அக்னிப்புரட்சி இன்றைய (09.12.2022) முக்கிய செய்திகள்.
* சிறை காவலர்களின் சீருடையில் கேமரா: கைதிகளை கண்காணிக்க புது திட்டம்
கோவை: சிறைக்கைதிகளை நேரலையில் கண்காணிப்பதற்காக காவலர்களின் சட்டையில் கேமரா அணியும் திட்டம், தமிழகத்தில் 10 சிறைகளில் அமல் செய்யப்பட்டுள்ளது.
சிறைகளில் உயர் பாதுகாப்பு செல்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை கண்காணிப்பதில் பல்வேறு பிரச்னைகள் இருப்பது உயர் அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. சிறைகளில் நடக்கும் விதிமீறல்கள், கைதிகளின் அத்துமீறிய செயல்கள் வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இதற்கு முடிவு கட்டும் நோக்கத்துடன் தமிழக சிறைத்துறை சார்பில் காவலர்கள் உடையில் அணியும் வகையிலான, 50 நவீன கேமராக்கள், 46 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள், 9 மத்திய சிறைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
நேற்று சென்னை புழல் மத்திய சிறை காவலர்களுக்கு கேமரா வழங்கப்பட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் அனைத்து மத்திய சிறைகளிலும் காவலர்களுக்கு கேமரா வழங்கப்பட உள்ளது. உயர் பாதுகாப்பு கொண்ட செல்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை கண்காணிப்பதற்கு செல்லும் காவலர்கள், இந்த கேமராக்களை அணிந்திருப்பர்.
இந்த கேமராக்களில் படம் பிடிக்கப்படும் வீடியோ காட்சிகளை, சிறையின் தலைமையகத்தில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி உயர் அதிகாரிகள் கண்காணிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கபட்ட PM2 மக்னா யானை, ரேடியோ காலர் கருவி பொருத்தபட்டு சீகூர் வனப்பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பாக விடுவிக்கபட்டது
18 நாள் தீவிர முயற்சியால் யானை பிடிபட்டது குறிப்பிடத்தக்கது
* மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நடைபயிற்சிக்கு தடை; தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு
இதே போல் மாநகராட்சி பூங்காக்களிலும் நடைபயிற்சிக்கு அனுமதி இல்லை
* மக்கள் நலத்திட்டங்களை மாவட்ட வாரியாக ஆய்வு செய்ய உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
அரசியலில் இருப்பதை காட்டிக்கொள்ளவே எதிர்கட்சி தலைவர் விமர்சிப்பதாகவும் சாடல்!
*:சென்னை சென்ட்ரல் - புவனேஸ்வர் ரயில் இன்று காலை 10 மணிக்கு பதிலாக மதியம் 1.30 மணிக்கு புறப்படும்: - தெற்கு ரயில்வே தகவல்
* 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்:
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது - வானிலை மையம்.
16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்:
தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வானிலை மையம்
* மாண்டஸ் புயல் காரணமாக இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.
செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.
* அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
மாண்டஸ் புயல் எதிரொலியாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
புயல் காரணமாக பல மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்திவைப்பு
தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் - அண்ணா பல்கலைக்கழகம்
* மாண்டஸ் புயல் எதிரொலி: நாளை நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு!
-தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்
* மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 70 கி.மீ. முதல் 80 கி.மீ வரை இருக்கும் - தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
121 ஆண்டுகளில் மாமல்லபுரத்துக்கு அருகே புயல் கரையை கடந்தால் இது 13வது முறையாகும் - தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
* மாண்டஸ் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள புறநகர் ரயில்பாதை, மேம்பாலங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளது, மேலும் சென்னை மண்டல பேரிடர் தடுப்பு மையம் 24 மணி நேரமும் இயங்கும்;
ரயில் பயணிகளுக்கான உதவி எண்கள், 044-25330714; 044-25330952
-தெற்கு ரயில்வே அறிவிப்பு
* விரைவில் 150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கம்! - எலான் மஸ்க் ட்வீட்.
ட்விட்டரில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள 150 கோடி கணக்குகள் விரைவில் நீக்கப்படும் என்று அதன் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ட்விட்டரில் பல ஆண்டுகளாக 'ட்வீட்' அல்லது லாக் இன் செய்யாத கணக்குகளை நீக்க திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் 150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படும் என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ட்விட்டரில் பிரபலங்கள் பெயரில் உள்ள போலி கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ட்விட்டர் நிறுவனத் தலைவராக எலான் மஸ்க் பதவியேற்ற பிறகு, 50% ஊழியர்களான சுமார் 7,500 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
மேலும் பலர் தானாகவே வெளியேறினர்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* Selfie மோகம்: இந்நேரம் உயிரே போயிருக்குமேய்யா
செல்பி எடுக்க முயன்ற போது 150 அடி உயர பாறையில் இருந்து தவறி விழுந்த புதுமணப்பெண்: திருமணம் தள்ளிவைப்பு.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் 150 அடி உயர பாறைக்கு மேல் நின்று கொண்டு செல்பி எடுக்க முயன்றபோது கால் தவறி பாறைக்குளத்தில் விழுந்த வாலிபர், இளம்பெண் மீட்கப்பட்டனர்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் பகுதியை சேர்ந்தவர் வினு கிருஷ்ணன் (25). துபாயில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கும் அருகே உள்ள பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சாந்த்ரா (19) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று திருமணம் நடப்பதாக இருந்தது.
இந்தநிலையில் நேற்று 2 பேரும் அருகில் உள்ள ஒரு பாறைக்குளத்திற்கு போட்டோ எடுப்பதற்காக சென்றனர்.
கல் குவாரியான அந்தப் பகுதியில் 150 அடி உயரத்தில் பாறை உள்ளது. அங்குள்ள குளத்தில் 50 அடியில் தண்ணீரும் உள்ளது. அபாயகரமான பகுதி என்பதால் அந்த பகுதிக்கு அதிகமாக யாரும் செல்வது கிடையாது.
2 பேரும் பாறைக்கு மேல் நின்று கொண்டு செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாந்த்ரா கால் தவறி 150 அடி உயரத்தில் இருந்து பாறைக் குளத்திற்குள் விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த வினு கிருஷ்ணனும் அவரைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்தார்.
அதிர்ஷ்டவசமாக சாந்த்ராவின் உடை கையில் கிடைத்ததால் வினு கிருஷ்ணன் அவரை பிடித்து இழுத்து பாறையின் ஒரு பகுதிக்கு கொண்டு சென்றார். 2 பேரின் கூக்குரலை கேட்டதும் அந்த பகுதியினர் விரைந்து சென்றனர். மிகவும் சிரமப்பட்டு பாறையின் மேலிருந்து அவர்களுக்கு ஒரு கயிறை போட்டுக் கொடுத்தனர்.
அதன்படி கயிறை பிடித்தபடி 2 பேரும் பாறையின் அருக ஒதுங்கி நின்றனர். இதுகுறித்து போலீஸ் மற்றும் தீயணைப்புப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டனர்.
கீழே விழுந்ததில் காயமடைந்த 2 பேரும் கொல்லத்திலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று நடைபெற இருந்த அவர்களது திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* புயல் காரணமாக, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நாளை (10.12 2022) நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு!
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - பல்கலை. பதிவாளர் சீத்தாராமன் அறிவிப்பு
🔴 விழுப்புரம், புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் அனைத்து வாகனங்களும், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் தடுத்து நிறுத்தம்
புயல் கரையை கடக்கும் வரை, கிழக்கு கடற்கரை சாலையில் செல்ல தடை
* நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் பதவிக்கான தேர்வு, மாண்டஸ் புயல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
- TNPSC அறிவிப்பு!
* “எந்த மழை வந்தாலும், என்ன காற்றடித்தாலும் அதை சமாளித்து, மக்களை காக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து அரசு ஈடுபட்டு வருகிறது”
- பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பு!
* தற்போது வரை மின் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை; புயல் கடக்கும் இடங்களில் தேவைக்கேற்ப காற்றின் வேகத்தை பொறுத்து மின்சாரத்தை நிறுத்தி வைக்க மின்துறைக்கு அறிவுறுத்தி உள்ளோம்- அமைச்சர் செந்தில் பாலாஜி
* மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும்; தேவையான இடங்களில் மட்டுமே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் தடை செய்யப்படும்! - தமிழக மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி
🔴 சென்னைக்கு மிக அருகில் மாண்டஸ் புயல்!
தற்போது 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது;
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவிடாது கடந்த 3 மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது!
மாண்டஸ் புயல் சில மணி நேரத்தில் கரையைக் கடக்கும் நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
* ஈசிஆரில் இரவு போக்குவரத்து நிறுத்தம்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரவு 10 மணி முதல் போக்குவரத்து நிறுத்தம்
மாண்டஸ் புயல் காரணமாக கடைகள், உணவகங்களை மூடவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டுமே போக்குவரத்து அனுமதி
* சென்னை - புதுச்சேரி இடையே 121 ஆண்டுகளில் கரையை கடக்கும் 13 வது புயல் மாண்டஸ்!
மாண்டஸ் புயலின் கண்பகுதி நள்ளிரவு 11.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கும் என வானிலை மையம் தகவல்!
🔴 "மாமல்லபுரத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது" - சென்னை வானிலை ஆய்வு மையம்
* மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் சர்வதேச விமான சேவை ரத்து!
🔴 கரையை கடக்க தொடங்கியது மாண்டஸ் புயல்
"மாண்டஸ் புயலின் வெளிப்புறப் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது; புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் தரைக் காற்றின் வேகம் பலமாக வீசத் தொடங்கியுள்ளது" - சென்னை வானிலை ஆய்வு மையம்
"மாமல்லபுரத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது" - சென்னை வானிலை ஆய்வு மையம்
* மாண்டஸ் புயல் எதிரொலி: திருவள்ளூர் சுற்றுவட்டங்களில் மின் இணைப்பு நிறுத்தம். பலத்த காற்றுடன் மழையும் தொடர்கிறது.
* மாண்டஸ் புயலால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்பதற்காக பிரத்தியேகமாக 12 மீட்பு குழுவினரோடு , 4 படகு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்; தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்!
- சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை
* “அனைத்து அலுவலர்களும் தலைமை இடத்தில் இருக்க வேண்டும்"
"பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனே அகற்ற நடவடிக்கை தேவை"
"பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்"
புயல், மழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்.
No comments:
Post a Comment