மின்சார மனித உயிரிழப்புகளை தடுக்க உயிர்காக்கும் சாதனத்தை மின்னிணைப்பில் பொருத்த வேண்டும்: மின்சார வாரிய அறிவிப்பின் விரிவான விவரம் - Agnipuratchi

மின்சார மனித உயிரிழப்புகளை தடுக்க உயிர்காக்கும் சாதனத்தை மின்னிணைப்பில் பொருத்த வேண்டும்: மின்சார வாரிய அறிவிப்பின் விரிவான விவரம்

Share This

மின்சார மனித உயிரிழப்புகளை தடுக்க உயிர்காக்கும் சாதனத்தை மின்னிணைப்பில் பொருத்த வேண்டும்: மின்சார வாரிய அறிவிப்பின் விரிவான விவரம்

தமிழ்நாட்டில் பழுது மற்றும் மின்கசிவினால் மின் ஏற்படும் மின்விபத்துகளால் உண்டாகும் மனித உயிரிழப்புகளை தடுக்க, தமிழ் நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின்சாரப் பகிர்மான விதித் தொகுப்பு 16(2A)ன் படி. புதிய மின்னிணைப்பு பெறுபவர்கள் ஆர்.சி.டி (RCD) என்றழைக்கக்கூடிய ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) என்ற உயிர்காக்கும் சாதனத்தை தங்களுடைய மின்னிணைப்பில் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று மின்சார வாரியம் கூறியுள்ளது.

மின் கசிவு, ஓவர் ஓல்டேஜ் காரணமாக சமயங்களில் மின்சாரம் தொடர்பான விபத்துகள் ஏற்படும். ஓவர் ஓல்டேஜ் காரணமாக திடீரென மின் வயர்கள் தீ பற்றி வீடுகள் பற்றி எரியும் வாய்ப்புகள் உள்ளன. சில இடங்களில் மின் கசிவு ஏற்பட்டு தொழிற்சாலைகள் பற்றி எரியும் வாய்ப்புகளும் உள்ளன. தமிழ்நாட்டில் நடக்கும் பெரும்பாலான தீ விபத்துகளுக்கு மின் கசிவு முக்கியமான காரணம் ஆகும். இதற்கு பழைய வயர்கள், சரியாக கனெக்சன் கொடுக்காதது என்று பல காரணங்கள் உள்ளன.

TELEGRAM: t.me/Agnipuratchi1

வீட்டில் இது போன்ற விபத்துகள் ஏற்பட இன்னொரு காரணமும் உள்ளது. அவை ட்ரிப்பர்கள். ட்ரிப்பர்கள் இல்லாமல் இருக்கும் வீடுகள் நிறைய உள்ளன. பொதுவாக வீட்டிற்கு திடீரென ஹை ஓல்டேஜ் மின்சாரம் வந்தால், இந்த ட்ரிப்பர்கள் தானாக ஆப் ஆகி, வீட்டில் உள்ள பொருட்களை காக்கும். மின்சாரம் அதிகம் ஆகி விபத்துகளை ஏற்படுத்துவதை இந்த ட்ரிப்பர்கள்தான் காக்கும். இப்போது புதிதாக கட்டப்படும் வீடுகள் அனைத்திலும் இந்த ட்ரிப்பர்கள் வைத்துதான் கட்டுகிறார்கள். ஆனால் பழைய வீடுகளில் இது போன்ற ட்ரிப்பர்கள் வைக்கப்படுவது இல்லை. அப்போது வெறும் பியூஸ் வைப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் ட்ரிப்பர்கள் அளவிற்கு இது வேகமாக செயல்படாது.

* வயதான தம்பதியர் தற்செயலாக அடுக்குமாடி வீட்டின் முன்புறம் உள்ள இரும்பு கேட்டை (Gate) திறக்க முற்பட்ட போது,

* ஒரு தொழிலாளி கடையின் ஷட்டரை (Shutter) திறக்க முற்பட்ட போது,

* ஒரு பெண் அவரது வீட்டில் உள்ள கொடிக் கம்பியில் துணிகளை உலர்த்த முற்பட்ட போது,

* ஒரு சிறுவன் பூங்காவில் உள்ள மின்விளக்குக் கம்பத்தை தொட்ட போது,

* அரசு ஊழியர் ஒருவர் மழைப் பெய்யும் நேரத்தில் மோட்டரை (Motor) இயக்க முற்பட்ட போது.

* மாணவர் ஒருவர் வீட்டிலுள்ள UPS பழுது பார்க்க முற்பட்ட போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதுபோன்ற விபத்துக்களை தடுக்க ஆர்.சி.டி (RCD) எனும் உயிர்காக்கும் சாதனத்தை மின்னிணைப்பில் பொருத்தியிருந்தால் மேற்கண்ட மின் விபத்துகளைத் தவிர்த்திருக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். சில ஆயிரங்கள் செலவில் ஆர்.சி.டியை (RCD) நிறுவுவதன் மூலம் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்படும் என்று கூறியுள்ளனர்.

மழைக்காலங்களில் அதிகரித்துவரும் மின் விபத்துகள் மற்றும் அதன் காரணத்தால் ஏற்படும் மனித உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு புதிய மின்நுகர்வோர்கள் மட்டுமல்லாது தற்போதுள்ள அனைத்து மின்நுகர்வோர்களும் ஆர்.சி.டி (RCD) எனும் உயிர்காக்கும் சாதனத்தை அவரவர்கள் மின்னிணைப்பில் தவறாமல் பொருத்தி விபத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.கடந்த சில மழைக் கால மாதங்களில் பல வகைகளில் மின் விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages