அக்னிப்புரட்சி இன்றைய (06.12.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (06.12.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (06.12.2022) முக்கிய செய்திகள்.

* கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அருணாசலேஸ்வரர் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அண்ணாமலையார் கோயிலில் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் பரணி தீபம் ஏற்றினர்.

பரணி தீபம் ஏற்றும் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, அறநிலைத்துறை அதிகாரிகள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

* உலகக்கோப்பை கால்பந்து 2022: ஜப்பான் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது குரோஷியா அணி.

தென் கொரியா அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில் அணி.

* இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

கோவில், பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள போலீசார்

ரயில் நிலையங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள 4,350க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார்

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

* ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் திமுகவில் இணைகிறார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை காலை திமுகவில் இணைகிறார்

* தமிழகத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக, 6 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை

சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு குழு விரைகிறது

* தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில், வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குளிக்க அனுமதி; சபரிமலை பக்தர்கள் மகிழ்ச்சி.

* வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி:

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது- இந்திய வானிலை ஆய்வு மையம்.

வட கடலோர மாவட்டங்களில் நாளையும், டிச.8ம் தேதி நள்ளிரவு முதல் கனமழை பெய்யும் என அறிவிப்பு.

* அசாம்-திரிபுரா எல்லையை ஒட்டிய கரீம்கஞ்ச் மாவட்டத்தில் டிரக்கில் இருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை அசாம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் சுரைபரி கண்காணிப்புச் சாவடியின் ஒரு லாரியை இடைமறித்தனர். அப்போது அந்த லாரியை சோதனை செய்ததில், லாரியின் உள்ளே ஒரு ரகசிய அறையில் இருந்து 400 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து லாரி டிரைவரை கைது செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 40 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

* இவர்களுக்கே உலக கோப்பை: மெஸ்ஸி

FIFA உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளை வைத்து, இம்முறை சாம்பியன் யாரென்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் மெஸ்ஸி, சாம்பியன் யார் என்று கணித்துள்ளார். அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய அணிகளில் ஒன்றுதான் கோப்பையை முத்தமிடும் என்று கூறியுள்ளார்.

மேலும். இந்த அணிகள் தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், பிரேசில் அணி சிறப்பாக விளையாடி வருவதாகவும் கூறியுள்ளார்.

* நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து ஒன்று புதையுண்டதில் 33 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மண் சரிவில் மேலும் பலர் புதையுண்டு இருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. தற்போது மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

* டிஜிட்டல் ரூபாயை எப்படி வாங்கலாம்?

உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை டிஜிட்டல் ரூபாய் வேலட்டுக்கு மாற்றுவதன் மூலம் டிஜிட்டல் ரூபாயை பெற முடியும்.

டிஜிட்டல் ரூபாயை செயல்படுத்தக் கூடிய வங்கிகளின் மொபைல் செயலிகள் மூலம், இ-வேலட் முறையில் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் ரூபாயை சேமித்து பரிவர்த்தனை செய்யலாம்.

இதனை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால், ஒரு பொருளையோ, சேவையையோ டிஜிட்டல் ரூபாய் செலுத்தி பெறலாம்.

* லுடோ விளையாட தன்னையே பந்தயம் வைத்த பெண்!

உத்தரப்பிரதேசத்தில் லுடோ விளையாட்டிற்காக தன்னையே பந்தயமாக வைத்த பெண் ஒருவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேணு என்ற அந்த பெண் வீட்டு உரிமையாளரிடம் பணம் வைத்து லுடோ விளையாடியுள்ளார். தொடர்ந்து பணம் இல்லாததால் தன்னை தானே பணயம் வைத்துள்ளார்.

ஆனால், விளையாட்டில் தோற்றதால் அவர் வீட்டு உரிமையாளருடன் தற்போது வாழ்ந்து வருகிறாராம்.

* போதைப்பொருள் கடத்தலை தடுங்க: நிர்மலா சீதாராமன்

நாட்டிற்குள் சட்டவிரோதமாக போதைப்பொருட்களை கடத்தும் கடத்தல்காரர்களை அமலாக்க முகமைகள் கண்காணிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கோக்கைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இந்தியாவிற்குள் அதிகம் வரத் தொடங்கியுள்ளன. இதற்கு ஆரம்பத்திலேயே முடிவு கட்ட வேண்டும். கடினமாக உழைத்து போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

* அம்பேத்கரின் 66வது நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர்: சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்

புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம் - மு.க.ஸ்டாலின் ட்வீட்

* 196 நாடுகளின் தேசிய கீதம் பாடி அசத்தும் 12 வயது சிறுமி- முதலமைச்சர் ரங்கசாமியிடம் ஆசி பெற்றார்.!

புதுச்சேரி: சென்னையை சேர்ந்த ஹேமந்த் - மோகனப்பிரியா தம்பதியின் மகள் சுபிக்ஷா. 12 வயதான சுபிக்ஷாவை பாடகராக்க வேண்டும் என பெற்றோர் விரும்பினர். பல நாடுகளின் தேசிய கீதத்தை சொல்லி கொடுத்தனர்.

உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக 193 உள்ளன. சிறுமி அதையும் தாண்டி கூடுதலாக 3 நாடுகளின் தேசிய கீதங்களையும் சேர்த்து 196 தேசிய கீதங்களை சரளமாக பாடி அசத்தி வருகிறார். புதுவை வந்த இந்த சிறுமி தனது பெற்றோருடன் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் ஒரு சில நாடுகளின் தேசிய கீதங்களை பாடினார். இதைக்கேட்ட முதலமைச்சர் ரங்கசாமி சிறுமியின் திறமையை பாராட்டி வாழ்த்துக்களை கூறினார்.

196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சிறுமியின் முயற்சியை உலக சாதனையில் இடம்பெற அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

* கடலூர்: சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக சிதம்பரம் -சீர்காழி சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார்.

* திருச்சி சூரியசிவா பாஜகவில் இருந்து விலகல்!

தமிழ்நாடு பாஜக OBC பிரிவு மாநில பொதுச் செயலாளராக இருந்து வந்த சூரியா சிவா - பாஜக சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி தங்கையா இடையேயான ஆடியோ விவகாரத்தில் சூரிய சிவாவை 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டிருந்த நிலையில், தான் பாஜகவில் இருந்து விலகுவதாக சூரியா சிவா ட்விட்டர் பதிவு.

* தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல - சென்னை உயர் நீதிமன்றம்

கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க உரிய நடைமுறை எடுக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை

கல்வி நிறுவனங்களில் நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்- ஆசிரியர் நியமன நடைமுறையை 3 மாதங்களில் மறு ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* சென்னை, தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு உடன் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் சந்திப்பு.

வரும் 8ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை.

கனமழை தொடர்பாக தமிழகத்தில் வானிலை முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை நடத்தினோம் - பாலசந்திரன்

* நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை

இந்திய அரசியலமைப்பின் தந்தை அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று (6ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பல அரசியல் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணல் அம்பேத்கரின் படத்திற்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

* திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: அரோகரா கோஷம் விண்ணை பிளக்க 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றம்.

* சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 வரை குறைக்கப்பட வாய்ப்பு

டெல்லி: கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் குறைந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எரிபொருளை 85 சதவீதம் அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்வதால் சர்வதேச எண்ணெய் சந்தையில் ஏற்படும் விலை மாற்றம் வெகு விரைவாக இந்தியாவில் எதிரொலிக்கும். பெருமளவு எண்ணெய்யை ஈராக், அரேபியா, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்குகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக சர்வதேச எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. பீப்பாய் ஒன்றின் விலை 120 டாலரில் இருந்து 90 டாலராக குறைந்தது.

ஒரு வாரமாக 90 டாலருகே விற்பனை செய்யப்படும் சூழலில் இந்த விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்படலாம் என்று தெரிகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான முடிவு ஒரு வாரத்திற்குள் எடுக்கப்படலாம் எனவும் தெரிகிறது. கடந்த முறை கலால் வரி குறைக்கப்பட்டதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* டிசம்பர் 14ல் அமைச்சராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?!

திமுக இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 14ந்தேதி அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஏற்கனவே ஒரு முறை தமது அமைச்சரவையை மாற்றியமைத்தார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்த மாற்றத்தின்போது,  போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்பட்டோர் நலத்துறைக்கும், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கும் மாற்றப்பட்டனர்..

இந்நிலையில் வரும் 14ந்தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும்  மூத்த அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages