அக்னிப்புரட்சி இன்றைய (02.12.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (02.12.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (02.12.2022) முக்கிய செய்திகள்.

உலகக் கோப்பை நேற்றிரவு போட்டிகளின் முடிவுகள்...

* பிரிவு F-வில் உள்ள குரோஷியா  - பெல்ஜியம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் குரோஷியா அணியை 0-0 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

* பிரிவு F-வில்  உள்ள கனடா - மொரோக்கோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கனடா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொரோக்கோ அணி வெற்றி பெற்றது.

* பிரிவு இ-யில்  உள்ள கோஸ்ட்டா ரிக்கா - ஜெர்மனி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கோஸ்ட்டா ரிக்கா அணியை 2-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி வெற்றி பெற்றது.

* பிரிவு இ-யில்  உள்ள ஸ்பெயின் - ஜப்பான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் அணி வெற்றி பெற்றது.

* உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின், ஜப்பான், மொராக்கோ நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்

ஜெர்மனி, பெல்ஜியம், கோஸ்டாரிக்கா தொடரில் இருந்து வெளியேற்றம்!

* வாட்ஸ்அப்பில் அசத்தல் அப்டேட்!

இனி 1024! Watch: https://youtu.be/xOpPCQF8eMY

* தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு;

தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை(03.12.22) கனமழைக்கு வாய்ப்பு-இந்திய வானிலை ஆய்வு மையம்.

* சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து கடந்த 15 நாட்களில் ₹8.60 லட்சம் அபராதம் வசூலித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை

ஒரே மாடு 3வது முறையாக பிடிபட்டால், உரிமையாளரிடம் திரும்பி ஒப்படைக்கப்படாது என எச்சரிக்கை!

* IPL 2023: 87 இடத்திற்கு 991 வீரர்கள் பதிவு!

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் வரும் 23ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ள நிலையில், ஏலத்தில் கலந்துகொள்ள மொத்தமாக 991 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

87 வீரர்களுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் 714 இந்திய வீரர்கள் உட்பட 991 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக 57 ஆஸி., வீரர்கள் பதிவு செய்துள்ளனர். குறைந்தபட்சமாக 2 ஸ்காட்லாந்து வீரர்கள் உள்ளனர்.

* ‌கார்த்திகை தீபம்: சிறப்பு ரயில்கள்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி தி.மலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து தி.மலைக்கு டிச.5, 6, 7 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

அதேபோல், தாம்பரத்தில் இருந்தும் டிச.6, 7 ஆகிய தேதிகளில் காலை, 8.40 மணிக்கும், தி.மலையில் இருந்து தாம்பரத்திற்கு 1.45 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

* மின்சார சட்டத்திருத்தத்திற்கு தி.மு.க. எதிர்ப்பு

மின்சார சட்டத்திருத்த மசோதா-2022 குறித்து ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்ற ஆற்றல் நிலைக்குழு டெல்லியில் கூடியது. ஆற்றல் குழு தலைவர் ஜகதாம்பிகா பால் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களில் பலர் சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நிலைக்குழு உறுப்பினரான திமுக மாநிலங்களவை எம்.பி. ராஜேஷ்குமாரும் இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

* தங்கம் ₹ 40,000 தாண்டி விற்பனை

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ40,080க்கு விற்பனை

ஒரு கிராம் தங்கம் ரூ.5,010 ரூபாய்க்கு விற்பனை.

* சென்னையிலிருந்து 139  பயணிகளுடன் தோகா புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு.

விமானி தகுந்த நேரத்தில் எடுத்த துரித  நடவடிக்கையால், பெரும் விபத்து தவிர்ப்பு.

7 விமான ஊழியர்கள் உட்பட 146 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

* 6ம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி.

அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என கல்வித்துறை அறிவிப்பு.

ரம்மி குறித்த பாடத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு.

* பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவுறுத்தல்.

பணி நிலைப்பு நடைமுறைகள் நிறைவடையும் வரை இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.5,000 வழங்க வேண்டும் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

* திமுக அரசை கண்டித்து கோவையில் அதிமுக சார்பில் துவங்கிய உண்ணாவிரத போராட்டம்

உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

கோவை மாநகரக்கு மட்டும் பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

கோவைக்கு மட்டும் 28 தடுப்பணைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.
அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக கைவிடுகிறது திமுக அரசு - அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

* வாகனங்களில் விதிமீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாகனங்களைப் பறிமுதல் செய்து அதிகபட்ச அபராதம் விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

நடவடிக்கை இல்லையெனில், பாஜக மாநில தலைவர் உத்தரவில் நாங்களே நடவடிக்கை எடுப்போம் என மனுவில் கூறியிருந்ததால் நீதிபதிகள் எச்சரிக்கை.

உரிய  உத்தரவு பிறப்பிக்கவில்லையெனில் நீங்கள் வெளியே வர முடியாது என நீதிபதிகளை மிரட்டும் வகையில் உள்ளதாக நீதிபதிகள் காட்டம்.

* இந்தியாவிடம் உதவி கோருகிறது ரஷ்யா

கார், விமான தயாரிப்புக்கு தேவையான உதிரி பாகம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பொருட்களை வழங்குமாறு ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்ததால் ரஷ்யாவில் முக்கியமான உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில் நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஏற்றுமதி செய்யுமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

* திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90வது பிறந்தநாளையொட்டி, அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"திராவிட மாடல் அரசின் சமூகநீதிக் கொள்கை சார்ந்த அனைத்துத் திட்டங்களுக்கும், சட்டப் போராட்டங்களுக்கும் உறுதுணையாய் - வழிகாட்டியாய் அவர்கள் நூறாண்டு கடந்தும் நலமோடு வாழ்ந்திட நெஞ்சார வாழ்த்துகிறேன்"

"சமூகநீதிப் போர்க்களத்தில் சளைக்காமல் போராடி, பகுத்தறிவு - இனமான உணர்வினை ஊட்டி வரும் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அகவை 90 என்பதில் அகம் மகிழ்கிறேன் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"10% இட ஒதுக்கீடு, தனியார் மயம் உள்ளிட்ட கொடுமைகளை எதிர்த்து சட்ட போராட்டத்தை அரசு நடத்தினாலும், மக்கள் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தும்”

“என்றும் ஒரே கொள்கையுடன் பயணித்து வருகிறேன்; திராவிட மாடல் ஆட்சியைப் பாதுகாக்க மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு எப்போதும் பேராதரவு உண்டு"

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க அமைப்புகளால் சமூகநீதிக்கு எதிராக குரல் எழுந்துள்ளது, அதை முறியடிப்பது தான் எங்களின் முதல் பணி! - கி.வீரமணி பேட்டி

TELEGRAM: t.me/Agnipuratchi1

* நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக மாநில மொழிகள் இருப்பது அவசியம்”

- தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேச்சு!

* மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்புகளையும், தடையற்ற சூழலையும் அமைத்து நம் வாழ்வில் ஒருங்கிணைப்போம்”

- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

* முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க அறப்போர் இயக்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை - அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

* சென்னை கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளது.

சாலையின் இருபுறமும் 11 மீ அகலத்தில் 6 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தகவல்.

ஈசிஆர் சாலை சென்னை மாநகரை மாமல்லபுரம், புதுச்சேரி, சீர்காழி, நாகை, திருத்துறைப்பூண்டி, தூத்துக்குடி வழியே குமரியை இணைக்கிறது.

* சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்துகையில், போலி ஆவணங்களைக் காட்டி இழப்பீடு பெற்றவர்களுக்கு, வழங்கப்பட்ட ₹20.52 கோடி திரும்ப வசூலிக்கப்பட்டது - உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்

* முதல்வரின் முகவரி' துறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

* தாமிரபரணி ஆற்றின் பெயரை மாற்றம் செய்யக் கோரிய வழக்கில் அரசு முடிவெடுக்க உத்தரவு

தாமிரபரணி என்பது வடமொழிச் சொல், எனவே பொருநை நதி என்று பெயர் மாற்றம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு

மனுதாரரின் கோரிக்கையை அரசு உரிய பரிசீலனை செய்து 12 வாரத்தில் முடிவெடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

* தமிழக அரசின் பொது விநியோக திட்டத்திற்கு பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணம் சிக்கியது - வருமான வரித்துறை.

தமிழ்நாடு அரசின் பொது விநியோக திட்டத்திற்கு பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் தனியார் நிறுவனங்களில், கடந்த நவம்பர் 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வருமான வரித்துறையினர் 40 இடங்களில் சோதனை நடத்தினர்.

அருணாச்சலம் இம்பேக்ஸ், காமாட்சி குரூப் ஆஃப் கம்பெனிஸ், இண்டர்கிரேடட் சர்வீஸ் குரூப் போன்ற தனியார் நிறுவனங்களில், மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாகவும், கணக்கில் காட்டாத ரூ.12 கோடி ரொக்கம் சிக்கியதாகவும் வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், மேலும் சிலவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

* கடந்த 21.05.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்-2, 2A முதல்நிலைத் தேர்வு முடிவுகளின்படி முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல்  சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துகொள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைம் வலியுறுத்தியுள்ளது.

குரூப்-2, 2A முதல்நிலைத் தேர்வு முடிவுகளின்படி முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல்  சான்றிதழ்களை 17.11.2022 முதல் 16.12.2022 வரை இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில்கொண்டு, அனைத்து  தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன இ-சேவை மையங்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேவைப்படும் இ-சேவை மையங்களில் கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, விண்ணப்பதாரர்கள் இதனை பயன்படுத்தி தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான உதவிக்கு அரசு கேபிள் டிவி நிறுவன கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800 425 2911 –ஐ தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

* கீர்த்தி சுரேஷ் DP படம் வைத்து ₹ 41 லட்சம் சுருட்டல்.

கர்நாடகா: வாட்ஸ்அப் DPயில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஃபோட்டோவை வைத்து, பொறியாளரை ஏமாற்றி ₹ 41 லட்சம் சுருட்டல்.

கணவருடன் இணைந்து கார், புது மாடிவீடு என செட்டில் ஆன மஞ்சுளா என்ற பெண்.

எனது படம் குறித்து கருத்து கேட்கிறேன் என கீர்த்தி சுரேஷ், ஃபோட்டோ உடன் வந்த குறுந்தகவலை நம்பிய பரமேஸ்வர், தனது அந்தரங்க படங்களை பகிரவே, அதனை வெளியிடுவேன் என மிரட்டி மஞ்சுளா பணம் பறித்துள்ளார்.

ஏமாற்றிய மஞ்சுளா கைது; கணவர் தலைமறைவு.

* உதவி பேராசிரியர் நியமன அறிவிப்பு ரத்து

உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பாணை ரத்து

2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப 2019 ஆம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது

புதிதாக 4 ஆயிரம் பேரை தேர்வு செய்ய அரசாணை வெளியானதை தொடர்ந்து முந்தைய அறிவிப்பு ரத்து

* சுருக்குமடி வலை தடைச்சட்டம் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தமிழக மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை தடை செய்ய கோரிய வழக்கில் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

கோயில்களின் மாண்பை பாதுகாக்கும் வகையில் ஆடைகளிலும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

கோயிலுக்குள் வரும் பக்தர்கள் மரபினை காக்கும் வகையில் ஆடைகள் அணிந்து வர விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது என திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

* பால், மின்கட்டணம் உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்பாட்டம்.

வரும் டிசம்பர் 9ம் தேதி பேரூராட்சி பகுதிகளிலும், டிச. 12, ஊராட்சி பகுதிகளிலும் , 13 ம்தேதி நகராட்சி மாநகராட்சி பகுதிகளிலும் இந்த ஆர்பாட்டம் நடக்கும் - அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

* தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்- தலைமை செயலர் இறையன்பு உத்தரவு.

இளைஞர் நலன் விளையாட்டுத்துறை செயலாளராக அதுல்ய மிஸ்ரா நியமனம்

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக ஜான் லூயிஸ் நியமனம்

வீட்டு வசதி துறை மற்றும் நகர்ப்புற துறையின் செயலாளராக அபூர்வா நியமனம்

* பிரதமர் வீட்டு வசதி திட்ட வீடுகளை தகுதியில்லாதவர்களுக்கு ஒதுக்கிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்-அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

வீடு ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து 6 மாதங்களில் ஊரக வளர்ச்சித்துறை செயலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு.

* தமிழகத்தில் புதிய மின் இணைப்பு பெறும் மின்நுகா்வோா் ஆா்.சி.டி. என்ற உயிா் காக்கும் கருவியைப் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்தது.

இதுகுறித்து இந்த ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் மின் பழுது, மின் கசிவால் ஏற்படும் விபத்துகளால் அதிக அளவில் மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இதைத் தடுக்க மின்சாரப் பகிா்மான விதித் தொகுப்பு 16(2ஏ)-இன்படி, புதிய மின் இணைப்பு பெறுவோா் ஆா்.சி.டி. என்ற உயிா் காக்கும் கருவியை தங்களுடைய மின்னிணைப்பில் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது மழைக் காலங்களில் அதிகரித்து வரும் மின் விபத்துகளால் புதிய மின் நுகா்வோா் மட்டுமல்லாது அனைத்து மின்நுகா்வோரும் ஆா்.சி.டி. கருவியைப் பொருத்த வேண்டும்.

கடந்த சில மழைக் கால மாதங்களில் இரும்புக் கதவு திறத்தல், கம்பியில் துணிகளை உலா்த்துதல், மின்விளக்குக் கம்பத்தைத் தொடுதல் போன்றவற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த உயிா் காக்கும் கருவியை மின்னிணைப்பில் பொருத்துவதன் மூலம் இதுபோன்ற விபத்தைத் தவிா்க்க முடியும்.

வீடு, கடை, தொழில், பண்ணை வீடு, கல்வி நிறுவனங்கள், பொது இடங்கள், தற்போதுள்ள அனைத்து வகையான மின்நுகா்வோா்களும் இந்தக் கருவியை மின்னிணைப்பில் பொருத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலின் உதவியாளர் சவுமியா சவுராசியாவை அமலாக்கத்துறை கைது செய்தது.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சவுமியா சவுராசியாவை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

* ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடந்த 2020-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டையை சேர்ந்த ஓட்டுநர் கதிர்வேல்சாமிக்கு நீதிமன்றம் 20 ஆண்டு சிறை, ரூ.10,000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் தீர்ப்பு வழங்கினார்.

* வரும் ஜனவரியில் மாருதி சுசூகி கார்களின் விலை உயர்த்தப்பட உள்ளதாக நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொருட்களின் விலை உயர்வால் உற்பத்தி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு என மாருதி சுசூகி அறிவித்துள்ளது. அண்மையில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப கார்களில் மாற்றம் செய்யப்படுவதாலும் விலை உயர்கிறது

* சத்தீஸ்கர் மாநிலம் பஸ்டர் மாவட்டத்தில் உள்ள சுரங்கத்தில் மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் தொழிலாளர்கள் கற்களை வெட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது மண் சரிந்து விபத்து ஏற்பட்டது.

* ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வர்ணனை செய்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

* உயிர் பிரிந்த  இடத்தில் சிலையாய் இலட்சுமி

இரு நாட்களுக்கு முன் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை இலட்சுமி, நடைப்பயிற்சியின் போது மாரடைப்பால் உயிரிழந்தது.

அதன் நினைவாக புதுச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் ராம் முனுசாமி என்பவர் இலட்சுமி உயிர் பிரிந்த இடத்திலேயே அதனை சிலையாக வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.

* இனி ‘பொருநை’ என அழைக்கலாமா? -  உயர்நீதிமன்றம்

தண்பொருநை‘, ‘பொருநை‘, ‘பொருநல்‘, ‘தண் பொருத்தம்‘, ‘தாமிரபரணி‘ என இலக்கியங்களும், ‘தண்பொருந்த ஆறு‘, ‘தண் பொருத்தப் பேராறு‘, ‘முடி கொண்ட சோழப் பேராறு‘ என்று கல்வெட்டுகளும் இன்றைய தாமிரபரணி ஆற்றினைச் சுட்டுகின்றன. இந்நதிக் கரையில்தான் ஆதிச்சநல்லூரும், கொற்கையும் பழந்தமிழர் நாகரிகத்தினை வளர்த்துள்ளன.

கீழ்வேம்ப நாட்டுத் திருநெல்வேலி, குலசேகரச் சதுர்
வேதிமங்கலம் எனக் கல்வெட்டுகள் கூறும் திருநெல்வேலியும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பழம்பெருமை மிக்க ஊராகும். திருநெல்வேலி பகுதியைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் பனைமரம் மிகுதி. அதனால் இங்குள்ள மக்கள் தமிழ் இலக்கியங்களையும் பிறகலைகளையும் பனை ஒலைகளில் பதிவு செய்து பாதுகாத்துள்ளனர்

TELEGRAM: t.me/Agnipuratchi1

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages