அக்னிப்புரட்சி இன்றைய (19.11.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (19.11.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (19.11.2022) முக்கிய செய்திகள்.

* உன்னை தப்பாக புரிந்து கொண்டவர்களுக்கு, நீ செய்யும் அனைத்தும் தப்பாகவே தெரியும்!

மௌனம் உன்னை கவனிக்க வைக்கும், நிதானம் உன்னை வெற்றி அடைய வைக்கும், பொறுமை உன்னை உயர்வுக்கு கொண்டு செல்லும்!!

எல்லா விஷயத்திலும், நீயே எதிர் தரப்பில் இருப்பவரின் சூழ்நிலையில் இருந்திருந்தால், என்ன செய்து இருப்பாய் என்று யோசித்தால், பல பிரச்சினைகளை தவிர்க்கலாம்!!!
🙏இனிய இரவு வணக்கம்

* நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிச. 7ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு.

டிச. 7 முதல் டிச.29 வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும்- அமைச்சர் பிரகலாத் ஜோஷி.

* சென்னையில் 4 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா என சோதனை.

ஓட்டேரி எஸ்.எஸ் புரத்தில் சாகுல் ஹமீது என்பவரின் வீட்டில் சோதனை.
ஏழுகிணறு பகுதியில் 2 இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை.

* சுங்கச்சாவடி கட்டணங்களை 40% வரை குறைக்க மத்திய அரசு முடிவு.

60 கி.மீ. தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் இருந்தால், தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்தி சிக்கலை தீர்க்கவும் முடிவு.

* முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினம்:

டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை.

* மதுரை மண்டலத்தில் தேவைக்கு அதிகமாக மருந்துகளை வாங்கி, காலாவதியாக்கி, அரசுக்கு ₹27.16 கோடி இழப்பு ஏற்படுத்திய 4 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை.

முன்னாள் கிராம சுகாதார சேவை இயக்குநர் இன்பசேகரன், மதுரை மண்டல மருத்துவ அதிகாரி ஜான் ஆண்ட்ரூ, கண்காணிப்பாளர்கள் அசோக் குமார், அமர்நாத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு.

* கடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் செப்டம்பர் 16ம் சிறையில் அடைக்கப்பட்டார்.

6 மாத சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் விடுதலை.

* கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க தமிழக அரசு அறிவுறுத்தல்.

நவம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு.

* அருணாச்சல்: இட்டாநகரில் புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்.

இட்டாநகரில் டோனி போலோ விமான நிலையத்தை திறந்து வைத்துள்ளார். 690 ஏக்கர் பரப்பளவில் ரூ.640 கோடி மதிப்பில் இட்டா நகர் விமான நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் முதல் முழு பசுமை விமானநிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

* ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச்சபையை பாகிஸ்தான் தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருகிறது, விவாதிக்கவே இந்த கூட்டமே தவிர காஷ்மீர் பிரச்னையை பேசுவதற்கு அல்ல என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரக ஆலோசகர் பிரதிக் மாத்துர் கூறியுள்ளார்.

* மதுரை இளம்பெண்ணின் இதயத்தால் மறுவாழ்வு பெற்ற சேலம் விவசாயி.

சென்னை :விபத்தில் மூளைச்சாவு அடைந்த மதுரை பெண்ணின் இதயம், உறுப்பு தானத்தால் சேலம் விவசாயிக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த 26 வயது பெண், கடந்த 14ம் தேதி விபத்தில் சிக்கினார்.

ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து, அப்பெண்ணின் பெற்றோர், உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர். பின், தமிழகஉறுப்பு பதிவேட்டிற்கு மாற்றப்பட்டது.

நிலையான பதிவு நெறிமுறையின்படி, சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனைக்கு, அப்பெண்ணின் இதயம் ஒதுக்கப்பட்டது.

அம்மருத்துவமனை டாக்டர்களான மோகன், பிரேம் உள்ளிட்டோர், நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் இதயத்தைப் பெற்று, போலீசார், விமான நிலைய ஊழியர்களின் உதவியுடன் பசுமை வழித்தடத்தில் பயணித்து, உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றனர்.

அங்கு சிகிச்சையில் இருந்த, ஏழாண்டுகளாக விரிந்த கார்டியோமயோபதி, வென்ரிக்குலர் செயலிழப்பு பாதிப்புகளால் சிரமப்பட்ட சேலத்தைச் சேர்ந்த 36 வயது விவசாயிக்கு, அந்த இதயம் பொருத்தப்பட்டு, அவருக்கு மறு வாழ்வு அளிக்கப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக செய்யப்பட்டது.
TELEGRAM: t.me/Agnipuratchi1

* திமுக அமைச்சரிகளிடையே கருத்து மோதல்

கூட்டுறவுத்துறை குறித்து கருத்து தெரிவித்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “மக்களை திருப்திபடுத்தினால் போதும். ரேசன் கடையே தெரியாதவர்கள் திருப்தி அடையவில்லை என சொல்வது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் நிதியே கேட்கவில்லை. ஒருவர் மட்டும் திருப்தி அடையவில்லை என்றால் அவரிடமே கேளுங்கள்” என்றார்.

* அமெரிக்க செனட்டில் உள்ள குடியரசுக் கட்சியினர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் அமெரிக்காவிற்கு சுற்றுலா விசா பெறுவதைத் தடை செய்யும் மசோதாவை முன்மொழிகின்றனர்.

* சூறாவளி எச்சரிக்கை

நேற்றைய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தெற்கு BoB இன் மத்திய பகுதிகளில் நன்கு குறிக்கப்பட்ட குறைந்த காற்றழுத்த பகுதியில் குவிந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது கவனம் செலுத்த வேண்டும்.

🔴 INFORMATION

வங்கி/NBFC/ஈ-வேலெட்-க்கு எதிரான உங்கள் புகாரை 24x7 பதிவு செய்ய https://cms.rbi.org.in -ஐ பயன்படுத்தவும். அதன் முன்னேற்ற நிலையை கண்காணிக்க உடனடி ஒப்புகை, பதிவு எண்ணைப் பெறவும். -RBI
TELEGRAM: t.me/Agnipuratchi1

* சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைப்பதிவாளர் பணி நீக்கம்

தொலைதூர கல்வி இயக்ககத்தில் முறைகேடு செய்ததாக புகார்

தொகுப்பூதிய பணியாளரும் நீக்கம் - பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை

* திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆலோசனை.

திருவண்ணாமலையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள்,பாதுகாப்பு ஏற்பாடுகள்,போக்குவரத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை.

ஆலோசனை கூட்டத்தில் திருவண்ணாமலை ஆட்சியர், காவல்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்பு.

* அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்.

தொண்டர்கள் விருப்பத்திற்கேற்பவும்,  கட்சியின் நலனைக்கருதியும் ஒற்றை தலைமை என்பது ஏற்படுத்தப்பட்டது.

கட்சியின் பொதுக்குழுவுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது. அதன் முடிவே இறுதியானது.

ஓபிஎஸ் அதிமுக  கட்சி அலுவலகத்தை சூறையாடி, கட்சியின் விதிகளை மீறியுள்ளார்.

கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளார். எனவே அவர் எந்த நிவாரணமும் பெற தகுதி இல்லாதவர் - இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்.

* தமிழ்நாட்டில் 2023 ஜனவரி 10ம் தேதிக்குள் பொங்கலையொட்டி வழங்கப்படும் வேட்டி, சேலை விநியோகத்தை முடிக்க அறிவுறுத்தல்.

15 விதமான டிசைன்களில் சேலைகளும், 5 விதமான டிசைன்களில் வேட்டிகளும் வழங்கப்பட உள்ளதாக தகவல்.

* கால் பந்து வீராங்கனை பிரியா வழக்கு: மருத்துவர்கள் மீது பதியப்பட்ட 304ஏ பிரிவு மாற்றப்பட வேண்டும்.

மீறி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம் நடத்துவோம் -அரசு டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு.

வீராங்கனை பிரியா மரணம் துரதிஷ்டவசமானது- அரசு டாக்டர்கள் சங்கம்.

* காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

காசி தமிழ் சங்கமம் தொடர்பான குறும்படம் ஒளிபரப்பப்பட்டது

தமிழ் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி 

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பிரதமர் மோடி பங்கேற்பு

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி

இன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம், டிச.19 வரை ஒரு மாதம் நடைபெற உள்ளது

காசி, தமிழகத்துக்கு இடையேயான பண்டைய கலாச்சாரம், பாரம்பரியத்தை கொண்டாடும் நிகழ்ச்சி

* FIFA - 12 ஆயிரம் இணையதளங்கள் ஒளிபரப்ப தடை

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாக பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் இணையதளங்களுக்கு தடை

12,000 இணையதளங்களுக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்ற தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு

* வெறுக்கத்தக்க ட்விட்கள் நீக்கப்படும் - எலான் மஸ்க்

ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க், புதிய விதிமுறைகள் குறித்து கூறியுள்ளார். அதில், “புதிய ட்விட்டர் பேச்சு சுதந்திரம் கொண்டது. எதிர்மறையான மற்றும் வெறுக்கத்தக்க ட்விட்கள் அதிகபட்சமாக நீக்கப்படும் அல்லது பணமதிப்பு நீக்கம் செய்யப்படும், எனவே ட்விட்டருக்கு விளம்பரங்கள் அல்லது பிற வருவாய் இல்லை. ஒரு ட்விட்டை நீங்கள் குறிப்பாகத் தேடும் வரை அதைக் கண்டுபிடிக்க முடியாது” என்றார்.

* உலக கோப்பையை வென்றால் ஓய்வு பெறுவேன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ

கத்தாரில் நாளை (நவம்பர் 20) தொடங்கும் உலக கோப்பை கால்பந்து தொடரில் களமிறங்கும் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இது 5வது உலக கோப்பையாகும். கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் அளிக்கும்போது, ”இந்த உலகக்கோப்பையை வென்றால் மிகவும் மகிழ்ச்சிகரமான மனிதராக நான் இருப்பேன். அத்துடன் எனது கால்பந்து வாழ்க்கையை முடித்து ஓய்வு பெற்று விடுவேன்” என்றார்.

* உலக கோப்பை கால்பந்து போட்டி நாளை கத்தாரில் தொடங்குகிறது

பிபா 22வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நாளை (நவம்பர் 20) தொடங்கி அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடக்கிறது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலக கோப்பை போட்டியான இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. நாளை இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கத்தார் - ஈகுவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

* சென்னை: டிஐஜி முதல் டிஜிபி வரை நடந்த துப்பாக்கி சுடுதலில் சைலேந்திர பாபு தங்கப்பதக்கம் வென்றார்.

சென்னை வடக்கு காவல் கூடுதல் ஆணையர் அன்பு வெள்ளி, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் வெண்கலம் வென்றார். மதுரை காவல் ஆணையர் செந்தில்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.

தமிழ்நாடு அளவில் உயர் காவல் அதிகாரிகளுக்கான கைத்துப்பாக்கிச் சுடும் போட்டியில் சேலம் எஸ்.பி. அபினவ் தங்கம் வென்றார்.

சென்னை கமாண்டோ துப்பாக்கிச் சுடும் தளத்தில் நடந்த இறுதிப்போட்டியில் 21 காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பாதுகாப்பு பிரிவு எஸ்.பி. திருநாவுக்கரசு வெள்ளி, விழுப்புரம் ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா வெண்கலம் வென்றார். ரைபிள் பிரிவில் கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன் தங்கம், விழுப்புரம் ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா வெள்ளி வென்றார்.  ரைபிள் பிரிவில் சேலம் காவல் கண்காணிப்பாளர் அபினவ் வெண்கலப்பதக்கம் வென்றார். ஒட்டுமொத்த பிரிவில் அபினவ் தங்கம், அபிஷேக் குப்தா வெள்ளி, திருநாவுக்கரசு வெண்கல பதக்கங்களை தட்டி சென்றனர்.

* கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரி கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* தாய்லாந்து: ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா வெண்கலம் வென்றார்.

3 முறை ஆசிய சாம்பியன் ஆன ஜப்பானின் ஹினா ஹயாடாவை 4-2 என்ற செட் கணக்கில் மணிகா பத்ரா வீழ்த்தி வென்றுள்ளார். ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை ஆகும்.

* இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்.

ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அருண் கோயலை தேர்தல் ஆணையராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு.

* பராமரிப்பு பணிக்காக மூடப்படும் காவேரி பாலம்

திருச்சி, காவேரி பாலம் நாளை நள்ளிரவு முதல் மூடப்படுகிறது
பராமரிப்பு பணிக்காக முழுவதும் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவிப்பு.

* கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுவிட்டதால், இன்று காலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு!

* எச்சரிக்கை
வீட்டில் இருந்தே வேலை செய்தால் மாதம் ₹50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்ற கவர்ச்சிகரமான அட்வர்டைஸ்மென்ட் கொடுத்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபடுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்.

வேலை தேடுபவர்கள், குடும்ப பெண்களை குறிவைத்து இந்த மோசடி நடக்கிறது. ஆவணங்களை பெற்று கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்களின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து, பணம் பறிக்கப்படுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages