சீதா பாட்டி, ராதாப்பாட்டி விவாதம் - பாமக தலைமை நிலையம் (16.11.2022) - Agnipuratchi

சீதா பாட்டி, ராதாப்பாட்டி விவாதம் - பாமக தலைமை நிலையம் (16.11.2022)

Share This

சீதா பாட்டி, ராதாப்பாட்டி விவாதம் - பாமக தலைமை நிலையம்
(16.11.2022)

முதுகெலும்பை முறித்துக்
கொள்ள கட்டணம் 300 ரூபாய்!

சீதா பாட்டி:  அடியே ராதா என்னடி நாளு நாளா ஆளைக் காணோம் என்று பார்த்தால், இப்படி முதுகை வளைச்சிக்கிட்டு வர்ற... உன்ன ராதாப் பாட்டின்னு கூப்பிடுறதா இல்ல அவ்வைப் பாட்டின்னு கூப்பிடுறதாடி

ராதா பாட்டி:  அய்யோ... அக்கா. எனது வேதனை உனக்கு வேடிக்கையாக்கா. நானே முதுகு வலி தாங்க முடியாமல் தவிச்சிகிட்டு இருக்கேன்க்கா. நீங்க வேற நேர காலம் புரியாமல் கிண்டல் பண்ணாதீங்கக்கா.

சீதா பாட்டி:  மன்னிச்சிக்கடி, மன்னிச்சிக்கடி. உன் வலி எனக்கு தெரியுதுடி. என்னடி ஆச்சி?

ராதா பாட்டி:  ஒண்ணுமில்லைக்கா. தீவாளிக்கு ஊருக்கு போகலையா. அதனால தீவாளி முடிஞ்சி ஊருக்கு போய்ட்டு வருவோம்னு போய்ட்டு வந்தேன்க்கா. இங்க இருக்கிற திருச்சிக்கு போய்ட்டு வருவதற்குள்ளாக முதுகெலும்பு முறிஞ்சிடிச்சி அக்கா.

சீதா பாட்டி: ஏன்டி என்னாச்சி. என்கியாது கீழே விழுந்து முதுகெலும்ப முறிச்சிகிட்டியா?

ராதா பாட்டி:  இல்லைக்கா... இந்த பாழாய் போன தேசிய நெடுஞ்சாலை தான்க்கா எல்லாத்துக்கும் காரணம். பத்து நாள் கூட மழை பெய்யலைக்கா. ஆனால், திருச்சியிலேருந்து சென்னை வரைக்கும் ஒட்டுமொத்த சாலையும் பல்லிலிச்சிடிச்சி  அக்கா. அதுல பயணம் செஞ்சது தான் முதுகுவலிக்கு காரணம் அக்கா. ஊரிலிருந்து வந்து மூணு நாள் ஆனாலும் உங்கள வந்து பாக்க முடியாத அளவுக்கு படுக்கையில விழுந்து கெடக்க வேண்டியதாயிடுச்சி அக்கா.

சீதா பாட்டி:   ஏண்டி... அது என்ன தேசிய நெடுஞ்சாலையா... தேய்ஞ்சி போன சாலையாடி?

ராதா பாட்டி:  அது பெருங்கொடுமை அக்கா. வாடகை காருல தான் வந்தேன்க்கா.  திருச்சிலேருந்து சென்னை வரைக்கும் சுங்கக் கட்டணமா மட்டும் 300 ரூபாய் புடுங்கிக் கிறானுங்க அக்கா. ஆனா மழையில பிஞ்சி போன சாலையை மட்டும் போட மாட்டேன்கிறானுங்க அக்கா!

சீதா பாட்டி:  எல்லாம் சுரண்டல் தான்டி. சுங்கக் கட்டணம் என்ற பெயரில் நம்மளை சுரண்டுறாங்க. சாலை போடுறதுல ஊழல் செஞ்சு சாலையை சுரண்டுறானுங்க. அவனுங்க சுரண்டலுக்கு நாம முதுகெலும்பை முறிச்சிக்க வேண்டியிருக்குடி.

ராதா பாட்டி:  சரியா சொன்னீங்க அக்கா. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் சுங்கக் கட்டணம்னு இவங்க அடிக்கிற கொள்ளை இருக்கே அநியாயம்க்கா.
திருச்சியிலேருந்து சென்னைக்கு வர அரசாங்க பஸ்சுல டிக்கெட் வெலை 265 ரூவா தான் அக்கா. ஆனால், காருக்கு சுங்கக் கட்டணம் 300 ரூவாய்க்கு மேல அக்கா.

சீதா பாட்டி:  தலையெழுத்துடி. ஆக உன் முதுகு எலும்பை முறிக்க 300 ரூபாய் கட்டணம் கொடுத்திருக்க. சபாஷ்டி.

ராதா பாட்டி:  நக்கல் பண்ணாதீங்க அக்கா. வம்பை வெலை கொடுத்து வாங்குறதுன்னு  சொல்வாங்க அக்கா. ஆனால், நான் முதுகுவலியை வெலை கொடுத்து வாங்கி இருக்கேன் அக்கா.

சீதா பாட்டி:  ஏன்டி ... என்ன சொல்லிட்டு இப்ப நீயே உன்ன நக்கல் அடிச்சிக்கிறே.  இடுக்கண் வருங்கால் நகுக தத்துவமாடி?

ராதா பாட்டி:  என்னத்தை சொல்லுறதுக்கா. சரிக்கா.... இந்த கொடுமைக்கு எல்லாம் தீர்வே இல்லியாக்கா?

சீதா பாட்டி:  இருக்குடி.. ஒண்ணுல்ல... ரெண்டு தீர்வு இருக்குடி.

ராதா பாட்டி:  சொல்லுக்கா....

சீதா பாட்டி:  சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலே பூந்தமல்லில தொடங்கி வாலாஜா வரைக்கும் சாலை பயணம் கொடுமையாக இருக்கும். இப்ப உனக்கு முறிஞ்சது மாதிரி பலருக்கும் முதுகெலும்பு முறிஞ்சி இருக்கு. ஒரு முறை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருத்தர் அந்த சாலையில பயணம் செஞ்சாரு. சாலையில் நெலைமைய கண்டு கொதிச்சி போனாரு. உடனே உயர்நீதிமன்றத்துக்கு வந்த அவரு தானாகவே முன்வந்து வழக்கு தொடர்ந்து, பூந்தமல்லி - வாலாஜா சாலை சரி செய்யப்படும் வரை பாதி சுங்கக் கட்டணம் தான் வசூலிக்க வேண்டும் என்று ஆணையிட்டாரு. அதற்கு பிறகு தான் அந்த சாலை ஓரளவாவது சரியாச்சு. அதே போல இப்ப அந்த சாலையில உயர்நீதிமன்ற நீதிபதி யாராவது பயணம் செஞ்சு நீ அனுபவித்த கொடுமையை அனுபவிச்சா அந்த சாலைக்கு விமோசனம் கிடைக்கும்!

ராதா பாட்டி:  இரண்டாவது தீர்வு என்ன அக்கா?

சீதா பாட்டி:  நம்ம பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா இருக்காரு இல்லையா... அவருக்கு இது தெரிஞ்சா அறிக்கை விடுவாரு. அதன்பின் உடனடியாக சாலை சரி செய்யப்படும்டி.

ராதா பாட்டி:  அப்ப அவருக்கு இதை தெரியப்படுத்துங்க அக்கா!
                                 ******

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages