அக்னிப்புரட்சி இன்றைய (28.11.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (28.11.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (28.11.2022) முக்கிய செய்திகள்.

* ஸ்பெயின் - ஜெர்மனி ஆட்டம் சமன்
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின், ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது!

* ஒரு டி20 போட்டியை, அதிகம் பேர் மைதானத்தில் பார்த்ததற்கான கின்னஸ் சாதனையை பிசிசிஐ படைத்துள்ளது.

கடந்த மே மாதம், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியை, 101,566 பேர் மைதானத்தில் பார்த்துள்ளனர்.

* இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் வீராங்கனையும் எம்.பி.யான பி.டி.உஷா தேர்வாக உள்ளார்.

வேறு யாரும் விண்ணப்பிக்காததால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி.உஷா தேர்வாகிறார்.

* மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, மின்கட்டண அலுவலகத்தில் இன்று முதல் சிறப்பு முகாம்.

ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்று தொடங்கி, டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

பொதுமக்கள் தங்களது மின் அட்டை மற்றும் ஆதார் அட்டையை கொண்டு சென்று, இணைத்து கொள்ளலாம்.

அரசு விடுமுறைகளை தவிர்த்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும்.

நீங்களே இணைப்பது எப்படி? WATCH: https://youtu.be/RM2QmmA8zlA

* சென்னையில் பனிமூட்டத்தால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது

பெங்களூரு, ஐதராபாத்திலிருந்து சென்னை வந்த விமானங்கள் திருப்பிவிடப்பட்டு மீண்டும் தரையிறக்கப்பட்டன

* ஆன்லைன் ரம்மி தடைக்காக தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டம் நேற்றுடன் காலாவதியானது

நிரந்தர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராத காரணத்தினால் ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்

கால்பந்து உலகக் கோப்பை குரூப் F: பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது மொராக்கோ அணி!

தனது முதல் போட்டியில் மொராக்கோ டிரா செய்திருந்தது, பெல்ஜியம் தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது!

* Covid கட்டுப்பாடால் கொதித்தெழுந்த மக்கள்; Xi Jinping ராஜினாமாவை கோரி போராட்டம்

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

* திருச்சியில் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசுப்பள்ளியில் "வானவில் மன்றம்" அமைப்பை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மாணவர்களுக்கு அறிவியல், கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டம். ₹ 25 கோடி செலவில் 'வானவில் மன்றம்' திட்டம் தொடக்கம்.

* மண்டல காலம் தொடங்கி, 10 நாட்களில் சபரிமலை வருமானம் 52 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் சன்னிதானத்தில் கூறியதாவது: மண்டல காலம் தொடங்கி 10 நாட்களில் அனைத்தும் சுமூகமாக நடக்கிறது. பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்த வருமானம் 52.55 கோடி ரூபாயாகும். இதில் அரவணை விற்பனை ரூ. 23.58 கோடி. காணிக்கை ரூ.12.74 கோடி. அப்பம் விற்பனையில் ரூ.2.58 கோடியும், அறை வாடகையாக ரூ.49 லட்சமும் கிடைத்துள்ளது. இதில் பெரும் பகுதி திருவிழா நிர்வாகத்துக்காக செலவு செய்யப்படுகிறது.

அடுத்த 20 நாட்கள் தேவைக்காக 51 லட்சம் டின் அரவணை ஸ்டாக் உள்ளது. தினமும் சராசரியாக இரண்டரை லட்சம் டின் அரவணை விற்பனையாகிறது.

பக்தர்களுக்கு எந்த குறையும் வராத அளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் வசதிகள் சிறப்பாக செயல்படுகின்றன. நீலிமலை பாதையில் உள்ள பணிகள் அடுத்த வாரம் நிறைவு பெறும். சன்னிதானம், பம்பை, நிலக்கல்லில் மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* 50 கோடி வாட்ஸ்அப் பயனர்களின் தரவுகள் கசிந்ததாக தகவல்: இந்தியா உட்பட 80 நாடுகள் பாதிப்பு

சுமார் 50 கோடி வாட்ஸ்அப் பயனர்களின் தரவுகள் இணையவெளியில் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தரவுகளை ஆன்லைனில் ஹேக்கர்கள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் தகவல். இதனை சைபர் குற்றம் குறித்த செய்திகளை வெளியிட்டு வரும் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதனால் வாட்ஸ்அப் மீண்டும் அதன் பயனர் தரவு பாதுகாப்பு சிக்கலுக்கு ஆளாகியுள்ளது. இந்தியா உட்பட சுமார் 80 நாடுகளை சேர்ந்த பயனர்கள் இந்த முறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகள் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாற்றிக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த தளத்தின் பயனர் தரவுகள் கசிந்துள்ளன.

இந்த கசிவு குறித்து வாட்ஸ்அப் தரப்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால், இந்த அறிக்கையை பல்வேறு டேட்டா மாதிரிகளை ஆய்வு செய்த பிறகே இதனை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. இருந்தாலும் இதற்கு வாட்ஸ்அப் தளம் காரணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்க்ரப்பிங் எனும் முறையில் பல்வேறு வலைதளங்களில் இருந்து போன் நம்பர்களை சேகரித்து அதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்களின் தரவுகளை ஹேக்கர்கள் கசிய செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* இரயில்வே திட்டங்களில் டெல்டா பகுதியை தெற்கு இரயில்வே புறக்கணிப்பதாகக் கூறி, திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூரில் அனைத்துக்கட்சியினர் இரயில் மறியல் போராட்டம்

திமுக, தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு!

* ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.

நஷ்டத்தில் இயங்கும் மின்வாரியத்தை சீரமைக்கவே ஆதார் எண் இணைக்கப்படுகிறது-அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.

* 18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுகள் தெரியவந்தது எப்படி?

அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது -உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வேதனை.

18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி போன்ற கேம்கள் விளையாடுவதை தவிர்க்கும் வகையில், செயலிகளில் உள்நுழைய வயதை உறுதி செய்யும் ஆதார் அல்லது பான் கார்டு  பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து.

பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்துவிட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை.

நாமே குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்து விடுகிறோம். பின்பு அரசை குற்றம் சாட்டுவது எப்படி? - நீதிபதிகள் வேதனை.

* விஜய் ஹசாரே கோப்பை 2022: உத்தர பிரதேஷூக்கு எதிரான ஆட்டத்தில் மகாராஷ்டிரா வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 220 (159) ரன்கள் குவித்து சாதனை.

ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை பறக்க விட்டு புதிய சாதனையும் படைத்துள்ளார். 6,6,6,6,6(nb),6,6 | MAH 330/5 (50)

* ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் தரப்பில் கேட்கப்பட்ட அனைத்திற்கும் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஏன் தாமதப்படுத்துகிறார் என தெரியவில்லை.

ஆளுநர் ஒப்புதல் அளித்தால் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

* மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை கைவிட வேண்டும் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டிய அவசியம் என்ன? - கே.பாலகிருஷ்ணன்

* கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு டிச.4ஆம் தேதிக்கு மாற்றியமைப்பு.

நிர்வாக காரணங்களுக்கான கிராம உதவியாளர் பணி தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

தமிழகத்தில் காலியாக உள்ள 2,748 கிராம  உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.

* விழுப்புரம்; கோண்டூரில் உள்ள மளிகை கடையில் செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு.

மேஸ்திரி மணிகண்டன், அய்யப்பன் ஆகியோரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.

* பிற மாநிலங்களை விட குறைவான நேரம் டாஸ்மாக் திறக்கப்பட்டாலும் மது விற்பனையில் தமிழகமே  முன்னிலையில் உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என்பதை தமிழக அரசு உறுதியாக சொல்ல முடியுமா? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலனை செய்யக்கூடாது? -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை  கேள்வி.

* சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துவதில் போலி நில ஆவணங்கள் காட்டி மோசடி.

போலி நில ஆவணங்களுக்கு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை திரும்பபெற உத்தரவு.

மீறினால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்துவதில் போலி ஆவணங்களை காண்பித்து ₹ 20 கோடி வரை இழப்பீடு பெற்றுள்ளதாக வழக்கு.

* திருவண்ணாமலை தீபத் திருவிழாவில், 22 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்க திட்டம்.

அன்னதானம் வழங்க நகரில் 112 பேருக்கும், கிரிவலப்பாதையில் 114 பேருக்கும்  நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நியமன ஆணை இல்லாமல் அன்னதானம் வழங்கக் கூடாது எனவும் எச்சரிக்கை.

* செங்கல்பட்டு: திருப்போரூர் சிதம்பர சாமி கோயில் குளத்தில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழப்பு.

தனியார் கல்லூரி மாணவர்களான முகேஷ் (18), உதயகுமார் (19) மற்றும் விஜய் (18) மூவரது உடலையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

* நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது; அவர்களிடம் இருந்து 4 படகுகள் பறிமுதல்.

* குஜராத்: பதவியை ராஜினாமா செய்த பாஜக மந்திரி காங்கிரசில் இணைந்தார்

குஜராத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. அதேவேளை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பல்வேறு கட்சியினரும் மாற்று கட்சிக்கு தாவி வருகின்றனர்..

இதனிடையே, குஜராத் மாநில பாஜக அரசியில் மந்திரியாக இருந்தவர் ஜெய்நாராயண் வியாஸ். 75 வயதான ஜெய்நாராயண் இம்மாத தொடக்கத்தில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் பாஜக கட்சியில் இருந்தும் விலகினார்.

இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய ஜெய்நாராயண் வியாஸ் இன்று காங்கிரசில் இருந்தார். ஜெய்நாராயண் வியாசின் மகன் சமீர் வியாசும் காங்கிரசில் இணைந்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரசில் இணைந்தார்.

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் வர உள்ள நிலையில் பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மந்திரி கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்!

சென்னை, பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக தலைமைச் செயலக காலனி போலீசார் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி கைது செய்தனர். அன்று இரவே விசாரணையின்போது விக்னேஷ் உயிரிழந்தார்.

இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விக்னேஷை காவல் நிலையத்தில் போலீசார், கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமை செயலக காலனி காவல் நிலைய, காவலர் பவுன்ராஜ், தலைமை காவலர் முனாப், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக், ஆயுதப்படை காவலர் ஜெகஜீவன், ஆயுதப்படை காவலர் சந்திரகுமார் ஆகியோரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 6 போலீசாருக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

127 சாட்சிகளின் வாக்குமூலங்கள், 290 ஆவணங்கள், 64 சான்று பொருட்கள் குறித்த விவரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

* நாடே எதிர் பார்க்கும் தேர்தல் : குஜராத்தில் முதல் கட்டமாக சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுகிற 89 தொகுதிகளில் நாளை பிரசாரம் ஓய்கிறது..

பிரதமர் மோடியும், தலைவர்களும் தீவிர ஓட்டு வேட்டையாடினர்.

குஜராத்தில் 182 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1-ந் தேதி, 5-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1-ந் தேதி தேர்தல் நடப்பதால், அங்கெல்லாம் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது.

இந்த தேர்தலில் மொத்தம் போட்டியிடுகிற 1,621 வேட்பாளர்களில் 139 பேர் பெண்கள். அவர்களில் 38 பேர் மட்டுமே 3 முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியிலும், குஜராத் கலவர வழக்கு குற்றவாளி மனோஜ் குக்ரானியின் மகள் பயல் குக்ரானி நரோடா தொகுதியிலும் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். 4 பழங்குடியினர் தொகுதிகளில் காங்கிரஸ் பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஆம் ஆத்மியும் 3 பழங்குடியினர் தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை போட்டியிடச் செய்துள்ளது.

முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் நாளை (29-ந் தேதி) மாலை தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நடைபெற்று வந்த குஜராத்தில், இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களம் இறக்கி, ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* டிசம்பர் 15ல் தொடங்குகிறது அரையாண்டு தேர்வு.

6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு; பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.

6, 8, 10, 12ம் வகுப்புகளுக்கு காலையிலும், 7, 9, 11ம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும்.

* இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சார்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும்

அவர்களுடைய மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

* கவர்னரை கேள்வி கேட்கின்ற உரிமை எங்களுக்கு கிடையாது; கவர்னர் கேள்வி கேட்டால் அதற்கு பதில் அளிக்கும் உரிமை தான் எங்களுக்கு உள்ளது' என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் சட்டசபையில் இயற்றப்பட்டுள்ள நிலையில், நேற்றோடு (நவ.,27) கடைசி நாள் முடிந்தும் கவர்னர் ஒப்புதல் கையெழுத்து போடாததால், அவசர சட்டம் அரசமைப்பு சட்ட விதிகளின்படி காலாவதியானது.

இது தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய இயற்றப்பட்ட சட்டம் தொடர்பாக கவர்னர் சில சந்தேகங்கள் கேட்டவுடன், 24 மணி நேரத்திற்குள் அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டது.

நேற்று மாலைக்குள் அதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கிடைக்கவில்லை. 95 சதவீத மக்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். உலக சுகாதார நிறுவனம் ஆன்லைன் ஒருவித நோய் என்று அறிவித்துள்ளது. இந்த நோயை ஒழிக்க வேண்டியது நமது தலையாய பணி.

இந்த பணியைத்தான் தமிழக அரசு செய்துள்ளது. தமிழக அரசு எல்லாவிதமான, முறையான பதில்களையும் கவர்னரிடம் அளித்துள்ளது. இதில் காலதாமதப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ஏன் கவர்னர் காலதாமதப்படுத்துகிறார் என்பது தெரியவில்லை.அதற்கான காரணம் அவருக்குத்தான் தெரியும்.

கவர்னரை கேள்வி கேட்கின்ற உரிமை எங்களுக்கு கிடையாது. கவர்னர் கேள்வி கேட்டால் அதற்கு பதில் அளிக்கும் உரிமை தான் எங்களுக்கு உள்ளது. ஆன்லைன் ரம்மியால் இனி ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம். தற்போது அமலில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் தான், இனிமேல் நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
TELEGRAM: t.me/Agnipuratchi1

* பெண்கள் குறித்து தாம் ஆபாசமாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதற்காக யோகா குரு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தாம் ஆடை குறித்து சாதாரணமாகத்தான் பேசியதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

எனினும் அது யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மிகுந்த வருத்தத்தை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ள பாபா ராம்தேவ், தமது வார்த்தைகள் யாருக்காவது வேதனையை அளித்து இருந்தால் அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் தானே நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் பெண்களுக்கான யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யோகா குரு பாபா ராம்தேவ், பெண்கள் உடை அணிவது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

பாபா ராம்தேவை கண்டித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த விவகாரம் தொடர்பாக மாநில பெண்கள் ஆணையம் பாபா ராம்தேவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. 

இந்த நோட்டீசுக்கு பதில் அளித்து பாபா ராம்தேவ் அளித்துள்ள விளக்கத்தில், தானேயில் நடந்த நிகழ்ச்சியில் தனது ஒரு மணி நேர பேச்சை திரித்து தவறான நோக்கத்துடன் சில வினாடி வீடியோவாக சிலர் வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
TELEGRAM: t.me/Agnipuratchi1

* கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கேமரூன் - செர்பியா அணிகள் மோதின.

இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்ததன் காரணமாக போட்டி டிராவில் முடிவடைந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages