அக்னிப்புரட்சி இன்றைய (10.12.2022) முக்கிய செய்திகள்.
🔴 மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்தது"
"இன்று காலையில் மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்"
"இன்று மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வட உள்மாவட்டங்கள் வழியாக கடந்து செல்லும்"
தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் பேட்டி
* சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றால் மின்சார கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்தன
சாலைகளின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து துண்டிப்பு
* வெளியேறியது பிரேசில்:
2022 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து பிரேசிலை வெளியேற்றியது குரோஷியா.
குரோஷியா - பிரேசில் அணிகளுக்கு இடையேயான காலிறுதிப்போட்டி, 1-1 கோல் என சமனில் முடிந்தநிலையில் பெனால்டி-சூட்அவுட் முறையில் 4-2 என்ற கணக்கில் வெற்றிபெற்றது குரோஷியா.
* 2022 கால்பந்து உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது அர்ஜென்டினா.
நெதர்லாந்து அணியை 3-4 என்ற பெனால்டி சூட்அவுட் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்.
* வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்துள்ளது
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறியது. அதற்கு மாண்டஸ் எனப் பெயரிடப்பட்டது. முதலில் தீவிர புயலாக இருந்த மாண்டஸ் பின்னர் புயலாக மாறி வடக்கு கடலோர பகுதியை நோக்கி நகர்ந்தது. புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே டிசம்பர் 9ந்தேதி இரவு முதல் 10ந்தேதி அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இரவு சுமார் 9.45 மணி அளவில் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி கரையை கடக்க தொடங்கியது. முதலில் வெளிப்புறப் பகுதி பின்னர் மையப்பகுதி அதன் பின்னர் வால் பகுதி என மூன்று கட்டங்களாக மாண்டஸ் புயல் கரையை கடந்தது.
இன்று அதிகாலை சுமார் 3.15 மணி அளவில் மாண்டஸ் புயல் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்து முடிந்தது. சுமார் ஐந்தரை மணி நேரமாக இந்த கரையை கடக்கும் நிகழ்வு நடந்தது. புயலின் மையப் பகுதி கரையை கடக்கும்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. சென்னையில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகம் வரை காற்று வீசியதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறின. புயல் கரையை கடந்து முடிந்துள்ள நிலையில் இனிப்படியாக வலுவிழக்கும் என்றும், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவிழக்கும் என தென்மண்டல ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* மாண்டஸ் புயல் எதிரொலியாக நள்ளிரவில் சென்னை வந்த 7 விமானங்கள் ஐதராபாத், பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன
சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 20 விமானங்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டு காலதாமதமாக புறப்பாடு
2வது நாளாக திருவனந்தபுரம், தூத்துக்குடி, திருச்சி, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய 6 விமானங்கள் ரத்து
* 350 மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து விழுந்துள்ளன"
சென்னையில் மாண்டஸ் புயல் காரணமாக 300-350 மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து விழுந்துள்ளன.
முறிந்த மரங்களை அகற்றும் பணியில் காலை முதல் 30,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலைக்குள் அனைத்தும் அகற்றப்படும்- சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி.
* சென்னை மடிப்பாக்கத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை மடிப்பாக்கத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் லட்சுமி(45) மற்றும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன்(25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
* வேலூர் அருகே அரசு பேருந்து மீது மரம் சாய்ந்து விழுந்த விபத்தில் பயணி ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய் மற்றும் காவல் துறையினர், மரத்தினை அகற்றி, காயமடைந்தவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
* கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், பனப்பாக்கத்தில் தலா 20 செ.மீ., காஞ்சிபுரம் - 19 செ.மீ., திருவண்ணாமலை - 18 செ.மீ., ஆவடி - 17 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
* மாண்டஸ் புயலால் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்
கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பு:
மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சி, மாநகராட்சி அதிகாரிகளின் அர்ப்பணிப்பால் மக்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்.
பெரிய அளவில் சேதங்கள் எதும் ஏற்படவில்லை.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்; தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவி கோரப்படும்.
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் விடிய விடிய, சிறப்பாக பணியாற்றினார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
* புயல் பாதிப்பு - முதல்வர் ஆலோசனை
மாண்டஸ் புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
சென்னை, தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
புயல் பாதிப்பு நிலவரம், மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
* # பொருநை # தாமிரபரணி
காவேரிக்கு பொன்னி என பல பெயர்கள் உண்டு அதுவும் கல்லணை தாண்டிவிட்டால் 16 வகை பெயர்களோடு பிரிந்து ஓடும் தமிழகம் இது
அகத்தியர் வந்து அவர் சீடர் தொல்காப்பியர்தான் தமிழுக்கு இலக்கணமே எழுதினார் எனும் வகையில் அகத்தியர் காலமே மூத்தது
ராமாயண காலத்திலே தாமிரபரணியின் பெருமை சொல்லபட்டுள்ளது, விசுவாமித்திரர் தென்முனையான விஜயாபதி பக்கம் தாடகை காட்டில் தவமிருந்த காலங்களில் ராமன் அவருக்கு துணையாக வந்தபொழுதே தாமிரபரணி பற்றி சொல்லபட்டுள்ளது
"அதஸ்யாஸ்னம் நகல்யாக்ரே மலயங்ய தாம்ரபரணம் க்ராஹ ஜிஷ்டாம்த்ரச்யத்" என்பது அந்த வரி
இப்படி ஒரு காட்சி மகாபாரத்திலும் உண்டு, பாண்டவர்களுக்கு தாமிரபரணியினை சுட்டிகாட்டும் வரியினை அந்த பாரதம் காட்டும்
காளிதாசனின் ரகுவம்சத்திலும் அது தாமிரபரணியாகவே உண்டு
இந்திய இலக்கியங்களில் ஒன்றான "தாமிரபரணி மகோமித்யம்" எனும் நூல் அதன் பெருமைகளையும் சிறப்பையும் இன்னும் கல்கி அவதார வருகையினையும் சொல்கின்றது
தாமிரபரணி நீரின் கரையில் அமர்ந்திருப்பதாலேதான் நெல்லையப்பர் கோவிலில் "தாமிர சபை" என்றொரு சபையே அந்நதி பெயரால் அமைந்தது
நம்மாழ்வார் தன் பாடலில் "பொருநல் நதி" என அதன் நிதானமான போக்கை சுட்டிகாட்டி பாடியதால் அந்த பெயர் திரிந்து பொருநை நதி என்றாயிற்று
தூத்துகுடியின் பழைய பெயர் தோத்துகரை என்பதே, அப்படித்தான் 15ம் நூற்றாண்டுக்கு முன்புவரை இருந்தது என தகவல்.தோத்துகரை தூத்துகுறையாக மாறி பின் தூத்துகுடியாயிற்றுமணப்பாடு கூட மாம்பாடு
தாமிரபரணி காணும் நீர்வீழ்ச்சி இன்றும் கல்யாண தீர்த்தம் என்றுதான் அழைக்கபடுகின்றது, அது உருவாகிவரும் பாபநாசம் ஆகும்.
இப்படி பல தகவல்கள்…
# பொருநை # தாமிரபரணி
- கே.எஸ்.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர்
TELEGRAM: t.me/Agnipuratchi1
* முதல்வர் ஸ்டாலினை பார்ட்டும் வகையில் 6 அடி உயரத்தில், 90 கிலோ எடையில் கேக் வடித்த திருச்சி பேக்கரி
முதல்வராக திறம்பட பணியாற்றுவதை பாராட்டி மு.க.ஸ்டாலின் போன்ற வடிவில் திருச்சி பேக்கரி நிறுவனம் கேக் செய்துள்ளது.
* இஷான் கிஷன் இரட்டை சதம்
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் முதல் இரட்டை சதம்
வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அபாரம்
126 பந்துகளில் 23 பவுண்டரி, 9 சிக்சருடன் இரட்டை சதம் விளாசல்.
சச்சின், சேவாக், ரோகித்துக்கு பிறகு இரட்டை சதம் விளாசிய இந்திய வீரர் இஷான் கிஷன்
ஒருநாள் போட்டியில் 6வது முறையாக 400 ரன்களை கடந்து இந்தியா அசத்தல்; வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் 400 ரன்களை கடந்து சாதனை.
50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழந்து 409 ரன்கள் குவித்தது.
* குஜராத் சட்டமன்ற பாஜக குழு தலைவராக பூபேந்திர படேல் தேர்வு
காந்தி நகரில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு
பூபேந்திர படேல் மீண்டும் குஜராத் மாநில முதல்வராவது உறுதியாகியுள்ளது
* தற்கொலை மத்திய அரசு சொன்ன அதிர்ச்சி தகவல்!
நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதோடு, அதில் 2.50 லட்சம் பேர் 18-29 வயதுடையவர்கள் என்றும் 28,572 பேர் விவசாயிகள் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் 5 ஆண்டுகளில் 77,656 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
* 3 கி.மீ. தூரத்திற்கு மணல் நிரம்பி போக்குவரத்து பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் “மாண்டஸ்” புயலால் பழவேற்காடு மீனவ கிராமங்களில் இருந்து எண்ணூர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம், வடசென்னை, வல்லூர் அனல் மின் நிலையங்களுக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது.
மேலும், கடல் கொந்தளிப்பால் மணலுடன் கடல் நீர் சாலையை கடந்து சென்றதால் சாலை முழுவதும் சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு ஆங்காங்கே மணல் மூடியுள்ளது.
* அந்தமான் பகுதியில் டிச.13ம் தேதி உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: வானிலை மையம் தகவல்
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் டிச.13ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிச.13 மற்றும் 14ம் தேதிகளில் மேலடுக்கு சுழற்சி தீவிரமடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது.
இதனிடையே மாண்டஸ் புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து 9 கி.மீ. வேகத்தில் வேலூருக்கு 30 கி.மீ. தொலைவில் நகர்கிறது. கிருஷ்ணகிரிக்கு கிழக்கு வடகிழக்கில் 120 கி.மீ. தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது. அடுத்த 12 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
* 3 வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வங்க தேச அணியை வீழ்த்தியது.
எனினும் 2 க்கு 1 என்ற கணக்கில் ஒரு நாள் போட்டி தொடரை இழந்தது இந்தியா!
* குஜராத் சட்டமன்ற பாஜக குழு தலைவராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காந்தி நகரில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பூபேந்திர படேல் மீண்டும் குஜராத் மாநில முதல்வராவது உறுதியாகியுள்ளது.
* இமாச்சல் பிரதேச மாநில முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்கிறார்.
இமாச்சல் பிரதேச துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்கவுள்ளார்.
No comments:
Post a Comment