பனை ஓலையில் கூழ்....
30 ஆண்டுகளுக்கு முந்தைய
மகிழ்ச்சியான மலரும் நினைவுகள்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா
எனது தாய் பிறந்த ஊரும், எனது மனைவி பிறந்த ஊருமாகிய நல்லாவூருக்கு 30 ஆண்டுகளுக்கு முன் நான் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.
அங்கு பணியாற்றும் மக்கள் பனை ஓலையில் கூழ் (தேவாமிர்தம்) குடித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்தவுடன் எனக்கும் பனை ஓலையில் கூழ் குடிக்கும் ஆசை தொற்றிக் கொண்டது.
அவர்களும் என்னை அன்புடன் அழைத்தார்கள். தொடர்ந்து பாட்டாளிகளுடன் பாட்டாளியாக பனை ஓலையில் கூழ் அருந்தினேன். என்னுடன் என்.எம். கருணாநிதி, எனது மைத்துனர் நல்லாவூர் இராமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.
இது 30 ஆண்டுகளுக்கு முந்தைய மகிழ்ச்சியான மலரும் நினைவு!
No comments:
Post a Comment