அக்னிப்புரட்சி இன்றைய (16.11.2022) முக்கிய செய்திகள்.
* புகழ்வதை காட்டிலும் ஊக்கப்படுத்துதல் சிறந்தது, சிறந்து வாழ்வதை காட்டிலும், பிறரை வாழ வைப்பது சிறந்தது!
மனதில் பட்டதை சொல்லும்போது, சில இடங்களில் பிரச்சினை முடிவுக்கு வருகிறது, சில இடங்களில் பிரச்சினை ஆரம்பமாகிறது!!
நீ மற்றவர்களிடம் பேசும் போது, அவர்களுக்கு மனதில் ஒரு அமைதியும், ஆறுதலும் கிடைக்கும் படி பேசினால், அதுவும் ஒரு வகையில் தர்மமே!!!
🙏இனிய இரவு வணக்கம்🙏
* ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் ஆளும் ஆட்சியாளர்களுக்கு குளீர் ஜூரம் வந்து விடுகிறது.
- புதுச்சேரி ஆளுநர் தமிழிசை.
* அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி - டிரம்ப் அறிவிப்பு
* கல்வி நிறுவனங்களில் ராக்கிங் எதிர்ப்பு படை இருக்க வேண்டும் - டிஜிபி
கல்லூரிகளில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
ராக்கிங் புகாரில் வழக்குப்பதிய தாமதம் செய்தால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
ராக்கிங் தொடர்பான புகாரில் கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராக்கிங்கை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கல்வி நிறுவனங்கள் நடத்த வேண்டும் - டிஜிபி
* நிலவுக்கு ராக்கெட்: இன்று அனுப்புகிறது நாசா.
நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்புவதற்கு முன்னோடியாக விண்வெளிக் கலம் அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா புதன்கிழமை (நவ. 16) செயல்படுத்தவிருக்கிறது.
‘ஆா்டமிஸ்-1’ என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி, ராக்கெட் என்ஜின் கோளாறு காரணமாக இரு முறை ஒத்திவைக்கப்பட்டது.
அப்பல்லோ விண்கலத் திட்டங்கள் நிறுத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக நிலவுக்கு மனிதா்களை அனுப்புவதற்கான இந்த ஆய்வு திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது.
அதற்கு முன்னோட்டமாக, சோதனை முறையில் 3 மனித மாதிரிகளுடன் அந்த ஆய்வுக் கலம் ஃபுளோரிடா மகாணம், கேப் கனாவெரலில் உள்ள ஏவுதளத்திலிருந்து ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், ராக்கெட் எரிபொருள் கசிவு மற்றும் என்ஜின் கோளாறு காரணமாக அந்த திட்டம் நிறுத்திவைக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில் நிலவை ஆராய்ச்சி செய்ய ஆர்டிமிஸ்-1 ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்தியது நாசா;
ஏற்கனவே 2 முறை இந்த மிஷன் தேல்வியடைந்த நிலையில், 3வது முறையாக நடைபெற்ற முயற்சியில் வெற்றி
* இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
வங்கக்கடலில் இன்று புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 9-ம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி ஓரிரு நாள்களில் வலுவிழந்தது.
இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழையும், ஒரு சில இடங்களில் மிகக் கனமழையும் கொட்டித் தீர்த்தது.
இந்நிலையில் இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகுவதன் காரணமாக வடகிழக்கு பருவமழையின் மூன்றாம் சுற்று மழை 20-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றுழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
அது மேலும் புயலாக வலுவடையுமா என்று கண்காணிப்பு மையம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* ஓட்டுநர், நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் - போக்குவரத்துத்துறை உத்தரவு
அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தை நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி இறக்கி செல்ல வலியுறுத்தல்
* உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் பிரதமர் மோடி: "இந்த நிலத்தின் ஒவ்வொரு துண்டிலும் விநாயகப் பெருமான் இருக்கிறார்."
* கோயில் நிர்வாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 2 பள்ளிகள், 4 கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ரூ.3.7 கோடி மதிப்பில் 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்.
* 2 டாக்டர்கள் தலைமறைவு!
கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம் சங்கர் தலைமறைவு.
பணியிடை நீக்க உத்தரவு நகலை வழங்க சென்றபோது மருத்துவர்கள் 2 பேரும் தலைமறைவானது தெரியவந்தது.
செல்போன் சிக்னல்களை வைத்து அவர்களின் தற்போதைய இருப்பிடம் குறித்து போலீசார் கண்காணிப்பு என தகவல்.
* வண்டலூர் உயிரியல் பூங்கா உலகத்தரம் வாய்ந்த பூங்காவில் ஒன்றாக விளங்கி வருகிறது
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆண்டுக்கு 20 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்
உயிரியல் பூங்காக்களின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வன உயிரின பூங்காவுக்கு வரக்கூடிய மக்களுக்கு, வன உயிரின பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்
உயிரியல் பூங்காவில் உள்ள வன உயிரினங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா தீபத்தன்று, நீதிமன்ற உத்தரவுபடி, 2,500 பக்தர்கள் மட்டும் மலை மீதேறி சென்று, மஹா தீபம் காண அனுமதிக்கப்படுவர்,’’ என மாவட்ட கலெக்டர் முருகேஷ் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில், தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் அமைச்சர்கள் சேகர்பாபு, வேலு ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:
வரும், 27ல் அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வரும் டிச., 6ல் கோவில் சுவாமி சன்னதியில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இதைக்காண, 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நகரின் இணைப்பு சாலைகளான, ஒன்பது இடங்கள் உள்ளிட்ட, 13 இடங்களில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட உள்ளது.
மொத்தம், 12 ஆயிரத்து, 400 கார் நிறுத்தும் வகையில், 59 கார் பார்க்கிங் வசதி செய்யப்பட உள்ளது. இப்பகுதிகளில் குடிநீர், கழிவறை வசதி, காவல் மையம் அமைக்கப்படும். மேலும், 2,692 சிறப்பு பஸ்கள் மூலம், 6,431 ‘டிரிப்’கள் இயக்கப்படும்.
தற்காலிக பஸ் ஸ்டாண்டிலிருந்து, கோவில் வரை பக்தர்கள் வர, 100 பஸ்கள் இயக்கப்படும். தற்போது, ஒன்பது ரயில்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்லும் நிலையில், கூடுதலாக, 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ ஓட்டுனர்கள், நிர்ணயித்த ஆட்டோ கட்டணத்தை மட்டுமே வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* மண்டலகால பூஜைகளுக்காக இன்று மாலை நடை திறக்க உள்ள நிலையில் கொட்டும் மழையிலும் சபரிமலை பக்தர்களை வரவேற்க தயாராகியுள்ளது.
மண்டலகால பூஜைகளுக்காக இன்று மாலை மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்த பின்னர் புதிய மேல்சாந்திகளான சபரிமலை ஜெயராமன் நம்பூதிரி, மாளிகைப்புறம் ஹரிகரன்நம்பூதிரி ஆகியோருக்கு அபிேஷகம் நடத்தி அவர்களை தந்திரி கண்டரரு ராஜீவரரு ஸ்ரீகோயிலுக்குள் அழைத்து செல்வார். வேறு பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை அதிகாலை 4:00 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு மண்டலகால நெய்யபிேஷகத்தை தொடங்கி வைப்பார்.
தொடர்ந்து 41 நாட்கள் பூஜைகள் நடைபெற்று டிச., 27–ம் தேதி மண்டலபூஜை நடைபெறும்.
ஆன்லைன் முன்பதிவு மூலம் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலை பாதைகளில் 13 இடங்களில் செயல்படும் ஸ்பாட் புக்கிங் மூலம் பதிவு செய்து சன்னிதானம் வரலாம்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் வாபஸ்
அவசர சட்டம் அமலுக்கு வரும்போது புதிதாக வழக்கு தொடர ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
* கடலூரில் மழை வெள்ள பாதிப்பு - ஈபிஎஸ் நேரில் ஆய்வு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது.
ஏழைகளுக்காக கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு கைவிட்டுவிட்டது- கடலூர், வல்லம்படுகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
* தமிழகத்தில் 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5303 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களில் பலர் 15ஆண்டுகளுக்கும் மேல் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களின் உழைப்பு மதிக்கப்பட வேண்டும் -பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.
உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் தகுதி மற்றும் திறமையில் எந்த சமரசமும் செய்ய தேவையில்லை.
கவுரவ விரிவுரையாளர்களில் யுஜிசி நிர்ணயித்த கல்வித்தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் சிறப்பு போட்டித்தேர்வு மூலம் பணி நிலைப்பு செய்ய அரசு முன்வர வேண்டும்- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதியுதவி.
சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், கூடுதல் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
* ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தது இந்தோனேஷியா;
டிசம்பர் 1ம் தேதி முதல் ஒரு வருடத்திற்கு ஜி20 தலைவராக இந்தியா பதவி வகிக்கும்
* வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்- சென்னை வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தில் வரும் 20ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
* சீர்காழி: பூம்புகார்,தரங்கம்பாடி பகுதிகளில் அதிகளவில் நெற்பயிர்கள் சேதம்.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.30,000 வழங்க வேண்டும்- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
அரசு கவனமாக செயல்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
பயிர்காப்பிடு செய்யும் காலத்தை நீடிக்க வேண்டும்- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
* மருத்துவ மேற்படிப்பில் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின், சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும்- மருத்துவ படிப்பு தேர்வு குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் தங்கள் விண்ணப்பம் நிராகரித்ததை எதிர்த்து கிரீஷ்மா கோபால், ரோஹன் மகேஷ் உள்ளிட்டோர் வழக்கு.
இந்திய தூதரகம் அளித்த வெளிநாடு வாழ் இந்தியர் எனும் சான்றிதழ்கள் போலி, குறிப்பிட்ட மதிப்பெண்களை பெறவில்லை என்பதால் நிராகரிப்பு என தேர்வுக்குழு விளக்கம்.
மனுதாரர்களின் சான்றுகள் மட்டும் சரிபார்க்கப்பட்டதாக தேர்வுக் குழு தரப்பில் அளித்த விளக்கத்திற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி.
அடுத்த ஆண்டு முதல் அனைவரின் சான்றுகளையும் சரிபார்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* ஓசூரில் இந்தியாவின் மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை அமைய உள்ளதாக அறிவிப்பு.
புதிய ஆலையில் 3 மாதங்களில் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு.
அடுத்த 2 ஆண்டுகளில் 53,000 பேரை பணிக்கு அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.
* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆய்வு.
சீர்காழி பகுதியில் மழைநீர் புகுந்த விவசாய நிலங்களை பார்வையிட்டு
விவசாயிகளிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்தார் அண்ணாமலை.
* அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நாளை முதல் ஜனவரி 20 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்து துறை.
* விமான பயணத்தின் போது இனி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை - மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம்.
சர்வதேச மற்றும் உள்ளூர் விமானங்களிலும் கட்டாய முகக்கவச உத்தரவு தளர்த்தப்படுவதாக அறிவிப்பு.
* மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை; மழை நீர் வெளியேற்றும் பணிகள் காரணமாக மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவிப்பு.
* திமுக - மநீம கூட்டணி?; கமல்ஹாசன் அளித்த நச் பதில்
கமல்ஹாசன் தலைமையிலான மநீம கட்சி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்கிறதா என அரசியல் பார்வையாளர்களிடையே கேள்வி எழுந்தது. இதுகுறித்து கமல்ஹாசன், “கடந்த முறை செய்த தவறுகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் செய்யக்கூடாது. நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்து விவாதித்தோம். இதைப் பற்றி இப்போது மேலும் விவரிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
* சபரிமலைக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு பேருந்துகள்!
பக்தர்கள் வசதிக்காக சபரிமலைக்கு சென்னை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து நாளை முதல் 2023 ஜனவரி 20ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்
- அமைச்சர் சிவசங்கர் தகவல்!
www.tnstc.in மற்றும் TNSTC செயலி வழியே முன்பதிவு செய்யலாம்.
* இந்த அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்பு அதிகம்: மெஸ்சி
உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி இதற்காக தீவிரமாக தயாராகி வருகிறார். இந்நிலையில், ''உலகக்கோப்பை கால்பந்து தொடரில் யார் சாம்பியன் ஆவார்கள் என்பதை கணிப்பது கடினம். ஆனாலும் பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து அணிகளுக்கு சற்று வாய்ப்பு அதிகமிருப்பதாக நான் நினைக்கிறேன்'' என்று மெஸ்சி கூறியுள்ளார்.
* போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஏடிஜிபியின் வாகனத்திற்கு ரூ.500 அபராதம்
ஏடிஜிபியின் வாகனம் ஒருவழிப்பாதையில் எதிர்திசையில் சென்றதாக புகார்
சமூக வலைதளம் மூலம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை
* இனி TrueCaller தேவையில்லை: புதிய அப்டேட்
மொபைலில் 'Unknown Number' வந்தால் TrueCaller பயன்படுத்தி யார் என்பதை தெரிந்து கொள்ளவோம். தற்போது தொலைபேசி அழைப்புகளை, பெயருடன் காண்பிக்க வேண்டும், என தொலைபேசி நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI அமைப்பு, புதிய விதியை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. பயனர்களிடம் இருந்து பெறும் KYC தரவுகளின் அடிப்படையில், இந்த நடைமுறையை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
* தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம் திறப்பு
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தகவல் மையம் திறப்பு
கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 044-28339999ல் அழைக்கலாம்
தகவல் மையம் இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20 வரை செயல்படும் - சேகர் பாபு
* இலங்கை, நெடுந்தீவு பகுதியில் 14 இந்திய மீனவர்கள் கைது
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக ஒரு படகையும் சிறை பிடித்தது இலங்கை கடற்படை
No comments:
Post a Comment