அக்னிப்புரட்சி இன்றைய (10.11.2022) முக்கிய செய்திகள்.
* கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மீண்டும் சோதனை.
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சோதனை; சென்னையில் 5 இடங்களில் சோதனை.
* வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களை மீட்பதற்காக, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சகம் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.
+91-9600023646 / +91-8760248625
044-28515288
* சென்னையின் பட்டினம்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், மயிலாப்பூர், ராயப்பேட்டை, அடையார் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது
* அந்தமான் நிக்கோபார் தீவின் போர்ட்பிளேர் பகுதியில் அதிகாலை 2.29 மணிக்கு நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு.
* திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலையில் நாளை நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாலில் இசைஞானி இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார் பிரதமர் மோடி.
மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது.
* சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு?-தமிழக காவல்துறை நடத்திய சோதனையில் அடையாளம் காணப்பட்டதாக தகவல்.
சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பில் இருந்தவர்கள், தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் பண பரிவர்த்தனை மேற்கொண்டதாக 5 பேர் மீது புகார் எழுந்தது.
மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பட்டியலின் படி சென்னை நகர் முழுவதும் காவல்துறையினர் தனியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் என்ஐஏ சோதனை நடந்து வரும் நிலையில் தமிழக காவல்துறையினரும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக சென்னையில் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் பட்டியலை தமிழக காவல்துறை தயார் செய்கிறது.
* மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது...
* சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 16ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது
ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது
சபரிமலையில் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்
சபரிமலையில் டிரோன் காமிராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்
* மாலத்தீவில் நிகழ்ந்த தீ விபத்தில் 9 இந்தியர்கள் உள்பட 10 பேர் பலி
மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மாலத்தீவில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது
* கோவை வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு.
3 நாள் பயணமாக கொங்கு மண்டலம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின்.
கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
நாளை பிரதமர் மோடி பங்கேற்கும், காந்திகிராம பல்கலை. நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்கிறார்.
* ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு - நவம்பர் 16ம் தேதிக்கு தள்ளி வைத்தது பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு.
ஆன்லைன் விளையாட்டுகளின் தீமைகள் குறித்த எச்சரிக்கை வழங்கப்பட்டும் தடை ஏன்? - மனு.
ரம்மி, போக்கர் போன்றவை திறமைக்கான விளையாட்டுகள் என சட்ட ஆணையமே தெரிவித்துள்ளது - மனு.
* தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வினாடி வினா போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 68 மாணவர்கள் துபாயில் நடைபெறும் பன்னாட்டு புத்தக விழாவில் பங்கேற்க பயணம்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேசும் துபாய் செல்கிறார்.
* ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யும் சட்டம்: ஆளுநரிடமிருந்து அனுமதி வரவில்லை.
ஏற்கனவே ஒப்புதல் கொடுத்த அதே சட்டத்தையே (அவசர சட்டம்) கொடுத்துள்ளோம். ஏற்கனவே அனுமதி கொடுத்துள்ளார். எனவே விளக்கம் கேட்பதற்கு தேவை இருக்காது.
ஆளுநரிடம் ஒப்புதலுக்காக உள்ள 20 சட்ட மசோதாக்களில் சிலவற்றுக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது, அதற்கெல்லாம் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
கட்டாயப்படுத்தி கையெழுத்து போடுங்கனு கேட்க முடியாது.
- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
* இந்தியா பாணியில்...
லண்டன் 10, டவுனிங் தெருவில் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் நேட்டோ NATO Secretary General Jensstoltenberg உடனான சந்திப்பின் போது, இந்தியா பாணியில் சோபாவில் காலை மடக்கி அமர்ந்து பேசுவது வித்தியாசமாக உள்ளது.
இப்படி எந்தப் பிரதமரும் ராஜாங்கரீதியான பேச்சுவார்த்தையின்போது எந்த பிரதமரும் அமர்ந்ததில்லை. அது நமது பாணி மேனரிசமாக இருக்கிறது.
* வியட்நாமில் உள்ள ஈழத்தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது: பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வேண்டுகோள்
சென்னை : வியட்நாமில் உள்ள ஈழத்தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா தெரிவித்துள்ளார். தஞ்சம் அடைந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வது ஐ.நா.வின் கடமை என்று அவர் கூறினார்.
* மதுரை திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழப்பு, 10-க்கும் மேற்பட்டோர் காயம் எனத் தகவல்.
* இன்று டி20 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் 39 பந்துகளில் விராட் கோலி அரை சதம் அடித்து அபாரம்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 4,000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் விராட் கோலி.
டி20 உலகக் கோப்பையில் 100 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி.
ஒருநாள், டி20, டெஸ்ட் என 3 விதமான ஃபார்மேட்களில் விராட் கோலி தனது 200வது அரைசதத்தை பதிவு செய்து புதிய சாதனை.
* இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து.
உலகக்கோப்பை டி20 இரண்டாவது அரையறுதி போட்டி: அபார வெற்றி பெற்று இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 168 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 16 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
13 ஆம் நிறைவு தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது இங்கிலாந்து அணி.
* மதுரை, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் - முதல்வர்.
காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் உத்தரவு.
* 306 இலங்கை அகதிகள் கப்பல் சிக்கல்
கனடாவை நோக்கி செல்ல முயற்சித்த 306 இலங்கை அகதிகள் நேற்றைய தினம் சிங்கப்பூரின் கடற்படையின் உதவியுடன், ஜப்பான் கப்பலொன்றினால் மீட்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட அகதிகள் நேற்றிரவு வியட்நாம் துறைமுகத்தை நோக்கி அழைத்து செல்லப்பட்டதாகவும், அங்குள்ள முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கப்பலில் பயணித்த அகதி ஒருவரின் உறவினர், பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.
இந்த கப்பலில் சென்றவர்கள் தமது பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் விற்பனை செய்து, மீண்டும் இலங்கைக்கு வர விரும்பாத நிலையிலேயே கனடா நோக்கி செல்ல தயாராகியுள்ளனர்.
கனடா செல்லும் அகதி ஒருவரிடமிருந்து தலா 5000 அமெரிக்க டாலர் முகவரிடம் தரப்பட்டதாக கப்பலில் பயணித்த அகதியின் சகோதரன் பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார்.
குறித்த இலங்கையர்கள் உரிய வகையில் விஸாக்களை பெற்று, விமானத்தின் மூலம் ஒன்றரை மாதத்திற்கு முன்பாக மியன்மார் நோக்கி பயணித்துள்ளனர்.
முகவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 5000 அமெரிக்க டாலரின் ஊடாக, விமான பயணச் சீட்டுக்கள், விஸா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துக்கொடுக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார்.
இந்த நிலையில், மியன்மார் நோக்கி சென்ற இலங்கையர்கள், அங்கிருந்து கடந்த மாதம் 10ம் தேதி கனடா நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
சுமார் 28 நாட்கள் கடல் சீற்றம் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பயணித்த குறித்த கப்பலில், அண்மையில் துவாரமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, கப்பலுக்குள் நீர் பிரவேசித்துள்ள நிலையில், கப்பல் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு அனுப்பினால், நாங்கள் தற்கொலை செய்துக்கொள்வோம் என அங்குள்ள அகதிகள் கூறுகின்றார்கள்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* இங்கிலாந்துக்கு ஒரு சுத்தமான வெற்றி.
இந்தியா இப்போதுதான் கிரிக்கெட் ஆடவந்த ஒரு கத்துக்குட்டி அணிபோல ஆடியது. இந்திய அணியின் அத்தனை பலவீனங்களும் முழுமையாக எக்ஸ்போஸ் ஆன போட்டி இது. ஐ.பி.எல் பொம்மை கிரிக்கெட் ஆடி ஆடி ஒரு உலகக் கோப்பை ப்ரெஷரை எதிர்கொள்ள எந்த உத்தியும் சக்தியும் இல்லாமல் ஆகிவிட்டார்கள். ஆரம்பப்போட்டிகள் தட்டுத்தடுமாறிய பாகிஸ்தான் செமிஃபைனலில் பிரமாதமாக ஆடியது.
இந்தியாவோ முந்தையை போட்டிகளில் வெளிப்படுத்திய எனர்ஜி கூட இதில் காட்டவில்லை. சின்ன சின்ன அணிகள் எல்லாம் கடைசி வரை எப்படிப்போராடினார்கள்... இரண்டு மூன்று பேட்ஸ்மேன்கள் தவிர மற்றவர்கள் இருந்த இடம் தெரியவில்லை.
இங்கிலாந்து பத்து விக்கெட்டில் வெற்றி... இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* தமிழ்நாடு - கேரள மாநில எல்லையில் கேரள அரசு நவீன நில அளவை மேற்கொள்வது குறித்து வருவாய்த்துறை விளக்கம் அளித்துள்ளது.
இரு மாநில எல்லையில் கேரள அரசு டிஜிட்டல் முறையில் மறு நில அளவை பணிகளை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இரு மாநில பொது எல்லையில் இதுவரை எந்தவித டிஜிட்டல் நில அளவை பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. கேரள அரசால் டிஜிட்டல் நில அளவை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு - கேரள மாநில கூட்டு ஆலோசனைக்கு பிறகே எல்லை மறு அளவை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
* நாளை திண்டுக்கல்லுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க பன்னீர்செல்வத்துக்கும், பழனிசாமிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, பிரதமரை சந்திக்க தனித்தனியே நேரம் தரப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் வெவ்வேறு விமானங்களில் திண்டுக்கல்லுக்கு செல்ல உள்ளனர்.
🔴 6 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
மழை காரணமாக சென்னை, வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 11) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
* சென்னை, எழும்பூர் - கொல்லம் இடையே சபரிமலை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்
திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய தேதிகளில் மறுமார்க்கத்திலும் ரயில்கள் இயக்கம்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு ஏதுவாக ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு
* ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது அவசியம்
புதிய உத்தரவு.
ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, அதனை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆதார் அட்டை வைத்திருப்போர், அதனை பதிவு செய்த நாளிலிருந்து சரியாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, அடையாள சான்றிதழ்களை அளித்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
🔴 வடகிழக்கு பருவ கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை (நவம்பர் 11) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
🔴 வடகிழக்கு பருவ கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நாளை (நவம்பர் 11) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
🔴 திருவாரூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
* ஐபிஎல் ஏலம்
2023 ம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பர் 23 ம் தேதி நடைபெறுகிறது
🔴 வடகிழக்கு பருவ கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (நவம்பர் 11) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
* புதுடில்லி: பாலியல் புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியும், அந்தமான் நிகோபார் தலைமை செயலாளருமான ஜிதேந்திரா நாராயணன் கைது செய்யப்பட்டார்.
அந்தமான் நிகோபார் அரசின் தலைமை செயலராக இருந்தவர் ஜிதேந்திரா நாராயண், இவர் மீது கடந்த ஜூலை மாதம் 21 வயது இளம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தன்னை ஜிதேந்திரா நாராயண், தொழிலாளர் கமிஷனர் ஆகிய இருவரும் சேர்ந்த கூட்டு பலாத்காரம் செய்ததாக அந்த புகாரில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அதன் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து ஜிதேந்திரா நாராயண் கடந்த ஆகஸ்ட் மாதம் இடமாற்றம் செய்யப்பட்டு டில்லியில் பணிக்கு அழைக்கப்பட்டார். கடந்த அக்டேபரில் அவரை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இது குறித்து சிறப்பு விசாரணை குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது கூட்டு பலாத்காரம் செய்தல், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
* ஆந்திரப்பிரதேசம் : மேற்கு கோதாவரி மாவட்டம் கடியத்தாவில், பட்டாசு ஆலையில் பெரும் தீவிபத்து
தீவிபத்தில் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் 4 தொழிலாளிகள் பலி
* ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியாவின் கோவிந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்
* நெருக்கடியை கையாள யாருக்கும் கற்றுத் தரமுடியாது”- இந்திய அணி பந்துவீச்சாளர்கள் மீது ரோகித் சர்மா காட்டம்
No comments:
Post a Comment