அக்னிப்புரட்சி இன்றைய (09.11.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (09.11.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (09.11.2022) முக்கிய செய்திகள்.

* தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மனு.

திமுக கூட்டணி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைப்பு.

* நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு - தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தகவல்.

நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கத்தில் 3 பேர் பலி; ரிக்டர் அளவில் 6.3 ஆக  பதிவான நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டிடங்கள்

இந்தியாவில் மணிப்பூர், டெல்லி, உத்தரப்பிரதேசத்திலும் சில நிமிடங்கள் வலுவான நிலநடுக்க அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தகவல்

* அக்னி வீரர்கள் ஆட்சேர்ப்பு திருச்சியில் (13.11.2022) அன்று நுழைவுத் தேர்வு

இந்திய ராணுவத்தில் அக்னி வீரர்கள் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை உட்பட 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் என 16 மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களை அக்னி வீரர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு வருகின்ற (13.11.2022) அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், திண்டுக்கல் சாலையில் உள்ள தேசியக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் கிளார்க் மற்றும் ஸ்டோர்கீப்பர் டெக்னிக்கல், அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டிரேட்ஸ்மென் போன்ற பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.

விருப்பமும், தகுதியும் உடைய இளைஞர்கள் அன்று காலை 4.00 மணிக்கு முன்னதாக தகவல் தெரிவித்திடுமாறும், நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறும் திருச்சிராப்பள்ளி ராணுவ ஆட்சேர்ப்பு மைய அலுவலர் தெரிவித்துள்ளார்.

* உச்ச நீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பேறுக்கொண்டார் டி.ஒய்.சந்திரசூட்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

7 ஆண்டுகள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.வி.சந்திரசூட் இவரது தந்தையாவார்.

* தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர்;

இரட்டைப் பதிவான சுமார் 15 லட்சம் பெயர்கள்,வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்- சத்யபிரதா சாகு,தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி.

2.44 லட்சம் இறந்தவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்- சத்யபிரதா சாகு,தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி.

நவ.12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

வாக்காளர் பெயர் நீக்கம், விவரங்கள் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை செய்துகொள்ள சிறப்பு முகாம்கள்.

டிசம்பர் 8ம் தேதி வரை வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - சத்யபிரதா சாகு

🔴 சிதம்பரம் நடராஜர் கோயில் மன்னர்கள் கட்டி எழுப்பியது, தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிலம் அரசுக்கு சொந்தமானது - அமைச்சர் சேகர்பாபு.

அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. இந்து சமய அறநிலைத்துறை அதிகார துஷ்பிரயோகம், அத்துமீறல் செய்யவில்லை.

சிதம்பரம் நடராஜர் கோவிலின் தீட்சிதர்கள் நீதிமன்ற அவமதிப்பு
தொடர்வதற்கு யாரும் இங்கு தடையாக இல்லை.

இந்து சமய அறநிலைத் துறையின் செயல்பாட்டில் தவறு இருந்தால் தாராளமாக நீதிமன்றம் செல்லலாம்.

தீட்சிதர்களால் உருவாக்கப்பட்ட கோவில் அல்ல; மன்னர்களால் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோவில் அது.

வருமானங்கள் தொடர்பாக முறையாக கணக்கு கேட்கும் போது வழங்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை.

நிர்வாகத்தில் உள்ள குளறுபடிகளை கேள்விகளாக கேட்கும் போது பதில் சொல்ல வேண்டியது அவர்களின் கடமை.

கோவிலுக்குள் மானா வாரியாக தீட்சிதர்கள் கட்டிடங்களை எழுப்பி உள்ளார்கள்.

மன்னர்களால் கோவிலில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள நகைகள், சொத்துக்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களின் நிலையை ஆய்வு செய்வது இந்து சமய அறநிலை துறையின் கடமை.

தீட்சிதர்கள் இதற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் எந்த வித அதிகார துஷ்பிரயோகமும், அத்துமீறலும் செய்யவில்லை.

ஞாயத்தின் படி நடக்கத்தான் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ள இடம் முழுக்க அரசினுடைய நிலம்.

இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் குழு அமைக்கப்பட்டு இது தொடர்பாக முழுமையாக ஆய்ந்து அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

இப்போது நகைகள் சரி பார்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விசாரணை தொடர்வதால் முழு தகவலையும் அளிப்பது ஏற்புடையதாக இருக்காது.

ஆனால் திருக்கோவிலின் இடம் அரசுக்கு சொந்தமான இடம் - இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* 10% இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய திமுக முடிவு

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக திமுக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

இது குறித்து திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: "பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியல் சட்டத்திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு "சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு" என்று கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்றைய நாள் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த இடஒதுக்கீடு வழக்கினை விசாரித்த அமர்வில் இருந்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் "செல்லும் என்று அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல்" நீதிபதி ரவீந்திர பட் அவர்களின் அதிருப்தி தீர்ப்போடு ஒத்திசைவதாகத் தெரிவித்துள்ள நிலையில், வழக்கமான நடைமுறைப்படி ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.

திமுகவைப் பொறுத்தவரை இந்த வழக்கில் ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்தது. ஆனாலும் "கேசவானந்த பாரதி", "இந்திரா சாஹ்னி" (மண்டல் ஆணையத் தீர்ப்பு) உள்ளிட்ட, இந்த அமர்வை விட அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்புகளுக்கு எல்லாம் முரணாக இந்த வழக்கில் தீர்ப்பு வெளிவந்துள்ளது. அரசியல் சட்டத்தின் அடையாளத்தை, அடிப்படை அம்சத்தை அழிக்கும் விதத்தில் ஓர் அரசியல் சட்டத்திருத்தம் அமையக்கூடாது என்பதுதான் இதுவரை பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள பொன் வரிகள். அரசியல்சட்டம் வகுத்துத் தந்துள்ள சமத்துவத்திற்கு எதிராக எந்தச் சட்டத் திருத்தங்களும் அமைந்து விடக்கூடாது என்பதுதான் காலம் காலமாக கவனமாக நிலைநாட்டப்பட்டு வரும் தீர்ப்புகள்.

ஆனால் இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அரசியல்சட்டத்தின் அடிப்படையான சமத்துவக் கோட்பாட்டின் இதயத்தில் அடிப்பது போல் அமைந்திருக்கிறது. அதனால்தான் "இந்தத் தீர்ப்பிலிருந்து மாறுபட்டு, முன்னேறிய பிரிவினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் அடிக்கட்டமைப்பை மீறுகிறது" என்று 2 நீதிபதிகள் கொண்ட மைனாரிட்டித் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திரபட் , தனது தீர்ப்பின் துவக்கத்திலேயே "நம் நாடு குடியரசாகி 70 ஆண்டுகளில் முதல் முறையாக பாரபட்சமுள்ள, விலக்கி வைக்கும் தன்மையுள்ள கொள்கைகளுக்கு இந்த நீதிமன்றம் அனுமதியளிப்பதால், மெஜாரிட்டி (மூன்று நீதிபதிகள்) தீர்ப்புடன் நான் இணைந்து செல்ல மறுப்பதற்கு வருந்துகிறேன்" என்று குறிப்பிட்டுவிட்டே தனது தீர்ப்பை எழுதியுள்ளார்.

இறுதியில் "இந்த அரசியல் சட்டத்திருத்தம் சமூக நீதியை வலுவிழக்கச் செய்து, அதன் மூலம் அரசியல் சட்டத்தின் அடிக்கட்டமைப்பைத் தகர்க்கும் விதத்தில் உள்ளது" என்பதைத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

ஆகவே, நாட்டில் உள்ள 82 விழுக்காடு பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட இன மக்களின் சமூகநீதியைக் காப்பாற்றிட, அரசியல்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட, மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்டிட, சமூக நீதிக்காகத் தொன்று தொட்டுப் போராடி வரும் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு (review petition) தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
TELEGRAM: t.me/Agnipuratchi1

* 10% இடஒதுக்கீடு விவகாரம் 12ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 12ம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள்  கூட்டம் நடைபெறுகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் கூடுதல் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் கடந்த 2019ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழகத்தில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலரும் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியிருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு அளித்தனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் உள்ளிட்ட 2 நீதிபதிகள் 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்ப்பு அளித்தனர்.

இந்த தீர்ப்புக்கு பாஜ வரவேற்பு தெரிவித்துள்ளது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திராவிட கட்சி தலைவர் வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்கள் கருத்து தெரிவிக்கும்போது, ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதி பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா, பின்தங்கிய சமூகங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மீது சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்’ என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்த பொருள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள்  குறித்து ஆலோசனைகளை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு  விடுத்துள்ளார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கான வழிவகை செய்யும் அரசியல் சட்டத் திருத்தம், கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டது.  இந்த இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் (7ம் தேதி) தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த இடஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமைவதோடு, சமூக நீதிக் கொள்கைக்கும் மாறானது என்பதால், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்களுடன் விவாதித்து முடிவு எடுப்பதற்கு ஏதுவாக, வருகின்ற 12ம் தேதி காலை 10.30 மணியளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.  

இப்பொருள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
TELEGRAM: t.me/Agnipuratchi1

* குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது: மாறுவேடத்தில் கண்காணித்து பிடித்த போலீஸார்

சேலத்தில் குழந்தையை விற்பனை செய்ய வந்த மூவரை, மாறுவேடத்தில் மறைந்திருந்து கண்காணித்து, போலீஸார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை விற்பனை செய்ய மூன்று லட்சம் ரூபாய் பேரம் பேசி, இளம் பெண்ணின் உறவினரான வளர்மதி மூலம் நேற்று குழந்தையை சேலத்துக்கு கொண்டு வந்தனர்.

பெண் குழந்தையை வாங்குவதற்காக, ஈரோட்டை சேர்ந்த இடைத்தரகர் லதா மற்றும் அவரது கணவர் மதியழகன் சேலம் வந்திருந்தனர். சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் குழந்தையை விலை கொடுத்து வாங்க வேண்டி லதா, மதியழகன் தம்பதியர் காத்திருந்தனர்.

சேலத்தில் குழந்தையை ரூ.3 லட்சம் பேரம் பேசி விற்பனை செய்யவுள்ளதாக, போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் மாறுவேடத்தில் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, குழந்தையை எடுத்து வந்த வளர்மதியிடம் இருந்து இடைத்தரகர்களான லதா மற்றும் அவரது கணவர் மதியழகன் இருவரும் குழந்தையை பெற முயற்சி செய்தனர்.

மாறுவேடத்தில் மறைந்திருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீஸார், மூவரையும் சுற்றி வளைத்து பிடித்து, பச்சிளம் குழந்தையை மீட்டு, அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

இதுசம்பந்தமாக சேலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் லதா, மதியழகன், வளர்மதி மூவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை விற்பனை சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார், யார் எத்தனை காலமாக குழந்தை விற்பனை நடந்து வருகிறது, இதற்கு முன்பாக வேறு குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் நடந்துள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் மூவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* சிஎம்சி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரை நிர்வாண ராக்கிங்; 7 மாணவர்கள் சஸ்பெண்ட்; வைரல் வீடியோ!!

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்ட ஏழு சீனியர் மாணவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை டவுசருடன் விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்த சம்பவம் தற்போது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் இவர்களது மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கல்லூரியின் முதல்வர் டாக்டர் சலாமன் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். கல்லூரியில் நிறுவப்பட்டு இருக்கும் கமிட்டிக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒரு கடிதம் கிடைத்தது என்றும் அதில் யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடித்ததில், ''மாணவர்கள் தங்கும் விடுதியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆடைகளை களைந்து விடுதி வளாகத்தை நடந்து சுற்றி வர வைத்தனர்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை சமூக வலைதளங்களிலும் போஸ்ட் செய்துள்ளனர்.

இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற ராக்கிங் செயல்களை ஒருபோதும் நிர்வாகம் சகித்துக் கொள்ளாது என்று  முதல்வர் சாலமன் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

எவ்வாறு தாங்கள் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை அந்த மாணவர்களே தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவில், மாணவர்கள் அரை டவுசரில் கல்லூரி தங்கும் விடுதியை சுற்றி வருகின்றனர். அவர்கள் மீது தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இந்த வீடியோ தற்போது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் விடுதியில் கடந்த 9ஆம் தேதி நடந்ததாகவும், இதற்கு காரணமானவர்கள் மீதும்,  விடுதி வார்டன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

TELEGRAM: t.me/Agnipuratchi1

டெல்லியில் இருக்கும் ராக்கிங் தடுப்புப் பிரிவுக்கு புகார் வந்து இருப்பதாக தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பலகலைக் கழகம் தெரிவித்துள்ளது. சிஎம்சியுடன் தொடர்பு கொண்டதில், கல்லூரியின் விரிவான அறிகைக்கைக்கு காத்திருப்பதாக சிஎம்சி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர் கார்த்திக்கும் தவறுக்கு உள்ளான மாணவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் உள்பட நிர்வாகங்களை கேட்டுக் கொண்டுள்ளார். தனது டுவிட்டரிலும் பதிவிட்டுள்ளார்.

* சுகாதாரத்துறையில் உள்ள அலுவலர்களுக்கான 12 காலி பணியிடங்களை நிரப்ப கணினி வழித் தேர்வு 13.02.2023 அன்று நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

எம்.பி.பி.எஸ்-உடன் பொது சுகாதாரத்தில் டிப்ளமோ முடித்தவர்கள் https://apply.tnpscexams.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

* திருச்செந்தூர் முருகன் கோவிலிக்குள் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு.

தடை உத்தரவை மீறி செல்போன் பயன்படுத்தினால் பறிமுதல் செய்து மீண்டும் ஒப்படைக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு.

கோவிலுக்கு வரும்போது அநாகரிகமான உடைகள் அணிந்து சுற்றுலா தளங்கள் போல் மக்கள் வருவது வேதனை அளிக்கிறது - நீதிபதிகள்

* ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்கும் சட்ட மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல்.

மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் அவசர சட்டத்திற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல்.

* தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியது - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் - வானிலை மையம்.

நவம்பர் 12ம் தேதிக்குள் வடமேற்கு தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரக்கூடும் - வானிலை மையம்.

* புயலுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. 11,12-ம் தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.

11, 12ஆம் தேதிகளில் ஒருசில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகம்,புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் 9,10-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய கூடும்-பாலச்சந்திரன்,வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர்.

* பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கை நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.

மத்திய அரசு அறிக்கை சமர்பிக்காததால் வழக்கை ஒத்திவைக்க மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி வேண்டுகோள்.

* காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி பற்றிய செய்திகளே இல்லை- தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி பற்றிய செய்திகளே இல்லை; வெறும் சண்டைகள் மட்டுமே உள்ளன.

காங்கிரஸ் கட்சியால் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரு நிலையான ஆட்சியை கொடுக்க இயலாது, இமாச்சல பிரதேசத்தில் நிலையான மற்றும் வலுவான அரசு தேவை என- பரப்புரையில் பிரதமர் மோடி.

மத்தியிலும்,மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே விரிவான முன்னேற்றம் அடைய முடியும்.

விவசாயிகள்,கூலி தொழிலாளர்கள், சிறு கடைக்காரர்கள் ஆகியோருக்கு முறையாக ரூ. 3,000 ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்தோம்.

நமது நாட்டில் பெண்கள்,காங்கிரஸ் அரசாங்கத்தால் மிகவும் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பதை 2014-ம் ஆண்டுக்கு முந்தைய நாட்களில் பார்த்தீர்கள்-பிரதமர் நரேந்திர மோடி.

* குறுகிய கால பணியிடங்களை தனியார் ஏஜென்சி மூலம் நிரப்புவது குறித்த அரசாணை எண் 115 நிறுத்தம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அரசு பணியாளர் சங்கங்களின் கருத்துக்களை கேட்ட பின்பே குறுகிய கால பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அரசாணை குறித்தது முடிவெடுக்கப்படும் - முதல்வர்.

* ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஜாபர்சேட் மனைவியின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரின் சொத்துக்களும் முடக்கம்.

வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை.

மொத்தமாக ரூ.14.23 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை.

* சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% சதவீதம் குறைப்பு.

சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு நடவடிக்கை.

* இறுதிப் போட்டியில் நுழைந்தது பாகிஸ்தான்.

டி20 உலக கோப்பை முதல் அரையிறுதிப் போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது பாகிஸ்தான்.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 152 ரன்கள் எடுத்த நிலையில் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது.

நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியாவும் - இங்கிலாந்தும் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும்.

* அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்க பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும்.
தமிழக அரசுக்கு -  சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.

காலாவதியான மருந்துகளை தடுக்க பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன-தமிழக அரசு.

மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை பின்பற்றலாம் - உயர் நீதிமன்றம்.

* தனது செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தேகம்

தெலங்கானவில் ஜனநாயகமற்ற சூழல் நிலவுவதாக புகார். தேவையின்றி ஆளுநர் மாளிகையை குற்றம்சாட்டி பேசுகின்றனர்

முன்னாள் உதவியாளர் துஷார் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததில் இருந்து எனது போன் ஒட்டு கேட்கப்படுவதாக சந்தேகம். - ஆளுநர் தமிழிசை

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages