அக்னிப்புரட்சி இன்றைய (22.11.2022) முக்கிய செய்திகள்.
* சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடான சாலமன் தீவுகளில் தெற்கு மலாங்கா பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சாலமன் தீவுகளில் நில நடுக்கம் - ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவாகியுள்ளது.
* காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கிறது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூரில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
* சென்னையில் உடல்நலக் குறைவால் காலமான தமிழறிஞர் அவ்வை நடராஜனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
* சந்திரபாபு நாயுடு பூச்சாண்டி காட்டுகிறார்: ஜெகன் மோகன்
எப்படியாவது பதவிக்கு வந்துவிடவேண்டும் என்பதற்காக கடைசி தேர்தல் என சந்திரபாபு நாயுடு பூச்சாண்டி காட்டுவதாக ஜெகன்மோகன் ரெட்டி விமர்சித்துள்ளார்.
2024 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி அமைக்காவிட்டால் அதுவே தனது கடைசி தேர்தல் என சந்திரபாபு கூறியிருந்தார். செல்போன் டவர்கள்மேல் ஏறி நின்று மிரட்டல் விடுபவர்கள்போல சந்திரபாபு மிரட்டுகிறார் என ஜெகன் விமர்சித்துள்ளார்.
* பனிப்பாறைகளால் பேராபத்து..
பனிப்பாறைகள் உருகினால் கடல் மட்டம் உயர்ந்து நிலம் தண்ணீரில் மூழ்கிவிடும் என்று தானே இருந்தோம். ஆனால், பனிப்பாறைகள் உருகினால் வேறொரு ஆபத்தும் ஏற்படுமாம்.
பனிப்பாறை உருகுவதால் ஏற்படும் எதிர் விளைவுகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பனிப்பாறைகள் உருகி உண்டாகும் புதிய நுண்ணுயிரிகளால், புதிய தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
* குழந்தைகள் நலன்தான் அதிமுக்கியம்: எலான் மஸ்க்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல்களை தடுப்பதற்கு ட்விட்டரில் இனிமேல் அதிமுக்கியத்துவம் தரப்படும் என மஸ்க் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் தொடர்புடைய ஆபாச வீடியோக்கள், தகவல்களை நீக்குவது குறித்து ட்விட்டர் இதுநாள்வரை பெரிதாக முயற்சிகள் எடுக்கவில்லை என்பதை மஸ்க் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வுகாண நம்பர் 1 முக்கியத்துவம் அளிக்க மஸ்க் முடிவெடுத்துள்ளார்.
* 36 பேர் உடல் கருகி பலி
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் அன்யாங் நகரில் உள்ள தொழிற்சாலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 36 பேர் உடல் கருகி பரிதபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
* சொத்து வரி செலுத்த டிசம்பர் 15-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த டிசம்பர் 15-ந் தேதி வரை காலஅவகாசத்தை நீட்டித்து பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
* சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடான சாலமன் தீவுகளில் தெற்கு மலாங்கா பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சாலமன் தீவுகளில் நில நடுக்கம் - ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவாகியுள்ளது.
* குளித்த கையோடு சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் அரட்டை.. மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபர்!
திருவள்ளூர்: ஞாயிற்றுக்கிழமை மாலை தனது செல்போனுக்கு சார்ஜர் போட்டு விட்டு குளிக்க சென்றவர் குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்து, ஈர கையுடன் தன்னுடைய செல்போனில் யாருடனோ பேசியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக சார்ஜர் ஒயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திங்கட்கிழமை மாலை வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வீட்டின் அருகே உள்ள பாஸ்கர் என்பவர் கொடுத்த தகவலின் பெயரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
வீட்டின் முதல் மாடியில் சுவற்றில் சாய்ந்த படி அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்த பால்பாண்டியன் பிரேதத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காகஅரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
* அவ்வை நடராசன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!
சென்னை: தமிழறிஞர் அவ்வை நடராசன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் வயது மூப்பின் காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 85. அவ்வை நடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். 'சிறந்த தமிழறிஞர் ஒளவை நடராசன் (87) வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன்; எண்ணற்ற நூல்களையும், பல நூறு மாணாக்கர்களையும் நம்மிடம் விட்டுச் சென்றுள்ள பெருந்தகை அவ்வை நடராசனின் மறைவு தமிழ்த்துறையினர்க்கும், கல்விப்புலத்தார்க்கும் பேரிழப்பாகும்' என குறிப்பிட்டார்.
இந்நிலையில் மூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் (87) அவர்கள் அகவை மூப்பின் காரணமாக இயற்கை எய்தியதை அடுத்து அவ்வை நடராசனின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பெருந்தகை அவ்வை நடராசனின் தமிழ்ப் பணிகளை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
...
TELEGRAM: t.me/Agnipuratchi1
* இந்திய அளவில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம்
2ம் கட்டமாக 71,056 பேருக்கு பணி நியமன ஆணைகளை காணொளி வாயிலாக வழங்கினார் பிரதமர் மோடி
* அகவிலைப்படி உயர்வு கோரி சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தை சிஐடியூ தொழிலாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
* சென்னை: இராணி மேரி கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழா-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு.
ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்காக சிறை சென்றது வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வு.
ராணி மேரி கல்லூரியை இடிக்க முயன்றபோது சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தோம்.
அதிமுக ஆட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம்.
இதனால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டோம்
ராணி மேரி கல்லூரியின் வளாகத்திலேயே விடுதி கட்டித் தரப்படும்.
பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக தொடர்ந்து பாடுபடும்.
பெண் கல்வியின் கலங்கரை விளக்கம் ராணி மேரி கல்லூரி.
லட்சக்கணக்கான பெண்களுக்கு தன்னம்பிக்கையை தந்தது ராணி மேரி கல்லூரி என்றால் மிகையல்ல. -சென்னை ராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
* பாஜகவிலிருந்து நடிகை காயத்ரி ரகுராம் ஆறு மாதத்திற்கு சஸ்பெண்ட் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
தமிழ்நாடு பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் பொறுப்பு உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை.
திருச்சி சூர்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கைது செய்ய வேண்டும் என்றும் காயத்ரி ரகுராம் வலியுறுத்தி இருந்த நிலையில் நடவடிக்கை.
கட்சியின் ஒப்புதல் பெற்றே இனி பாஜக நிர்வாகிகள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளிக்க வேண்டும்.
கட்சி கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை.
கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர்த்து மற்றவர்கள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் வழங்க விருப்பப்பட்டால், அதை கட்சியின் ஊடகப்பிரிவு தலைவரிடம் தெரியப்படுத்த வேண்டும்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
* தமிழ்நாட்டில் 180% குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை.
* "இடைநீக்கத்துடன் தேசத்திற்காக உழைப்பேன்" - காயத்ரி ரகுராம் ட்வீட்
“கட்சியில் இருந்து நீக்கியதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. இடைநீக்கத்துடன் தேசத்திற்காக உழைப்பேன்” - அண்ணாமலையின் அறிக்கையை ட்வீட் செய்து காயத்ரி ரகுராம் பதில்!
* வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்,காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்- வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்.
* மதுரையில் கடந்த மாதம் 30ம் தேதி பெண்கள் கல்லூரியில் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட வழக்கில், 4 பேர் மீது குண்டர் சட்டம்.
இவ்வழக்கில் 10 பேர் கைதான நிலையில், சூர்யா, அருண், அருண் பாண்டியன், மதுநவீஸ் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
* பச்சையப்பன் அறக்கட்டலை உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செல்லாது என்ர தனி நீதிபதி உத்தரவு நிறுத்தி வைப்பு.
254 உதவி பேராசிரியர்களின் பணி நியமனத்தை மொத்தமாக ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவு சரியானதல்ல- சென்னை உயர்நீதிமன்றம்.
* மழை காரணமாக 3வது டி20 போட்டி ‘டை’ ; தொடரை வென்றது இந்திய அணி.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
கடைசி டி20 போட்டியில் மழை குறுக்கீடு - டக்வொர்த் லூயிஸ் விதிப்படி போட்டி சமன்.
போட்டி முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2வது போட்டியில் வென்றதால் தொடரை வென்றது இந்தியா.
* உலகக்கோப்பை கால்பந்து போட்டி அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி.
அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் சவுதி அரேபியா 2-1 என வெற்றி பெற்றது.
* இந்தோனேசிய நிலநடுக்கம்: உயிரிழப்பு 252 ஆக அதிகரிப்பு
ஜகர்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தோனேசிய அரசு வெளியிட்ட தகவல்: மேற்கு ஜாவா தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 5.6 ஆக பதிவாகியது. ஜாவாவில் உள்ள சியாஞ்சூரில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியாக காணப்பட்டது. நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்த சியாஞ்சூர் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
சியாஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்ததில் பலரும் இடிபாடுகளில் சிக்கினர். இந்த நில நடுக்கத்துக்கு இதுவரை 252 பேர் உயிரிழந்துள்ளனர். 600 பேர் வரை காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து இதுவரை 7,060 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கட்டிட இடிபாடுகளில் இன்னமும் பலர் சிக்கி இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஜாவாவை சுற்றியுள்ள மருத்துவமனைகளில் நிலநடுக்கம் காரணமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* 3வது போட்டி மழையால் டை; நியூசிலாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி
நேப்பியர்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி - 20 கிரிக்கெட் போட்டி மழையால் டை ஆனதால் இந்தியா தொடரை வென்றது. நேப்பியரில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மழையால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இரு அணிகளும் ஒரே ஸ்கோர் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் டி20 தொடரில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2-வது டி20 போட்டியில் இந்திய அணி சூர்யகுமார் யாதவின் அதிரடியான சதத்தால் அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து கடைசி மற்றும் இறுதி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இன்றைய போட்டியில் இடம்பெறாததால் டிம் சவுதி அணியை வழிநடத்துகிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன், டெவோன் கான்வே களமிறங்கினார்கள். ஃபின் ஆலன் 3 ரன்னிலும் அடுத்து வந்த மார்க் சாப்மேன் 12 ரன்னிலும் அவுட்டாகியதால் நியூசிலாந்து அணி தடுமாறியது. கான்வே மற்றும் கிளன் பிலிப்ஸ் பார்ட்னர்ஷிப் ரன்ரேட்டை உயர்த்தினர்.
கிளன் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 54 ரன்கள் விளாசி சிராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் நிதானமாக விளையாடிய கான்வே 59 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி வந்ததால் இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடி பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயப்பார்கள் என்று எதிர்பாரக்க்கப்பட்டது. ஆனால் இறுதி ஓவர்களில் சிராஜ் மற்றும் ஹர்ஸ்தீப் சிங் பிரமாதமாக பந்துவீசி நியூசிலாந்து வீரர்களை அடுத்தடுத்து பெவிலியன் அனுப்பினார்கள். சிராஜ் மற்றும் ஹர்ஸ்தீப் சிங் தலா 4 விக்கெட்களை கைப்பற்றினர்.
இதனால் நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 160 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கம் மந்தமாகவே இருந்தது. இஷான் கிஷான் (10), ரிஷப் பந்த் (13), சூர்யகுமார் யாதவ் (13), ஷ்ரேயாஸ் ஐயர் (0) ரன்களில் அவுட்டாகினர். ஆனால் இந்திய அணியின் கேப்டன் பாண்டியா அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 30 ரன்கள் விளாசி இருந்தார். இந்திய அணி 9 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. மழை விடாமல் பெய்ததால் DLS முறைப்படி ஆட்டம் டிரா என அறிவிக்கப்பட்டது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது....
TELEGRAM: t.me/Agnipuratchi1
* அடுத்த அப்டேட்டு.. வாரி வழங்கும் வாட்ஸ் அப்!
வாட்ஸ்அப் செயலியில் ஷாப்பிங் (WhatsApp Shopping) செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப், நிறுவனம் தனது பிசினஸ் ப்ரோஃபைல் பயனர்களுக்காகவே பிரத்யேகமாக புது அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
முதற்கட்டமாக இந்த அம்சம் பிரேசில், கொலம்பியா, இந்தோனேசியா, மெக்சிகோ மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. விரைவில் இந்தியாவிலும் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தளத்தினுள் பிஸ்னஸ்களை தேடி, அவர்களிடம் சாட் செய்து பொருட்களை வாங்க முடியும். வாட்ஸ்அப் பிஸ்னஸ் பயனர்கள் பிஸ்னஸ்களை - வங்கி, பயணம் என குறிப்பிட்ட பிரிவுகளில் தேட முடியும்.
நமக்கு தேவையான வியாபாரங்களை தேடுவதோடு வாட்ஸ்அப் மூலம் நேரடியாக பொருட்களை வாங்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
இதனால் ஷாப்பிங் வெப்சைட்டுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது எனக் கூறப்படுகிறது. அதுபோக, இதில், பேமன்ட் வசதிக்காக வாட்ஸ்அப் பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த புதிய ஷாப்பிங் அம்சம் ஜியோமார்ட் சேவையை போன்றே செயல்படுவதாக தெரிகிறது.
மேலும், இந்த புதிய வசதியில் பயனர்கள் தங்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பாதுகாப்பான பண பரிமாற்றத்தை செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* நீலகிரி: உதகையில் உறைபனி தொடங்கியது.
கடும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ். நீர்நிலைகள், பச்சை புல்வெளிகளில் பனிப்படலம் படர்ந்து காணப்படுகிறது. கொடைக்கானலில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது
* ஜகார்த்தாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் இந்திய வீரர் பிரனாய் சர்மா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கராத்தே 1 சீரியஸ் எ பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பிரனாய் சர்மா படைத்தார்.
* "உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டணமில்லை"
மதுரை திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் சுங்கச்சாவடி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுகுறித்து பேசிய வணிகவரி துறை அமைச்சர் மூர்த்தி, "உள்ளூர் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியில் இருந்து கட்டணமின்றி செல்லலாம்" என பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.
* ODI தொடர்; இங்கிலாந்தை வைட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டி மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 355 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து, 142 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது. சிறப்பாகப் பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர் சாம்பா, 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
* மதுரை எய்ம்ஸ் எப்போது முடிக்கப்படும்? நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி, கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் கே.கே.ரமேஷ் என்பவர் மனு அளித்திருந்தார்.
இந்த வழக்கில் மத்திய அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,
“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ரூ. 1,977.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எய்ம்ஸ் கட்டுவதற்கு மொத்தம் 5 ஆண்டுகள் 8 மாதங்களாகும்.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2026 அக்டோபர் மாதத்துக்குள் முடிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளனர்.
* ⚽️உலகக்கோப்பை கால்பந்து போட்டி: அர்ஜென்டினா அணியை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது சவூதி அணி..!
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி சவூதி அணி வெற்றி பெற்றது. உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் குரூப் சி பிரிவில் அர்ஜென்டினா, சவூதி அரேபியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் சவூதி அரேபியா அணி, அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.
ஆட்டம் தொடங்கிய 10 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி முதல் கோலை அடித்தார். பின்னர் சூடு பிடுத்த ஆட்டத்தில் சவூதி அணி 48 வது நிமிடத்தில் ஒரு கோலும், 53வது நிமிடத்தில் மற்றொரு கோலும் அடித்து முன்னிலை பெற்றது. அர்ஜென்டினா அணி கடைசி வரை எவ்வளவோ முயன்றும் இரண்டாவது கோல் அடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து அர்ஜென்டினா அணியை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது சவூதி அணி.
* உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதையடுத்து, சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் நாளை பொது விடுமுறை அறிவித்துள்ளார்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
No comments:
Post a Comment