தற்போது குளிர்காலம் மற்றும் மழைக்காலம் என்பதால் பாதுகாக்கப்பட்ட குடிநீரையே குடிக்க வேண்டும் - பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி MLA - Agnipuratchi

தற்போது குளிர்காலம் மற்றும் மழைக்காலம் என்பதால் பாதுகாக்கப்பட்ட குடிநீரையே குடிக்க வேண்டும் - பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி MLA

Share This

தற்போது குளிர்காலம் மற்றும் மழைக்காலம் என்பதால் பாதுகாக்கப்பட்ட  குடிநீரையே குடிக்க வேண்டும் -  பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி MLA

தற்போது தொடர் மழை பெய்துள்ளதாலும் வரும் காலம் குளிர் தொடங்கி விட்டதாலும் குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் சளி, காய்ச்சல் போன்ற தொல்லை ஏற்பட்டு வருகிறது. உடல் நலம் பாதிப்பிற்கு மிக முக்கியமானது குடி தண்ணீர். இக்காலங்களில் சுடுநீர் குடிப்பது மிக மிக நல்லது. பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீரையே குடிக்க வேண்டும். பொதுமக்கள் குடிப்பதற்கு கேன் மற்றும் மினரல் பாட்டில் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். வீட்டு உபயோகத்திற்கு வாங்கும் கேன் குடிநீர் எவ்வளவு நாட்கள் பயன்படுத்துவது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக அக் குடிநீர் கேனில் உற்பத்தி செய்த தேதி மற்றும் பயன்படுத்தும் கால அளவு காலாவதியாகும் தேதி ஆகியவை Mfg. Date & Expiry Date  என குறிப்பிட்ட முத்தரையோ அல்லது குறிப்புச் சீட்டு ஒட்டியோ இருக்க வேண்டும்.  அவ்வாறு குறிப்பிடாமல் இருந்தால் அது காலாவதி ஆனதாக கருதப்படுகிறது. பிறகு குடிக்கும் போது உடல்நலம் பாதிக்கக்கூடும். எனவே குடிநீர் கேனில் உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும். பொதுமக்களும் குடிநீர் கேன் வாங்கி இவற்றைப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். இதில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages