் சந்திப்பு நடைபெற்றது தொடர்பாக, வீட்டின் உரிமையாளரான எம்எல்ஏ பைலட் ரோஹித்ரெட்டி முக்கிய நபராக செயல்பட்டுள்ளார். இதனால், அவரது உயிருக்கு பாஜவால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, எம்எல்ஏ பைலட் ரோஹித்ரெட்டி உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க, துப்பாக்கி ஏந்தியபடி 4 போலீசார் மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சத்தியம் செய்வதால் உண்மை பொய் ஆகாது
தெலங்கானா மாநில தகவல் தொடர்பு துறை அமைச்சரும், முதல்வர் சந்திர சேகரராவின் மகனுமான கே.பி.ராமாராவ் கூறுகையில், ‘கோயிலுக்கு சென்று சத்தியம் செய்வதால் உண்மை பொய் ஆகாது. பொய் உண்மை ஆகாது. இப்படி செய்தால் காவல்துறை, நீதிமன்றம் எதற்கு உள்ளது. குஜராத்தில் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்களை மாலை அணிவித்து அழைத்து வந்த கட்சியினர் தான் பாஜ. அமித்ஷாவின் செருப்பை சுமந்து சென்றவர் பாஜ மாநில தலைவர் பண்டி சஞ்சய். கோயிலுக்கு சென்று சத்தியம் செய்ததால் கோயிலின் புனித தன்மை கெட்டுப்போனது. இதனால், பக்தர்களின் மனநிைலயும் பாதிக்கப்பட்டது. ஆகையால், உடனடியாக கோயிலை சுத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் பாவங்கள் விலகும்,’ என்றார்.
* சென்னை, நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு ஈபிஎஸ் மரியாதை
முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் மரியாதை
முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், பா.வளர்மதி உள்ளிட்டோரும் மரியாதை.
* மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா மரியாதை
* பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்.
- பிரதமர் நரேந்திர மோடி
* டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 13.5 ஓவர்களில் இலக்கை எட்டி எளிமையாக வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தரப்பில் முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்தார்.
* பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை:
தீவிரவாத சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க சமரசமின்றி நடவடிக்கை எடுங்கள்.
வழக்கின் போக்கை திசை திருப்ப என்ன கேட்டுவிட்டோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
கேள்வி எழுப்பக்கூடாது என கூறுவதற்கு போலீஸ் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.
மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய சுற்றறிக்கை, 21ம் தேதி கிடைத்ததாக கூறப்படுவது பொய்.
அக்.,21ல் ஜமீஷா முபீன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததற்கு போலீஸ் மறுப்பு தெரிவிக்குமா?
தீவிரவாத சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கும் படி, நடவடிக்கை எடுக்க வே ண்டும்.
ஆளும் அரசை கேள்வி எழுப்புவது, மக்களிடம் உண்மையை கொண்டு சேர்ப்பது எங்கள் கடமை.
6 தனிப்படைகள் அமைத்து விசாரிக்கும் போலீஸ் துறை அடுத்தகட்ட உண்மைகளை சொல்ல தயங்குவது ஏன்?
இதுவரை இது ஒரு தீவிரவாத சதிச்செயல் என்று சொல்ல மறுப்பது ஏன்?.
கோவையில் நடந்தது தற்கொலைத் தாக்குதல் என தமிழக அரசு அறிவிக்காமல் மவுனம் காப்பது ஏன்?.
கைதான 5 பேர் மீது எந்த பிரிவின் கீழ் வழக்கு என்பதை குறிப்பிடாதது ஏன்?
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம்.
மாமரமாகவும், சேவலாகவும் மாறிய சூரபத்மனை வதம் செய்து ஆட்கொண்டார் சுவாமி ஜெயந்திநாதர்.
சூரனை சம்ஹாரம் செய்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஆட்கொண்டார் ஜெயந்திநாதர்.
* டி20 உலகக்கோப்பை: இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா அணி
134 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா, 19.4 ஓவர்களில் அதனை எட்டி, வெற்றி பெற்றது!
* குஜராத்தின் மோர்பி பகுதியில் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் அறுந்து விபத்து - இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
400க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கியதாக அச்சம் - நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
மச்சு ஆற்றில் 100 ஆண்டு பழமையான பாலம் மறுசீரமைக்கப்பட்ட 4வது நாளிலேயே அறுந்து விழுந்து பயங்கர விபத்து.
No comments:
Post a Comment