அக்னிப்புரட்சி இன்றைய (04.12.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (04.12.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (04.12.2022) முக்கிய செய்திகள்.

* உலகக்கோப்பை கால்பந்து 2022: ஆஸ்திரேலியா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா அணி.

* அடுத்த 96 மணி நேரத்தில் வட தமிழகக் கடலோரப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

* அண்ணாமலையாரை தரிசிக்க இன்று அனுமதி சீட்டு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான சிறப்பு அனுமதிச் சீட்டு https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று காலை 10 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம்.

பரணி தீபம் தரிசனத்திற்கு ரூ.5000 கட்டணம் செலுத்த வேண்டும். மகா தீபம் தரிசனத்திற்கு ரூ.600.

* மின்கசிவால் உயிரிழப்புகளை தடுக்க RCD கருவிகளை பொருத்துங்க

மின்கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை முழுமையாக தடுக்க ஆர்சிடி (RCD) கருவிகளை வீடுகள், தொழிற்சாலைகளில் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது

வீடுகளில் 15 மில்லி ஆம்பியர் அளவு மின் இழப்பு ஏற்பட்டால் இக்கருவி உடனே மின்சாரத்தை நிறுத்திவிடும். அதனால் புதிதாக மின் இணைப்பு பெறுவோர், ஏற்கனவே பெற்றிருப்போர் இக்கருவியை பொருத்த வேண்டுகோள் விடுத்துள்ளது.

* மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க புதிய இணையதளம்

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுவரை 51 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

இந்நிலையில், இந்த பணிக்காக மின் வாரியம் கூடுதலாக தனி இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆதார் எண்ணை இணைக்க மட்டும் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.

இதுதவிர www.tangedco.gov.in என்ற இணையதளத்திலும் இணைக்கலாம்.

இணைக்கும் வழிமுறை... Watch: https://youtu.be/RM2QmmA8zlA

* காவலர் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நவ.,27-ல் நடைபெற்றது.

தற்போது அந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது. விடைக்குறிப்பு மற்றும் வினாக்களில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால் டிச.,10-க்குள் தெரிவிக்கலாம்.

விடைக்குறிப்புகளை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

* ‘ஆபரேஷன் மறுவாழ்வு’ 726 யாசகர்கள் (பிச்சைக்காரர்கள்) மீட்பு

தமிழகம் முழுவதும் ஆபரேஷன் மறுவாழ்வு மூலம் அதிரடி நடவடிக்கையாக பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 யாசகர்கள் மற்றும் 16 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வந்து பிச்சை எடுக்க வைக்கும் நபர்கள் குறித்து 044-28447701 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

* மோடியை விளாசிய ராகுல்!
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை சுட்டிகாட்டி PM மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதுபற்றி அவர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 25%, எரிவாயு சிலிண்டர் விலை 40% மலிவாகியுள்ளது. உலக நாடுகளில் எரிபொருள்களின் விலை குறைவாக இருக்கும்போது, மத்திய அரசு ஏன் எரிபொருள்களின் விலையினை குறைக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

* சீனாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்வு

சீனாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு நகரங்களில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.

இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்திற்கு பணிந்த அரசு பெய்ஜிங், செங்குடு உள்ளிட்ட ஏராளமான நகரங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

சில பகுதிகளில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கோவிட் சான்றிதழை காண்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.

* இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இணையர்களுக்கு தாலி உடன் 30 சீர்வரிசைப் பொருட்களையும் முதல்வர் வழங்கினார்.

அமைச்சர்களை முதலமைச்சர் வேலை வாங்குவதை பார்த்து இருக்கிறோம், ஆனால் முதல்வரை வேலைவாங்க கூடியவராக அமைச்சர் சேகர் பாபு இருக்கிறார் - இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்கான திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

* கொய்ரோ: எகிப்து தலைநகர் கொய்ரோவில் நடைபெற்ற பிரசிடண்ட் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா வெள்ளி வென்றது.

50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இந்திய வீராங்கனை அஞ்சும் மோட்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

* ஹாங்காங்: ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் படகுப்போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது.

லக்சய், கவுரவ்குமார் அடங்கிய இந்திய அணி இறுதிப்போட்டியில் ஹாங்காங் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது

* சென்னை விமான நிலையத்தில் செயல்பாட்டிற்கு வந்த ஆறடுக்கு கார் நிறுத்தம்

டோக்கன் பெற நீண்ட வரிசையில் காத்திருந்த வாகன ஓட்டிகள்
விமான நிலையத்திற்கு வந்தவர்கள் கட்டண சாவடி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம்

வாகன நெரிசலில் சிக்கிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

* பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கம்; காலை முதல் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க அனுமதி.

* சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கிறது: உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள உலக நாடுகளுக்கு அறிவுறுத்தல்.

கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் அது வேகமாக பரவ தொடங்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர்  டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் போது கொரோனா பரவல் தாக்கல் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உயிரிழப்புகள் அதிக அளவில் பதிவாகவில்லை.

பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு தகுந்த எதிர்ப்பார்புகளுடன் இருந்தாலும் பரிசோதனையில் ஏற்பட்டுள்ள தொய்வும் கண்காணிப்பில் வெளிப்படும் அலட்சியமும், உரிய கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்காமல் இருப்பதாகவும் மீண்டும் கொரோன பரவும் ஆபத்து குறித்து எச்சரித்துள்ளார்.

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்திருப்பதை சுட்டிக்காட்டிய அதானோம் அங்கு நடந்து வரும் போராட்டங்களுக்கு கவலை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய உலக சுகாதார அமைப்பின் அவசர நிலை பிரிவு தலைவர் மைக்குரியான் கொரோனா பரவாமல் கட்டுப்படுத்தும் பொறுப்புடன் மனித உரிமையையும் சம அளவில் பேன வேண்டிய கடமை சீனாவுக்கு உள்ளதாக கூறினார்.

இதனிடைய குளிர் பிரதேச நாடுகளில் பண்டிகை காலம் தொடங்கி உள்ள நிலையில் பல லட்ச கணக்கானோர் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலை  தெரிவித்துள்ளது.

குளிர்காலங்களில் ஏற்படும் சுவாச பிரச்சனைகளூடன் கொரோனா பாதிக்கும் போது அதன் மரணத்தை ஏற்படுத்தாலம் என்றும் இதனால் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் எதிர்பாரத்த அழுத்தங்களுக்கு உள்ளாகலாம் என்று எச்சரித்துள்ளது.

எனவே தேவையான முன்னேற்பாடுகளை விரைவாக மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை அறிவுறுத்தியுள்ளது.

கூடுதலாக வேளாண் விளைபொருட்கள் அதிகமாக விளையும் காலங்களில் அவற்றை சேமித்து வைப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகளை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

* கடலூர்: என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி; கரிவெட்டி கிராமத்தில் நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

கேட்கும் நிவாரண உதவிகள் அளித்தால் மட்டுமே, நிலத்தை வழங்குவோம் என கூறியதை அடுத்து, அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்

* ஜி20 மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லிக்கு பயணம்.

மதுரையில் 209 கிராம உதவியாளர் பதவிக்கான தேர்வு விடைத்தாள் கசிந்ததால் சர்ச்சை

₨10 ஆயிரத்துக்கு விடைத்தாளை விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு

* "தமிழ்நாட்டுக்கு வந்துள்ள வெளிமாநில தொழிலாளர்கள் பற்றிய கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது"

- சென்னையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேட்டி.

* சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியின் 3வது தளத்தினை பூட்டி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

பள்ளியில் நாளை முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்க கூடாது; அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்.

கைது செய்ய வேண்டும் என்றால் எஸ்பி நிலை அதிகாரி அனுமதியின் பேரில் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய இந்திய அணி 187 ரன்களை வங்கதேச அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

வங்கதேச அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

* தகுதித் தேர்வு முடித்த ஆசிரியர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும்.

- தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

* சென்னை: ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் வரைபடம் உள்ளிட்டவற்றுடன் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. ஜல்லிக்கட்டு போட்டிகள் முழுமையாக கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

* அரசாங்கம் இயற்றக்கூடிய சட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ஒப்புதல் வழங்கவேண்டும் என்பதுதான் நடைமுறை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

எல்லா சட்ட மசோதாக்களுக்கும் உடனே அனுமதி அளிக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது குறித்த கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages