சோழர் பாசனத் திட்டம் - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் புதிய முயற்சி! - Agnipuratchi

சோழர் பாசனத் திட்டம் - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் புதிய முயற்சி!

Share This

சோழர் பாசனத் திட்டம் - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் புதிய முயற்சி!

சோழப்பேரரசில் மிகப்பெரிய நிலப்பரப்பை ஆட்சி செய்த மாமன்னர் ராஜேந்திர சோழன் கங்கை வரை கொண்ட வெற்றியின் நினைவாக, கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரத்தை தலைநகராக நிர்மாணித்து ஆட்சி செய்தவர்.

கங்கைகொண்ட சோழபுரத்தின் அருகே, கங்கை நீரை கொண்டு வந்து கலந்து,  வெட்டிய ஏரியே பொன்னேரி என்று அழைக்கப்படும் சோழகங்கம் ஏரி. இந்த பொன்னேரி சோழர் கால நீர் பாசன திட்டத்தில் முக்கியமான அங்கம் வகித்தது. இந்த ஏரிக்கு பொன்னாறு வழியாக நீர் வருவதற்கான கால்வாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

காலப்போக்கில் பொன்னேரிக்கு வரவேண்டிய நீரானது தடைபட்டு போகவே, பொன்னேரி ஆனது வறண்ட ஏரியானது. இதுபோன்ற பல ஏரிகள் அரியலூர் மாவட்டத்தில் பயன்படாத வகையில் சென்றுவிட்டது.

இந்த ஏரிகளை சீரமைத்து, கால்வாய்களை புணரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி, சோழர் பாசன திட்டத்தினை நிறைவேற்ற வலியுறுத்தி பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரண்டு நாள் எழுச்சி நடைப்பயணம் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக நேற்று பொன்னேரி ஏரியை பார்வையிட வந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கங்கையிலிருந்து கொண்டு வந்த தீர்த்தத்தை பொன்னேரியில் கலந்தார்.  இதற்காக கங்கையிலிருந்து விமானம் மூலம் தீர்த்தம் கொண்டுவரப்பட்டு பொன்னேரியில் கலக்கப்பட்டது.

TELEGRAM: t.me/Agnipuratchi1

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், "கடந்த இரண்டு நாட்களாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளுக்கு சென்று, அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, தமிழக அரசு விரைந்து அரியலூர் சோழர் பாசன திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறேன். அனைத்து மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் எப்படியாவது திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என என்னிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

அரியலூர் சோழர் பாசன திட்டம் என்பது, 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் இப்பகுதியில் உருவாக்கிய மிகப்பெரிய பாசனத்திட்டங்கள். ஏரிகள், ஆறுகளை உருவாக்கியுள்ளார்கள். இன்று அந்த ஏரிகளும், ஆறுகளும் காணவில்லை. இதனை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சோழர் பாசன திட்டம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்திவருகிறேன். இத்திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

2 நாட்களாக அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் பல ஏரிகளை பார்த்து வந்துள்ளேன். செம்பியன் மாதேவி ஏரி 1000 ஆண்டுகளுக்கு முன் கண்டராதித்தாரால் 1578 ஏக்கர் பரப்பில் வெட்டப்பட்டது. இன்று அது 500 ஏக்கர் மட்டுமே உள்ளது. 188 பறவைகள் வந்து செல்லும் கரைவேட்டி ஏரி 1200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வேடந்தாங்கலை விட 4 மடங்கு பெரியது. காமராசவல்லி ஏரி 1300 ஏக்கர் பரப்பில் இருக்கிறது.

பொன்னேரி 1000 ஆண்டுகளுக்கு முன்பு இராஜேந்திர சோழனால் கங்கையில் இருந்து நீர் எடுத்து வரப்பட்டு வெட்டப்பட்டுள்ளது. சோழகங்கம் என்றும் இதனை அழைப்பார்கள். இன்று இங்கு நீர் இல்லை. பொன்னேரிக்கு நீர் வரத்து பொன்னாறில் இருந்து வந்தது. த.பழூருக்கு அடுத்தபடியாக ஆற்றையே காணவில்லை.

அன்றைய நாட்களில் முக்கொம்புக்கு மேலே மருதாறு, நந்தியாறு, கோதையாறு போன்ற ஆறுகளை சோழ மன்னர்கள் உருவாக்கினார்கள். அதனை வைத்து இப்பகுதியில் பாசனத்தை ஏற்படுத்தினார்கள். தற்போது அவை தூர்ந்து உள்ளன. அதனை மீட்க்கெடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்தினால், 90 ஆயிரம் ஏக்கர் பாசனம் நடைபெறும் இந்த பகுதி 2 இலட்சம் ஏக்கராக உயரும். வேலைவாய்ப்பு, சுற்றுலா என மாவட்டமும், மக்களும் வளர்ச்சி பெறுவார்கள். இதற்கு ரூ.3000 கோடி செலவாகும். அதனை 3 ஆண்டுகளில் நிறைவேற்றலாம். இது அரியலூர் மாவட்ட மக்களின் கோரிக்கை ஆகும். பழைய நிலைக்கு அரியலூர் மாவட்டத்தை திருப்ப வேண்டும்.

இம்மாவட்டத்தில் உள்ள ஏரிகளின் கொள்ளளவு இன்றைய நிலையில் 8 டி.எம்.சி. ஏரிகள், ஆறுகளை தூர்வாரினால் 18 டி.எம்.சி நீரை நிரப்பலாம். சமீபத்தில் காவேரி கொள்ளிடத்தில் கடலுக்கு சென்ற உபரி நீர் 430 டி.எம்.சி ஆகும். இதில் 8 டி.எம்.சி இருந்தாலே இம்மாவட்டம் பசுமையாக மாறும்.

TELEGRAM: t.me/Agnipuratchi1

கட்சி, ஜாதி, மதம் போன்றவற்றை கடந்து அனைவரும் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். வரும் 5ம் தேதி தமிழ்நாடு முதல்வர் அரியலூர் மாவட்டத்திற்கு வருகிறார். மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்ததன் எதிரொலியாக, இங்கு வந்ததும் அவரின் வாயால் அறிவிப்பு வெளியாக வேண்டும். இதுபோன்ற வளர்ச்சி திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, நீரின் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும்.

இந்த திட்டம் இந்த மாவட்ட மக்களுக்கு சோழர்கள் கொடுத்த மிகப்பெரிய சொத்து. இந்த சொத்தை நாம் வருங்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்ல வேண்டும். அதனை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். 2 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பின்னர் தமிழ்நாடு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும். இந்த திட்டம் மக்களின் வாழ்வாதார பிரச்சனை. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் வாழ்வாதாரம் பெருகும்.

நிலத்தடி நீரும் சிமெண்ட் ஆலைகளால் நிலத்தடி நீர் 500 அடிக்கு சென்றுவிட்டது. சோழர் நீர்ப்பாசன திட்டம் நிறைவேறினால் 50 அடிக்கு நீர் வரும். இளைஞர்கள் பலரும் இம்மாவட்டத்தில் கொதிப்புடன் உள்ளார்கள். அவர்களின் வாழ்வாதாரம், விவசாயம் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளது. ஆக்கபூர்வமான வளர்ச்சி அரசியல் செய்வதே எங்களின் நோக்கம். அந்த அடிப்படையில் இத்திட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த ஏரி நிரம்பினால் சென்னை மக்கள் குடிநீருக்கும் உதவும். ஏனெனில் இந்த ஏரி நிரம்பினால் வளவன் ஏரி வழியே, பாண்டியன் ஏரிக்கு சென்று வீராணம் செல்லும். இதனை தமிழக முதல்வர் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இராஜேந்திர சோழனால் ஏரி வெட்டப்பட்ட பின்னர் முதன் முதலாக தூர்வாரியது எங்களின் இனமான காவலர் மருத்துவர் அய்யாதான். இன்று நாங்கள் வந்துள்ளோம். கொள்ளிடத்திலும் தடுப்பணை வேண்டும். தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்" என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசினார்.

ராஜேந்திர சோழன் காலத்தில் கங்கையில் இருந்து நீர் கொண்டு வந்து வெட்டப்பட்ட ஏரி, சோழர் காலத்தில் பாசனத்திற்கு பயன்பட்டது. அதே போல மருத்துவர் அன்புமணியால் கங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட நீரின் மூலம், ஏரியை சீரமைத்து பாசன திட்டம் மீட்கப்பட்டு, மீண்டும் சோழநாடு வளமான நாடாக மாறிட வேண்டும் என்பதும் எல்லோருடைய விருப்பமும் தானே!

இந்நிகழ்ச்சியில் பாமக வழக்கறிஞரும் சமூக நீதிப் பேரவையின் தலைவர் கே. பாலு, ஜெயங்கொண்டம் நகரம் மன்ற தலைவர் மாவட்ட செயலாளர் தனி வீடு ரவி, முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் திருமாவளவன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages