அக்னிப்புரட்சி இன்றைய (03.10.22) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (03.10.22) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (03.10.22) முக்கிய செய்திகள்.

🔴 கடலூர், மயிலாடுதுறையில் விடுமுறை

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

🔴 விழுப்புரம் - பள்ளிகளுக்கு விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று(03.11.2022) விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன் அறிவிப்பு.

🔴 தஞ்சாவூர் - இன்று உள்ளூர் விடுமுறை

ராஜராஜ சோழன் 1037 ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை.

* தமிழ்நாடு  ஆளுநர் ஆர். என் ரவி இன்று அவசரமாக டெல்லி செல்கிறார்

ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ள நிலையில் பயணம்

ஆளுநரை திரும்ப பெற கோரி திமுக சார்பாக குடியரசுத் தலைவரிடம் முறையிடப்பட உள்ளது

* சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ₹75 லட்சம் ரொக்கம் பறிமுதல்.

ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், பணத்தை எடுத்து வந்தது மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் என்பதும், சென்னை பூக்கடை மின்ட் தெருவில் உள்ள நகைக்கடையில் பணத்தை கொடுக்க வந்ததும் தெரிய வந்தது.

உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை வருமானவரித்துறையிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு.

* சதுரகிரி மலைக்கு செல்ல 5 நாட்கள் தடை

மேற்கு தொடர்ச்சி மலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை அமைந்துள்ளது.  அந்த மலைக்கு பௌர்ணமி அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் செல்வது வழக்கம்.

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை பெய்து வருவதாலும் தாணிப்பாறை, மாங்கனி ஓடை, வழுக்கு பாறை, மற்றும் சங்கிலி பாறை, ஆகிய ஆற்றுப்பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிப்பதாலும் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற 05.11.2022 முதல்  09.11.2022 வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. - மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை.

* இஸ்ரேலில் மீண்டும் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பிரதமராக உள்ளார்.

120 தொகுதிகளுக்கான தேர்தலில், பெஞ்சமினின் லிகுட் கட்சி 65 இடங்களில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது.

தீவிர வலதுசாரி கட்சியின் கூட்டணியோடு பெஞ்சமின் 4ஆவது முறையாக பிரதமர் பதவியேற்க உள்ளார். முதன்முதலாக 1996ல் பிரதமரான பெஞ்சமின்தான், இஸ்ரேலின் நீண்ட கால பிரதமராவார்.

* ரெயில்வே சுரங்கப்பாதை மழைநீரால் மூழ்கியது

சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதிக்கு செல்லும் மாணிக்கம் நகர் ரெயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழை நீரில் மூழ்கி உள்ளது.

இதனால் கலைநகர், ஜோதி நகர், அண்ணாமலநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து முடங்கி உள்ளது.

பொதுமக்கள் சுரங்கப்பாதை மீது ஏறி ரெயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.

* வீடுகளில் பச்சை கிளிகள் வளர்த்தால் 6 மாதம் சிறை

அழிவின் விளிம்பில் உள்ள பறவையினங்களின் பட்டியலில், 4ஆவது வகையில் உள்ள பச்சை கிளிகளை வீடுகளில் வளர்ப்பதும், விற்பதும் சட்டப்படி குற்றமாகும்.

சமீபமாக கிளிகளை ஆன்லைனில் விற்பதும் வாங்குவதும் அதிகமாக வருகிறது.

இதுகுறித்து எச்சரித்துள்ள வனத்துறை, கிளிகள் வளர்ப்பு சட்டப்படி தவறு என்றும், கிளி வளர்ப்பவர்கள் பிடிபட்டால், 6 மாதம்வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.

* முகமது ஆரிஃப் தூக்கு தண்டனை உறுதி.

டெல்லி செங்கோட்டை மீது 2000ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய முகமது ஆரிஃப் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

செங்கோட்டை மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2005ல் கீழமை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை 2007ல் டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், முகமது ஆரிப் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அதனையடுத்து, மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆரிஃபின் தூக்கு தண்டனையை உறுதிசெய்தது.

* மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் இல.கணேசனின் சகோதரரின் 80ஆவது பிறந்த நாள் விழா
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்பு.

ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவுக்கு வருகை தந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி செண்டை மேளம் வாசித்து உற்சாகம்……

* கோவையில் கார் வெடிப்பு பிறகு: கோயிலுக்கு சென்ற ஜமாத் நிர்வாகிகள்.

கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலிருக்கும் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு கோட்டைமேடு பகுதியில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத் உலமாக்கள் சென்றனர்.

மதநல்லிணக்க அடிப்படையில் கலந்துரையாட சென்ற அவர்களை கோயில் பூசாரிகள் வரவேற்றனர்.

* குஜராத் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டமாக வாக்குப்பதிவு:

வாக்குப்பதிவு - டிசம்பர் 1 & டிசம்பர் 5

வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 8 - தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவிப்பு.

முதல் கட்ட வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - நவம்பர் 14

முதல் கட்டம் வேட்புமனு பரிசீலனை  - நவம்பர் 15

முதல் கட்ட வேட்புமனு திரும்பப்பெற கடைசிநாள் - நவம்பர் 17.

2ம் கட்டம் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - நவம்பர் 17

2ம் கட்ட வேட்புமனு பரிசீலனை  - நவம்பர் 18

2ம் கட்ட வேட்புமனு திரும்பப்பெற கடைசிநாள் - நவம்பர் 21

* அரசு கலை கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
-தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.

கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக உயர்கல்வித்துறை சார்பில் தனி வாரியம் அமைக்க வேண்டும் என்ற பொதுநல மனுவை தொடர்ந்து  தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.

* பரவுகிறது ‘மெட்ராஸ் ஐ’
பருவமழை காலங்களில் பரவும் ‘மெட்ராஸ் ஐ’ என்னும் கண் வலி நோய் தற்போது பரவி வருகிறது.

இது அடினோ என்ற வைரஸ் மூலம் பரவுகிறது.

கண்கள் சிவப்பாக மாறுதல், கண் எரிச்சல், நீர் வடிதல், லேசான வீக்கம், அரிப்பு உள்ளிட்டவை இதன் அறிகுறிகள்.

உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுதல் அவசியம். கண்களை அடிக்கடி கழுவி சுத்தம் செய்வதன் மூலம் இதனை தவிர்க்கலாம்.

* ரொம்ப நன்றி... இப்ப காசை எடுங்க’

அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் பிரமுகரும், சமூக செயற்பாட்டாளருமான Alexandria Ocasio-Cortez ‘பேச்சு சுதந்திரம் என்பதை மாதம் 8 டாலர்கள் என்ற எண்ணத்தை மக்களுக்கு ஏற்படுத்துவதில் ஒரு பில்லியனர் தீவிரமாக இருக்கிறார்’ என்று ட்வீட் செய்திருந்தார்.

அதற்கு பதலளித்துள்ள எலான் மஸ்க் ‘உங்கள் கருத்துக்கு நன்றி. இப்போது 8 டாலர்களை செலுத்துங்கள்’ என்று நக்கலாக பதிலளித்துள்ளார்.

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.20 என உயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்பட்டது.

பண்டிகை நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடை கட்டணம் குறைக்கப்பட்டது.

* தமிழகம் முழுவதும்... 17 வயதினருக்கு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நவம்பரில் 12, 13, 26, 27 தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற உள்ளது.

இதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  17 வயதுடைய அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யலாம்.

அவர்கள் 18 வயதை அடைந்தபின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

* ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால், எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில், ஆசிரியர்களுக்கு எதிராக குற்றம் சாட்டக் கூடாது - உயர்நீதிமன்றம்.

பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து, வீட்டிலும், சமூகத்திலும் அவர்களை பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை - நீதிபதி.

நீலகிரி, கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் யுவராஜ் தற்கொலை தொடர்பாக தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கையும்,₹10 லட்சம் இழப்பீடும் கோரி கலா என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.

விழுப்புரம் தாட்கோ அலுவலகத்தில் கடன் வழங்க ₹10,000 லஞ்சம் வாங்கிய ரெக்கார்ட் கிளார்க் சுரேஷ்குமார் கைது; லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை.

* பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்ட பேரணியில் துப்பாக்கிச்சூடு.
இம்ரான் கானுக்கு வலது காலில் காயம் என தகவல்.

* எதிர்க்கட்சிகள் சுட்டிகாட்டியதற்கு இணங்க, சென்னையில் தேங்கிய மழை நீரை துரித நடவடிக்கை மேற்கொண்டு அகற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
- விஜயகாந்த்,தேமுதிக தலைவர்.

* 🏏 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 12 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

சிட்னியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. மழையால் போட்டி தாமதமானதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 14 ஓவர்களில் 142 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. தென்னாப்பிரிக்கா அணி 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

* 🏏 கான்பெரா: ஆஸ்திரேலிய அணியின் டி20 கேப்டன் காயம் காரணமாக விலகினார்.

நாளை நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து, ஆஸ்திரேலிய அணியின் டி20 கேப்டன் ஆரோன் பின்ச் தசைப்பிடிப்பு காரணமாக விலகியுள்ளார்.

* டிசம்பர் 16ம் தேதி புதிய தமிழகம் கட்சியின் மாநாடு ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடக்கும் என அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இந்து சமுதாயம் சாதி அடையாளமாக காட்டப்படும் நிலையில், ஒற்றுமையை உருவாக்க, அனைத்து சமுதாய மக்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர் எனவும் கூறினார்.

* புதுச்சேரி 2 நாட்கள் விடுமுறை:

கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (04.11.22-05.11.22) விடுமுறை.

* இதுவே கடைசி - இனிமேல் உங்கள் கடிதங்களுக்கு நாங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை அறநிலையத்துறையின் கடிதத்திற்கு, சிதம்பரம் தீட்சிதர்கள் பதில் கடிதம்.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை அரசு கையகப்படுத்தும் முயற்சி - தீட்சிதர்கள் குற்றச்சாட்டு

🔴 சென்னை - பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (வெள்ளி) விடுமுறை.

* சென்னையில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

* நவ.,5 ம் தேதி முதல் பால் கொள்முதல் விலை  ரூ.3 உயர்வு- ஆவின் நிர்வாகம்.
பசும் பால் ரூ.32ல் இருந்து ரூ.35க்கும், எருமைப்பால் ரூ.41ல் இருந்து ரூ.44க்கும் கொள்முதல் செய்யப்படும்.

* மாநகராட்சி பணியாளர்கள் இரவு நேரம் முழுவதும் பணியில் இருக்க வேண்டும்

மழைநீர் வடிகால்கள் இல்லாத பகுதிகள், தாழ்வான பகுதிகள், சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கினால் உடனடியாக மோட்டார்கள் கொண்டு வெளியேற்ற வேண்டும் - சென்னை மாநகராட்சி

சென்னையில் சுமார் 500 மோட்டார்கள் தயாராக உள்ளது, தேவைப்பட்டால் கூடுதல் மோட்டார்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் - சென்னை மாநகராட்சி

TELEGRAM: t.me/Agnipuratchi1

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages