அக்னிப்புரட்சி இன்றைய (11.11.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (11.11.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (11.11.2022) முக்கிய செய்திகள்.

* 25 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக...
1) சென்னை
2) செங்கல்பட்டு
3) காஞ்சிபுரம்
4) திருவள்ளூர்
5) மயிலாடுதுறை
6) திருவாரூர்,
7) நாகப்பட்டினம்
8) தஞ்சாவூர்
9) வேலூர்
10) ராணிப்பேட்டை
11) விழுப்புரம்
12) அரியலூர்
13) கடலூர்
14) பெரம்பலூர்
15) புதுக்கோட்டை
16) திருவண்ணாமலை
17) சேலம்
18) ராமநாதபுரம்
19) கள்ளக்குறிச்சி
20) திருச்சி
21) மதுரை
22) தேனி
23) திண்டுக்கல்
24) கரூர்
25) கிருஷ்ணகிரி

பள்ளிகளுக்கு மட்டும்...

1) சிவகங்கை
2) நாமக்கல்
3) திருப்பத்தூர் (8ஆம் வகுப்பு வரை)
4) தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (11-11-2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் இன்றும் நாளையும் (11-11-2022, 12-11-2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.

வட தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

* கடலூர்: சிதம்பரம்  அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைப்பு.

இன்று நடைபெற இருந்த தேர்வுகள் மாற்று தேதியில் நடத்தப்படும் - பதிவாளர். தொடர் கனமழையால் இன்று பல்கலைகழகத்திற்கு விடுமுறை.- பல்கலைக்கழக பதிவாளர் சீதாராமன் அறிவிப்பு!

* கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு.

நாளை, நாளை மறுநாள் நடைபெறவிருந்த தேர்வு வரும் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு.

* திருவள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை
நாரவாரிகுப்பம், கிராண்டலைன், சாமியார் மடம், தண்டல் கழனி, வடபெரும்பாக்கம், மணலி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்டும் உபரிநீர் செல்ல உள்ளதால் உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

* 10% இட ஒதுக்கீடு தொடர்பாக நாளை நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என அறிவிப்பு.

இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக கூறி அதிமுக புறக்கணிப்பு.

* தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்.

மைசூரு - சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பெங்களூருவில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

நாட்டின் அதிவேகமான வந்தே பாரத் ரயிலை 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும்.

வந்தே பாரத் ரயில், சதாப்தி ரயிலை விட 20 நிமிடங்களுக்கு முன்னதாக செல்லும்.

* தொடர்ந்து உயரும் தங்கம் விலை:

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.39,000க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ.55 உயர்ந்து ரூ.4,875க்கு விற்பனை.

* கரூரில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் தொடக்கம்

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பெய்யும் மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

* சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு எதிராக சவுக்கு சங்கர் மேல்முறையீடு.

சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.

அடுத்த விசாரணை வரை சவுக்கு சங்கர் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது - உச்ச நீதிமன்றம்.

* ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

பேரறிவாளனை கடந்த மே மாதம் விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம்

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்யக் கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்

* டெல்டா மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு ‛‛‛ரெட் அலர்ட்''

டெல்டா மற்றும் கடலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறாக வாய்ப்பு இல்லை- வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 16-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்.

* திண்டுக்கல் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு... வழிநெடுகிலும் நின்ற மக்களை பார்த்து கை அசைத்தவாறு சென்றார்...

திண்டுக்கல்லில் பிரதமர் உரை
மிகவும் முக்கியமான காலத்தில் நீங்கள் பட்டம் பெறுகிறீர்கள்.

காந்தியின் கனவுகளுக்கு சவால் நிறைந்த காலம் இது.

தென்னிந்திய மொழிகளை அனைவரும் கற்க வேண்டும், அதிலும் தமிழை கற்க வேண்டும் என சொன்னவர் காந்தி

காந்தியை நீண்ட காலமாக  மறந்துவிட்டார்கள். கடந்த 8 ஆண்டுகளில் காதி விற்பனை 300 சதவீதம் அதிகரித்துள்ளது.

கதர் என்பது சர்வதேச ஆடையாக மாறிவிட்டது. கிராமத்தின் ஆன்மா.. நகரத்தின் வளர்ச்சி (தமிழில் கூறினார் பிரதமர்)

கிராம உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சுயசார்பு பாரதம் திட்டத்தில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

சுதேசி இயக்கத்தின் மையப் புள்ளி தமிழ்நாடு. தேச நலன் விவகாரத்தில் தமிழகம் எப்போதும்  முதலிடத்தில் உள்ளது.

கிராமங்களில் இயற்கை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

இயற்கை விவசாயம் மீது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சூரிய மின்சக்தி உற்பத்தி மூலம் கிராமங்களும் தன்னிறைவு பெற முடியும். கிராம பெண்களின் வெற்றி, தேசத்தின் வெற்றி - பிரதமர் மோடி

கடந்த 8 ஆண்டுகளில் சூரிய ஒளிமின்சக்தி பயன்பாடு 24% அதிகரித்துள்ளது.

சங்க காலத்திலேயே தமிழர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவு குறித்து விழிப்புணர்வுடன் இருந்துள்ளனர்.

தேச ஒற்றுமையில், இயற்கை வேளாண்மையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

கிராமத்திற்கும் நகரத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லாத அளவிற்கு வளர்ச்சியை எட்டியுள்ளோம்.

இளைஞர்கள் கேள்வியை மட்டும் எழுப்புவதில்லை, பதிலையும் பெற்றுவிடுகிறார்கள்.

பட்டம் பெறும் மாணவிகள் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

நீண்ட காலமாக காதி புறக்கணிக்கப்பட்டது, தற்போது காதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒரு லட்சம் கோடி அளவுக்கு காந்தி கிராமப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
- பிரதமர் நரேந்திர மோடி

TELEGRAM: t.me/Agnipuratchi1

திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், இசைஞானி இளையராஜா மற்றும் மிருதங்க வித்வான் சிவராமன் அவர்களுக்கு  கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி

* கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருமாறு பிரதமரை வலியுறுத்துகிறேன்

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன.

உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.
பெண்களின் உயர்கல்வியை ஊக்கும்விக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் - முதல்வர்.

அனைத்து மாநிலங்களும் கவனிக்கும் வகையில் தமிழகத்தின் கல்வி திட்டங்கள் உள்ளன

காந்தி கூறிய கொள்கைகள் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் விழுமியங்களாக உள்ளன

பட்டமளிப்பு விழா மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை.

* கோவில்களில் அறங்காவலர்கள் நியமன விண்ணப்பங்களில் அரசியல் தொடர்பு குறித்து கேட்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கக் கோரிய வழக்குகள் 2 வாரங்கள் தள்ளிவைப்பு.

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள 560 கோவில்களுக்கு அரசே அறங்காவலர்களை நியமிக்கும்.

இதுவரை 8 கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் - அறநிலையத்துறை.

* ராஜீவ் வழக்கில் 6 பேர் விடுதலையை ஏற்க முடியாது என காங்கிரஸ் அறிக்கை

* சவுக்கு சங்கர் மீண்டும் கைது.

உயர் நீதிமன்றத்தை அவதூறாக பேசிய விவகாரத்தில், சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.

ஆனால், மேலும் 4 வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

2020 ஆண்டு பதிவான 3 வழக்குகள், 2021-ம் ஆண்டு பதிவான ஒரு வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸின் சைபர் கிரைம் பிரிவு கைது செய்திருக்கிறது.

* ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியாவின் #Parveen தங்கப்பதக்கம் வென்றார்.

* இரவு 9:30 மணி வரை கனமழை காரணமாக 25 மாவட்டத்தில் நாளை (12-11-2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

1) சென்னை,
2) திருவள்ளூர்,
3) காஞ்சி,
4) செங்கல்பட்டு,
5) விழுப்புரம்,
6) கடலூர்,
7) வேலூர்,
8) மயிலாடுதுறை,
9) நீலகிரி,
10) திருவாரூர்,
11) தஞ்சை,
12) கரூர்,
13) புதுக்கோட்டை,
14) சேலம்,
15) கள்ளக்குறிச்சி,
16) அரியலூர்,
17) பெரம்பலூர்,
18) திருச்சி,
19) தருமபுரி,
20) திருவண்ணாமலை,
21) கோவை,
22) திண்டுக்கல்,
23) தேனி,
24) திருப்பத்தூர்,
25) இராமநாதபுரம்
மற்றும் புதுவை, காரைக்கால்,

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages